சமுக உறவில் தேடுங்கள்

Loading

Monday, August 28, 2017

வணக்கம் என்று சொல்ல வைத்தோம்

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டனவே என்ன செய்தீர்கள் என்றார்..
சிரித்துக்கொண்டே சொன்னேன் அம்மணசாமியார் சட்டமன்றத்திற்குள் வராமல் பார்த்துக்கொண்டோமே ..
..
மிகபெரிய கால அளவுதான் ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக எங்களை அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து மீண்டுவந்த சுயமரியாதையோடு இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறோமே.. ஆட்சியில் இருந்ததாக சொல்லபடும் ஆண்டுகளில் ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் கூட திமுக ஆட்சியில்இல்லை ..அதிமுகவை நீங்கள் திராவிட இயக்கமாக கருதமுடியாது..
..
இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜரை அவரின் ஆட்சியை புகழ்ந்துக்கொண்டிருக்கிறோமே அதற்கு காரணம் பெரியார்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ராஜாஜியின் கட்டுபாட்டியிலிருந்த காங்கிரஸை தமிழர்களின் தலைமைக்கு கொண்டுவர வேண்டுமென எண்ணி குடியாத்தம் இடைதேர்தலில் காமராஜரை நிற்க சொல்கிறார்.. காமராஜரோ நான் மிகவும் பின்தங்கிய நாடார் வகுப்பை சார்ந்தவன் குடியாத்தத்தில் முதலியார்களும் முஸ்லிம்களுமே,அதிகம்..என்ற போது நான் சொல்கிறேன் நீ நில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தமிழர்கள் காமராஜரை ஆதரியுங்கள் என்றார் திக விலிருந்து பிரிந்து திமுக கண்ட அண்ணாவும் , கண்ணியமிக்க காயிதே மில்லத்தும்
பெரியார் சொல்லிவிட்டார் என்று ஆதரித்தார்கள்.. அப்படிதான் தமிழக அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கியது..
..
திமுக ஆட்சியிலிருந்த போதுதான் .. சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க திட்டங்களும் சட்டங்களும் வந்தன.. 1950 களில் அண்ணல் அம்பேத்கர் வீட்டிலும் நாட்டிலும் ..எல்லா மத ஜாதியிலும் பெண்கள் அடிமைகளாகதானியிருக்கிறார்கள்..
அவர்களுக்கென்று உரிமைகளில்லை சொத்தில் பங்கில்லை எனவே அதை சட்டமாக்க வரைவை கொண்டுவருகிறேன் என நாடாளுமன்றத்திலே பேசிய போது பண்டிதஜவகர்லால் நேரு  தலைமையிலான அரசு இருந்த போதே ஆதிக்க மேட்டுக்குடி பார்பனர்கள் கடுமையாக எதிர்த்து தோற்கடித்தார்கள்.. என்னால் முடியாமல் போனது எப்போதாவது ஒருதலைவன் பெண்களுக்கான உரிமையை கொண்டுவருவான் என கூறி ராஜினாமா செய்துவிட்டுபோனார்..
ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு சொத்தில் சமபங்கை  கொண்டுவந்து சட்டமாக்கியது திராவிட இயக்கம் தான் திமுகதான் #கலைஞர்தான்.. இந்தியாவிற்கே வழிகாட்டியது..
..
இன்றைக்கும் இடஒதுக்கீட்டில் 69 சதவிகிதத்தை செயல்படுத்துவதும் சாதிமத கட்டமைப்பை உடைத்து சமத்துவபுரம் கண்டதும், மலம் அள்ளுவோர் என ஒதுக்கி வைத்த அருந்தியினருக்கு உள்இடஒதுக்கீட்டை வழங்கி இன்றைக்கு மருத்துவம் பொறியியல் என உயர்கல்வி பெற வழிவகை செய்ததும்.. இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட்டுக்கொண்டு சரிசமமாக அமர்ந்து பேச வைத்ததும்...சமூகநீதியில் இன்றுவரை இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் இருப்பதும் திமுகவால் திராவிடத்தால் கிடைத்தது..
..
குளத்தில் தண்ணீர் அள்ளி குடிக்கவோ குண்டி கழுவவோ விடமாட்டேன் என்கிறான் என் இனத்தவனை அறநிலையத்துறை அமைச்சராக்கி கருவறை வரை செல்ல வைத்தது திராவிடம்தான் பெரியார்தான் என பெருமையோடு சொன்னார் #அம்பேத்கர்
பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவனை பெரியார் சொன்னார் என்பதற்காக அமைச்சராக்கினார் காமராஜர்..
..
திராவிடத்தை உச்சரிக்காமல் இங்கே அரசியலே செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவந்திருப்பதும்
மற்றமாநிலங்களை போல் அல்லாமல் எல்லாவற்றிலும் முன் உதாரணத்தை உருவாக்கியிருப்பது திராவிடம்தான்..
..
காரல் மார்க்ஸ் சொன்னார்..
குரங்கையும் மாட்டையும் தெய்வமாக மதிக்கிற நாட்டில் ஒரு கலாச்சார புரட்சியோ பொருளாதார புரட்சி வராதென்றார்.. இன்றைக்கு தமிழகத்தில் மாட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு நவநாகரீக சீர்திருத்த  சிந்தனையை கொண்டுவந்ததும் .. கலாச்சாரம் என்ற பெயரில் மூடத்தனமும் எடுபடாமல் போனதற்கும்  திராவிடம்தான் காரணம்...
தமிழகத்தில் சுயமரியாதையோடு வாழ முடிகிறதே.. , உணர்வால் ஒன்றுப்பட்டு நிற்க முடிகிறதென்றால்
பெரியாரும், பெரியாரின் கொள்கைகளை தாங்கி அதை அரசியலாய் சட்டவடிவாய் மாற்றிக்காட்டிய பெருமை திமுகவை கலைஞரையே சாரும்..
..
இன்றைக்கு  பாஜகவினர் படித்த பதினெட்டு அடவும் நடத்திப்பார்த்தும் ஒன்றும் முடியவில்லையே..காரணம் திராவடத்தின் தாக்கம் மனதில் வேரூன்றி இருப்பதே சாட்சி
..
நமஸ்காரம் என்ற ஆதிக்கதிமிரில் இருந்தும்
கும்பிடுறேன் சாமி என்ற அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வணக்கம் என்று சுயமரியாதையோடு கதைக்கவைத்தது திராவிடம் தான்..
..
#இருவர்_பெருங்கிழவர்கள்..
..
தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment