என் வீட்டை சுற்றி சுமார் 1000 விநாயகர் சிலைகள் இருக்கும் .தாரை தப்பட்டை சகிதமாக ,ஆரஞ்சு நிற கொடிகளுடன் என் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் கும்பல் கும்பலாக "பாரத் மாதா கி ஜெய் " என்று கத்தியபடி கடந்த 5மணி நேரமாக வந்து சென்றவண்னம் இருக்கிறார்கள் கூடவே "கோ.....கோ.....மா....." என்கிற வார்த்தைகளும் .
இவர்கள் அனைவரும் RSS ஆ?
புத்தகங்கள் இருக்க வேண்டிய கைகளில் காவி கொடி எப்படி வந்தது ?
தங்களை அடிமைகளாக்கி ,ஒடுக்கப்பட்டவர்களாய் செய்த ஒரு மதத்தை அவர்கள் கொண்டாட காரணம் என்ன ?
1893 வரை விநாயக சதுர்த்தி என்பது வெறும் வரலாறு புத்தகங்களில் மட்டுமே இருந்த ஒன்று .மராட்டிய மன்னர்கள் மொகலாய மன்னர்களுக்கு எதிராய் புரிந்த போர்களில் விநாயகர் நடு புள்ளியாக இருந்தார் .அதற்கு பின்பு 1893 வரை விநாயக சதுர்த்தி என்பது வெறும் தனிமனிதர்களால் அவர்களின் வீட்டின் உள்ளேயே அதுவும் வெறும் மஹாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே அனுஷ்டிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்தது .
1893இல் என்ன நடந்தது ?
பால கங்காதர திலக் எனும் ஒரு தேசியவாதி (குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்து தேசியவாதி ) இந்தியாவின் நிலையை கண்டு கலங்கினார் .இந்தியாவில் இந்துத்துவ உணர்வே இல்லாமல் பார்ப்பனர்களும் ,ஒடுக்கப்பட்டவர்களும் பிரிந்திருந்ததை கண்டார் .மனம் வாடினார் .
பார்பனர்களையும் ,ஒடுக்கப்பட்டவர்களையும் 'ஹிந்து' என்கிற ஒற்றை புள்ளியில் இணைக்க விநாயகர் தான் சிறந்த கடவுள் என்று முடிவு செய்கிறார் .
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டிருந்த சமூக போராளிகளை ..."தேச _துரோகிகள் " anti-nationals என்று முதல் முறை அழைத்தவர் அவர்தான் .அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு இந்துக்களாக இணைந்து வெள்ளையனை வெளியேறுவதை மட்டும் செய்ய சொல்லுகிறார் .
விநாயக சதுர்த்தி விழாக்களை பொதுவில் கொண்டாட நிர்பந்திக்கிறார் ,சிறுபான்மையினர் முன் (குறிப்பாக இஸ்லாமியர்கள் ) முன் விநாயக ஊர்வலங்களை நிகழ்த்தி ஹிந்துக்களின் பலத்தை காட்ட சொல்லுகிறார் (அவரின்' கேசரி ' நாளிதழில் ).
இப்படியாக வளர்ந்தது தான் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் ,ஊர்வலங்களும் .
விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் ஹிந்துத்துவாவின் பிரதான கொள்கை விழா என்பது கூட தெரியாமல் அதற்கு இந்த இளைஞர்கள் பலியாகி வருகிறார்கள் என்பது மனம் வலிக்க செய்கிறது .
இன்று ஒடுக்கப்பட்ட இளைஞன் திராவிடம் பேசாமல் RSS இல் சேர்கிறான் என்றால் அதற்கு காரணம் ஹிந்துத்துவா ....அதற்கு வித்திட்டது பால கங்காதர திலக் எனும் தேசியவாதி .
சென்ற வருடம் வியசார்பாடியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு இஸ்லாமியர்கள் அதிக வசிக்கும் புலியந்தோப்பு பகுதி வழியாக வரும்போது ....விநாயகர் சிலைகளை கரைக்க தயாராகி கொண்டிருந்த ட்ரக்குகள் முழுதும் நிறைந்திருந்த இதே இளைஞர் பட்டாளம் உச்சரித்த வார்த்தைகள் போர் பதற்றத்தை தர கூடியவை .
இன்று சொல்லுகிறேன் ....ஒரு மதத்தை பின்பற்றுவது அல்லது சில சடங்குகளை செய்வது அவர் அவர் விருப்பம் ..ஆனால் ஒரு பகுதியினரை பயமுறுத்த ,ஒடுக்கப்பட்டவர்களை அறியாமையின் குழியில் தள்ளும் இந்துத்துவ சக்திகளுக்கு நம் ஒற்றுமை இரையாகத்தான் வேண்டுமா ?
ஷாலின்
Avvayar
ReplyDeleteshameless antihindu f***ers, corrupt dravida goons only bluff like this.
ReplyDelete