தொகுப்புகள்

Search This Blog

Monday, November 6, 2023

பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா

நான் கண்டதும் கொண்டதும் 
அந்த ஒரே தலைவரைத்தான்.

இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார், 
நான் அவருடன் இணைந்த போது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்கு முன் முப்பது ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கின்றார்.

இந்த " ஆண்டுகள் " தமிழரின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகள்.

" திடுக்கிட வைக்கிறாரே! 
திகைப்பாக இருக்கின்றதே! 
எரிச்சல் ஏற்படுத்துகின்றாரே
ஏதேதோ சொல்லுகிறாரே! 

இவரை விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! 
நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று பலர் ப
ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர்.

ஆனாலும் மூலையில் நின்றாகிலும்,மறைந்து இருந்தாகிலும் அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர்.
அந்தப் பேச்சு ஐம்பது ஆண்டுகளுக்கப் மேலாக நடந்தபடி இருந்தது. 

எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள், தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்.

கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; 
அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; 

அவருடைய பேச்சோ தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது.

மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு காடுகளை கழனி வளம் பெறச் செய்து கொண்டு 
ஓசை நயத்துடன்,ஒய்யார நடையுடன்! 

அங்கே பேசுகிறார், 
இங்கே பேசுகிறார், 
அதைக் குறித்துப் பேசுகிறார், 
இதைக் குறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் ஐம்பது ஆண்டுகளாகக் கூறி வருகின்றது.

மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் - எது நேரிடினும் - 
என்ற உரிமைப் போர், 
அவருடைய வாழ்வு முழுவதும். 

அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. 
அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை. 

இன்று அனைவரும் பெற்றுள்ளனர் 

இன்று தமிழகத்தில் தூய்மையுடன், மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்து உரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டு இருக்கின்றது.

அறிவுப்புரட்சியின் முதற்கட்ட வெற்றி இது! 
இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! 

இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப்பெரியது.

தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.

பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது வியர்த்துப் போகின்றனர். 

அப்படியா! முடிகிறதா!நடக்கிறதா!விட்டு வைத்து இருக்கின்றார்களா? என்று கேட்கின்றார்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு.

அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர் காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகரங்களில்
 என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்த போது 
ஒவ்வொரு ஊரிலேயும் இதுபோலத்தான் கேட்டனர். 

யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!

அந்தப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள் பெரிய பெரிய ஏடுகளை, எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை, 
கூடிப் பேசுவார்கள் சிறிய மண்டபங்களில் போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! 

இங்கு?

இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? 
அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? 
எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?

ஏ! அப்பா ! 
ஒரே ஒருவர் 
அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்து வீசுகிறாரே என்று 

இந்த நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டு இருந்த பழமை அலறலாயிற்று! 

புதுப்பதுப் பொருள் கொடுத்தும்,
பூச்சு மெருகு கொடுத்தும் 
இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும்,

விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது என்பதனை அறியாதார் இல்லை!

எனவேதான் 
பெரியாருடைய பெரும் பணியை ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல,
ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் என்று நான் கூறுவது வாடிக்கை. "

- பேரறிஞர் அண்ணா -

Sunday, October 22, 2023

A2B புறக்கணிப்பு வரலாறு..

1940 வரையிலும் கூட ஹோட்டல் எனும் பெயரே அதிகம் புழங்கவில்லை. க்ளப்பு கடை (மெம்பர்களுக்கு மட்டுமான கடையாக இருந்து மெல்ல மற்றவர்களுக்கும் விற்கத் தொடங்கியவை), காபி கடை (cafe என்பதின் மருவல்), பட்ஷணக் கடை (டிஃபனுக்கு தமிழ்ப் பெயர் பலகாரம்) என்றெல்லாம் தான் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டு வாழ்வது என்பது சபிக்கப்பட்ட வாழ்க்கை என்று கருதிய காலம். தமிழ் பிரமணர்கள், கன்னட பிராமணர்கள், நெல்லை பிள்ளைமார்கள் போன்ற பிரிவினர் கையில் மட்டுமே இருந்த தொழில் அது.
பெரும்பாலான ஹோட்டல்களில், "பிராமணர்கள் மட்டும் சாப்பிடும் அறை" என்று தனியாக இருந்தது. 1941 ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி போன்ற பழைய திரைப்படங்களில் இவைகளை காணலாம்! மேலும் இதையெல்லாம் தி.ஜ, லாசரா காலத்துக் கதைகளில், அப்பம், வடை, தயிர்சாதம் நாவலில் கதைப் பின்னணியாக பாலக்குமாரன் விரிவாக எழுதி இருப்பதைப் படிக்கலாம். 

காங்கிரஸ் மாநாட்டில் சாப்பாட்டுப் பந்தியில் பிராமணர், சூத்திரர் என தனி தனி பந்திகள் அமைக்கப்பட்டதை எதிர்த்ததுதான் தந்தை பெரியார் முதலில் காங்கிரஸில் கருத்து மாறுபாடு கொண்டார். பின்னாளில் அவர் மாநாடு நடத்தியபோது, "நாடார் சமைக்கும் உணவு பறிமாறப்படும்" என்று நோட்டீஸிலேயே போட்டார். நாடார்கள் என்பது அந்தக் காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். தொட்டாலே தீட்டு எனப் பார்க்கப்பட்டவர்கள். அவர்களை அழைத்து பொதுச் சமையல் செய்யச் சொல்லி சமத்துவப் புரட்சி நிகழ்த்தினார். 

உணவுக் கூடங்களில், தொழில்களில் இத்தகைய ஒரு சாராரின் ஆதிக்கம், அடக்குமுறைகள் தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக எதிர்க்கப்பட்டது. பின்னாளில் மாற்றப்பட்டது.

அதை முதன்முதலில் எதிர்த்தவர் பெரியார். மாற்றியவர் பெரியார்.

இத்தனை ஆதாரங்கள், காட்சிப்படங்கள், காணொளிகள் இருக்கும்போதே முழுப் பூசணியை உப்புமாவில் மறைக்கப் பார்க்கின்றனரே!

இவர்கள் நமக்குக் காட்டும் அந்தக்காலச் சரித்திரம் எந்த லட்சணத்தில் இருக்கும்!!

#ஈரோடு_குரங்குகுட்டை பதிவிலிருந்து

Saturday, September 30, 2023

ஸ்டாலின் மிசாவில் கைது பொய்யா உண்மையா ?

Wednesday, September 13, 2023

"உடன்கட்டை எனும் சதி"ஒரு விரிவான பார்வை...

Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான்.  சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல்  எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.
இந்த நூல் Indian culture என்கிற பொது வலைதளத்தில் வேறு தகவல் தேடிய போது கண்ணில் பட்டது. 
இதில் அவர் திருவிதாங்கூரில் இருந்து பாளையங்கோட்டை, மதுரை திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக சென்னை சென்று திரும்பிய அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தஞ்சையில் அவர் பார்த்ததை குறிப்பிட்டு இருப்பது மிக முக்கியமான பதிவாகும். இது 1798ல் எழுதப்பட்டது. அப்போது இந்தியர்களை ஐரோப்பியர்கள் Hindu என்ற அடையாளப்படுத்தவில்லை Gentoo என்றே அடையாளப்படுத்தினார்கள். ஐரோப்பியர்கள் நம் மக்களை. Natives  என்றோ சிலசமயம் திமிராக savages  என்றோ black man என்றோ குறிப்பிடுவார்கள். இதிலும் தொடக்கத்தில்.மட்டும்  Gentoo   என்று குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு Brahmin என்ற  வார்த்தையை இந்த  குறிப்பில் நிறைய தடவை உபயோகப் படுத்தியுள்ளார். நான் தான் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்த சங்கடப்பட்டுக் கொண்டு விட்டு விட்டேன். 👇👇👇👇👇👇👇👇

"இந்துப் பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்பட விருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் இந்த வேதனைதரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம்  தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை

அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் வெள்ளை சேலை கட்டி இருந்தாள். தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள். அவளைச் சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள் உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள்
பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள். இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள்.
மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள். வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார். 
அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன்.
500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு.அழைத்தார். சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார்.
நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள். பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள்  நெற்றியில் தடவினார்கள்.
பிறகு அந்தப் பெண் சிதைக்கு  அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள். சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல்அருகில் அமர்ந்தாள்.
பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை,  திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார். பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள்.

பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள் ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள். அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார்.
பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள் பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள். பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள். பிறகு இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள். குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய்  போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள். பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள். இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது. இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார். ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார். பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள். பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார். பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள். அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது. ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது. சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது.

நான்  அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது அவளிடம் எந்தவிதமான பயமோ பீதியோ எதிர்ப்புணர்வோ இல்லவே இல்லை மிக சாந்தமாகவும் நிதானமாகவும் இருந்தாள். அவளுக்கு ஏதேனும் மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும் ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது."

Sunday, September 3, 2023

திமுக சித்தாந்தத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் எக்ஸ்ட்ரா அறிவு வேண்டும்...

திமுக ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல .. இந்திய ஒன்றியத்தின் நன்னம்பிக்கை முனை
இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!   
இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும் .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.  
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.   
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.

