நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவிற்கும் எனக்கும் ஒரே வேறுபாடுதான், 20 வருடங்களுக்கு முன் நுழைவுத் தேர்வால் என் மருத்துவ கனவு தகர்ந்த போது என்னுடன் என் அம்மா இருந்தார்கள்.. இன்று அனிதாவிற்கு அம்மா இல்லை, அனிதாவின் மீளா துயரில் இருந்து மீண்டு வருவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது, நானும் குழந்தையிலிருந்தே மருத்துவராக வேண்டும் (அப்பாவின் வெள்ளை நிற சட்டையை மாட்டிக் கொண்டு மருத்துவராகவே மாறி விளையாடுவேன்) என்பதை லட்சியமாக கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.. அப்பொழுது இருந்த நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களையும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்த்துதான் கட் ஆஃப் பார்ப்பார்கள்.. 1. 5 மதிப்பெண்ணில் என் மருத்துவ கனவு தகர்ந்தது... ஒரு வருடம் improvement தேர்வுக்கும், நுழைவு தேர்வுக்கும் படித்து அடுத்த வருடமும் அது மேலும் உயர சென்று எட்டாக்கனியாகவே மாறியது. அந்த ஏமாற்றத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது..
பைத்தியம் பிடித்தது போல் இருக்கும், அன்று என் உறவினர்கள் நண்பர்கள் ஆசிரியர்கள் என்று அனைவரும் என்னைத் தேற்றி உற்சாகப்படுத்தி.. பொறியியல் கல்லூரியில் சேர ஆலோசனை வழங்கினார்கள் , ஆனால் 20 வருடங்களுகுப்பிறகு இந்தச் சமூகம் பல மாற்றங்களை சந்தித்துவிட்டது, ஓட்டப்பந்தயத்தில் விழுந்துவிட்டால் முன்னால் ஓடுபவர்களே வந்து கைதூக்கி விடும் காலம் அது, இன்று உலகம் மாறிவிட்டது, சுயநலமே மேலோங்கி விட்டது, மனதுடைந்த வேளையில் எனக்கு கிடைத்த அந்த தன்னம்பிக்கையும், அம்மாவின் ஆதரவும், அரவணைப்பும் அனிதாவிற்கும் கிடைத்திருந்தால் இன்று அனிதா நம்மிடையே இருந்திருப்பாள்...
உங்கள்
சாந்திபாபு
No comments:
Post a Comment