தொகுப்புகள்

Search This Blog

Thursday, August 31, 2017

நீல திமிங்கலம் - Blue whale

நீல திமிங்கலம்
அப்படி இது என்ன  விளையாட்டு ? ஒரு மனிதனின் உளப்பிணி சவாலான விளையாட்டு என்று தோன்றுகிறதா? அங்கு சுற்றி இங்கு சுற்றி இன்று மதுரை மண்ணிலும் தன் கோர கால்களை ஊன்றியிருக்கிறது..
அதைப் பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம். இது 50 சவால்களை உள்ளடக்கிய ஒரு ஆன்லைன் விளையாட்டு, சிறிது சிறிதாகக் பணி (task) வழங்கப்பட்டு ஐம்பதாவது நாளில் தற்கொலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது..
ஒரு வியக்கத்தக்க கேள்வி என்னவென்றால், தற்கொலையை முடிவாக கொண்ட விளையாட்டை பலரும் ஏன் இவ்வளவு ஆர்வமாக விளையாடுகிறார்கள் என்பதுதான்..
பிரச்சனை என்னவென்றால் விளையாடிற்கு  அப்பாற்பட்டு நம் மனநிலையில் உள்ளது என்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.. நீலத் திமிங்கிலம் போன்ற விளையாட்டுகள் பல உள்ளது F57, Wake Me Up போன்ற விளையாட்டுக்களும் உள்ளடக்கம். இன்றைய சமூகத்தில் சமூக வலைதளங்களின்  பங்களிப்பை நம் வாழ்விலிருந்து புறக்கணித்துவிடமுடியாது, அவ்வாறான சமூக வலைத்தளங்களில்  பலவீனமானவர்களை பார்த்து  வலை விரித்து, நாசூக்காக அவர்கள் உள்டப்பிக்கு அணைத்து அழைத்துச் செல்கிறது...

அங்கு உங்களுக்கு சில கேள்விகள் கேட்கப்படுகிறது?

மேற்பார்வையாளர்:- உங்கள் நீல திமிங்கலம் பற்றிய நிலைத்தகவலை நான் முகநூலில் கண்டேன், எதற்காக நீங்கள் அந்த விளையாட்டை விளையாட வேண்டும்?

விளையாடுபவர் :-  அதன் மீது ஓர் விருப்பமும் ஆர்வமாக இருக்கிறேன்..  வாழப் பிடிக்கவில்லை..

மேற்பார்வையாளர்:- என்னால் உங்களை நம்ப முடியவில்லை, உங்கள் உடம்பில் மூன்று கோடுகள் போட்டு, காயங்களை ஏற்படுத்தி  எனக்கு தீர்க்கமான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

விளையாடுபவர் இந்தப் புகைப்படங்களை அனுப்பிவிட்டால் அவருடைய பலவீனத்தைப் பயன்படுத்தி மிக எளிதாக அவரைத் தன் வலையில் சிக்க வைக்கிறார் மேற்பார்வையாளர்.

பிறகு ஒவ்வொரு பணியாக வழங்கப்படுகிறது.. அந்தப் பணியைச் செய்து முடித்ததற்கான ஆதாரங்களை படங்களாகவும் வீடியோவாகவும்  அனுப்ப சொல்லி சேமித்து வைக்கிறார் மேற்பார்வையாளர்.. ஒரு கட்டத்தில் personal நம்பர் முதல் அந்தரங்க புகைப்படங்கள் வரை  விளையாடுபவர்களே அனுப்பக் கூடிய சூழலுக்கும் கொண்டு செல்கின்றனர்.. அதன்பிறகு விளையாட்டைப் பாதியில் நிறுத்த நேர்ந்தால்  அந்த ஆதாரங்களை வைத்து மிரட்டவும் செய்கிறார்கள்..

இதில் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மற்ற விளையாட்டுகளை போல கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்தோ, அல்லது ஒரு இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விளையாட கூடிய விளையாட்டு அல்ல..  ஆகவே நம் மத்திய மாநில அரசுகள்  இதை கண்காணிப்பதில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளையும் அடையாளம் தெரியாத நபர்களின் கணக்குகளையும் கண்காணிப்பதில் சற்று முனைப்புகாட்ட வேண்டும்.. நம் செய்கைக்கு எல்லாம் அரசாங்கத்தையே குறை சொல்வதும் முறையல்ல. இந்த விபரீதமான விளையாட்டுக்கு அடிமையான நபர்களை சார்ந்திருக்கும் பெற்றோர்களும் நண்பர்களும் அவர்களை தீவிரமாகக் கண்காணிப்பது மட்டுமே இதற்கு  ஒரு தீர்வாக அமையும்..

