தொகுப்புகள்

Search This Blog

Saturday, August 26, 2017

காவிக் கயவர்கள்

நேற்று இரண்டு சம்பவங்கள் நடந்தேறின. ஒன்று, பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் என்ற காமவெறி சாமியாருக்கு ஆதரவாக மதவெறியர்கள் பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தில் நிகழ்த்திய கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மற்றொன்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினூல் ஆபிதீன் ஏற்கனவே திருமணமான ஒருப் பெண்ணுடன் பாலியல் ரீதியில் நெருக்கமாகப் பேசிய ஒலிப்பதிவு ஒன்று வெளியானது.

இருக்கட்டும். இந்த இரண்டு விசயங்களுக்கும் என்னத் தொடர்பு என்கிறீர்களா? நெற்றிப் பொட்டில் அறைந்தார்ப்போல ஒர் உண்மை புலப்பட்டிருக்கிறது.
'அதித்தீவிரத் தூய்மைவாதம் பேசி மக்களை மதவெறியர்களாக்கும் எல்லாப் பயலும் அயோக்கியன்தான்' என்பதே அது.

இந்தியாவில் இதில் முன்நிலை வகிப்பது ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள் உள்ளடகிய இந்தத்துவக் காவிகள்தான். ஆசாராம் பாபு, முன்னாள் ஆளுநர் சன்முகநாதன், கடந்த மாதம் கேரளாவில் ஒரு வீரமங்கையால் ஆணுறுப்பு அறுக்கப்பட்டுப்போன அந்த seedless சாமியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று இந்தக் கயவர்களின் பட்டியலை காகிதத்தில் வரிசையாக எழுதி அடிக்கினால், அந்தக் காகிதக் கட்டுகளின் மீது நடந்தே காசி, கேதார்நாத், இமயமலை என்று வடநாட்டு இந்துக்கோயில்களுக்கெல்லாம் ஒரு நடைப்பயனமே போய்வரலாம்.

மதங்களைக் கடந்து மத அடிப்படைவாதிகளுக்குள் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரு மதத்தின் அடிப்படைவாத இயக்கம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமானால், இன்னொரு மதத்தின் அடிப்படைவாத இயக்கத்தின் இருப்பும், அவர்களோடு ஒரு தீராப்பகையும் இருந்தேத் தீரவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இவர்கள் ஒருவர் மூலம் மற்றொருவர் மறைமுகமாகப் பலனடைகிறார்கள். இவர்களுக்கு மதக்கலவரங்கள் என்பது தத்தமது மக்களிடையே செல்வாக்கை வளர்த்து, காசுப் பார்க்கவும் அரசியல் ஆதாயமடையவும் ஓர் எளிய வழி. அவ்வளவே!

குறிப்பாக பா.ஜ.கவின் அரசியல் வளர்ச்சியில் அவர்கள் வெற்றிகரமாக நிகழ்த்திய மதக்கலவரங்களுக்குத்தான் மிகப்பெரிய பங்கு இருக்கிறது எனலாம். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், முசாப்பர் நகர் கலவரம், தாத்ரி படுகொலையையொட்டிய கலவரங்கள் என்று ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
ஆனால் அப்படி அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படும் மதக்கலவரங்களின்போதுக்கூட பிறமதப்பெண்கள் மீது தமது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை இந்த ரத்தவெறி ஓநாய்கள்.

நேற்றைய இரண்டு சம்பவங்களுக்குள் இருந்த சில ஒற்றுமைகளைப் பார்த்தோம். வேற்றுமைகள்? நிறைய இருக்கிறது. சொல்லப்போனால் காவிகளின் வடநாட்டையும், பெரியாரின் தமிழ்நாட்டையும் வேர்பிரிப்பது இந்த வேற்றுமைகள்தான்.

தமிழகத்தில் குற்றவாளி சாமியார்கள் பிடிப்பட்டதே இல்லையா, அல்லது இங்கு காவிகள்தான் இல்லையா?
ஜெயேந்திரன், பிரேமானந்தா, நித்தியானந்தா போன்றக் காவிக் கயவர்கள் சிக்கியப்போது அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மெல்லிய அலையாவது வீசியதுண்டா? ராமகோபாலன் தொடங்கி, அர்ஜுன் சம்பத் வரை எல்லா இந்தத்துவப் பயலும்கூட பொத்திக்கொண்டுதானே இருந்தார்கள்?
தமிழன் சிக்கிய சாமியர்களை ஆதரிக்கவில்லை என்பதா செய்தி? இல்லையில்லை, அந்த டுபாக்கூர்களுக்கு எதிராக ஆர்ப்பரித்தான் தமிழன் என்பதுதானே செய்தி!

நேற்றைய ஜெயினூல் ஆபிதீன் விவகாரத்திலும்கூட இணையத்தில் அவரை தொலுரித்துத் தொங்கவிடுபவர்களுள் கணிசமானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதுதானே வெட்டவெளிச்சம்?
இதுதானடா எங்கள் பெரியாரின் மண்!

"சாமியார்களை சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களை சுரண்ட முயல்கிறார்கள், எனவே சாமியார்கள் அனைவரும் தங்களுக்கான வாரிசுகளை வளர்த்தெடுக்கவேண்டும்" என்று பா.ஜ.கவின் சு.சாமி ஆலோசனை வழங்க, அந்தக் கட்சியின் மற்றோரு எம்.பியான சாக்சி மகராஜ் இந்தக் கொச்சையான குர்மீத்தை பச்சையாகவே  ஆதரித்திருக்கிறான்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இதைப் போன்ற செக்ஸ் புகாரில் தண்டனைப் பெற்ற சாமியார்களை அல்ல, அவர் தங்கள் இயக்கத்தைச் சார்ந்த நபராகவே இருந்தாலும் அவரை ஆதரிப்பார்களா?
இதுதான் ஆரியத்திற்கும், திராவிடத்திற்குமான வேறுப்பாடு. படுபாதகர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் உள்ள வேறுப்பாடு.

லட்சக்கணக்கான அடிமைகள் நிரம்பி வழியும் கட்சியான அ.தி.மு.கவிலேயே ஜெயலலிதா தலைமைப்பீடத்திற்கு வரவேண்டுமானால், தன் 'இந்தத்துவ செருப்பை' வாசலில் கழற்றிவிடவேண்டிய நிலையில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

திராவிடம் வெல்லும்!

-GANESH BABU

1 comment:

  1. always better than dra'vida' scoundrels. Destruction of dravida goons is primary goal of every indian.

    ReplyDelete