வரலாறு தெரிந்து கொள்வோம்🙏🙏🙏
அணைகளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காத நாம் கலைஞர் ஆரம்பித்த திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம். இதனையும் அரசியலாக பார்க்காமல் இதனை தெரிந்து கொள்ள்வதற்காக படிப்போம்.*
💐💐💐💐💐💐💐💐💐💐
1. *போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது* கலைஞர்
2. *போக்குவரத்தை தேசியமையமாக்கியது* கலைஞர்
3. *மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது* கலைஞர்
4. *1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது* கலைஞர்
5. *தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது* கலைஞர்
6. *குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது* கலைஞர்
7. *முதலில் இலவச*
*கண் சிகிச்சை முகாம் அமைத்தது* கலைஞர்
8. *பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது* கலைஞர்
9. *கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது* கலைஞர்
10. *இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது* கலைஞர்
11. *குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது* கலைஞர்
12. *இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது* கலைஞர்
13. *பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது* கலைஞர்
14. *அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது* கலைஞர்
15. *அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது* கலைஞர்
16. *P.U.C வரை இலவசக்கல்வி உருவாக்கியது* கலைஞர்
17. *மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர்
18. *வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர்
19. *முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது* கலைஞர்
20. *அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது* கலைஞர்
21. *அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது* கலைஞர்
22. *மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது* கலைஞர்
23. *கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம் " தந்தது* கலைஞர்
24. *சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது* கலைஞர்
25. *நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது* கலைஞர்
26. *இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது* கலைஞர்
27. *பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது* கலைஞர்
28. *SIDCO உருவாக்கியது* கலைஞர்
29. *SIPCOT உருவாக்கியது* கலைஞர்
30. *உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது* கலைஞர்
31. *பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது* கலைஞர்
32. *மனு நீதி திட்டம் தந்தது* கலைஞர்
33. *பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது* கலைஞர்
34. *பசுமை புரட்சி திட்டம் தந்தது* கலைஞர்
35. *கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது* கலைஞர்
36. *மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது* கலைஞர்
37. *மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்
38. *தாழ்த்தப்பட்டோருக்கு18% தன இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்
39. *பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்
40. *மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது* கலைஞர்
41. *வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது* கலைஞர்
42. *தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது*
43. *இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது* கலைஞர்
44. *சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது* கலைஞர்
45. *அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது* கலைஞர்
46. *ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது* கலைஞர்
47. *ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்
48. *விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்
49. *நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது* கலைஞர்
50. *நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது* கலைஞர்
51. *தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது* கலைஞர்
52. *கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்
53. *பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது* கலைஞர்
54. *மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர்
55. *பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர்
56. *டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது* கலைஞர்
57. *முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர்* கலைஞர்
58. *உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது* கலைஞர்
59. *உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு*
60. *இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது* கலைஞர்
61. *மெட்ராஸ், சென்னையாக்கியது* கலைஞர்
62. *முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது* கலைஞர்
63. *தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது* கலைஞர்
64. *முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர்* கலைஞர்
65. *கான்கிரீட் சாலை அமைத்தது* கலைஞர்
66. *தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது* கலைஞர்
67. *ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது* கலைஞர்
68. *தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது* கலைஞர்
69. *செம்மொழி மாநாடு நடத்தியது* கலைஞர்
70. *சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது* கலைஞர்
71. *பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர்* கலைஞர்
72. *விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர்* கலைஞர்.
*(2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)*
73. *நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர்* கலைஞர்.
விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)
74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்* கலைஞர்.
**************************** *இதை சொல்வது அரசியல் வாதி அல்ல வரலாறு.*
அருமையான தொகுப்பு அ!னைத்தும் உண்மையே
ReplyDeleteசெம்மொழிக்கான தகுதியைக் கலைஞர் குறைக்க ஒப்பியதால் நிறைய மொழிகள் நுழைந்துவிட்டன. கச்சத்தீவு தாரைவார்ப்பு, காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்காமை, ஈழ இனஅழிப்பு அழியாக் கறைகளே. அவசரநிலைக் காலத்தில் மத்திய அரசு எடுத்துக்கொண்ட கல்வியை கூட்டணியில் இருக்கும்போது மாநிலத்திற்கு பெற்றிருக்கலாமே?
ReplyDeleteஇருமுறை ஆட்சியை இழந்தவர் (ஈழத்தமிழருக்காக) என்பதும் வடிகட்டிய பொய். முதல்தடவை ஒருமாதத்திற்குமுந்தான் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர் கொடுத்த ஊழல் புகாரும் அவசரநிலை எதிர்ப்புமேகாரணங்கள்.
ReplyDeleteசெய்தது கலைஞர், வைத்தது கலைஞர்,தந்தது கலைஞர்,
ReplyDeleteநடத்தியது கலைஞர்.........கலைஞரை அஃறிணையாக்கி விட்டீர்களே