அது ஒரு சாதாரண விடயம் அல்ல.
திராவிட கருத்தியல்:
தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராட்டியம் போன்ற 20 மாநில மொழிகளும்,
திராவிட தன்னாட்சி கோட்பாட்டை புரிந்து கொண்டு முன்னெடுக்க முயன்றால்
ஆரிய காலனி ஆட்சியின் முடிவுக்கு தேதி குறிப்பிடப்பட்டுவிடும்.,.
அதன் முடிவில் இருந்துதான் உண்மையான இந்திய ஒன்றியம் உருவாகும்.   
இந்த உண்மை ஆரிய பார்ப்பனீய காலனித்துவவாதிகளுக்கு புரியும்.   
எனவேதான் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே திராவிட கருத்தியல் மீது வன்மைத்தோடு போர்
புரிகிறார்கள்.  
ஆம் இங்கு சரியான வார்த்தையைதான் பயன் படுத்தி உள்ளேன்.
 ஆரிய பார்ப்பன சக்திகள் திராவிட முன்னேற்ற கழகத்தோடு ஒரு மூர்க்கமான
போரை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.   
இதற்கு கணக்கில்லாமல் உதாரணங்கள் உண்டு.
1967இல் பேறிஞர் அண்ணா தலைமையில், திராவிட முன்னேற்றக்கழகம்
தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டி ஆட்சியை பிடித்தது.   
இந்த வெற்றியானது ஆரிய பார்ப்பன சக்திகளின் நெஞ்சில் விழுந்த இடியாக ஒலித்தது.  
அன்றில் இருந்து அவர்களின் போர் இயந்திரங்கள் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்ட
வண்ணமே உள்ளது.   
இந்திய ஒன்றியம் என்று அவர்களால் கூறப்படும் அமைப்பு,
உண்மையில் ஒன்றியம் என்ற கருத்தை இழந்து பல ஆண்டுகளாகி விட்டன.

ஒன்றியம் என்பதன் அர்த்தத்தை தமிழகம் புரிந்து கொண்ட அளவு ஏனைய மாநிலங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
பாசிசத்திற்கு எதிரான திராவிடம்:
ஒவ்வொரு மாநிலங்களும், தங்கள் தன்னாட்சி கருத்தியல் தளத்தில், நிமிர்ந்து
நின்று கொண்டு அமைக்கும் ஒன்றியம்தான்,
ஒரு உண்மையான ஒன்றியமாக இருக்க முடியும்.
ஒரு உண்மையான இந்திய ஒன்றியம் உருவாவதற்கு உரிய சரியான கோட்பாடுகள்,
திராவிட கருத்தியலில் மட்டும்தான் உண்டு.
ஆரிய பார்ப்பனீயத்தில் அது ஒருபோதும் சாத்தியப்படாது.   

ஏனெனில், அடிப்படையில் அந்த கோட்பாடு, சக மனிதர்களை தரம் பிரித்து அடிமை படுத்தி ஏமாற்றி
பிழைக்கும் பாசிசத்தன்மை கொண்டதாகும்.  
நவீன உலகில் அதன் இருப்பு சந்தேகத்துக்கு உரியது.  

இன்னும் சரியாக ஆராய்ந்து பார்த்தால்,
அந்த ஆரியத்தின் அத்தனை நச்சு விதைக்களும் ஹிட்லரின் நாசி தத்துவத்தில்
இருக்கிறது. உண்மையில் அந்த நாசி தத்துவமே, ஆரிய பார்பனீயம் பெற்ற திருட்டு குழந்தைதான்.   

 இந்த பாசிசத்தை சரியாக புரிந்த கொண்டவர்கள் தென்னாட்டு திராவிடர்கள்தான்.  
 திராவிட கருத்தியல் பொறிதான் இந்தி அல்லாத மாநிலங்களையும் சேர்த்து கொண்டு,
முழு இந்திய உபகண்டத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக, வழிகாட்டுகிறது.  

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியில், அதை எதிர்த்து சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திராவிட முன்னேற்ற கழக அரசு..  

அன்று, அது சர்வதேச ஊடகங்களின் முதல் பக்க செய்தி என்பது, நினைவிருக்கட்டும்.
ஒன்றியம் என்ற பெயரில் தோன்றிய சர்வாதிகாரத்துக்கு சவுக்கடி கொடுத்து இந்திய ஒன்றியத்துக்கே ஜனநாயக காவலனாக அவதாரம் எடுத்தார் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கலைஞர்.
அனைத்து இந்திய மாநிலங்களிலும் உள்ள அரசியல் கருத்தியல் கூடங்களிலும்,
இது ஒரு முக்கிய திருப்பு முனையாக எப்போதும் கருதப்படுகிறது.  
அதன் தொடர்ச்சியாக , ஆட்சி கலைப்பு என்ற மிரட்டலையும் மீறி, எதிர்க்கட்சி என்று எந்த பெரிய கட்சியும் இல்லாத அந்த காலக்கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகம்
மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய ஒன்றியத்துக்கான மேடையாகும்.

நன்னம்பிக்கை முனை:
பார்ப்பனீயத்தின் ஆட்சி அதிகார கட்டுமானம் தங்கி இருப்பது “ஒன்றியம்”
என்ற பெயரில்தான்.
மாநிலங்கள்தோறும் உள்ள இந்தி அல்லாத தேசிய இனங்களின்
தனித்தன்மையை மெதுவாக அரித்து அரித்து இல்லாமல் செய்து விடுவதுதான்,
ஒன்றியம் என்பதன் தலையாய் பணி என்று, கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

ஒன்றியம் என்ற பெயரில் இந்த திருட்டுத்தனத்தை அவர்கள் தொடர்ந்து
செய்துகொண்டே வருகிறார்கள்.
அதில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் விட்டார்கள்.

ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வலுத்து கொண்டே வருகிறது.
இந்தி மொழி அல்லாத மாநிலங்களில், திராவிட கருத்தியலும், திராவிட
முன்னேற்றக்கழகமும் எப்படி பார்க்கப்படுகிறது?

 ஒரு மாநில தன்னாட்சி கோட்பாட்டின் ந‌ன்னம்பிக்கை முனையாகத்தான்,
திராவிடமுன்னேற்ற கழகம் பார்க்கப்படுகிறது.

இது பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரியாத செய்திகள் உள்ளன.
மாநில உரிமைகள், மாநில பெருமைகள்,
மாநில கலாசார வரலாறு,
பண்பாட்டு விழுமியங்கள் பற்றி எல்லாம் பேசுவதே இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதல்ல என்ற கருத்து ஆரியர்களால் காலத்துக்கு காலம் கட்டமைக்கபட்டு வந்துள்ளது.   

குறிப்பாக, மாநில உரிமைகள் என்ற பேச்சை, செவிமடுத்தாலே,
ஆரிய பார்ப்பனீய சக்திகள், இடிகேட்ட நாகம் போல ஆகிவிடுகிறது.  

ஏனெனில், அவர்களுக்குத்தான் எந்த மாநிலமும் இங்கு கிடையாதே?.

அதனால் எல்லா மாநிலங்களையும், அவற்றின் மாநில அடையாளங்களை சிதைப்பதே, தங்களுக்கு நல்லது என்ற நோக்கத்தில், செயல்படுகிறார்கள்..

வெறும் சமுக இயக்கமாக பிரசாரங்கள் மட்டும்செய்வார்கள் என்று கருதி இருந்த ஆதிக்க சக்திகளுக்கு, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் மேடை, பெரிய அதிர்ச்சி வைத்தியமாகி விட்டது.   

ஒடுக்கப்பட்டவன் ஒரு நாள் நிமிர்ந்து எழுவான் என்பது இயற்கை விதி.   
பேராசைகாரர்களுக்கு, அது இலகுவில் புரிவதில்லை.

அவர்களுக்கு புரியக்கூடிய அந்த பாடத்தை அவர்களுக்கு முதலில் படிப்பித்தது திராவிட முன்னேற்றக்கழகம்தான்.

தமிழகம் கற்பித்த இந்த மாநில தனித்துவம் என்ற பாடம்,
 தற்போது எல்லா மாநிலங்களுக்கும் பரவி விட்டது!  
குறிப்பாக இந்தி அல்லாத மாநிலங்களில் மாநில தன்னாட்சியின் பேசு பொருளாக இருப்பது நிச்சயமாக தமிழகத்தின் தன்னாட்சியை நோக்கிய வரலாற்று பயணம்தான். .

இந்தி அல்லாத எந்த மாநிலத்து அரசியலை எடுத்துகொண்டாலும்,
அங்கெல்லாம் இப்போது மாநில உரிமைகள் பற்றிய கருத்துக்கள் பெரிய அளவில் ஒலிக்கிறது.

இந்திய மாநில மொழிகள், இன்றுவரை கொஞ்சமாவது காப்பாற்றப்படுவதற்கு முக்கிய காரணம்,
திராவிட கருத்தியலை முன்னெடுத்த தமிழகம்தான்.
தமிழகத்தின் இருமொழிக்கொள்கையின் வெற்றி,

இப்போது இதர மாநிலங்களை தட்டி எழுப்பிவிட்டது.
மும்மொழி என்ற பெயரில் இந்தியிடம் தங்கள் அடையாளங்களை பறிகொடுத்து விட்டோம் என்று,
இப்போது அவர்களுக்கு தெரிந்து விட்டது.

மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்ற
உறுதி மொழியை திராவிட முன்னேற்றக்கழகம் இந்திய அரசிடம் இருந்து பெற்றது.

இதன் பலனை இன்று எல்லா மாநிலங்களும் அனுபவிக்கின்றன.   
இன்று ஆங்கில கல்வியை, இந்தி அல்லாத மாநிலங்கள் பெற்று ,
முன்னேறி இருப்பதற்கு, அவைகள் தமிழகத்துக்கு நன்றி கூறவேண்டும்.

திராவிட முன்னேற்றக்கழகம் மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய
ஒன்றியத்துக்கான மேடையாகும்.

தேசிய அரசியல்போக்கை மாற்றிய திராவிடம்:
அடுத்த கட்டமாக, வி.பி.சிங் ஆட்சியை நிறுவியதிலாகட்டும்,
அதன் பின்பு,மன்மோகன் சிங் ஆட்சியை கொண்டுவந்ததில் ஆகட்டும்,
திமுக, என்றைக்குமே புதிய போக்கை முன்னெடுப்பதாக தான் இருந்திருக்கிறது.

இந்தி அல்லாத எந்த மாநிலத்தில், எந்த மாநில கட்சி வெற்றி பெற்றாலும் திராவிட முன்னேற்றக்கழக
தலைவரை, முதன்மை விருந்தினராக, அவர்கள் அழைப்பது, ஒரு தொடர் நிகழ்வாக
நடப்பது ஒன்றும், தற்செயலான விடயம் அல்ல.  