இந்த விளையாட்டைக் கண்டு பிடித்தவர் சொன்ன ஒரு அதிர்ச்சி தகவலுடன் நிறைவு செய்கிறேன்.. இந்த சமூகத்திற்கு எந்த உபயோகமும் இல்லாத  பதர்களை நான் அழிக்கிறேன்...

உங்கள் சொந்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, இந்த சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து இந்த சமூகத்தின் மீதும் அடுத்த  தலைமுறையின் மீதும் ஒரு உண்மையான அக்கறை இருக்குமானால் இது போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபாடும் என்னம் உங்களுக்குப் தோன்றாது என்பதே என் தீர்க்கமான முடிவு.
இப்படிக்கு
உங்கள்
ஆ.பாபு

Monday, August 28, 2017

நிரோத் என்றால் என்ன மாமா?

நிரோத் என்றால் என்ன மாமா?
ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் ஊட்டியில் இருந்து எங்கள் சொந்த கிராமமான நம்பியாம்பாளையத்திற்கு விடுமுறையில் வந்திருந்தேன்.. என் மாமா சிவக்குமார், எனக்கு 2 வயது மூத்தவராக இருப்பார். அவரும் நானும் அரசு சுகாதார மையம் அருகில் விளையாடிக் கொண்டிருந்தோம்.அப்போது நமது அரசாங்கம் தீவிர குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.. அந்த சுகாதாரம் நிலையம் அருகே பாக்கெட்டில் ஏதோ கிடைத்தது, அதில் சிவப்பு முக்கோணக் குறியீட்டு நிரோத் என்று எழுதப்பட்டிருந்தது.. அந்த வயதில் எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. அதை எடுத்துக் கொண்டு நானும் மாமாவும் வந்துவிட்டோம். அன்று புதன்கிழமை .எங்கள் ஊரில் வழக்கமாக வியாழக்கிழமை அன்றுதான்  வார சந்தை கூடும்.. இந்த சந்தையை நோக்கி வந்து, அந்த பாக்கெட்டை
பிரித்தபோது பலூன் போல ஒன்று கிடைத்தது.. சரி இது நவீன பலூன் என்று நினைத்து சந்தகடையில் நட்டப்பட்டிருக்கும் அந்த பந்தல் கால்களில் சுமார் 50  பலூன்களை ஊதி கட்டிவிட்டு  வீடு வந்து சேர்ந்தோம்.அடுத்த நாள் காலை சந்தைக் கூடும்பொழுது ஊர் சற்றுப் பரபரப்பாக இருந்தது, எவனோ நிரோத்தை  ஊதி சந்தை முழுவதும் கட்டிவிட்டிருக்கிறான்  என்ற பேச்சாக இருந்தது.அப்போது தான் எனக்கு தெரிந்தது இது வேறு ஏதோ ஒரு தீண்டதகாத பொருள் என்று.. பிறகு என் பெரிய மாமாவிடம் சென்று,  நிரோத் என்றால் என்ன மாமா என்று கேட்டேன்.போடா ..அதை தெரிஞ்சுக்க உனக்கு வயசில்லை என்றார்.. தற்போதைய தொழில் நுட்பங்கள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒரு பொருளைப் பற்றி தாமே தெரிந்துகொள்வது மிகவும் கடினம்.. அந்த சந்தேகத்துடனேயே நானும் ஊட்டிக்கு சென்றுவிட்டேன்.சில நாட்கள் சென்றது. அப்போது ரஞ்சித் என்ற மேல்வகுப்பு மாணவர் நிரோத் பற்றியும் குடும்ப கட்டுப்பாடு பற்றியும் எனக்கு சொல்லித் தந்தார்.. அப்போதுதான் கல்வியின் ஈடுபாட்டிலிருந்து கலவியில் ஈடுபாடு சற்று அதிகம் ஆனது...
அன்று ஆரம்பித்த தேடல் கலவியில் மட்டுமல்ல கலை, அறிவியல், தொழில்நுட்பம் , அரசியல், வரலாறு என்று இன்றும் நீண்டுகொண்டே இருக்கிறது... ஒரு தேடல் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்பதை உணர்த்தியது. இன்றும் தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது....
இப்படிக்கு
உங்கள்
ஆ.பாபு

