விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டு கள் கொஞ்சம் கொஞ்ச மாக வழக்கொழிந்து வருகின்றன.இருப்பினும் ஒரு சில கிராமங் களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வந்த பாரம்பரிய விளையாட்டு களை (தற்போதுள்ள தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின் பழங்கால
விளையாட்டுகள்) பின்னுக்குத் தள்ளும் வகை யில் தனிநபர் வீடியோ கேம்ஸ் புகுந்துவிட்டது.
அக்கம் பக்கத்தில் இருப்பவர் களுடன் பழகவே தயங்கும் இன்றைய நகர வாழ்க்கையில் குழு விளையாட்டுக்கு குழந்தைகள் எங்கே போவார்கள்? எனவேதான் பள்ளி மாணவ, மாணவியரிடம் இதை எடுத்து செல்லலாம் என்று எண்ணி யுள்ளோம் ..
நடைமுறை சிக்கல் உள்ளது என்று பள்ளியோ மக்களோ குழந்தைகளோ இதை தவிர்க்கலாம் விளையாட்டு முறை குறித்து எடுத்து கூறி செயல்படுத்த முயற்சிப்போம்.. தமிழகத்தில் சில அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறனர் கல்விதுறையில் அனுமதி கிடைத்தால் உடற்கல்வி பாடவேளையில் பாரம்பரிய குழு விளையாட்டைக் கற்றுத்தருலாம் .
நாங்கள் முயற்சிக்கிறோம்..ஆகவே இந்த தொகுப்பு..
வாய்ப்பு இருப்பின் மும்பையில் நமது பாரம்பரிய குழு விளையாட்டுக்காக ஒரு விளையாட்டு போட்டி நடத்தப்படும்..
சூ விளையாட்டு,உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65 விளையாட்டுகள் இருந்தன.
இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி,பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு,மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி,சோற்றுபானை என 27 விளையாட்டுகளும்,
சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டுவிளையாட்டு,குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி,குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30விளையாட்டுகளும்,
ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல்,சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம்,மோடிவிளையாட்டு, பானை உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும்,குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு,பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன.
பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை,விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்மனதிற்கும், நம் உடலிற்கும்
நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.
..............................................................................................................................................................
தன்னம்பிக்கை தரும் நொண்டி விளையாட்டு
பல்லாங்குழி விளையாடினால் நீண்ட நாள் சளித்தொல்லை, கண்பார்வை போன்ற பிரச்சனைகள் குணமடையும் ஆனால் பல்லாங்குழி ஆடவேண்டிய கைகள் இன்று செல் போனிலும்,கம்புயுடரிலும் பட்டங்களை தட்டிக்கொண்டிருக்கிறது. 40 - 50 வயதில்
கண்ணாடி மாட்டிக்கொண்ட காலம் போய் 4 - 14வயதிலேயே கண் பார்வை கோளாறுகளால் கண்ணாடிகள் மாட்டிவிட்டோம் நம் பிள்ளைகளுக்கு.
....................................................................................................
பம்பரம் விளையாட்டு
பின்பு சாட்டையை பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.
...................................................................................................................................................................
மறந்து போன ஆடு புலி ஆட்டம்
இந்த விளையாட்டில் மொத்தம் 18 ஆட்டக்காய்கள் இருக்கவேண்டும். அதில் மூன்று காய்கள் புலிகளாகவும், மீதமுள்ள 15 காய்களை ஆடுகளாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு காய்களையும் வித்தியாசப்படுத்தும் விதத்தில் காய்களானது இருக்கவேண்டியது அவசியம்..
3 புலிகள், 15 ஆடுகள் கொண்ட இந்த விளையாட்டில் புலிகள் ஆடுகளிடம் சிறைப்படுதல் அல்லது ஆடுகளை புலிகள் விழுங்குதல் என்பது விளையாட்டின் நோக்கமாகும். ஆடுகளை ஒவ்வொன்றாக விழுங்கும் புலிகள், புலிகளை முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
1. முதலில் புலி, அடுத்து ஆடு என்று சட்டகத்தின் இணைப்புகளில் வைக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளைப் போல் இது கட்டத்துக்குள் வைக்கப்படுவதில்லை. புலிகளை அடைப்பது போல ஆடுகளை அடுக்க வேண்டும். அதை தடுப்பது போல புலிகளை நகர்த்த வேண்டும்.
