Tuesday, April 24, 2012

வெளியே சொன்னா வெக்கக்கேடு - MLA ஆதங்கம்

எங்கள் அண்ணன் குன்னம் தொகுதி திரு சிவ சங்கர் MLA அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள ஆதங்கத்தை இங்கு பதிவு செய்ததுள்ளோம்...
சனநாயகக் கடமை -1

tamil
voters 
சட்டமன்றத்தில் திமுகவினர் சனநாயகக் கடமையை சரியாக ஆற்ற வேண்டும் என்பது பத்திரிக்கையாளர்களின், மன்னிக்கவும் பத்திரிக்கைகளின் விருப்பம். சட்டமன்றத்தில் எதிர் கட்சிகளின் நிலை என்ன என்பது நேரிடையாக பார்ப்பதால் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் உண்மையை அப்படியே பத்திரிக்கையில் எழுத முடியாது. குளுகுளு அறையில் அமர்ந்திருக்கிற பத்திரிக்கை முதலாளிகள் விரும்புவதை தான் , வியர்வை வழிய வழிய இவர்கள் எழுத முடியும்.
முதலில் பத்திரிக்கைகள் சனநாயகக் கடமையை முறையாக ஆற்றட்டும். சட்டசபையில் நடப்பதை மனசாட்சிப் படி எழுதட்டும். நேற்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் போட்டிருக்கிறார்களே, சட்டமன்றத்தில் எதிர்கட்சியை பேசவிடுவதில்லை என்று. தேமுதிக தலைவர் ஊர் ஊராக சொல்கிறாரே, பேச அனுமதிக்கவில்லை என்று.
இதைத்தான் இந்த ஆட்சி அமைந்த நாளிலிருந்து நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.
# அங்கே நெரிக்கப்படுவது எங்கள் குரல் மட்டும் அல்ல... உங்கள் குரலும் தான்.
நாளை உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், அங்கேதான் குரல் எழுப்ப வேண்டியிருக்கும்.
## எச்சரிக்கை....

mla
சனநாயகக் கடமை - 2

சில தோழர்கள் சட்டமன்றம் எப்படி செயல்படுகிறது என்று தெரியாமல் அறிவரை கூற முற்படுகிறார்கள் , அவர்களுக்காக இந்த நிலைத் தகவல். அதனால் தான் காலை பதிவிட்ட நிலைத்தகவலுக்கு 1 என்று எண் இட்டேன்.
இவர்கள் நினைப்பது, சட்டமன்றம் என்றால் அவரவர் எழுந்து மைக்-ல் பேசலாம் என்று. அப்படி கிடையாது. எல்லோர் முன்னும் ஒலிவாங்கி இருக்கும், ஆனால் இணைப்பு கொடுக்கப் பட்டிருக்காது. சபா யாருக்கு கை நீட்டுகிறாரோ , அவருக்கே மைக் இணைப்பு கொடுக்கப் படும்.
மூன்று விதங்களில் உறுப்பினர்களுக்கு பேச நேரம் கிடைக்கும்.
1. விவாதங்களில் பங்கேற்கும் வாய்ப்பு 10-20 நிமிடங்கள். இது ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, ஒவ்வொரு துறை மீதான விவாதங்கள். இது வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை கிடைக்கும் வாய்ப்பு.
2. zero hour - இந்த நேரத்தில் மாத்திரம் அன்றைய முக்கிய, மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை , எழுத்து மூலம் பேரவைத் தலைவரிடம் கொடுத்து அனுமதி கிடைத்தால் எழுப்பலாம். சபாநாயகர் மனம் வைத்தால் " தான் " வாய்ப்பு கிடைக்கும். அரசுக்கு சிக்கலான பிரச்சினை என்றால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்காது.
3. கேள்வி நேரம் - அரசு நடைமுறை தொடர்பாகவோ, தொகுதி குறித்தோ எழுத்து மூலமாக எழுப்புகின்ற கேள்வி , சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, பதில் சட்டப் பேரவை செயலகத்தால் பெறப்படும். அது பேரவையில் அமைச்சரால் பதிலளிக்கப்படும். இதை ஒட்டி மற்ற உறுப்பினர்கள் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்புக் கேட்கலாம். முதன்மைக் கேள்வியோ, துணைக்கேள்வியோ சபாநாயகர் மனது வைத்தால் தான்.
இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இப்படி தான் செ.கு.தமிழரசன், சரத்குமார் போன்றோர் அடிக்கடி சபாநாயகரால் வாய்பளிக்கப்படுவது. காங்கிரஸ் விஜயதாரணி பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் பேசிக் கொண்டிருக்க , வாய்ப்பு கேட்காத அவரை, துணைக்கேள்வி கேட்க சபா அழைக்க, அவர் அமர்ந்திருக்க , அனைவரும் கிண்டலாக சிரிக்க ( ஆளுங்கட்சியினரும் ) இவர் வழிய... அவர் வழிய .... அந்தக் கூத்தும் ஒரு நாள் நடந்தது.

