தொகுப்புகள்

Search This Blog

Monday, August 28, 2017

நிரோத் என்றால் என்ன மாமா?

நிரோத் என்றால் என்ன மாமா?
ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் ஊட்டியில் இருந்து எங்கள் சொந்த கிராமமான நம்பியாம்பாளையத்திற்கு விடுமுறையில் வந்திருந்தேன்.. என் மாமா சிவக்குமார், எனக்கு 2 வயது மூத்தவராக இருப்பார். அவரும் நானும் அரசு சுகாதார மையம் அருகில் விளையாடிக் கொண்டிருந்தோம்.அப்போது நமது அரசாங்கம் தீவிர குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.. அந்த சுகாதாரம் நிலையம் அருகே பாக்கெட்டில் ஏதோ கிடைத்தது, அதில் சிவப்பு முக்கோணக் குறியீட்டு நிரோத் என்று எழுதப்பட்டிருந்தது.. அந்த வயதில் எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. அதை எடுத்துக் கொண்டு நானும் மாமாவும் வந்துவிட்டோம். அன்று புதன்கிழமை .எங்கள் ஊரில் வழக்கமாக வியாழக்கிழமை அன்றுதான்  வார சந்தை கூடும்.. இந்த சந்தையை நோக்கி வந்து, அந்த பாக்கெட்டை
பிரித்தபோது பலூன் போல ஒன்று கிடைத்தது.. சரி இது நவீன பலூன் என்று நினைத்து சந்தகடையில் நட்டப்பட்டிருக்கும் அந்த பந்தல் கால்களில் சுமார் 50  பலூன்களை ஊதி கட்டிவிட்டு  வீடு வந்து சேர்ந்தோம்.அடுத்த நாள் காலை சந்தைக் கூடும்பொழுது ஊர் சற்றுப் பரபரப்பாக இருந்தது, எவனோ நிரோத்தை  ஊதி சந்தை முழுவதும் கட்டிவிட்டிருக்கிறான்  என்ற பேச்சாக இருந்தது.அப்போது தான் எனக்கு தெரிந்தது இது வேறு ஏதோ ஒரு தீண்டதகாத பொருள் என்று.. பிறகு என் பெரிய மாமாவிடம் சென்று,  நிரோத் என்றால் என்ன மாமா என்று கேட்டேன்.போடா ..அதை தெரிஞ்சுக்க உனக்கு வயசில்லை என்றார்.. தற்போதைய தொழில் நுட்பங்கள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒரு பொருளைப் பற்றி தாமே தெரிந்துகொள்வது மிகவும் கடினம்.. அந்த சந்தேகத்துடனேயே நானும் ஊட்டிக்கு சென்றுவிட்டேன்.சில நாட்கள் சென்றது. அப்போது ரஞ்சித் என்ற மேல்வகுப்பு மாணவர் நிரோத் பற்றியும் குடும்ப கட்டுப்பாடு பற்றியும் எனக்கு சொல்லித் தந்தார்.. அப்போதுதான் கல்வியின் ஈடுபாட்டிலிருந்து கலவியில் ஈடுபாடு சற்று அதிகம் ஆனது...
அன்று ஆரம்பித்த தேடல் கலவியில் மட்டுமல்ல கலை, அறிவியல், தொழில்நுட்பம் , அரசியல், வரலாறு என்று இன்றும் நீண்டுகொண்டே இருக்கிறது... ஒரு தேடல் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்பதை உணர்த்தியது. இன்றும் தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது....
இப்படிக்கு
உங்கள்
ஆ.பாபு

No comments:

Post a Comment