2. புலிக்கு அருகில் ஆடு இருந்து அதற்கு அடுத்த கட்டம் வெற்றிடமாக இருந்தால் புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும். எனவே புலிக்கு அருகில் தொடர்ச்சியாக இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக வேண்டும்.
3. புலிகள் சிறைப்படும் போது எத்தனை ஆடுகள் விழுங்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து ஆடுகள் தரப்பில் விளையாடுபவர் புள்ளிகளைப் பெறுவார். அதுபோல புலிகளை சிறைப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளை இழந்தால் புலிகள் தரப்பில் விளையாடுபவர் வெற்றிபெறுவார்.
இவை இந்த விளையாட்டின் பொது விதிகள்.
...................................................................................................................................................................
கிட்டிப் புள்ளு (கில்லி )
traditional games
எப்படி ஆடவேண்டும்: இவ்விளையாட்டை இரண்டு விதமாக விளையாடலாம்;
1. மண் தரையில் ஒரு சிறிய குழியைத் தோண்டி அதன் மேல் புள்ளு குச்சியை வைக்கவேண்டும். பின்னர் கிட்டி குச்சியை புள்ளுக்குச்சிக்கு அடியில் இருக்குமாறு வைத்து தூக்கி அடிக்க வேண்டும். அடிக்கப்பட்ட புள்ளுக்குச்சியை குழுவில் உள்ள மற்றவர்கள் துணியாலோ அல்லது கைகளாலோ பிடிக்கவேண்டும்.
2. மண் தரையில் ஒரு சிறிய குழியைத் தோண்டி அதன் மேல் புள்ளு குச்சியை வைக்கவேண்டும். பின்னர் விளையாடும் நபர் இரண்டு கால்களையும் விரித்து குழியானது கால்களுக்கு இடையில் இருக்குமாறு சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் கீழே குனிந்து கிட்டி குச்சியை புள்ளுக்குச்சிக்கு அடியில் இருக்குமாறு வைத்து விரித்த கால்களுக்கு இடையில் உள்ள இடைவெளியின் வழியாக தூக்கி வீச வேண்டும். அதனை குழுவில் உள்ளவர்கள் துணியாலோ அல்லது கைகளாலோ பிடிக்கவேண்டும். புள்ளு குச்சியை பிடித்து விட்டால் விளையாடிய நபர் வெளியேறி அடுத்த நபர் ஆட்டத்தை தொடரவேண்டும். இவ்விளையாட்டை விளையாடுவதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களும் விளையாடலாம்.
................................................................................................................................................................
காணாமல் போன விளையாட்டுகள்
...................................................................................................
மெல்ல வந்து கிள்ளிப்போ
கிள்ளிப்போ…’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!
..............................................................................
கள்ளன் வாரான்… களவாணி வாரான்
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’
.......................................................................................
பூப்பறிக்க வருகிறோம்
............................................................
கழங்கு
ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சான்: ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள் கிட்டுவதேயில்லை!
.................................................................................................................................................
தன்னம்பிக்கை தரும் சிலம்பம்!
silambattam
‘அலங்கார சிலம்பம்’, ‘போட்டி சிலம்பம்’, ‘போர் சிலம்பம்’னு சிலம்பத்துல வகைகள் இருக்கு. ‘அலங்கார சிலம்பம்’, அரசு விழாக்கள், பண்டிகை நாட்கள்ல பேரணி, கூட்டங்களில் செய்து காட்டப்படுவது… நிறைய வளையங்களை ஒன்று சேர்த்து, அவற்றைக் கொண்டு பல வித்தைகள் பண்ணணும். சுருள் கத்தி, மான்கொம்பு போன்ற உபகரணங்களும் இதுல அடக்கம்.
இதுக்கு அப்புறம்தான் ‘போட்டி சிலம்பம்’ கத்துக்க வேண்டும் . கைகளில் கம்பை வைத்துச் சுழற்றிச் சின்னச் சின்ன சாகசங்களைச் செய்யா வேண்டும் . அதற்கு அடுத்ததுதான் ‘போர் சிலம்பம்’. அதாவது, சினிமாவில் காட்டப்படுவது. ரொம்ப வேகமாக கம்பை சுழற்றும் போர் சிலம்பத்துல கொஞ்சம் அசந்தாலும் ஆபத்து! டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பெண்கள் மத்தியில தற்காப்புக் கலைகளைக் கத்துக்கணும்கிற விழிப்புணர்வு அதிகமாகியிருக்கு. கராத்தே, குங்பூ மாதிரியானவைதான் நல்ல தற்காப்பு கலைகள்னு நாங்க நினைச்சோம் நடைமுறைபடுத்தினோம் ..