இந்த சட்டமன்ற நடவடிக்கைகள் தெரிந்து கொள்ளாமல், புரியாமல் " involve in active debate " என்று special advise கொடுக்கும் சில அறிவாளி நண்பர்களுக்கு யாராவது விளங்க வையுங்களேன்....

mla
சனநாயகக் கடமை - 3

சில பத்திரிக்கைகள் திமுக சனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுவதே வேலையாக இருக்கிறார்கள். அவர்களுக்காக....
பொதுவான கருத்துகள் மீது விவாதம் நடத்துவதுதான் முறை. ஆனால் கடந்த எனது இரண்டு நிலைத்தகவல்களை பார்த்தவர்களுக்கு சட்டப்பேரவை நிலவரம் புரிந்திருக்கும்.
கேள்வி நேரத்தின் போது குறை கூறக்கூடாது என்பது மரபு. எதிர்கட்சிகள் தான் குற்றம் சுமத்துவது வழக்கம். ஆனால் ஆளுங்கட்சியினர் குற்றம்,குறை சொல்வதே வேலையாக இருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு கேள்வி கேட்டால் கூட , கடந்த ஆட்சியை குறை கூறுவதையே அமைச்சர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ,தேனீ மாவட்டம், போடியில் நடந்துக் கொண்டிருக்கிற பாதாளச்சாக்கடைப் பணிகள் எப்போது முடியும் என்று கம்யூனிஸ்ட் உறுப்பினர் லாசர் கேட்டால், இத்தனை மாதங்களில் முடிவடையும் என்று பதிலளிக்க வேண்டும். ஆனால், கே.பி.முனுசாமி " கடந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் முறையாகத் திட்டமிடப்படவில்லை. அதனால்...... " என்று தான் ஆரம்பிப்பார்.
மான்யக் கோரிக்கையில், பாமக உறுப்பினர் கணேஷ்குமார் பேசும் போது " விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போயிருந்தேன். வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் வந்த பெண்ணை, ஆம்புலன்சில் இருந்த நிலையிலேயே, பாண்டிச்சேரிக்கு போகச் சொன்னார்கள். சொன்னவரும் டாக்டர் அல்ல, கம்பவுண்டர். ஏன் போகச் சொல்கிறீர்கள் ? என்று கேட்டப்போது தான் , டாக்டர்கள் இல்லை என்றார்கள் " என்று கூறினார். இதற்கு நீங்கள் அமைச்சராக இருந்தால், என்ன பதில் சொல்வீர்கள் ?. அமைச்சர் சி.வி.சண்முகம் எழுந்து சொன்ன பதில் என்ன தெரியுமா ? " கடந்த திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட உபகரணங்கள் பழுதடைந்துவிட்டன " . போதுமான டாக்டர்கள் இல்லை என்பதற்கு இது தான் பதிலா ?
அதே போல அண்ணன் ஏ.வ.வேலு அவர்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். அதில் பேசும் போது, " கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் வருகிற வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக சீர் செய்யாவிட்டால், சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும் " என்றார். " தண்ணீர் பஞ்சம் " என்றே சொல்லக்கூடாது என அமைச்சர்கள் எழுந்து கூச்சலிட்டார்கள். கவலையை கூட தெரிவிக்ககூடாதாம். இதற்கு பதில் சொன்ன அமைச்சர் என்ன சொல்லலாம் ? அரசின் கவனத்திற்கு இது வந்து விட்டது, நடவடிக்கை எடுத்துவிட்டோம் , என சொல்லலாம். அமைச்சர் ராமலிங்கம் ," காவிரியை கைவிட்டவர்களெல்லாம் கண்டலேறு பற்றி பேசுவதா ", என்று ஆரம்பித்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா ? அப்படியே அமைதியாக உட்கார்த்திருந்தால் , தினமலர் என்ன எழுதும். அமைச்சர் குற்றச்சாட்டுக்கு திமுக வாயடைப்பு.
ஆளுகின்ற கட்சிதான் பொறுப்போடு அனைவரையும் அரவணைத்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும். அவர்களோடு கூட்டணியிலிருந்தவர்களே எப்படி அரவணைக்கப்படுகிறார்கள் என்று பார்த்து வருகிறோம். ஆனால் ஆளுங்கட்சியை சனநாயகக் கடமை ஆற்ற சொல்ல முடியாத பத்திரிக்கைகள், திமுக-வை மாத்திரம் கேள்வி கேட்கிறார்கள்.

# அதுவும் சரிதான். மதித்து பதில் சொல்கிறவர்களிடத்தில் தானே கேள்வி
கேட்கமுடியும். family

நன்றி :- திரு சிவ சங்கர் அவர்கள் 

2 comments:

  1. /// செ.கு.தமிழரசன், சரத்குமார் போன்றோர் அடிக்கடி சபாநாயகரால் வாய்பளிக்கப்படுவது. காங்கிரஸ் விஜயதாரணி ///

    இவங்க ஆளும் கட்சியை புகழ்ந்துதான் பேசுகிறார்களே தவிர தொகுதி பிரச்சினைகளையோ மற்ற பிரச்சினைகளையோ ஒருநாளும் பேசுவதில்லை. புகழ்ந்து பேசுவதற்காக மக்கள் பணம் செலவிடப்படுகிறது...

    ReplyDelete
  2. உங்கள் வலைப்பூ மிகவும் அருமையாக உள்ளது
    பல்சுவை செய்திகளுக்கு www.suncnn.blogspot.com

    ReplyDelete