மாநில உணர்வுகள், அங்கெல்லாம் கொழுந்து விட்டு எரிகிறது.
அந்த மாநில மக்களின் நாடித்துடிப்பை, அந்த தலைவர்கள் எல்லோரும் அறிவார்கள்.

ஊடகங்கள் ஒன்று கூடி மறைத்தாலும், அந்த மக்களின் உணர்வுகளை,
அந்த மண்ணின் தலைவர்களும், கட்சிகளும், கவனத்தில் எடுத்து கொண்டே ஆகவேண்டிய நிலை உள்ளது.   

கடந்த மக்களவை தேர்தலில், தலைவர் ஸ்டாலின், முன் மொழிந்த, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி, என்பதை அப்போது ஏற்று கொண்டு, வெளிப்படையாக ஆதரவு கொடுக்காமையே,

இன்றைய அவலங்களுக்கு, ஒரு காரணம், என்று பலரும் சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு, தங்கள் மாநில உரிமைககளின் முன்னோடி அடையாளமாக திராவிட முன்னேற்றக்கழகம்தான் தெரிகிறது.

பின் குறிப்பு:
ஆரியர்களின் வருகைக்கு முன்பு, இந்த மண்ணில், வாழ்ந்த மக்களிடையே, ஜாதி இல்லை.

மக்களை, ஜாதி என்ற வியாதி கொண்டு, பிரித்து ஆளும் வந்தேறி மதங்கள், இல்லை.
கடவுளின் பெயரால் அடக்குமுறை இல்லை.
ஆரிய வருகைக்கு முந்தைய, தொன்மையான திராவிட வரலாற்று சான்றுகளையும், விழுமியங்களையும்,
மீட்டு எடுப்பதில் திராவிடர்கள், வெற்றி பெற்றுவிட்டார்கள்.   
இதில் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை.
இன்னும் வெகு தூரம் செல்லவேண்டி இருக்கிறது என்பது ,உண்மைதான்.
ஆனாலும், இந்திய துணை கண்டமெங்கும், திராவிட கருத்தியல், முன்னெப்போதையும் விட ,தற்போது கவனிக்கப்படுகிறது..

:- ராதா மனோகர்

Saturday, August 12, 2023

பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி... 

"பெரியார் தான் 
தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"
ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு இருந்தேன்.

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
'ஆமாம் பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'

வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர்

நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..

- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி
இடஒதுக்கீடு வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா,
எனக்கு காங்கிரஸே வேணாம்"னு சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.

- காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,
மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.

- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.
1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.

- இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே
'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு! இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?

- தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...

15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் பெரியார். அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.

- கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர்,
இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,
பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.

இன்னைக்கு நாம பேசுறோமே.. பொண்ணுங்களோட financial independence, பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.
- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.

- ஒரு முறை காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட
எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல. அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.
- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார்...

ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும்.. அதனால, சாகுற வரைக்கும் எந்த அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்..

அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும், பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!

- 1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ கூட, "அதிகாரம் பிரிட்டிஷ் காரன் கையிலருந்து,
பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்... அடிமட்ட ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"ன்னு சொன்னார் பெரியார்!

- எல்லா தலைவர்களும் தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க.
ஆனா, பெரியார் ஒருத்தர் தான், 'யார் எது சொன்னாலும், அதை நம்பாதீங்க... கேள்வி கேளுங்க... ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க... அப்புறமா, நீங்க முடிவெடுங்க.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க"ன்னு சொன்னார்.
ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancellor சுந்தரவடிவேலு அவர்கள் “இன்னைக்கு கிராமத்துல கூட படிச்சவங்க எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கு, நிறைய கல்விக்கூடங்கள் இருக்குதுன்னா, அதுக்கு நீங்க கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்"ன்னு காமராஜரை புகழ்ந்தப்போ,
"இதுக்கெல்லாம் பெரியார்தான் காரணம். அவர்தானே அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டார்"ன்னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்.

தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையா ஆக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம
வெளியே போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார். காங்கிரஸ்ல இருந்துக்கிட்டு பெரியார் சொன்ன சமூகநீதி கொள்கையை நான் செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான்.
அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார் 'கல்வி கண் திறந்த' காமராஜர்.

- பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட "சுயமரியாதை திருமண சட்டம்" உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார்.

இந்தியாவிலேயே OBC ரிசர்வேஷனை முதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா தலித் சமூகத்தை சேர்ந்த ஒருத்தர் நீதிபதி ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும்.

அனைத்து சாதி மக்களும் கோவில் கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"ன்னு போராட போறேன்னு
பெரியார் சொன்னார்.... அப்போ, "அதுக்கு அவசியமே இல்ல.. எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி.

- பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி
பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதுதான் உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!
காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல் ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார்.
பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம்... "இந்தி திணிப்பை எதிர்த்து ஜெயிச்சாச்சு.. தெருவுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து போராடி ஜெயிச்சாச்சு.. கோவிலுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து ஜெயிச்சாச்சு..
ஆனா, நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே. இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.
நாடு முழுக்க கால்தடம் பதிச்ச பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல மட்டும் நோட்டாவுக்கு கீழே இருக்குன்னா அதுக்கு காரணம் பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்!

வரலாறு தெரிஞ்சவர்கள் 
வாட்சப் வதந்தியை பார்த்து வாயை பொளக்காதவர்களுக்கு தெரியும்.

ஆமா..... பெரியார் தான் எல்லாம் பண்ணார்🖤❤️

நன்றி :- பாக்டீரியா

Sunday, August 6, 2023

சீமான் எப்போது கட்சியை கலைக்க போகிறார்?

தி.மு.க ஆட்சியில் இஸ்லாமியருக்கு செய்த ஒரு  நன்மையை சொன்னால் நான் கட்சியை கலைத்து விட்டு போகிறேன் என்று சொன்ன சீமான் எப்போது கட்சியை கலைக்க போகிறார்?

*******************************************
பால்வாடி சீமான் கவனத்திற்கு!!!

1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 15.9.2007 ல், அறிவிப்பு. 

இதன் காரணமாக அரசு பணியில் 
1774 அலுவலர்கள்/பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். 

தொழில் நுட்பகல்வியில் 
16518 மாணவ/மாணவியர்களும் மற்றும் மருத்துவக் கல்வியில் 
306 மாணவ/மாணவியர்களும் ஆக மொத்தம்18598 அரசு பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய 
உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கபட்டது. 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், 
உள்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர், 
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், 
ஆசிரியர் தேர்வாணைய குழுத்தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், 
சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைத்து முதல்வர் கலைஞர் 29.01.2011 அன்று உத்தரவிட்டார்.

3. கல்வி உதவி

தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின 
மாணவ மாணவியருக்கு ரூ 1867.07லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

இவற்றில் ரூ 729.86 லட்சம் செலவில் 
2820 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். 

இது மொத்த செலவினத்தில் 39 விழுக்காடு ஆகும்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை

11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் 67683 சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு
 2007-2008ஆம் ஆண்டு முதல் 
2010-11 ஆம் ஆண்டு வரை 
ரூ.2315.90 லட்சம் செலவில் 
34637 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். 

இது மொத்த செலவினத்தில் 46 விழுக்காடு ஆகும்.

பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை

. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு சேர்க்கைக்கட்டணமாக ஆண்டுக்கு 
ரூ 500/-ம், கற்பிப்புக்கட்டணமாக 
ரூ 3500/-ம் விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ரூ600/-ம் வழங்கப்படுகிறது.

11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

2007-08 ல் ரூ 94/- லட்சமும், தொடர்ச்சியான ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ 247/-லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டம் தொழில் மட்டும் தொழில் நுட்பம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு ரூ435.48/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்

திண்டுக்கல் , வேலூர், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

5. திறன் வளர்ப்பு பயிற்சி

சிறுபான்மையின மக்கள் தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை, காலணிகள் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்பதற்கு நடப்பு ஆண்டில் ரூ 2.50/- கோடி செலவிடப்பட்டுள்ளது.

6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்

சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான் மையிர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 1999-ல் துவங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அ. தனி நபர் கடன் திட்டம்

சிறுபான்மையினர் தொழில் தொடங்கிட ரூ 1 லட்சம் வரை கடன். கடந்த 4 ஆண்டுகளில் 7331 பயனாளிகளுக்கு ரூ 3107.13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4836 முஸ்லிம்கள்- கடன் தொகை ரூ 2143.97

ஆ. சிறுகடன் திட்டம்

சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்பு பயில வருடம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 40.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு ரூ 14.53 லட்சம். இ. 60 விழுக்காடுகளுக்குக் குறையாமல் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்

ஈ. ஆட்டோ ஓட்டுநர் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்

உ. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரு கலப்பின பசுக்கள் வாங்குவதற்கு ரூ.50,000 வரையிலும், இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்

ஆதரவற்ற, கணவனால் கை விடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 23.4.2007 முதல் துவக்கப்பட்டுள்ளது.

இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதராத்திற்கு இணையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ஷ�பூ அரசு மானியம் வழங்கி வருகிறது.

8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்

உலமாக்கள் மற்றும் பணியாளர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 60 வயது வரை ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், முஅத்தின் மற்றும் இதர பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடையலாம்.

முதியோர் ஓய்வூதியம், இறுதிச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முடக்க ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு இந்த நலவாரியத்திலிருந்து உதவி பெறலாம்.

கடுமையான வலியில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, 38 நாள் ஓய்வுக்குப் பிறகு 2009 மார்ச் 14-ல் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் கலைஞர் கையெழுத்திட்ட முதல் கோப்பே உலமாக்கள் பணியாளர் நலவாரியம் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

9. தமிழ்நாடு வக்ஃப் வாரியம்

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், நிர்வாக செலவினங்களுக்கும், தணிக்கை கட்டணமாகவும் நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.