அப்படி இல்லை. நமது சிலம்பு இருக்கு என்று புரிந்துகிட்டோம்
பொது இடங்கள்ல நம்மை பாதுகாத்துக்க கையில கம்பு இருக்கணும்னுகூட அவசியமில்லை. ஒரு சின்ன கைக்குட்டை போதும். நம்மை தாக்க வர்றவங்ககிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம். இந்தக் கலையைக் கத்துகிட்டா, மனசுல தைரியத்தோட எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் தானாகவே வந்துடும்.
தனி சிலம்பு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள் கத்தி வீச்சு, குழுப் போட்டின்னு ஏகப்பட்ட வகைகள் இருக்கு. ஒருத்தரோட நெற்றிப் பொட்டு வரையிலான உயரத்தை வைத்துதான் சிலம்பம் சுழற்றும் கம்பு தயாரிக்கப்படும். மாசம் 150 ரூபாய் கட்டணத்திலேயே கத்துக்கலாம். சிலம்பத்தை ‘விளையாட்டு’ என்று சொல்வதைவிட ‘கலை’ன்னு சொல்றதுதான் பொருத்தமாக இருக்கும்.
...................................................................................................................................................................அழியாது நாடக கலை
ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்த போது, நல்லதங்காளாக நடித்த பெண், ஒரு குழந்தையை மட்டும் தாலாட்டு பாடாமல் கிணற்றில் போட்டாளாம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொதித்து விட்டார்கள். எப்படி தாலாட்டு பாடாமல் குழந்தையை கிணற்றில் போடலாம் என்று கேட்டு மேடை ஏறிவிட்டார்கள். கிணற்றில் போட்ட குழந்தையை எடுத்துக் கொடு த்து, தாலாட்டு பாடியபின் போட சொன்னார்களாம். இன்னொரு சம்பவம். பாலாமணி அம்மாள், ‘தாரா சசாங்கம்‘ என்ற நாடகத்தை நடத்தினார். இதில் நடித்தவர்கள் பெண்கள் மட்டுமே. இந்த நாடகத்தில், கதாநாயகிக்கு கதாநாயகன் எண்ணெய் தேய்க்கும் காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சியில் நாயகி உடை அணிந்திருக்க மாட்டாள்.
இதைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். திருச்சியில் இருந்து இந்த நாடகத்துக்காக, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற ரயில் விடப்பட்டதாம். நாயகியாக நடித்தவர் ஸ்கின் உடை அணிந்திருந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. 1940 வரை புராணம், சமஸ்கிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன. பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த (முதலியார்).
மேடை நாடகங்களில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இவர். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும், சங்கரதாச சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர். இதில், கிட்டப்பா நடித்து புகழ்பெற்றார். விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்‘ நாடகம் அப்போது புகழ்பெற்ற நாடகம். முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ், மேடையில் உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்துவிட்டது. சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற நாடக வாத்தியார்கள், ஸ்டூடி யோக்களுக்கு தங்களை இடம் மாற்றினார்கள். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.
இப்போது நாடகங்கள் முற்றிலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடக கம்பெனிகள் இருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. சினிமாவகளில் இருப்பாவர்கள் சிலர் மட்டும் தான் சில காமெடி நாடகங்களை நடத்தி வருகின்றனர். இது ஓரளவு வெற்றிகரமாக சென்றாலும் முழுமையான வரவேற்பு இல்லை.
நாடகத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞர்கள் இன்னும் கலை தாகத்தோடு இருக்கிறார்கள். முன்பு இருந்த நிலையை ஒப்பி டும்போது இப்போது சற்று மாற்றம் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள், சினிமாவை விட பத்து மடங்கு நாடகத்தின் மேல் மதிப்பும், ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள். நாடக கலைஞர்களை கொண்டாடுகிறார் கள். நாடகம் ஒன்றில்தான் பாராட்டோ, திட்டோ நேருக்கு நேர் கிடைக்கும். அதிலிருக்கும் த்ரில்லே தனி. நாடக கலை அழிகிற கலையாக இருந்திருந்தால் சினிமா வந்த பத்து ஆண்டுக்குள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். என் தலைமுறை வரை அது வந்திருக்கிறது என்றால் எந்த காலத்திலும் அழியாத அற்புத கலை நாடக கலைதான்’’ என்கிறார் மதுவந்தி அருண்.
