Tuesday, May 1, 2012

ஈழமா - ஒரு மயிரும் கிடைக்காது

தமிழீழம் , டெசோ , கொலைஞர் , செண்டமிலன் , கார்டூன் பீலா ,துரோகி,எதிரி,கருணா,கருவறுப்போம்,ஒரவுகளே,தள்ளு தள்ளு , சொம்பு ,கொசுறு ,டம்ளர்கள் , இனம், வந்தேறி ,நாதாரி ,டவுசர், ஆகிய வார்த்தைகள் இணையத்தில் அதிகம் உலாவுகிறது ...இது அனைத்தும் ஒரு பிரச்னையையும் ஒரு மனிதனையும் சுற்றியே வருகிறது ..

அந்த பிரச்சனை ஈழம் , அந்த மனிதர் கலைஞர் ,, 

சரி நாம் யார் ? இப்படி பேசுபவர்களும் ஏசுபவர்களும் நம் எதிரிகளா ? அல்லது நாம் வெவ்வேறு இனமா?இல்லை வெவ்வேறு மொழியா?

இல்லை இல்லை நம் சகோதரர்கள்தான் ஏன் இப்படி பேசிக்கொண்டிருக்கிறோம் ,இப்படி பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் , 
ஒரு மயிரும் கிடையாது,

தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியமா? உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது சிரமமான ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவைதான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது.

சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.

மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும்.

இன்றும் யாருக்கு அந்த வலிமை இருக்கிறது என்று பார்போம் ..

இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.

அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.
இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம்.

எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.

1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. 

கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதியை தன் சதியால் சில அகில உலக பார்ப்பனர்கள் தமிழனுக்குள் குழப்பம் விளைவிக்க செய்த வன்மமான விடயம்தான் ராஜீவ் ஜெயா கூட்டணி ...


சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.
இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.

இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.
1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தமிழ்நாட்டு தமிழ்களின் வளர்ச்சிக்காக தன்னை தேசிய எதிர்ப்பு பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு பணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.


திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த சில விடயங்களை தன் கையில் எடுத்துக் கொள்வதே இந்த கொசுறு கட்சிகளின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது..பிறகு தன் அரசியல் லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் , தனித்தனியாக தமிழீழ அரசியல் செய்ய துவங்கியது ..










மீண்டும் ஜெ ஆட்சியில் 2001 க்குப் பிறகும் தனி ஈழத்திற்கு எதிரான பரப்புரைகளும், அந்த ஆதரவாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகளும் மாநில அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன.இதுதான் சமயம்... இனி அங்கு என்ன நடந்தாலும் தமிழகத் தமிழர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற சதிகாரர்களுக்கான அற்புதமான சூழல் இங்குதான் ஏற்பட்டது .

தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்ப்டுகிறார்..

இன்றும் கலைஞர் மோசம் , துரோகி என்றும் , நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோமே திவிர நம்மை பிரித்தாழும் சூழ்ச்சியை செய்தது யார் ? நாம் இழப்பிற்கு காரணம் யார் என்றுகூட தெரியாமல் இன்றும் நாம் ஒருவருக்கொருவர் காட்டூன் வரைந்துகொண்டும் ,ஏசிகொண்டும் , தூற்றிகொண்டும்தான் இருக்கிறோம் ...

தனி வாழ்க்கையானாலும் பொது வாழ்க்கையானாலும ,குரோதம் என்பது மனிதர்களுடனேயே அடைந்து கிடக்க வேண்டுமே தவிர அம்பலத்திற்கு வந்து அலம்பல் செய்யக் கூடாது.

ஆதாயம் பெற்றவர்கள், ஆதாயம் பெறத் துடிப்பவர்கள் ஆயிரம் கூறலாம். ஆனால், ``அறிவார்ந்தவர்கள் எனக் கூறப்படும் திராவிடர்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடாது.

அவர்களின் அபிலாஷைகளுக்கு ரப்பர் ஸ்டாம்ப்ஆகக் கூடாது.

நம் ஒவ்வொரு இழப்பிற்கும் யார் காரணம்,
நாம் யார் ?
நம் வரலாறு என்ன ?
நாம் ஏன் பிளவுபட்டோம் ?
நம் பொது எதிரி யார் ?
நம்முடைய உண்மையான எதிரி யார்? 
என்பதை புரிந்துகொள்ளாமல் இருந்ததுதான் ...
இனத்தால், மொழியால், மனதால் ஒன்றுபட்டிருக்க வேண்டிய நாம் ஆரிய சதியால் பிளவுபட்டோம்!