பள்ளிவாசல்கள், தர்காக்கள், மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் மராமத்து பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 82 லட்சம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனால் 207 வக்ஃப் நிறுவனங்கள் பயனடைந்தன.

10. கபரஸ்தான் பாதுகாப்பு:

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலங்கள் வக்ஃப் செய்யப்பட்ட கபரஸ்தான்கள் ஆண்டு தோறும் 20 தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சுற்றுச்சுவர் மற்றும் முள்கம்பி வேலி அமைப்பதற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது.

11. உலமா ஓய்வூதியத்திட்டம்

ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2200 லிருந்து 2400 ஆக அரசு உயர்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ரூ 250/- ஆக இருந்த ஓய்வூதியம் இன்று ரூ 750/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஓய்வூதியத்திற்கு அரசு ரூ 2.16 கோடி வழங்கியுள்ளது. உலமாக்களுக்கு இலவச மிதிவண்ட 3 கோடியில் வழங்கப்படுகிறது.

12. மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு

மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச்செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு

சென்னை பட்டினப்பாக்கம் சேக்மதார் அவுலியா தர்கா முதற்கொண்டு திருவள்ளூர், தஞ்சை, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

14. மறுவாழ்வு திட்டம்

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஊசி�ட்க்�வூதுறூஙு�ஸ்ன், சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் மறுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.10,000 இதற்கு நிதி உதவி வழங்கப்படும்.

இதை தவிர

15. சிறுபான்மையினர் நல ஆணையம்

தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து.

16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்

17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்

18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்

19. உர்தூ அகாடமி

20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.

21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.

22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்

23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை, 1969-ல் கொண்டுவந்த நடைமுறையை 2001-ல் அ.தி.மு.க அரசு ரத்து செய்த போது 15.11.2006-ல் மீண்டும் விடுமுறை என அறிவிப்பு.

24. கட்டாய மதமாற்க்ஷித் தடைச்சட்டம் ரத்து

25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் 
தேவையான பாதுகாப்பு 

26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், 
648 பணியாளர்கள் 
ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம் வழங்கும் என அறிவித்து
26.2.2011 அன்று அரசு ஆணை. 

இதற்காக ஆண்டு தோறும் ரூ.331 கோடி அரசு ஒதுக்குகிறது என்ற அறிவிப்பு.

1991-92 க்குப்பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு மட்டுமின்றி
 1999 – க்குப்பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் அரசு நிதி அளிப்பது பற்றி அடுத்த கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும் என தேன் சொட்டும் அறிவிப்பு. 

அடடா! யாருடைய ஆட்சியில் இப்படிப்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்க முடியும்!!

கலைஞர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்!
பால்வாடி சீமானே 
நீ கொட்டிக்கிடக்கும் 
குப்பை கிடங்கு அடங்கு!!

பதிவு நன்றி: Napa

Sunday, June 18, 2023

நடிகர் விஜய் படிக்க சொன்ன தலைவர்களுக்கு பின்னால்..

காமராசர், கக்கனைத் தாண்டி சிந்திக்காத ஆட்களிடையே, அம்பேத்கர், பெரியாரைச் சேர்த்துக் கொண்ட விஜய்யின் பெருந்தன்மைக்குப் பின்னும் தமிழருவி கொட்டக்கூடும், நிற்க, நாம பேசப்போவது அதை அல்ல !
ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  செங்கோலைப் பற்றிய கட்டுரைன்னு நினைக்கிறேன்.  அதில் பல வரிகளில் சங்கிகளை காறிக் காறி துப்புகிறார்.  இருந்தாலும் அது அவர்களுக்கு உறைப்பதில்லை.  மாறாக ரசிக்கிறார்கள்.  ஏன் ?

குடப்பாலில் துளி நஞ்சு போல ஒரு சில வரிகளைச் செருகி விடுவார்.  அது அவர்களின் கண்களுக்கு பெரிய பத்தி போல பட்டு மகிழ்ச்சியை அள்ளித் தந்துவிடுகிறது.  மாறாக, சங்கிகளையும் திட்டுகிறாரே என வாசித்துச் சிலிர்க்கும் சக உ.பிக்கள் மிக எளிதாக அந்த வரிகளைக் கடந்து விடுவதுதான், ஜெயமோகனின் எழுத்துச் சாதுர்யம் !

இந்திய விடுதலைக்குப் பின் அரசியலில் எளிமையாக இருந்தவர்களுக்கு ஜெயமோகன் காட்டும் இரண்டே சான்று, ஒன்று காமராஜர், இன்னொருவர் நம்பூதிரி பட்.

இருவரும் முதலமைச்சராக இருந்தாலும் மிக எளிமையான ஆடை, வாழ்க்கை முறை என்று அவர்களை விதந்தோதுகிறார் ஜெயமோகன்.

மகிழ்ச்சி.  நமக்கும் காமராஜர் மீதோ, கக்கன் மீதோ, நம்பூதிரி, ஜோதிபாசு, புத்ததேவ் மீதோ எந்தக் காழ்ப்புமில்லை, கசப்புமில்லை !

என்ன கொடுமையெனில் இதே காலகட்டத்தில் வாழ்ந்த சாவர்க்கர் போன்ற இந்துத்துவத் தலைவர்கள்,  பிற தமிழ் தேசியத் தலைவர்களின் எளிமையைப் பற்றியோ, வாழ்க்கைமுறையைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை, புகழ்ந்து எழுதியதுமில்லை !

ஆனால், காமராஜரை கொல்ல முயன்றச் சங்கிகள் கூட, அந்த எளிமையானக் காமராஜரை தன்னாள் என்பார்கள்.  

இந்தி எதிர்ப்பு போராட்டங்களை வெறுத்த, அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க மாணவர்களைச் சுட்டுக்கொல்வதை ஆதரித்த, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை ஒருபோதும் ஏற்காத, அதற்காக பல உயிர்கள் போகிறதே என்பதைக் கண்டுகொள்ளவேச் செய்யாத காமராஜரை, அந்த எளிமையானவரை,  இன்றையத் தமிழ் தேசியர்களும் தன்னாள் என்பார்கள்.  ஏன் ??

ஒரே காரணம், அவர் திமுகவிடம் வீழ்ந்தது.

ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் காமராஜரை தன்னாளாக்கிக் கொண்டார்கள் இந்த லகடபாண்டிகள் !

இவர்களுக்கு ஒரு முக்கியமான வரலாறு தெரியாது.  தெரிந்தால் வாழவே விருப்பப்பட மாட்டார்கள் !

காமராஜர் தன் அந்திமக்காலத்தில் தனித்து விடப்பட்டிருந்தார்.

தன்னால் ஆளான இந்திராவால் நொந்து போய்க் கிடந்தார்.

கறிவேப்பிலை போல உதாசீனப்படுத்தப்பட்டு காங்கிரசிலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்திருந்தார்.  இந்தியளவில் பிரபலத் தலைவராக இருந்த அவரை, தமிழகத்திற்குள் முடக்கி விட்டிருந்தனர்.  போக, அவரால் வளர்க்கப்பட்டிருந்த பல தலைகளே எதிரிகளாகி அவரைத் தாக்கி பேசிக் கொண்டிருந்தனர் !

நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது அதற்கெதிராகப் பேசிய, எழுதிய அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது !

காமராஜரையும் கைது செய்யப் போகிறோம் ஒத்துழைக்கவும் என்று முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் தூது வந்த ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம், மிகக் கடுமையாகப் பேசி ஒருபோதும் எங்களின் பெருந்தலைவரை காட்டிக் கொடுக்கவும் மாட்டோம், கைது செய்யவும் முடியாது, மீறி நீங்கள் செய்ய முயன்றாலும் அனுமதிக்க மாட்டோம் என்று விட்டிருந்தார் கலைஞர் !

நான் மேலே சொன்னது பொய் என்று ஒரே ஓர் ஆளை,  ஆவணச்சகிதம் நிருபிக்கச் செய்யுங்கள், சவால் விடுகிறேன்.

இந்த மன அழுத்தத்தில் காமராஜர் இறந்துபோனார்.  அது ஒரு மழைக்காலம்.

வாரிசுகள் இல்லாத காமராஜரின் தலைமகன் போல தன் வேட்டியை முட்டிக்கு மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு, சகதியில் கால்வைத்து, பம்பரமாகச் சுழன்று, உச்சபட்ச அரசு மரியாதையுடன் இறுதிப்பயணத்தை, இறுதி  அஞ்சலியை, கல்யாணச் சாவு போல எடுத்தார் கலைஞர் !

குறைந்தபட்சம் இதையாவது மறுக்க முடியுமா ?

விருதுநகரில் ஓர் இளைஞரிடம் தோற்ற காமராசர், அடுத்த சில வாரங்களிலேயே நாகர்கோவில் தொகுதியில் வென்று, மக்களவை உறுப்பினரானார்.  ஆனால் இப்போதுவரை திமுக ஹேட்டர்கள், சொந்த ஊர்லயே அவரைத் தோக்கடிச்சிட்டாங்கப்பா, அதாலயே நொந்துச் செத்தார்ம்பாய்ங்க.  

அடேய் அவர் தோத்தது 1967.  இறந்தது 1975.

கலைஞரின் இந்த அற்புதக் குணத்தைப் பாராட்டி பரிசளித்தார் இந்திராகாந்தி.  ஆட்சி டிஸ்மிஸ்.

அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலும் அனைத்துத் தலைவர்களுமே எளிமையாகவே இருந்தனர்.  பரம்பரை பணக்காரரான ஜவகர்லால் நேரு உட்பட.  

ஆனால் எளிமையின் சிகரமெனக் காந்தி, காமராஜரை சான்றாகக் காட்டுபவர்கள் நேருவைக் காட்டியதுண்டா ?

நம்ம அண்ணா ?  

அவரென்ன பகட்டாகவா வாழ்ந்தார் ?  

அவருடைய ஆடைகள் எத்துணை எளிமையானவை ?  அவருடைய வாழ்க்கைமுறை ?  

