Monday, August 22, 2011

இரத்தம் குடிக்கும் இன உணர்வு



இந்தியாவில் இருந்து கொண்டு ஈழத்தமிழருக்கு தனிநாடு 
பெற்றுத் தருவதாக தமிழர் என்ற போர்வையில் பக்கா அரசியல் செய்யும் சென்நாய்களை இனம்காணுங்கள் உண்மை தமிழ்ர்களே. 



தமிழ் இன உணர்வும்......இரத்தம் குடிக்கும் சென்நாய்களும்

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு ஊர்ஜிதம்...அரசியல் போராட்டம். ஒரு தமிழனாய் ஒரு தமிழன் தண்டிக்கபடுவதை விரும்பாத அதே வேலையில் நம் மனதில் சில நினைவுகள் போராடுவது சரியா என மனசாட்சி வாட்டுகிறது......


ஆம் இன்று பேரறிவாளன் தாய் விடும் கண்ணீரை எண்ணி மனம் வருந்தும் வேளையில் ராஜீவுடன் அன்று மரணித்த 18 தமிழ் உயிர்களை உறவுகளின் தாயார் கண்ணீரை ஏன் நம்மால் என்றும் நினைக்க முடியவில்லை..? அவர்களை பெற்றவர்களும் தாய் தானே...அவர்களை கொன்றதும் தமிழ் இனம் தானே...? மறுக்க முடியுமா ?



இதோ விடை வெகு நீளமாக.....ஆம் அன்று பேரறிவாளன் அவர்களுக்கு வயது 19 பாட்டரி வாங்கி கொடுக்கும் போது அவர் மனதில் உயிர்களை காவு வாங்க வெறியேற்ற பட்ட பொழுது. அது அரசியல் சூழ்ச்சி அதே வெறியை இன்று சீமான் போன்றோர் எண்ணற்ற தமிழ் இளைஞர்களின் மனிதில் ஏற்றுகின்றனர்...ஆம் இந்திய நமது நாடு அல்ல....இந்திய அரசாங்கம் தமிழ் விரோத அரசாங்கம் என்று....அப்படியானால் இந்திய அரசாங்கம் தமிழகத்திற்கு இவ்வாண்டு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது ஏன்? ஆம் ஒரு பேரறிவாளனின் தாய் படும் துயர் நெஞ்சை வருடும் போது எண்ணற்ற பேரறிவாளன்களை உருவாக்க துடிக்கும் இந்த அரசியல் சூழ்ச்சியர்களை இளைஞர் சமூகம் புறந்தள்ளி முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல மனம் வேண்டுகிறது.

ஈழ விடுதலை போரில் ஒன்றும் செய்யாமல் இன்று தடி எடுத்தவன் தண்டல்காரன் போல் செயல்படுவது வேதனையிலும் வேதனை, ஆம் சீமான், வைகோ , அய்யா பழ நெடுமாறன் போன்றோர் இன உணர்வை வெளிபடுத்த ஏன் அன்று இன உணர்வாளர்களை திரட்டி கடல் மார்க்கமாக ஈழம் நோக்கி சென்று போர்களத்தில் சிங்களவனை எதிர்த்து போரிடவில்லை அப்படி அவர்கள் சென்றிருந்தால் உண்மை இன உணர்வின் பலன் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கும் அது தான் இன போர். அவர்கள் யாரும் அவ்வாறு செல்லவில்லை ஏன் என்றால் சுயநலம்..தான் எனது என்ற மனம்.....புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மூளைகளை பிற நாட்டு குடிஉரிமை பெற குறுக்கு வழியில்செலவிட்டதை இனத்திற்காக செயல் படுத்தி இருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும். இது கடுகு அளவு இன்னும் பல கூற்றுகள் உள்ளன. இவர்கள் தங்கள் சுயநல அரசியல் புரிந்ததால் இழப்பு ஒன்றரை லட்சம் என் இனத்தவர்களை சிங்களவன் சூறையாடினான். இன்று புயல் ஓய்ந்தவுடன் காளான் போன்ற தலைவர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் சமூக சீரலழி விற்காக எடுத்துள்ள ஆயுதம் இன்றைய இளைய சமூகத்தை பாலாக்குவது இன உணர்வு என்ற பெயரால்.இதற்கு அவர்கள் செய்வது பழுத்த மரத்தில் கல் எறிவது போன்று திமுக மற்றும் தமிழ் இன மூத்த தலைவர் கலைஞர் மீது குறை, பழி சுமத்தி அரசியல் வாழ்வு தேடுவது, தங்கள் தவறை மறைக்க கூறும் நாடகம் இது.

 அன்று 

1991 ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டதும் ஏன் இந்த இன உணர்வாளர்கள் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவில்லை, அன்று எங்கே போனது இந்த வெறி...இன்று எதிர்ப்பதும் இன உணர்வு என்ற கோணத்தில் அவர் உதவி புரியவில்லை என்ற பொய் பிரசாரம் வேறு...அன்று கொத்து கொத்தாக என் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது ஏளனம் செய்த ஜெயா இன்று தமிழ் மக்களின் காவலர் என்று கூறுவது நினைத்தால் .......பாவம் கலைஞர் இப்படிப்பட்ட பழிக்கு பிறகும் தளராது தமிழ் பணி ஆற்றுகிறார்.