......................................................................................................................................
பொய்த்துப்போன பொய்க்கால் குதிரை ஆட்டம்?’
அரசு விழாக்களில் பொய்க்கால் குதிரையாட்டம் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. கலைகள் மொத்தம் 64 இருந்தாலும் ஆடற்கலை காண்போரை சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டும். இந்த கலைகள் அதிகம் ஆடும் இடமாக இருப்பது எல்லாம் ஆலய தேர் உலாவில் தான். அப்படி ஆடும்போது அவர்கள் மனதிற்கு “இந்தக்கலைக்கு இன்னும் உயிர் இருக்கு ரசிக்க பல விழிகள் உண்டு” என்று நினைத்து ஆடும் ஆட்டம் தான் பொய்க்கால் குதிரையாட்டம் .!
இரண்டு குதிரை பூட்டினது போல இவர்கள் தோழில் இரு துணியைக் கட்டி அதிகமான பாரத்தோடு
அந்த இந்திரன் வாறான் புரவியில் !
இந்த சந்திரன் வாறான் குதிரையில் போவோமா ?
நாம் இருவர் போருக்கு!
தோட்டம் பாடும் பரணி கேளு ?
என்று சொல்லம் வந்தோம் !
ஐயா வீதிக்கு !மறந்து விட்டு என்ன பேச்சு ?
மாரியம் தேரிலே ஆட்டம் பார்க்கும் ரசிகரே அடித்திடுவீர் விசிலையே?
என்ற போதே அவர்களை பொய்க்கால் குதிரை ஆட்டம் !
ஆட்டக்கூட்டியந்த அப்பையும் சேர்ந்தடிப்பார் விசில் !
குதியை பார்க்காதவரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் பார்க்க ஓடி வருவார்கள். எப்படித்தான் இந்த குதிரைபோல இவர்கள் முன்னுக்கும், பின்னூக்கும் தூக்கி ஆடுகின்றன் ! ஆட்டம் கற்றார்களோ ?என்று என்ன வைக்கும் முகத்துக்கு நல்ல வண்ணக்ககலர் பூச்சுப் பூசி அவர்கள் உண்மை முகம் தெரியாது குதிரை பச்சைக்கலரில் துணி செய்து பார்ப்போரை நிஜம் தானா அவர்கள் ஆட்டம் என்று எண்ண வைக்கும்.
இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியை பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள். நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் ஆகும்.
..........................................................................................................................................
பறையாட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமானநடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது.
தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இதுதப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஆதி மனிதன் தங்களுடைய சமூகம் ஒன்று கூடுதலுக்காகவும், தங்கள்குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களைதற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின்மூலம் எழும் சத்தமாகும்.
சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச்சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளைதங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் சாதிகோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும், தொழிலை மையப்படுதியும் சாதி பிரிக்கப்பட்டது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறைஆட்டம் ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறுஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்விகிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்ததருணங்களில், அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறியநவீன சமூகம், அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை,சாவுமேளம் என முத்திரை குத்தியது.
ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியை மையப்படுத்தும்குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட,அச்சமூகத்தின் விடுதலை எண்ணிக்கொண்டிருந்த இளைஞர்கள்பறையடித்தலை அவமானமாக கருத தொடங்கினர். இவ்விதமெ பறையாட்டம் மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.
சிறப்புஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனிஅடிவகைகள் உள்ளன.
என பல வகை அடிகள் உள்ளன.
இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர்.
நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளைமாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்தகலையாடல்கள் இதில் உண்டு.
தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடுதுணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில்டிரம் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில்இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்தநிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல்பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது
கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்றாகும். தலையில்கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானைவடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம்குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில்அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணிகரகாட்டம் ஆடப்படும்.
இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர்.குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம்இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும்தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர்.தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால்செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களேஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை,பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பனஇசைக்கப்படுகின்றன.