வணக்கம் என்று சொல்ல வைத்தோம்

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டனவே என்ன செய்தீர்கள் என்றார்..
சிரித்துக்கொண்டே சொன்னேன் அம்மணசாமியார் சட்டமன்றத்திற்குள் வராமல் பார்த்துக்கொண்டோமே ..
..
மிகபெரிய கால அளவுதான் ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக எங்களை அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து மீண்டுவந்த சுயமரியாதையோடு இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறோமே.. ஆட்சியில் இருந்ததாக சொல்லபடும் ஆண்டுகளில் ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் கூட திமுக ஆட்சியில்இல்லை ..அதிமுகவை நீங்கள் திராவிட இயக்கமாக கருதமுடியாது..
..
இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜரை அவரின் ஆட்சியை புகழ்ந்துக்கொண்டிருக்கிறோமே அதற்கு காரணம் பெரியார்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ராஜாஜியின் கட்டுபாட்டியிலிருந்த காங்கிரஸை தமிழர்களின் தலைமைக்கு கொண்டுவர வேண்டுமென எண்ணி குடியாத்தம் இடைதேர்தலில் காமராஜரை நிற்க சொல்கிறார்.. காமராஜரோ நான் மிகவும் பின்தங்கிய நாடார் வகுப்பை சார்ந்தவன் குடியாத்தத்தில் முதலியார்களும் முஸ்லிம்களுமே,அதிகம்..என்ற போது நான் சொல்கிறேன் நீ நில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தமிழர்கள் காமராஜரை ஆதரியுங்கள் என்றார் திக விலிருந்து பிரிந்து திமுக கண்ட அண்ணாவும் , கண்ணியமிக்க காயிதே மில்லத்தும்
பெரியார் சொல்லிவிட்டார் என்று ஆதரித்தார்கள்.. அப்படிதான் தமிழக அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கியது..
..
திமுக ஆட்சியிலிருந்த போதுதான் .. சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க திட்டங்களும் சட்டங்களும் வந்தன.. 1950 களில் அண்ணல் அம்பேத்கர் வீட்டிலும் நாட்டிலும் ..எல்லா மத ஜாதியிலும் பெண்கள் அடிமைகளாகதானியிருக்கிறார்கள்..
அவர்களுக்கென்று உரிமைகளில்லை சொத்தில் பங்கில்லை எனவே அதை சட்டமாக்க வரைவை கொண்டுவருகிறேன் என நாடாளுமன்றத்திலே பேசிய போது பண்டிதஜவகர்லால் நேரு  தலைமையிலான அரசு இருந்த போதே ஆதிக்க மேட்டுக்குடி பார்பனர்கள் கடுமையாக எதிர்த்து தோற்கடித்தார்கள்.. என்னால் முடியாமல் போனது எப்போதாவது ஒருதலைவன் பெண்களுக்கான உரிமையை கொண்டுவருவான் என கூறி ராஜினாமா செய்துவிட்டுபோனார்..
ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு சொத்தில் சமபங்கை  கொண்டுவந்து சட்டமாக்கியது திராவிட இயக்கம் தான் திமுகதான் #கலைஞர்தான்.. இந்தியாவிற்கே வழிகாட்டியது..
..
இன்றைக்கும் இடஒதுக்கீட்டில் 69 சதவிகிதத்தை செயல்படுத்துவதும் சாதிமத கட்டமைப்பை உடைத்து சமத்துவபுரம் கண்டதும், மலம் அள்ளுவோர் என ஒதுக்கி வைத்த அருந்தியினருக்கு உள்இடஒதுக்கீட்டை வழங்கி இன்றைக்கு மருத்துவம் பொறியியல் என உயர்கல்வி பெற வழிவகை செய்ததும்.. இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட்டுக்கொண்டு சரிசமமாக அமர்ந்து பேச வைத்ததும்...சமூகநீதியில் இன்றுவரை இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் இருப்பதும் திமுகவால் திராவிடத்தால் கிடைத்தது..
..
குளத்தில் தண்ணீர் அள்ளி குடிக்கவோ குண்டி கழுவவோ விடமாட்டேன் என்கிறான் என் இனத்தவனை அறநிலையத்துறை அமைச்சராக்கி கருவறை வரை செல்ல வைத்தது திராவிடம்தான் பெரியார்தான் என பெருமையோடு சொன்னார் #அம்பேத்கர்
பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவனை பெரியார் சொன்னார் என்பதற்காக அமைச்சராக்கினார் காமராஜர்..
..
திராவிடத்தை உச்சரிக்காமல் இங்கே அரசியலே செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவந்திருப்பதும்
மற்றமாநிலங்களை போல் அல்லாமல் எல்லாவற்றிலும் முன் உதாரணத்தை உருவாக்கியிருப்பது திராவிடம்தான்..
..
காரல் மார்க்ஸ் சொன்னார்..
குரங்கையும் மாட்டையும் தெய்வமாக மதிக்கிற நாட்டில் ஒரு கலாச்சார புரட்சியோ பொருளாதார புரட்சி வராதென்றார்.. இன்றைக்கு தமிழகத்தில் மாட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு நவநாகரீக சீர்திருத்த  சிந்தனையை கொண்டுவந்ததும் .. கலாச்சாரம் என்ற பெயரில் மூடத்தனமும் எடுபடாமல் போனதற்கும்  திராவிடம்தான் காரணம்...
தமிழகத்தில் சுயமரியாதையோடு வாழ முடிகிறதே.. , உணர்வால் ஒன்றுப்பட்டு நிற்க முடிகிறதென்றால்
பெரியாரும், பெரியாரின் கொள்கைகளை தாங்கி அதை அரசியலாய் சட்டவடிவாய் மாற்றிக்காட்டிய பெருமை திமுகவை கலைஞரையே சாரும்..
..
இன்றைக்கு  பாஜகவினர் படித்த பதினெட்டு அடவும் நடத்திப்பார்த்தும் ஒன்றும் முடியவில்லையே..காரணம் திராவடத்தின் தாக்கம் மனதில் வேரூன்றி இருப்பதே சாட்சி
..
நமஸ்காரம் என்ற ஆதிக்கதிமிரில் இருந்தும்
கும்பிடுறேன் சாமி என்ற அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வணக்கம் என்று சுயமரியாதையோடு கதைக்கவைத்தது திராவிடம் தான்..
..
#இருவர்_பெருங்கிழவர்கள்..
..
தோழர். ஆலஞ்சி