அவருடைய அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஆங்கிலத்தில் அவருக்கிருந்த வளமை... இதில் எதுவாவது அவருடையத் தோற்றத்தில் தென்படுமா ?

1947 லிலேயே சினிமாவில் பல்லாயிரம் சம்பாதிக்கத் துவங்கி, கட்சியில் முதலாளாய் கார், பார்ப்பனரிடமிருந்து கோபாலபுர வீடு வாங்குமளவு வசதி இருந்தும், கலைஞரிடம் என்ன பகட்டைக் கண்டுவிட்டார்கள் இவர்கள் ?

கலைஞர் பல லட்சத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டா வளைய வந்தார் ? அல்லது தங்கபஸ்பமும், தாய்லாந்து காளானையும் உண்டாரா ?

கலைஞருடைய தூய வெள்ளாடைகள், அவருடைய அன்றாட உணவுமுறைகளை ஆய்ந்து வாசித்தால் மட்டுமே அந்த உண்மைகளை நீங்கள் உள்வாங்கவே முடியும்.

எம் எல் ஏவாக, அமைச்சராக, முதல் அமைச்சராக, எதிர்கட்சித் தலைவராக, எந்தப் பதவிகளுமே இல்லாமல் கட்சித் தலைவராக மட்டுமே இருந்தாலும் கூட, அவருடைய உடைகளில், உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த மாற்றமுமே இருந்ததில்லை !

அட, அத்தனைப் பெரிய தலைவர் வீட்டுக்குச் சுற்றுச்சுவர் கூட இல்லை.  இன்றளவுமே இல்லை.  பெருமழை பெய்தால் அவர் வீட்டுக்குள் கொஞ்ச நேரம் வெள்ளம் தரிசித்துவிட்டுச் செல்லும் !

எவனாவது அறமிக்க ஒரே ஓர் எதிரியேனும், கலைஞரை எளிமைக்குச் சான்றாக சொல்வானா ?  சொல்ல வாய் வருமா ??

1991 - 1996 களில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பெரும்பாலும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருந்த போதும், 1996 - 2001 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர், அரசு அம்பாசிடர் கார்களில்தான் எங்கெங்கும் பயணம் செய்தார்.  நீண்ட தூரமெனில் இரயிலில் செல்வார்.  அப்போதும் உடன் பல அரசு கோப்புகள், அவருடைய கையெழுத்துக்காகப் பயணிக்கும் !

அண்ணா, கலைஞர் எளிமையான முதலமைச்சர்கள் என எவை சொல்லவிடாமல் தடுக்கின்றன ?

பார்ப்பனியச் சூதுதான்.  அந்தளவு ஆரியத்திற்கெதிராக, திராவிடத்திற்காதரவாக இவர்களிருவரும் மறையும் வரை இயங்கியதுதான்.

அந்தத் தீராக்காழ்ப்பு உள்ளவரை காமராஜரும், கக்கனும்தான் அவர்களுக்கு எளிய அரசியல் ஆளுமைகள்.  ஆனால் அது முழு உண்மை அல்ல !

நம் குடும்ப முன்னேற்றத்திற்காக பல தியாகங்கள், அயரா உடலுழைப்புகள் செய்வோம்.  ஆனால் ஓர் அரசியல்வாதிக்கு அப்படி எதுவும் இருந்துவிடக் கூடாது.  அப்படியே இருந்தாலும் அவர்கள் அடுத்தவேளைச் சோற்றுக்கு அரசு கோவில் க்யூக்களில் நிற்க வேண்டும்.

இப்படி ஒரு சீரியல் நாடகத்தைத்தான் மக்களை நம்ப வைத்திருக்கிறது அந்த பார்ப்பனியச் சூது.  ஆஃப்ட்ரால் அல்லக்கை சூதுகளுக்குப் பலியாகிவிட்டு நமக்கு பாடமெடுக்க வருவார்கள் பாருங்கள், அவர்கள்தான் உலகமகா மூடர்கள் !!!

Saturday, June 17, 2023

செந்தில் பாலாஜிக்களின் கைது

செந்தில் பாலாஜிக்களின் கைதும்; மோகன் பாகவத்துகளின் இந்து ராஷ்ட்டிரக் கனவும்.
========================================
தனது தவறுகளுக்காக செந்தில் பாலாஜி ஆயிரம் முறை தண்டிக்கப்பட வேண்டியவரெனில் அதையும் விட குரூர குற்றங்களுக்காக மோடியும், அமித்சாவும், அவரின் எஜமானர்களும் கோடி முறை தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆயிரம் செந்தில் பாலாஜிக்கள் தண்டிக்கப்பட்டாலலும் ஒரேயொரு அமித்சாவோ மோடியோ அல்லது மோகன்பகவத்தோ தண்டிக்கப்படலாகாது என்ற நவ இந்தியாவின் சனாதான சட்டத்தை நாட்டின்  கூட்டு மனசாட்சியாக்க முயல்கிறது இந்துத்வ நவநாஜியிச பார்ப்பணீயம். '2025- இந்து ராஷ்ட்ர இந்தியா' என்ற தனது தீயநோக்கத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற மூர்க்கத்தோடு திரியும் அது தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எத்தகைய அமைப்பையோ, தனி நபரையோ விடுவதாகவேயில்லை. 

2019ல் மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்தே நடைபெறுகிற ஒவ்வொரு நிகழ்வின் பின்னனியில் இருப்பதும் இதுதான். இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி வேட்டையாடப் பட்டிருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.சமூக ஊடகங்களில் செந்தில் பாலாஜி குறித்து நேர்காணல் அளிக்கின்ற பலரும் "செந்தில் பாலாஜியை நான் நியாயப்படுத்தவில்லை" என்றொரு தூய்மை வாதத்தையும் சேர்த்தே சொல்லுகிறார்கள். ஆனால் சங்கப்பரிவாரங்களின் குறி செந்தில்பாலாஜியல்ல. நாளையே செந்தில் பாலாஜி கட்சி தாவ தயாரெனில் இதுகாறும் அவர் அனுபவித்த சொகுசுகள் கடந்து இதைவிட சுகமானதொரு வாழ்வு அவருக்கு கிடைக்கக்கூடும். இன்னும் சரியாகச் சொல்வதெனில் அத்தனை பேரங்களும் தோல்வியுற்ற நிலையில்தான் சாமபேத தானம் கடந்து தண்டத்தை கையில் எடுத்துள்ளது ஒன்றிய அரசு. இல்லையெனில் 2011-16 நடந்து நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்கை தோண்டியெடுத்து அதில் 18 மணிநேரம் தொடர்ச்சியாக விசாரிக்கத் தேவையென்ன? அப்படி விசாரித்தும் நீதி மன்றத்தில் புதிதாக எந்த குற்றச் சாட்டையும் வைக்கமுடியாத அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டு காவல்துறை ஏறக்குறைய எட்டாண்டுகளுக்கு முன்பு என்ன குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளதோ  அதைத்தான் நேற்றைய முன்தினம் நீதிமன்றத்தில் மீண்டும் கூறியுள்ளது. 

எனில் 18 மணி நேரம் நடந்ததுதான் என்ன பேரமும், ஆங்காரமும், மிரட்டலுமின்றி வேறென்ன இருந்துவிடப் போகிறது.? பிரதான எதிர்கட்சி முக்கியஸ்தர்களிடம் அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்பது ஒன்று அவர்களை மோடிகும்பலுடன் சேர்த்து வைப்பது. அல்லது  ஒத்து வராதவர்களை சிறையில் அடைப்பது. வேறென்னத்தை பிடுங்கியுள்ளது இத்துறை? 