சரி விடுங்கள் இனியும் நாம் அப்படியே இருப்பதா இல்லை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் ...

எவ்வளவு பட்டாலும் நமக்கு புத்திவராதா? இந்த அளவுக்கு நிலமை சென்றதெற்குக் காரணமே நம்மவர்களை நாமே புரிந்துகொள்ளாததுதான் தமிழையும் திராவிடதையும் எதிர்க்கும் இந்த இந்தியவும், பார்பனர்களும் ஒருபோதும் தமிழீழத்தை சாத்தியமாக அனுமதிக்காது; அரசியல் ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் போராட்டத்தை பரவலாக்கி இந்தியாவின் சதி வேலைகளை முறியடித்துச்செல்லும் வகையில் போராட்டத்தை செலுத்தாமல் இந்தியா உதவும் என்றிருப்பது, முதலையின் மீதேறி ஆற்றைக் கடக்கலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.

நம் மக்கள் ஏதோ ஒரு நிகழ்வில் ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால்
மாறி மாறி அடிபட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்..
தமிழீழமே நிரந்தர தீர்வென அறிவித்து மீண்டும் டேசொவை தொடங்கி மேடைதோறும் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கும் இந்த சூழலை உண்மையான ஈழ ஆதரவாளர்கள் யாராக இருந்தாலும் பயன்படுத்திக்கொள்வார்கள்.டெசோ என்று கலைஞர் அறிவித்த பின்பும் நாம் ஒன்று சேரவில்லை என்றால் ,மீண்டும் நம் வீழ்ச்சிக்கு முன்பு நடைபெற்றது போல நாமே காரணமாகிவிடுவோம் ...

இந்த பதிவு யார் மனதையாவது

புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் தோழர்களே ..
நான் ஒரு சாமானியன்.எழுதுவதை தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை.
என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயமாக
இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் . அதைத் தவிர வேறு எதுவும்மில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன்.


"எதிரிகளின் படைபலத்தை எடை போடாதீர்கள். நம் கொள்கையின் மனப்பலத்தை கொண்டு எதிரிகளின் ஆயுதங்களை செயலிழக்க வைப்போம்!"

- தோழர் லெனின்

 

7 comments:

  1. ஏய்யா... ஹிட்ஸ்க்காக தயிரு, மயிருன்னு தலைப்பு வைப்பீயா? தலைவன் தமிழை அழகாக தான் வளர்த்துள்ளான்.

    ReplyDelete
  2. அழுத்தமான வரிகள்....நன்றி லெனின்......!

    "நம்மவர்களை நாமே புரிந்துகொள்ளாததுதான் தமிழையும் திராவிடதையும் எதிர்க்கும் இந்த இந்தியவும், பார்பனர்களும் ஒருபோதும் தமிழீழத்தை சாத்தியமாக அனுமதிக்காது; அரசியல் ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் போராட்டத்தை பரவலாக்கி இந்தியாவின் சதி வேலைகளை முறியடித்துச்செல்லும் வகையில் போராட்டத்தை செலுத்தாமல் இந்தியா உதவும் என்றிருப்பது, முதலையின் மீதேறி ஆற்றைக் கடக்கலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்"

    ReplyDelete
  3. திராவிடத்தலைவனை, தலைவியை நம்பக்கூடாது மக்களே..!!!

    நம்ப வைத்த்தே கழுத்தை அறுப்பதுதான் இவர்களின் வேலையே..!!!

    ஆரியனும் அவ்வாறே..!!!

    இந்தியாவே தமிழனின் முதல் எதிரி..!!

    ReplyDelete
  4. நிதர்சன்May 1, 2012 at 7:23 PM

    ஏன் இதை முள்ளிவாய்க்கால் போர் நடக்கும் போது ஆரம்பிக்க வேண்டியது தானே.அப்ப கனிமொழி உள்ள இருந்தா.இப்ப வெளியில வந்தவுடனே அக்கறை பொத்துகிட்டு வருதா .பொணத்த வச்சுகூட அரசியல் பண்றவங்களுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க

    ReplyDelete
  5. தமிழீழத்தைப் பற்றி ஆரம்பித்து தமிழ் நாட்டு அரசியலை அலசுவதில் பயன் என்ன?

    ReplyDelete
  6. Karuna oru ayokiyan pawer erunthappa sathikka mudiyathathai pawer illatha pothu kattayam mudiyathu thannai sithra paduthi kolla mattum payanpatuthu van piraku kollai adikka thuvanguvan evan valli sendral prayosam illai thamil eelam USA kail etuthukondathu eni Us and Un parthukollum

    ReplyDelete
  7. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் மின்னஞ்சிலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete