சமுக உறவில் தேடுங்கள்

Loading

Monday, April 9, 2012

ஆண்டவன்-ஆள்பவன் - WHAT வேறுபாடு


..''.''ஆண்டவனா இருப்பதில் லாபம் தான். ஏனென்றால் எந்தக் குறையை மக்கள் சொன்னாலும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம், படுத்திருக்கலாம், தூங்கிக் கொண்டிருக்கலாம், திருவரங்கத்திலே போய் ஆண்டவனிடத்தில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் முறையிடுகிறார்களே, '' அங்கே ரங்கநாதர் எழுந்து என்ன செய்தார்?' என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? ஆண்டவனுக்குள்ள சவுகரியம் ஆள்பவனுக்குக் கிடையாது. அதனால் தான் ஆண்டவனாக இருக்க விரும்பவில்லை. ஆள்பவனாகவே இருந்து மக்களுக்கு அன்றாடம் பணியாற்றுவதற்கு, அவர்களுக்குச் சேவை செய்வதற்கு விரும்புகின்றேன். ஆண்டவன் என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற கூட்டம் இருக்கின்றது. அந்தக் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, வீழ்த்தி அதில் யாரும் ஏமாறாமல் இருக்கின்ற பகுத்தறிவுப் பிரச்சாரத்தை நாம் தொடர்ந்து செய்யவேண்டுமென்று இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''''


........முத்தமிழ் காவலர் டாக்டர். கலைஞர்.மு.கருணாநிதி

(வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் 27.11.2010 சனி மாலை மக்கள் வெள்ளமெனத் திரண்ட பொதுக் கூட்டத்தில் ''முதலமைச்சர்'' ''கலைஞர்'' அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை! யிலிருந்து ஒரு சிறு பகுதி..)


கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான். கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள். பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ? தெரியாது எந்த குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில் தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு ஒரு குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால் நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள் கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம் .இது அனைவருக்கும் தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள், என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி கொள்ளமுடிவதில்லை. கடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ! மனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ கடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான். மனிதர்கள் மிகவும் புத்திசாலிகளல்லவா. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை! நம்பிக்கை தான் கடவுள்! தன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை) தன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை… ஏமாறாதீர்கள்: நம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்! ஒ புரிந்து விட்டது. நீங்கள் கடவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்க வாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல காரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள். மனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, அன்பே சிவம் என புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை. காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் அன்பை உணரும் வெளிபடுத்தும் ஞான கண்களை மறைக்கிறது
நன்றி -யுவா 

No comments:

Post a Comment