எனவே அதிகாரத்தின் இரை செந்தில் பாலாஜியல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் எவ்விதக் குறுக்கீடுகளுமற்று, கேள்விகளுமற்று, ஜனநாயகத் தரித்திரமற்று சனாதான இந்து ராஷ்ட்ரமாக கட்டமைத்து சுகபோகமாய் ஆளப்போகின்ற நாளுக்காக, ஒரு மன்னனாக முடிசூட்டிக் கொள்ளப்போகும் அத்தருணத்திற்காக கடந்த நூறாண்டுளாக ஒவ்வொரு வினாடியாக காத்துக் கொண்டிருக்கும் பகவத் கும்பலுக்கு அத்தகைய  கனவைச் சிதைக்கும் யாருமே எதிரிகள்தான், சாதாரண எதிரிகளல்ல, குரூரமாய்த் தண்டிக்கப்பட வேண்டிய எதிரிகள். நாடெங்கும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ள எதிர்கட்சி முக்கியஸ்தர்களில் தமிழ்நாட்டில் திமுகவின் சார்பில் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் பாஜகவின் அரசியல்தளத்தை தகர்த்தவர் செந்தில் பாலாஜி. ஆனால் வெறும் நான்கைந்து நாடாளுமன்ற உறுப்பினர் களுக்காகவா இப்படி வெளிப்படையான விகாரமும், வன்மமும் கட்டவிழ்த்து விடுகிறது? நிச்சயம் இல்லை. திராவிடம், என்றொரு சித்தாந்தமும், அதனை பேசுபொருளாக்கிக் கொண்டிருக்கும் திமுக என்றொரு பேரியக்கமும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்,தமிழன், தமிழ்நாடு என்ற மொழியின் மீதும், இனத்தின் மீதும், நிலப்பரப்பின் மீதும் பார்ப்பணீயக் கும்பல் கொண்டுள்ள குலை நடுக்கமே இத்தகைய வன்மத்தின் வெளிப்பாடுகள். ஏனெனில் எதிர்காலத்தில் இந்து ராஷ்ட்ரம் எனவொன்று அமைந்தே விட்டாலும் சர்வ சத்தியமாய் அதற்கு எதிர்வினையாக முழுமையானதொரு போராட்டம் துவங்கிற இடம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். அதைத்துவங்குகின்றவன் தமிழனாகத்தான் இருப்பான். தமிழ் என்ற மொழி அநீதிக்கு எதிரான சிறுபொறியையும் நாடெங்கிலும் பற்ற வைத்து அவர்களின் நூற்றாண்டுக் கனவைத் தகர்க்கக்கூடும். நித்திரையில் சுக ஸ்கலித கனவினூடே வரும் பேய்க்கனவைப் போலத்தான் அவர்களுக்கு தமிழ், தமிழன், தமிழ்நாடு. எனவேதான் இந்தியாவில் எந்த மாநிலத்திலுமில்லால் தமிழ்நாட்டில் மட்டும் ஆளுநரே ,அர்ஜூன் சம்பத்தாக அவதாரமெடுத்து ஒரே பாரதம், ஒரே கலாச்சாரம், சனாதான தர்மம், தமிழ்நாடு பதத்திற்கு பதிலாக தமிழகம், ஒவ்வொரு மாநிலங்களுக்குமான தனித்த கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் மீதான ஒவ்வாமை என வாந்தியெடுத்துத் திரிகின்றார்கள். 
எனவே செந்தில்பாலாஜி விவகாரத்தில் தூய்மைவாதம் பேசுகின்ற அனைவரும் திமுகவிற்கும், அதன் தலைவருக்கும் அதே தூய்மைவாதம் வாழங்கியுள்ள வாய்ப்புகளை மறந்து பொதுப்புத்திக்கு பலியாகின்றார்கள் அல்லது பொதுபுத்தியை கட்டமைக்கின்றார்கள்.
ஹின்டன் பெர்க் பகிரங்கமாக அம்பலப்படுத்திய பிறகும் பிரதமருக்கு அதானி உற்ற நண்பராக இருக்க முடியும். நண்பரின் முகத்தை ஏறெடுத்துப்பார்க்கவும் வக்கற்ற அமலாக்கத்துறை, நாடெங்கும் நடப்புக் குற்றங்களின் அறிக்கைகளைக்கூட கிடப்பில் போட்டு வைத்திருக்கின்ற அமலாக்கத்துறையும், இன்று வரையில் அதுகுறித்து நாட்டு மக்களிடம் வாய் திறக்காமல், அதைக் கேள்விக்கு உட்படுத்திய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து அவரின் பாஸ்போர்ட் வரையிலும் முடக்க முயற்சித்து அவரின்  வெளிநாட்டுப் பயணத்தையும்  தடுக்க முயன்ற பிரதமரும் செந்தில்பாலாஜியிடம் மட்டும் முஷ்டிமடக்கி நியாயத்தை கோருகின்ற நீதியென்பது பெரும் அநீதி. தீமையிலும் பெருந்தீமை. நாட்டுமக்களின் கூட்டு மனசாட்சியையே அநீதிக்கு இணங்க பழகச் செய்யும் அவலம். இத்தகைய அவலத்தை ஒரு பிரதமரே நடத்திக் கொணீடிருப்பதென்பது தேசத்தின் தீவினை. எனவேதான் ராகுல் காந்தி மற்றும் செந்தில் பாலாஜியென்ற  தனி நபர்களானாலும் சரி, அல்லது காங்கிரஸ் மற்றும் திமுக என்ற இயக்கங்களானாலும் சரி தங்களின் எதிர்கால நோக்கத்திற்கு பாதகமாக இருக்கும், இருப்பார்கள் என்ற எதனையும், எவரையும் அழித்தே விடநினைக்கிறது பாகவத்கும்பல். 

இத்தகைய நிற்கதி நிலையில் நிலையில் நெஞ்சு வலியிலும் மிரட்டலுக்கு பலியாகாமல் இருந்த ஒரு சகாவை ஒரு முதலமைச்சர் சென்று சந்திப்பதற்கான தார்மீகம் இயல்பாகவே அவருக்கு அமைந்து விடுகிறது. குடியரசு தலைவரை அவமதித்து திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவில், பாலியல் குற்றவாளியான பிரிஜ்பூஷனுடன் ஒரு பிரதமர் கலந்து கொள்வதும், அநீதியிழைக்கப்பட்ட தனது சகாவை ஒரு முதலமைச்சர் சென்று சந்திப்பதன் வாயிலாக 'நான் உன்னுடன் இருக்கின்றேன். இயக்கம் உன்னோடு இருக்கிறது', என்ற ஆறுதலையும் சமப் படுத்துபவர்களின் நோக்கம் என்ன? நீதி, அநீதி என வரும்போது தெளிவாக நீதியின் பாற்பட்டு நிற்பது எத்தனை முக்கியமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது பெருந்தீமை அல்லது சிறுதீமை என வரும்போது சிறுதீமையை தேர்ந்தெடுப்பது. ஒருவேளை ஸ்டாலின் சென்று சந்திக்கவில்லையெனில் 'செந்தில் பாலாஜியை கைவிட்டு விட்டாரா ஸ்டாலின்?' பாஜகவிற்கு பயந்து விட்டாரா ஸ்டாலின்?  அமைச்சருக்கே இக்கதியெனில் தொண்டனின் கதியென்ன?' எனும் ஊளைகள் வராதென்பதற்கு என்ன உத்திரவாதம்?  ஆர்ப்பரிக்கும் ஊடக அலைகளுக்கு பதில் சொல்லப்போவது யார்? அட அத்தனையையும் விட்டு விடுவோம். 'கட்சிக்காக இத்தனை உழைத்தேனே, கொங்குவை கட்சி வசமாக்கினேனே, சொல்லப்போனால் ஒருவிதத்தில் அத்தகைய அடையாளத்தினால்தானே இத்தகைய குரூரங்கள்? இருப்பினும் தலைமை நம்மை நிர்கதியாக்கி விட்டதே' என பாதிக்கப்பட்டவரும் அவரின் குடும்பமும் நினைத்தால் அவர்களுக்கு என்ன பதில்? ஒரு தலைமை வழங்குவதை விடவும் மேலான ஆறுதலை வேறெவரா வழங்கி விடவியலும்? செந்தில் பாலாஜி கண்டுகொடாமல் விடப்பட்டால் மீதமுள்ள சகாக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? நாளை நமக்கும் இதே கதிதானா ? என அவர்கள் நினைத்தால் திமுகவின் கதியென்ன? 

எனவே நடைமுறையின்படி பார்த்தோமெனில் தனது அமைச்சரவை சகாவை ஸ்டாலின் சென்று சந்தித்ததில் கிஞ்சிற்றும் குறையில்லை. தனது சிறகினடிகளை குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப்பறவை போல தனது, சகாக்களை அவர் பாதுகாக்கத்தான் வேண்டும்., ஒவ்வொருவருவரிடமும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழ்வினைகள் அதற்கான நேரத்தில் உருத்து வந்து ஊட்டட்டும் அது இயற்கையின் நீதி. ஆனால் கொள்ளையனை கொலைகாரண் தண்டிப்பதென்பது மனு நீதி.
சரி செந்தில் பாலாஜிக்கு முன்பும், பிறகும் இத்தகைய தவறுகள் நடைபெறவே இல்லையா? நாடெங்கிலும் இப்போதும் போக்குவரத்து துறை மட்டுமல்லாது இருக்கின்ற அத்தனை துறைகளிலும்  லஞ்சமற்று நேர்மையாகத்தான் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றனவா?  செந்தில் பாலாஜி ஒருவர்தான் இன்றைய நேரத்தில் முதன்மையாக தண்டிக்கப் பட்டேயாக வேண்டிய குற்றவாளியா? வியாபம்- துவங்கி 40%ஐ லஞ்சமாக கேட்கின்றார்கள் என மோடிக்கே நேரடியாக கடிதம் எழுதிவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அனைத்து கேவல நிகழ்வுகள் பற்றியும், இவை அத்தனை சீரழிவுகளையும் தமது அதிகாரத்தின் கீழ் நடத்திக் கொண்டிருப்பவர்கள் குறித்து நீதித்துறையின் பதில் என்ன? குஜராத் அரசு மருத்துவமனைகளை அவைகள் மருத்துவமனைகளா? அல்லது பாதாள சாக்கடையா? என நெஞ்சு பொறுக்காமல் வினவிய குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். மொத்த ஊடகங்களையும் கையில் வைத்துக்கொண்டு  பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் குறித்து எதிர்மறையான எச்செய்தியையும் வெளிவராமல் ஒரு இரும்புத்திரை மாநிலங்களாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டின் வெளிப்படைத்தன்மையை கேள்வி கேட்பது அதிகாரத்திமிரும், அற்பவாத லட்சியமுமேயன்றி வேறில்லை. 

ஹிட்லரின் காலத்தில் நாம் இல்லை. நாஜியிச  குரூரங்கள் என்பது நமக்கு சரித்திரங்களேயன்றி சம்பவங்களாக நாம்  கண்டிருக்கவில்லை. ஆனால் நம் சமகாலத்தின் ஆகக்கேடான காட்சிகளை இன்னும் சமீபத்தில் எதிர்கொள்ள இருக்கின்றோம். ஹிட்லரோடு ஜெர்மனியில் நாஜியிசம் ஒரு முடிவுக்கு வந்தது. முசோலினியோடு இத்தாலியில் ஃபாசிஸம் ஒரு முடிவுக்கு வந்தது. காரணம் அவை அரசியலிலும், ஆட்சியிலும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் ஜெர்மனியின் நாஜியிசத்தையும், இத்தாலியின் ஃபாஸிசத்தையும், இஸ்ரேலின் ஜியோனிசத்தையும் தன்னகத்தே வரித்து வைத்திருக்கும்  இந்திய இந்துத்வ பார்ப்பணீயமோ இயக்கம் வேறு, கட்சிவேறென இருகூறாக இருக்கிறது. பின்னின்று அரசை நிறுவவும், கட்டுப்படுத்தவும் செய்கின்றது. எனவேதான் ஹிட்லர் மற்றும் முசோலினியைப் போல தனிநபரோடு முடிந்து விடக்கூடிய துயரமல்ல இந்தியத்துயரம். இது அழிவுச் சிந்தனையையும், பகையையும், வெறுப்பையும் இயல்பிலேயே தோற்றுவித்து நாட்டு மக்களை அதற்கேற்ப பழக்குகிறது. எனவே இதனை வீழ்த்தி சுபிட்சத்தை நிலைநாட்டுவதென்து தனிநபராலோ, ஒரேயொரு இயக்கத்தாலோ, ஒரு ஆட்சி மாற்றத்தாலோ ஆகக் கூடியதல்ல. மக்களனைவரும் ஒன்றுபட்டு தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்பினூடாகத்தான் அவைகளை  சாதிக்கவியலும். எனவே பிரச்சனைகளின் அடிப்படையை கண்டறிவதை விடவும், அடிப்படையான பிரச்சனையை கண்டடைவதே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது. "எமது எதிர்கால சந்ததிகளேனும் சுதந்திர ஃபலஸ்தீனில் வாழ்வார்கள்"என்றாளொரு எட்டுவயதேயான ஃபலஸ்தீன சிறுமி. அப்படியேதான் நம்பத் தோன்றுகிறது. எமக்கும். எமது நாட்டை சூழ்ந்திருக்கின்ற சூழ்ச்சியும், பகைமையும், வெறுப்புணர்வும் நீங்கி, இதனை தோற்றுவித்தவர்கள் அனைவரும் முழுமையாக தோற்றோடி நவஉலகில் மீண்டும் ஒரு முன்மாதிரியான, எது குறித்தும் அச்சமற்ற முழு சுதந்திர இந்தியாவாக என் நாடு திகழும். எம் சகோதரர்கள் யாவரும் தமக்குள் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படையான தத்துவத்தின் பாற்பட்டு நிம்மதியான சுதந்திரக்காற்றை சுவாசிக்கக்கூடும்.