கரகாட்ட வகைகள் சக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.
ஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில்ஆடப்படுவது ஆட்ட கரகம்
தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின்பழங்க்கலைகளில் ஒன்றாகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல்என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாகஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக்கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும்.
கூத்து நடைபெறும் இடம்தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லதுகோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவேஇக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில்சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில்விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்துநடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள்வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒருஅகன்ற விசுப்பலகை போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங்கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும்நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.
பின்பாட்டுக் காரர்கள்கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும்பாடலும் இணைந்த நாட்டிய நாடகமே தெருக்கூத்து. இக்கூத்தில் பின்பாட்டுபாடுபவர்கள் இவர்களே ஆவார்கள். ஒவ்வொரு பாத்திரத்தின்தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர். பாட்டின் இடையே வசனம் பேசுவதும்இவர்களே. இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமைமிகுந்தோராய் இருப்பர். இவர் விசுப்பலகையில் அமர்ந்துஇசைக்கருவிகளை இசைப்பர்.
இசைக்கருவிகள்தெருக்கூத்தில் ஆர்மோனியம், மத்தளம், தாளம், முகவீணை(மோர்சிங்) முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.
கட்டியங்காரன்கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார். கூத்தினைத்தொடங்கி வைத்தல், கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல்,கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல், கூத்தின்கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை மகிழ்விக்கும்விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல், கூத்தினைமுடித்து வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.
ஆடை அணிகலண்கள் கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள்கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர்கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோடு ஒட்டியமுழுக் கால் சட்டை, அதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும்அணிவர். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம்,மார்புப் பதக்கம், தோளணிகள்(புஜகீர்த்திகள்), போன்ற அணிகளை அணிவர்.வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள்போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும். பெண்வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவானஅணிகலன்களை அணிவர்.
விதிமுறைகள்கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும்.இதனை களரி கட்டுதல் என்பர். அதாவது கூத்து தொடங்கிவிட்டது எனஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.
இன்றைய நிலைதெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில்விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும்அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில்வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள்வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும்.அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்துபல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின்வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப்பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும்இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி
வருகிறது
எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக்கொள்ளைகொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ஓவியக்கலை. ஓவியம் பேசும் செய்திகள் பல, உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல.தமிழகத்தில் தொன்றுதொட்டு விளங்கிவந்த பாரம்பரியக் கலைகள் பல. அவற்றுள் பல, காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயின. எஞ்சிய சில, தமிழர்களின் கலைத்திறன்களையும் கலை நுட்ப அறிவையும் உலகோர்க்கு எடுத்துகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது.பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுதினர். இவற்றை தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.
துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மைபெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை:
உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்வில்லுப்பாட்டின் தோற்றம்வில்லுப்பாட்டின் தோற்றம் இன்றும் கண்டறிய முடியாத நிலையில் உள்ளன. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தநேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணிஓசையில் மயங்கி அதனைக்கொண்டு வில்லுப்பாட்டிசைஉருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வில்லுப்பாட்டின் அமைப்புவில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாகவகுக்கலாம்:
காப்பு விருத்தம்இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில்வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும்இது விருத்தமாக அமையும்.
வருபொருள் உரைத்தல்குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர்முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இது பாடலாகஅமையப்பெறும்.
குருவடி பாடுதல்தனக்கு ஆசிரியராக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாகஉதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.
அவையடக்கம்கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச்சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழைநேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதிஅமையப்பெறும்.
நாட்டு வளம்கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.
கதைக்கூறுநாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின்தலைவன், தலைவியின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.
வாழிபாடுதல் இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதைமாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாகமங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.
இவ்வாறு தமிழர்கள் தங்களுடைய அன்றாடவாழ்வில் நடக்கும் நிகழ்வுலையும், அவர்களுடைய சுக, துக்கங்களையும் கலை என்ற வார்த்தையில் வைத்து தங்களுடைய பண்பாடு மற்றும் கலாச்சாரதையும் வளர்தனர்
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு
1. கும்மி
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..
நன்றி :- விழித்தெழு இளைஞர் இயக்கம்
No comments:
Post a Comment