Saturday, August 26, 2017

நீட் தேர்வு - ஒரு சர்வதேச சதி

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்

Subramaniam Iyer

இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.

''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''

''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''

''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''

''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''

''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்' தேர்வு.''

''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''

''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''

''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''

''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''  

''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''

"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''

''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''

''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''

காவிக் கயவர்கள்

நேற்று இரண்டு சம்பவங்கள் நடந்தேறின. ஒன்று, பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் என்ற காமவெறி சாமியாருக்கு ஆதரவாக மதவெறியர்கள் பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தில் நிகழ்த்திய கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மற்றொன்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினூல் ஆபிதீன் ஏற்கனவே திருமணமான ஒருப் பெண்ணுடன் பாலியல் ரீதியில் நெருக்கமாகப் பேசிய ஒலிப்பதிவு ஒன்று வெளியானது.

இருக்கட்டும். இந்த இரண்டு விசயங்களுக்கும் என்னத் தொடர்பு என்கிறீர்களா? நெற்றிப் பொட்டில் அறைந்தார்ப்போல ஒர் உண்மை புலப்பட்டிருக்கிறது.
'அதித்தீவிரத் தூய்மைவாதம் பேசி மக்களை மதவெறியர்களாக்கும் எல்லாப் பயலும் அயோக்கியன்தான்' என்பதே அது.

இந்தியாவில் இதில் முன்நிலை வகிப்பது ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள் உள்ளடகிய இந்தத்துவக் காவிகள்தான். ஆசாராம் பாபு, முன்னாள் ஆளுநர் சன்முகநாதன், கடந்த மாதம் கேரளாவில் ஒரு வீரமங்கையால் ஆணுறுப்பு அறுக்கப்பட்டுப்போன அந்த seedless சாமியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று இந்தக் கயவர்களின் பட்டியலை காகிதத்தில் வரிசையாக எழுதி அடிக்கினால், அந்தக் காகிதக் கட்டுகளின் மீது நடந்தே காசி, கேதார்நாத், இமயமலை என்று வடநாட்டு இந்துக்கோயில்களுக்கெல்லாம் ஒரு நடைப்பயனமே போய்வரலாம்.