நன்றி வணக்கம்..

Friday, February 10, 2023

வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் மட்டும் படித்தவர்களுக்கு..

வாட்சப் ல் வரலாறு படிப்பவர்களுக்காக…

கலைஞர் யார்?

1.கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? 

பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.

கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக  வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் கோவைக்குத்தான் சென்றார்.சென்னைக்கு அல்ல)

மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.

அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில்  நடித்தவர் எம்ஜிஆர்.

கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.

1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார்...
கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955)

அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.

எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார்.

எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950)

அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.

ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.

அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.

இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்

இன்னொன்று சொல்கிறேன்.

திமுக தொடங்கப்பட்டது 1949ல்

முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல்

வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.

1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.

அது மட்டுமல்ல. எம்ஜிஆர், சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.

அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.

இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார்.

2. கலைஞரும் இந்து மத விரோதமும் 

கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே!
 
எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று.
 
அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்!
 
அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். அப்போது தான் தெரியும் அவரின் உயரம்.
 
அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடந்தவை:
 
♦️  முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு, 1996
 
♦️  புரவலர் விருது & தங்க நிற அட்டை திட்டம் - ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருக்கோயில் புரவலர் என்ற பட்டமும், அரசு சான்றிதழும், தங்க நிறத்திலான அட்டையும் வழங்க அரசு உத்தரவு. அவர்கள் குடும்பத்தினர் 5 பேருக்கு அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களில் 20 வருடங்கள் சிறப்பு தரிசன அனுமதி வழங்கவும் உத்தரவு. 48 புரவலர்கள் மூலம் ரூ.2.40 கோடி நிதி திரட்டல், 2006-2011

♦️  திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்
 
1. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், 1996
2. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், 1997
3. திருநீர்மலை ரங்கநாத சுவாமி திருக்கோயில், 1997
4. திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், 1997
5. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 1997
6. கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், 1997
7. தஞ்சை பெரிய கோயில், 1997
8. சென்னை மல்லீஸ்வரர் திருக்கோயில், 1997
9. வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1997
10. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், 1998
11. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், 1998
12. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், 1998
13. ஆழ்வார் திருநகரி அரவிந்தலோசனர் திருக்கோயில், 1998
14. சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், 1999
15. வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், 1999
16. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், 1999
17. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 1999
18. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், 1999
19. ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோயில், 2000
20. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், 2000
21. மதுரை காளமேக பெருமாள் திருக்கோயில், 2000
22. அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2000
23. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், 2000
24. தொட்டியம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில், 2000
25. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், 2000
26. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், 2000
27. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 2000
28. பவானி சங்கமேசுவரர் திருக்கோயில், 2000
29. காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 2000
30. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், 2000
31. திருமுட்டம் பூவராகசுவாமி திருக்கோயில், 2000
32. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், 2000
உள்ளிட்ட 2459 கோயில்களில் குடமுழக்கு, 
33. தமிழகம் முழுவதும்  842 கோயில்களில் பல்வேறு திருப்பணிகள்.
34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள்
35. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு ரூ.85000/- நிதி உதவி   
 
 ♦️  கோயில் சுற்றுப்புற மேம்பாடு
 
1. நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு அரசின் சார்பில் இலவச மின்விளக்கு 
2. திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரல், படிக்கட்டுகள் செப்பனிடல் & மழை நீர் சேமிப்பு ஏற்படுத்துதல்
3. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருகுளத்தை சீரமைக்க ரூ.43.90 லட்சம், அருள்மிகு அஷ்டபூஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரங்கசாமி குளத்தினை சீரமைக்க ரூ.22.50 லட்சம் நிதி ஒதுக்கல்
4. இந்து அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 50 முக்கிய திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை ஓவியங்களை பாதுகாக்க ரூ.20 லட்சம் செலவில் நடவடிக்கை 
 
♦️  கோயில்களில் தமிழ் 
 
1. தமிழில் வழிபாடு, தமிழில் வேள்வி  1998
2. சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்விய பிரபந்த பயிற்சி மையங்கள், 1998-99
3. திருக்கோயில் ஆகம விதிகள் அடங்கிய உத்ரகாமிக ஆகமம் நூலை, 1999
4. தமிழ் போற்றி அர்ச்சனை புத்தகங்கள் வெளியீடு, 1999
5. சைவத் திருக்கோயில்கள் 5-ல் தேவார இசைப் பள்ளிகள் 
6. வைணவத் திருக்கோயில்கள் 4-ல் பிரபந்த இசைப் பள்ளிகள் 
7. 8 திருக்கோயில்களில் நாதஸ்வரம் & தவில் பயிற்சி
8. 75 திருக்கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் 
9. சிதம்பரம் நடராசர் தமிழ் திருமுறைகள் இசைத்தல்
 
 ♦️  தங்க விமானங்கள், தங்கத்தேர் & மரத்தேர் பணிகள் 
 
1. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக 34 தங்கத் தேர்கள் 
2. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007
3. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007
4. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2010
5. திருக்கோயில்களின் 241 மரத் தேர் புதுப்பிப்பு 
6. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் அம்பாளுக்கு புதிய திருத்தேர் அமைத்தல் & தேரோட்டம், 2008
 
♦️  கோயில் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் 

1. கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை என்ற கொள்கை முடிவு
2. தமிழகம் முழுவதும் 8325 கோயில் சொத்து பதிவேடுகள் உருவாக்கம், 1996
3. தனியார் ஆக்ரமிப்பில் இருந்த திருத்துறைப் பூண்டியில் 621 ஏக்கர், பேரூரில் 250 ஏக்கர் உள்ளிட்ட கோயில் நிலங்கள் மொத்தம் 2745 ஏக்கர் கோயில் நிலங்கள் நேரடி மீட்பு 
4. நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக 1414 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு 
5. திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாத்திட திருவொற்றியூர், திருத்தணி, விருதுநகர், விழுப்புரம் & தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம்
6. மொத்தம் 532 திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்துதல்
7. மொத்தம் 59  திருக்கோயில்களில் CCTV  பொருத்துதல்
8. திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் நீதிமன்ற கட்டணம் சொத்து மதிப்பில் 7.5 சதவிகிதம் என்று இருந்ததை மாற்றி அனைத்து வழக்குகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.100/- என நிர்ணயித்து அரசு ஆணை, 2010
9. கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பருத்தி நூல் புடவை & வேட்டிகளை ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, அவற்றை முதியோர், ஆதரவற்றோர் & கைம்பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்
  
♦️  பணியாளர் நியமனம் & நலன்
 
1. ஓய்வூதிய நல நிதி, 1996
2. பணியாளர் சேமநல நிதி, 1997
3. பணியாற்றும் காலத்தில் இயற்கை எய்தும் பணியாளர்களுக்கு ரூ.2000/- இறுதி சடங்கு நிதி, 1997
4. பணியாளர்களின் மகன் திருமணத்திற்கு ரூ.6000, மகள் திருமணத்திற்கு ரூ.10000/-, 1997
5. மருத்துவப்படி, சீருடை சலவைப் படி, இருசக்கர வாகனம் வாங்க கடன், 1997
6. கோயில்களுக்கான 200 புதிய செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல், 1998
7. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களின் அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படி, 1998
8. திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, 1999
9. ஆண்டுக்கு ஒரு லட்சமும் அதற்கு மேலும் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம், 1999
10. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மடிக்கணனி வழங்குதல், 2010
11. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி பயில நிதி உதவி, 2010
12. திருக்கோயில் பணியாளர்கள் 2575 பேருக்கு ஒரே சீருடை & அடையாள அட்டை, 2010
13. கிராம பூசாரிகள் 1146 நபர்களுக்கு ஓய்வூதிய திட்டம் 
14. ஒரு காலப் பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர் & பூசாரிகள்10,000 பேருக்கு இலவச சைக்கிள், 2010
15. மொத்தம் 49,240 கிராம பூசாரிகள் அடங்கிய நலவாரியம், 2010
16. திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள் நியமனம் 
17. மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில் 14 தவில், 30 நாதஸ்வரம், 4 தாளம் ஆகிய இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம் 
18. சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம் 
 
♦️  கோயில்கள் சார்ந்து மக்கள் நலப் பணிகள் 
 
1. திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி மைய நிதியை உருவாக்கி திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நிதி வசதி 
2. திருக்கோயில்களில் ஆதரவற்ற இளம் சிறார்கள் கருணை இல்லம் திட்டத்தின் கீழ் 38 திருக்கோயில்கள் மூலம் 43 கருணை இல்லங்கள், 1975
3. திருக்கோயில் கருணை இல்ல மாணவ, மாணவியர்களுக்கு இலவச கணினி, தட்டச்சு & தையல் பயிற்சி 
4. திருக்கோயில்களால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை
5. நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கிய திருக்கோயில்களில் நூல் நிலையங்கள் அமைத்தல் 
6. பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம்
7. திருவேற்காடு, சமயபுரம் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் திருமண மண்டபங்கள், 2007 & 2009
 
♦️  திருவாரூர் ஆழித் தேர்

அனைத்து துறைகளிலும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும்படியான ஓர் சிறப்பு முத்திரையை பதித்துள்ள தலைவர் கலைஞர், அறநிலையத் துறையில் அப்படியான ஒரு முத்திரையை தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் பதித்துள்ளார்.

