காமராசர், கக்கனைத் தாண்டி சிந்திக்காத ஆட்களிடையே, அம்பேத்கர், பெரியாரைச் சேர்த்துக் கொண்ட விஜய்யின் பெருந்தன்மைக்குப் பின்னும் தமிழருவி கொட்டக்கூடும், நிற்க, நாம பேசப்போவது அதை அல்ல !
ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். செங்கோலைப் பற்றிய கட்டுரைன்னு நினைக்கிறேன். அதில் பல வரிகளில் சங்கிகளை காறிக் காறி துப்புகிறார். இருந்தாலும் அது அவர்களுக்கு உறைப்பதில்லை. மாறாக ரசிக்கிறார்கள். ஏன் ?
குடப்பாலில் துளி நஞ்சு போல ஒரு சில வரிகளைச் செருகி விடுவார். அது அவர்களின் கண்களுக்கு பெரிய பத்தி போல பட்டு மகிழ்ச்சியை அள்ளித் தந்துவிடுகிறது. மாறாக, சங்கிகளையும் திட்டுகிறாரே என வாசித்துச் சிலிர்க்கும் சக உ.பிக்கள் மிக எளிதாக அந்த வரிகளைக் கடந்து விடுவதுதான், ஜெயமோகனின் எழுத்துச் சாதுர்யம் !
இந்திய விடுதலைக்குப் பின் அரசியலில் எளிமையாக இருந்தவர்களுக்கு ஜெயமோகன் காட்டும் இரண்டே சான்று, ஒன்று காமராஜர், இன்னொருவர் நம்பூதிரி பட்.
இருவரும் முதலமைச்சராக இருந்தாலும் மிக எளிமையான ஆடை, வாழ்க்கை முறை என்று அவர்களை விதந்தோதுகிறார் ஜெயமோகன்.
மகிழ்ச்சி. நமக்கும் காமராஜர் மீதோ, கக்கன் மீதோ, நம்பூதிரி, ஜோதிபாசு, புத்ததேவ் மீதோ எந்தக் காழ்ப்புமில்லை, கசப்புமில்லை !
என்ன கொடுமையெனில் இதே காலகட்டத்தில் வாழ்ந்த சாவர்க்கர் போன்ற இந்துத்துவத் தலைவர்கள், பிற தமிழ் தேசியத் தலைவர்களின் எளிமையைப் பற்றியோ, வாழ்க்கைமுறையைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை, புகழ்ந்து எழுதியதுமில்லை !
ஆனால், காமராஜரை கொல்ல முயன்றச் சங்கிகள் கூட, அந்த எளிமையானக் காமராஜரை தன்னாள் என்பார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டங்களை வெறுத்த, அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க மாணவர்களைச் சுட்டுக்கொல்வதை ஆதரித்த, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை ஒருபோதும் ஏற்காத, அதற்காக பல உயிர்கள் போகிறதே என்பதைக் கண்டுகொள்ளவேச் செய்யாத காமராஜரை, அந்த எளிமையானவரை, இன்றையத் தமிழ் தேசியர்களும் தன்னாள் என்பார்கள். ஏன் ??
ஒரே காரணம், அவர் திமுகவிடம் வீழ்ந்தது.
ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் காமராஜரை தன்னாளாக்கிக் கொண்டார்கள் இந்த லகடபாண்டிகள் !
இவர்களுக்கு ஒரு முக்கியமான வரலாறு தெரியாது. தெரிந்தால் வாழவே விருப்பப்பட மாட்டார்கள் !
காமராஜர் தன் அந்திமக்காலத்தில் தனித்து விடப்பட்டிருந்தார்.
தன்னால் ஆளான இந்திராவால் நொந்து போய்க் கிடந்தார்.
கறிவேப்பிலை போல உதாசீனப்படுத்தப்பட்டு காங்கிரசிலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்திருந்தார். இந்தியளவில் பிரபலத் தலைவராக இருந்த அவரை, தமிழகத்திற்குள் முடக்கி விட்டிருந்தனர். போக, அவரால் வளர்க்கப்பட்டிருந்த பல தலைகளே எதிரிகளாகி அவரைத் தாக்கி பேசிக் கொண்டிருந்தனர் !
நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது அதற்கெதிராகப் பேசிய, எழுதிய அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது !
காமராஜரையும் கைது செய்யப் போகிறோம் ஒத்துழைக்கவும் என்று முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் தூது வந்த ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம், மிகக் கடுமையாகப் பேசி ஒருபோதும் எங்களின் பெருந்தலைவரை காட்டிக் கொடுக்கவும் மாட்டோம், கைது செய்யவும் முடியாது, மீறி நீங்கள் செய்ய முயன்றாலும் அனுமதிக்க மாட்டோம் என்று விட்டிருந்தார் கலைஞர் !
நான் மேலே சொன்னது பொய் என்று ஒரே ஓர் ஆளை, ஆவணச்சகிதம் நிருபிக்கச் செய்யுங்கள், சவால் விடுகிறேன்.
இந்த மன அழுத்தத்தில் காமராஜர் இறந்துபோனார். அது ஒரு மழைக்காலம்.
வாரிசுகள் இல்லாத காமராஜரின் தலைமகன் போல தன் வேட்டியை முட்டிக்கு மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு, சகதியில் கால்வைத்து, பம்பரமாகச் சுழன்று, உச்சபட்ச அரசு மரியாதையுடன் இறுதிப்பயணத்தை, இறுதி அஞ்சலியை, கல்யாணச் சாவு போல எடுத்தார் கலைஞர் !