மதங்களைக் கடந்து மத அடிப்படைவாதிகளுக்குள் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரு மதத்தின் அடிப்படைவாத இயக்கம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமானால், இன்னொரு மதத்தின் அடிப்படைவாத இயக்கத்தின் இருப்பும், அவர்களோடு ஒரு தீராப்பகையும் இருந்தேத் தீரவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இவர்கள் ஒருவர் மூலம் மற்றொருவர் மறைமுகமாகப் பலனடைகிறார்கள். இவர்களுக்கு மதக்கலவரங்கள் என்பது தத்தமது மக்களிடையே செல்வாக்கை வளர்த்து, காசுப் பார்க்கவும் அரசியல் ஆதாயமடையவும் ஓர் எளிய வழி. அவ்வளவே!

குறிப்பாக பா.ஜ.கவின் அரசியல் வளர்ச்சியில் அவர்கள் வெற்றிகரமாக நிகழ்த்திய மதக்கலவரங்களுக்குத்தான் மிகப்பெரிய பங்கு இருக்கிறது எனலாம். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், முசாப்பர் நகர் கலவரம், தாத்ரி படுகொலையையொட்டிய கலவரங்கள் என்று ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
ஆனால் அப்படி அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படும் மதக்கலவரங்களின்போதுக்கூட பிறமதப்பெண்கள் மீது தமது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை இந்த ரத்தவெறி ஓநாய்கள்.

நேற்றைய இரண்டு சம்பவங்களுக்குள் இருந்த சில ஒற்றுமைகளைப் பார்த்தோம். வேற்றுமைகள்? நிறைய இருக்கிறது. சொல்லப்போனால் காவிகளின் வடநாட்டையும், பெரியாரின் தமிழ்நாட்டையும் வேர்பிரிப்பது இந்த வேற்றுமைகள்தான்.

தமிழகத்தில் குற்றவாளி சாமியார்கள் பிடிப்பட்டதே இல்லையா, அல்லது இங்கு காவிகள்தான் இல்லையா?
ஜெயேந்திரன், பிரேமானந்தா, நித்தியானந்தா போன்றக் காவிக் கயவர்கள் சிக்கியப்போது அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மெல்லிய அலையாவது வீசியதுண்டா? ராமகோபாலன் தொடங்கி, அர்ஜுன் சம்பத் வரை எல்லா இந்தத்துவப் பயலும்கூட பொத்திக்கொண்டுதானே இருந்தார்கள்?
தமிழன் சிக்கிய சாமியர்களை ஆதரிக்கவில்லை என்பதா செய்தி? இல்லையில்லை, அந்த டுபாக்கூர்களுக்கு எதிராக ஆர்ப்பரித்தான் தமிழன் என்பதுதானே செய்தி!

நேற்றைய ஜெயினூல் ஆபிதீன் விவகாரத்திலும்கூட இணையத்தில் அவரை தொலுரித்துத் தொங்கவிடுபவர்களுள் கணிசமானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதுதானே வெட்டவெளிச்சம்?
இதுதானடா எங்கள் பெரியாரின் மண்!

"சாமியார்களை சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களை சுரண்ட முயல்கிறார்கள், எனவே சாமியார்கள் அனைவரும் தங்களுக்கான வாரிசுகளை வளர்த்தெடுக்கவேண்டும்" என்று பா.ஜ.கவின் சு.சாமி ஆலோசனை வழங்க, அந்தக் கட்சியின் மற்றோரு எம்.பியான சாக்சி மகராஜ் இந்தக் கொச்சையான குர்மீத்தை பச்சையாகவே  ஆதரித்திருக்கிறான்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இதைப் போன்ற செக்ஸ் புகாரில் தண்டனைப் பெற்ற சாமியார்களை அல்ல, அவர் தங்கள் இயக்கத்தைச் சார்ந்த நபராகவே இருந்தாலும் அவரை ஆதரிப்பார்களா?
இதுதான் ஆரியத்திற்கும், திராவிடத்திற்குமான வேறுப்பாடு. படுபாதகர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் உள்ள வேறுப்பாடு.

லட்சக்கணக்கான அடிமைகள் நிரம்பி வழியும் கட்சியான அ.தி.மு.கவிலேயே ஜெயலலிதா தலைமைப்பீடத்திற்கு வரவேண்டுமானால், தன் 'இந்தத்துவ செருப்பை' வாசலில் கழற்றிவிடவேண்டிய நிலையில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

திராவிடம் வெல்லும்!

-GANESH BABU