அது தான் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் ஆழித் தேர்.

நீண்ட நெடுங்காலமாக ஆத்திகர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் திருவாரூர் தேர் ஓட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது.  எண்கோண வடிவத்தில் நாலு நிலைகளுடன் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மரத்தால் ஆன ஆழித்தேரை, நாத்திகரான இவர் 1969ல் முதல்வரானவுடன் திருச்சி Bhel நிறுவனத்தின் உதவியுடன் செப்பனிட்டு, இரும்பு அச்சுகள், சக்கரங்கள் & Hydraulic Brake System எல்லாம் கொண்டதாக நவீனமயப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு ஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தார்.

இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் அவர் மறைவுக்கு பின்னரும் ஏன் தொடர்ந்து இந்து மத விரோதி என்று தூற்றுகிறது? 

அதற்கு காரணம்  கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள் தான். 

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,

1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்
2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்
3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் 
 
பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சர்கர் பணி, இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு  குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அவர் மீதான வன்மமாக வளர்ந்து அவர் மறைவுக்கு பின்னரும் அவரை தூற்ற காரணமாகிவிட்டது.

கலைஞரின் வார்த்தைகளே தான் அவர்களுக்கான பதில்

கடவுளை கலைஞர் ஏற்கிறாரா இல்லையா என்பதல்ல கேள்வி.
கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் கலைஞரை ஏற்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி.
அந்த கேள்விக்கான பதில் தான் அவர் செய்துள்ள, மேலே பட்டியிலடப்பட்டுள்ள பணிகள்

#FatherofModernTamilnadu #HBDKalaignar97

3. யார் இந்த மலையாளி 
எம் ஜி ஆர்  என்ன   இப்படி   நாறுது...

#படித்துதெரிந்துகொள்ளுங்கள். இளம் தலைமுறையினரே.....

யார் இந்த MGR? 
மறைக்கப்பட்ட உண்மைகள்**
கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள்.

ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்?

இவர் சினிமாவில் நடிகராக  உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்?

திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்.

வேடிக்கையா இருக்குமே😁

ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர்.
ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.

MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.

MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது.  அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற  தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.

 2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்?

மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்

1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?
1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?

ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என்பது ஜெ க்கு நன்கு தெரியும். இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை.
1974 ல் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும்  அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம்.

ஆனா அப்போது பொத்திக்கொண்டு இருந்த அதிமுகவும் ஜெ யும் இன்று வாய்கிழிய பேசுவது உச்சகட்ட நகைச்சுவை

1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா.
அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே. 

அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை 
எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது.
கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன

மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை.

ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.

விளைவு... 1977 ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி. 

வழக்கம்போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

மத்திய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை.
இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.

மத்தியஅரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும்
அந்த கூட்டணி வென்றது.

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது.

 
1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.

அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார்

சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.

1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது.

 மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.

 இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது.

இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள்

சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.

MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது

தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு 
ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது.

சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. 

இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.

 லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. 

1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.

1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். 1977-87 வரை அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை.

 மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது.1975- 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது.
இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது.

விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்.

மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தினார்.

வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய- லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலே முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தார்.

எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில்  பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது

இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன

காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.

விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.

1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்

1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது

எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும்பு நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. 

இதைத் தழுவி எடுக்கப்பட்ட
K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்
கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. 

மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்....

திட்டங்கள் கூட தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும் சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பதும் உண்மை......

மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது....

மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பணீயத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான் இந்த ம.கோ.இராமச்சந்திரன்.......
அதில் சில ஆதாரங்கள்.......

எரிசாராய ஊழலும் ரே கமிசனும்**

MGR ம் ஈழமும்

எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு

1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அவருக்கு எதிரா புலிகளை ஆதரித்தார்.

2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார்

இல்லாவிடில் பொத்திக்கொண்டு
மௌனமாகத்தான் இருந்திருப்பார்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான்
ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார்.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது  சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர்.

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டுக்கொள்ளவில்லை.

1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு  அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர்

Ray commission உதயம் ஏன்?
கலைஞரை ஊழல்வாதி என முத்திரை குத்திய உத்தமர் எம்ஜியாரின் சாராய ஊழல் பற்றிய முழு விபரங்கள்

36 ஆண்டு கால ஆட்சி அதிமுக னு சொல்லுவானுங்க
தொடர்ந்து 3 முறை ஆட்சி
தொடர்ந்து 2 முறை ஆட்சி னு சொல்லுவானுங்க சரிடா உங்க தலைவர்கள் #எம்ஜிஆர், #ஜெயலலிதா என்னதான் மக்கள் நல திட்டங்கள், சட்டங்கள், சாதனைகள் செஞ்சாங்கனு கேட்டா பதிலே சொல்ல மாட்டானுங்க🤐😂🤣

4.இத்தனை திட்டங்கள் வேற கட்சி செய்ததை காட்டினால் LIFE TIME SETTLEMENT டா 
#தலைவர்😎 #கலைஞர் மட்டும் தான்டா ...#நவீன_தமிழகத்தின் தந்தை 

1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் 
2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் 
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் 
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் 
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் 
7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் 
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் 
9. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர் 
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர் 
11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர் 
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் 
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர் 
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர் 
15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர் 
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர் 
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர் 
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர் 
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் 
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
23. கோவில்களில் குழந்தைகளுக்கான " கருணை இல்லம் " தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர் 
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர் 
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர் 
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர் 
28. SIDCO உருவாக்கியது கலைஞர் 
29. SIPCOT உருவாக்கியது கலைஞர் 
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர் 
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் 
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர் 
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர் 
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர் 
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபட்டோரில் இணைத்தது கலைஞர் 
36. மிகவும் பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர் 
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் 
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர் 
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர் 
44. பெண்ணுக்கு சொத்தில்  சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் 
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர் 
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர் 
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் 
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர் 
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர் 
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் 
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர் 
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர் 
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர் 
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு 
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர் 
61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர் 
62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர் 
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர் 
64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர் 
65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர் 
66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர் 
67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு 
68. சமத்துவபுரம் தந்தது கலைஞர் 
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர் 
70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர் 
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர் 
73. உருது அக்காடமி தந்தது கலைஞர் 
74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர் 
75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர் 
76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர் 
77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர் 
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தது கலைஞர் 
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர் 
80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
81. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர் 
82. ஆசியாவிலே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்தது கலைஞர் 
83. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
84. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
85. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர் 
86. 20 அணைகள் கட்டியது கலைஞர் 
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர் 
88. 9 மாவட்டங்களில் புதிய மாவத்டாட்சியர் அலுவலகம் கட்டியவர் கலைஞர் 
89. மதுரை நீதிமன்றம் கட்டியது கலைஞர் 
90. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர் 
91. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர் 
92. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர் 
93. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர் 
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர் 
95. 13000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர் 
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர் 
97. சென்னையில் 9 மேம்பாலங்கள் தந்தது கலைஞர் 
98. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர் 
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர் 
100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர் 
101. வேலூர், தூத்துகுடி, கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்தது கலைஞர் 
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் 
103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்னை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர் 
104. 10 சமையல் பொருட்க்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர் 
105. விவசாய கடன் 7000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர் 
106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர் 
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1050 ஆக உயர்த்தியது கலைஞர் 
108. வகைபபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1100 ஆக உயர்த்தியது கலைஞர் 
109. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர் 
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2000 ஆக உயர்த்தியது கலைஞர் 
111. மாவட்டத்திற்க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர் 
112. ரூ 189 கோடி செலவில் காவிரி - குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர் 
113. ரூ 369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர் 
115. பொது நுழைவு தேர்வு ரத்து செய்தது கலைஞர் 
116. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர் 
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனராமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தது கலைஞர் 
118. அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர் 
119. 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்
120. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான " நலமான தமிழகம் திட்டம் " தந்தது கலைஞர் 
121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர் 
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தது கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர் 
124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர் 
125. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர் 
126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர் 
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகள் தந்தது கலைஞர் 
128. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர் 
129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர் 
130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி " அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர் 
131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர் 
132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்
133. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர் 
134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தது கலைஞர் 
135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்தது கலைஞர் 
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர் 
137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர் 
138. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர் 
139. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர் 
140. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர் 
141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர் 
142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர் 
143. 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர் 
144. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர் 
145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில் உருவாக்கியது கலைஞர் 
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர் 
147. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர் 
148. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
149) முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150) இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்..
151) இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர். 
152) பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.
153) மாவட்ட தலை நகரங்களில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்
154) மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி வழங்கியவர் கலைஞர்.                    

இப்படி வாழ்ந்த பெருமகன்
சாய்பாபா வார்த்தைகளில் 
ராஜராஜ சோழனின் மறுபிறவி
இவர் புகழ் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கட்டும்.