எது இன உணர்வு ? என் இன இளைஞர்களின் மனதில் வெறி ஏற்றுவதா? அல்லது போராட அலைப்பதா? உண்மை இன உணர்வு எது வென்றால் இளைஞர்களுக்கு கல்வி கொடுங்கள், தொழில் வாய்ப்புக்களை பெருக்கி கொடுங்கள், இன மக்களை பசி இல்லாமல் வாழ வழி செய்யுங்கள், இனத்தை தலை நிமிர செய்வதே இன உணர்வு. இன மக்களை அனைத்து துறைகளிலும் முன்னேற வைப்பதே இன முன்னேற்றம். அன்றே தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியும். ஐயன் வள்ளுவனை உலகம் எண்ணி பெருமை கொள்வது ஏன்? அதுவே தமிழனுக்கு பெருமை.சிங்களவன் என்ன அனைவரும் நம்மை மதிப்பான் நாம் நினைப்பது நம் கைக்கு கிட்டும்...உதாரணம் ஜப்பானை பாருங்கள் தெற்காசிய தலைநகரமாக உருவானதை எண்ணி பாருங்கள். என்று இந்த வெள்ளாடு தோல் போர்த்திய இன இரத்தம் குடிக்கும் செந்நாய்கலை நாம் அடையாளம் கண்டு புறந்தள்ளுகிறோமோ அன்றே சமூகம் முன்னேற்றம் பெறும்.

அந்த வெறியாட்டத்தின் விளைவு இன்று தமிழகத்தை கன்னடத்து ஜெயா ஆட்சி செய்ய அனுமத்திருப்பது தெலுங்கவனை எதிர்க்கட்சி தலைவன் ஆக்கி இருப்பது அவர்களிடம் இன உதவி கேட்பது குச்சியை கொடுத்து அடி வாங்க காத்திருப்பது போன்றது. பிறர் வாழ தமிழன் தன்னை அழித்து கொண்டது போதும் உதாரணம் ரஜினி நலம் பெற 1008 தமிழர்கள் மொட்டை அவரோ மராட்டியம் சென்று பால்தக்கரேயிடம் நீ என் கடவுள் என்று தன் இன உணர்வை வெளிபடுத்துகிறார்.

இன்றைய இளைய சமூகம் சீமான் போன்றவர்களை தனிமை படுத்தி வாழ வழி தேடி இனத்தை முன்னேற்ற பாதை நோக்கி வழி நடத்தி செல்லுங்கள். அரசியல் சூழ்ச்சியில் வாழ்வை தொலைத்து பேரறிவாளன் தாய் போன்றதொரு நிலையை உங்கள் தாய்க்கு கொடுக்காதீர்கள்....சுயநலம் பிடித்த இந்த மிருகங்கள் தங்கள் வாழ்வில் நல்ல நிலையில் தான் இருந்து கொண்டு தங்கள் புகழுக்காக உங்களை சீரழிக்கின்றனர்....உணருங்கள் முன்னேறுங்கள் அதுவே சமூக முன்னேற்றம்



தமிழன் என்று சொல்லடா .....தலை நிமிர்ந்து நில்லடா....போன்ற தலைமுறையை உருவாக்குவதே நம் பொறுப்பு...




நன்றி உண்மை தமிழன் -கழுகுப்பார்வை 




2 comments:

  1. எல்லாம் சரி, அது என்ன தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா? இப்படி நீங்க சொல்லலைன்னா எல்லோரும் தலையை தொங்க போட்டுக்கிட்டா திரியுவாங்க? சீமானைக் குறை சொல்லவரும் நீங்கள் இந்த வரியை எதற்காக பயன்படுத்தினீர்கள் தோழி?

    விடுதலைப்புலிகள் மீதான இன உணர்வை அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு ஊட்டியது முழுக்க முழுக்க கலைஞர்தான் என்பதை மறுக்க இயலுமா? அவரையும் தமிழர்களை தறுதலையாக்கிய தலைவர் என்று உரத்து சொல்வீர்களா?

    ராஜீவ் காந்தியின் மரணத்திலிருந்து கட்டுரையைத் தொடங்கியிருப்பது வரலாற்றைத் திசை திருப்பும் முயற்சி. ராஜீவ்காந்தியின் கொலைக்கான காரணம் தெரிந்த நீங்களே வரலாற்றை திரிக்க நினைக்கலாமா? இந்திய அமைதிப்படையை கலைஞர் வரவேற்கச் செல்லாத காரணத்தைச் சொல்வீர்களா?

    பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் படித்தீர்களா? செய்யாத குற்றத்திற்காக வலுக்கட்டாயமாக தூக்குத்தண்டனை திணிக்கப்பட்டிருப்பதை, அந்த உண்மையை உணரவில்லையா? தினகரன் பத்திரிக்கை அலுவலக ஊழியர்களை எரித்தவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? அத்ன் அப்பாவிகளின் உயிர்ப்பலிக்குக் காரணமானவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? அதையும் சொல்லி விடுங்களேன்!

    ReplyDelete
  2. ஒரு பிரச்சினை குரித்த ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு வாராவாரம் நிலைமையின் தகவல்கள் வரும். ஈழப்பிரச்சினையில் மு.க வுக்கு தக்லவல்கள் வந்தனவா இல்லையா? என்று அவரிடமே கேளுங்கள்.
    மேலும் பிரபாகரனை போரஸ் மன்னன் போல மரியாதயாக்க் கொண்டுவரவேண்டும் என்று முக சொன்னது ஏன்? என்ன தகவளின் அடிப்படையில் சொன்னார்? சக்கர நாற்காளியில் பதவி வாங்கப் போனவர், சொக்கத்தங்கத்திடம் போரை நிருத்து இல்லையானால் தமிழகம் கொதிக்கும் என்று சொல்ல முடியாமைக்குக் காரணம் என்ன? பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் இத்தாலி சினிமா
    தயாரிப்பாளர் ஒருவருக்கு கதிரவன்[சன்] தொலைக்காட்சி குழுமத்தில் வரவேற்பு ஏன்?

    ReplyDelete