தொகுப்புகள்

Search This Blog

Monday, January 16, 2017

ஜல்லிக்கட்டை தொடர்ந்து ......




தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள், கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..




ஓடியாடி கூடி விளை யாடும் பாரம்பரிய குழு விளை யாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும். 
பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி,காயா?பழமா?, 
தமிழர்கள் நாம் கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம்,
நாம் நம் பண்டைய விளையாட்டுக்களை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும்.. நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு, தன்னம்பிக்கையையும்அதிகரிக்கிறது. நொண்டி விளையாட்டிற்கு இத்தனை பேர் விளையாட வேண்டும் என வரைமுறை எதுவும் இல்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்..

வட்டம் அல்லது சதுரம், இதில் ஏதேனும் ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும் விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் ஒடவேண்டும். அவர்களை ஒருவர் நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். நொண்டி அடித்து செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் (காலை வைத்து) போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுல் நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர மற்ற பகுதியில் காலை ஊன்ற கூடாது. நொண்டி அடித்துச் செல்பவர் ஒருவரைத் தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் காலை ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டும் வந்து ஓடும் வாய்ப்பை பெறுவார். இவ்வாறு நொண்டி விளையாட்டு தொடரும்.
.............................................................................................................................................
என்னதான் மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடினாலும் அவை கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு இணையாவதில்லை, உடல் நலனுக்கு ஆரோக்கியத்தையும் தருவதில்லை. ஒரு கையில் நொறுக்குத்தீனியும் மறுகையில் போனும் வைத்து விளையாடுவதினால் உடல் சோர்வு அதிகரித்து ஆரோக்கியத்தை குறைக்கிறது.
விளையாட்டின் நோக்கம் உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமல்ல.உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு! குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை. சரி, இனி பம்பரம் விளையாட்டை பற்றி பார்ப்போம்…..
இந்த பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ளவேண்டும். அந்த வட்டத்தை சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காக தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு ஒன் டூ த்ரி சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தை சாட்டையால் சுற்றிக்கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும்.
ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.
ஆடு புலி ஆட்டக்கோடு விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்த பகுதியில் முக்கோணக் கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
எப்படி விளையாடுவது?
கிராமத்து பாரம்பரிய விளையாட்டு: 
கிட்டிபுள்ளு எனும் விளையாட்டானது கிட்டிதக்கா, கில்லி தாண்டா, குச்சிக்கம்பு, சிங்காங்குச்சி, குச்சி அடித்தல், எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறுவர்கள், சிறுமியர்கள் என அனைவரும் இவ்விளையாட்டினை விளையாடுவார்கள். இவ்விளையாட்டினை விளையாடுவதற்கு கிட்டிபுள், கிட்டிகோள் என இரு கருவிகைளை கொண்டு விளையாடுவார்கள். கிட்டிபுள் எனப்படும் குச்சியானது சுமார் மூன்று விரல் கொண்ட பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் இருமுனைகளும் கூராக இருக்கவேண்டும். கிட்டிகோளானது ஒருவிரல் பருமனும் சுமார் 50 சென்டிமீட்டர் நீளமும் இருக்கவேண்டும். விளையாடுவதற்கு ஏற்ற குச்சியாக வலுவான மரத்திலில் இருந்து வெட்டப்பட்ட குச்சியின் கிளைகளை வைத்தே விளையாடலாம். ஆனால் குச்சியானது அடிக்கும்போது உடையாமல் திடமானதாக இருக்கவேண்டும்.
உப்புக்கோடு
உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார். மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும். முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத் தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான விளையாட்டு!
2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர், பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு… ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார். மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,
‘காயே கடுப்பங்கா
என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார். வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!
2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள். இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம் வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும் ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே களேபரம்தான்!
பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!
இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம், நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
சிலம்பம்… தமிழர்களின் வீர விளையாட்டு… பாரம்பரியப் பெருமை மிக்கது… முக்கியமாக மிகச்சிறந்த தற்காப்புக்கலை. சிலம்பம் அறிந்தவர் கையில் ஒற்றைக் கம்பு இருந்தாலே போதும்… எத்தனை பேர் தாக்க வந்தாலும் தப்பித்துவிடலாம். இது காலம்காலமாக மக்கள் மனதில் ஊறிப் போயிருக்கும் நம்பிக்கை… உண்மையும் கூட. தமிழர் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் கையில் எடுத்தது கம்பு என்கிறது வரலாறு. அதுதான் ‘சிலம்பக்கலை’யாக வளர்ந்தது. காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம்!
5 ஆயிரம் ஆண்டு பழம்பெருமை வாய்ந்தது சிலம்பக்கலை. தமிழக அரசு இதை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்திருக்கிறது. இன்றைக்கு ஆண்களோடு பெண்களும் இக்கலையை ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறார்கள். நாமும் மும்பையில் கற்ப்போமே..
சினிமாவின் படையெடுப் புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீர் சிந்தவைக்கும் நாட கம். நல்லதங்காளுக்கு 7 குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டு பாடியபடி கிணற்றில் வீசுவாள் நல்லதங்காள்.
குறிப்பு:- ‘தியேட்டர் ஆஃப் மகம்‘ மதுவந்தி அருண்.
ஹாலிவுட் நடிகர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள நாடகத்தில் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா நட் சத்திரங்கள் மட்டும் நாடகம் என்றால் விலகிப் போகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் நாடகம் பார்க்கவாவது வரவேண்டும். கிராமங்களில் திருவிழாக்களில் நாடகம் போட்ட கலைஞர்கள் இன்று வாழ்க்கையையே போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதி இல்லை.
தமிழர்களின் நாடி துடிப்பாக நாட்டுப்புற கலைகளை விளங்கி வந்தன. ஆனால் இப்பொழுது அவை மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. கலைகள் மறைந்து போனாலும் மண்ணின் அடையாளங்களாக என்றும் அவை போற்றபடுகின்றவை. கிராமத்தில் கோயில் திருவிழா என்றால், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று கிராமிய நடன நிகழ்ச்சிகளுடன், சினிமா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. இருந்தாலும், பொய்க்கால் குதிரை ஆட்ட கலைக்கு என்றுமே மவுசு உண்டு.
இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.