குறைந்தபட்சம் இதையாவது மறுக்க முடியுமா ?
விருதுநகரில் ஓர் இளைஞரிடம் தோற்ற காமராசர், அடுத்த சில வாரங்களிலேயே நாகர்கோவில் தொகுதியில் வென்று, மக்களவை உறுப்பினரானார். ஆனால் இப்போதுவரை திமுக ஹேட்டர்கள், சொந்த ஊர்லயே அவரைத் தோக்கடிச்சிட்டாங்கப்பா, அதாலயே நொந்துச் செத்தார்ம்பாய்ங்க.
அடேய் அவர் தோத்தது 1967. இறந்தது 1975.
கலைஞரின் இந்த அற்புதக் குணத்தைப் பாராட்டி பரிசளித்தார் இந்திராகாந்தி. ஆட்சி டிஸ்மிஸ்.
அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலும் அனைத்துத் தலைவர்களுமே எளிமையாகவே இருந்தனர். பரம்பரை பணக்காரரான ஜவகர்லால் நேரு உட்பட.
ஆனால் எளிமையின் சிகரமெனக் காந்தி, காமராஜரை சான்றாகக் காட்டுபவர்கள் நேருவைக் காட்டியதுண்டா ?
நம்ம அண்ணா ?
அவரென்ன பகட்டாகவா வாழ்ந்தார் ?
அவருடைய ஆடைகள் எத்துணை எளிமையானவை ? அவருடைய வாழ்க்கைமுறை ?
அவருடைய அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஆங்கிலத்தில் அவருக்கிருந்த வளமை... இதில் எதுவாவது அவருடையத் தோற்றத்தில் தென்படுமா ?
1947 லிலேயே சினிமாவில் பல்லாயிரம் சம்பாதிக்கத் துவங்கி, கட்சியில் முதலாளாய் கார், பார்ப்பனரிடமிருந்து கோபாலபுர வீடு வாங்குமளவு வசதி இருந்தும், கலைஞரிடம் என்ன பகட்டைக் கண்டுவிட்டார்கள் இவர்கள் ?
கலைஞர் பல லட்சத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டா வளைய வந்தார் ? அல்லது தங்கபஸ்பமும், தாய்லாந்து காளானையும் உண்டாரா ?
கலைஞருடைய தூய வெள்ளாடைகள், அவருடைய அன்றாட உணவுமுறைகளை ஆய்ந்து வாசித்தால் மட்டுமே அந்த உண்மைகளை நீங்கள் உள்வாங்கவே முடியும்.
எம் எல் ஏவாக, அமைச்சராக, முதல் அமைச்சராக, எதிர்கட்சித் தலைவராக, எந்தப் பதவிகளுமே இல்லாமல் கட்சித் தலைவராக மட்டுமே இருந்தாலும் கூட, அவருடைய உடைகளில், உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த மாற்றமுமே இருந்ததில்லை !
அட, அத்தனைப் பெரிய தலைவர் வீட்டுக்குச் சுற்றுச்சுவர் கூட இல்லை. இன்றளவுமே இல்லை. பெருமழை பெய்தால் அவர் வீட்டுக்குள் கொஞ்ச நேரம் வெள்ளம் தரிசித்துவிட்டுச் செல்லும் !
எவனாவது அறமிக்க ஒரே ஓர் எதிரியேனும், கலைஞரை எளிமைக்குச் சான்றாக சொல்வானா ? சொல்ல வாய் வருமா ??
1991 - 1996 களில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பெரும்பாலும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருந்த போதும், 1996 - 2001 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர், அரசு அம்பாசிடர் கார்களில்தான் எங்கெங்கும் பயணம் செய்தார். நீண்ட தூரமெனில் இரயிலில் செல்வார். அப்போதும் உடன் பல அரசு கோப்புகள், அவருடைய கையெழுத்துக்காகப் பயணிக்கும் !
அண்ணா, கலைஞர் எளிமையான முதலமைச்சர்கள் என எவை சொல்லவிடாமல் தடுக்கின்றன ?
பார்ப்பனியச் சூதுதான். அந்தளவு ஆரியத்திற்கெதிராக, திராவிடத்திற்காதரவாக இவர்களிருவரும் மறையும் வரை இயங்கியதுதான்.
அந்தத் தீராக்காழ்ப்பு உள்ளவரை காமராஜரும், கக்கனும்தான் அவர்களுக்கு எளிய அரசியல் ஆளுமைகள். ஆனால் அது முழு உண்மை அல்ல !
நம் குடும்ப முன்னேற்றத்திற்காக பல தியாகங்கள், அயரா உடலுழைப்புகள் செய்வோம். ஆனால் ஓர் அரசியல்வாதிக்கு அப்படி எதுவும் இருந்துவிடக் கூடாது. அப்படியே இருந்தாலும் அவர்கள் அடுத்தவேளைச் சோற்றுக்கு அரசு கோவில் க்யூக்களில் நிற்க வேண்டும்.
இப்படி ஒரு சீரியல் நாடகத்தைத்தான் மக்களை நம்ப வைத்திருக்கிறது அந்த பார்ப்பனியச் சூது. ஆஃப்ட்ரால் அல்லக்கை சூதுகளுக்குப் பலியாகிவிட்டு நமக்கு பாடமெடுக்க வருவார்கள் பாருங்கள், அவர்கள்தான் உலகமகா மூடர்கள் !!!
No comments:
Post a Comment