ஊர் விழாக்களில் நடைப்பெற்ற பறையாட்டம். 

ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரைஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி இந்த பறையாட்டத்திற்கு உண்டு.வரலாறு விலங்குகளைக் கொன்று, தின்று, மிஞ்சியத்தோலை எதிலாவதுகட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடியஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும், வாழ்வியல்உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறியது.





பறை இசைக்கருவி 

திருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின்அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுகம் மற்றும் துக்கங்களிலும் இடம்பெறும் கலையாக மாறியது.





இறுதி சடங்குகளில் பறையாட்டம் 

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டிஎடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு.இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவமதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர்,ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவகோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.
சப்பரத்து அடி
டப்பா அடி
பாடம் அடி
சினிமா அடி
ஜாயிண்ட் அடி
மருள் அடி
சாமிச்சாட்டு அடி
ஒத்தையடி
மாரடிப்பு அடி
வாழ்த்தடி
..................................................................................................................





கரகாட்டம் 

கரகம் அமைக்கப்படும் முறைஅலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில்வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழேவிழாதவாறு பெண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.

கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம்என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு மூன்று கிலோ எடையுள்ளசெம்பினுள் மூன்று அல்லது நான்கு கிலோ மண்ணோ, அரிசியோ இட்டுஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். செம்பின்வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டைவைத்திருக்கின்றனர்.





கூத்துக்கலையின் அடையாளமாக சென்னையில் அமைக்கப்பட்ட சிலை. 






தெருக்கூ த்து 

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலைபோன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்தஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகியஅணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டுநடனம், பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக்கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலைமுடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள்கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.





தெருக்கூத்து கலைஞர் 

கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத்திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள்அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்குமுன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன்காட்சி தருவர்.
தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களேபெண்வேடமிட்டு நடிப்பர்.
பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில், கூத்து தொடங்கிமுடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோண்பிருப்பர்.





தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவைகோட்டோவியங்கள் எனப்படும்.இலக்கியங்களில் ஓவியக்கலை:தொல்காப்பியம் ”நடுகல் வணக்கம்” பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி, தான் செதுக்கருவிக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்தையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததையும் உணர முடிகின்றது.ஆடல் மகள் மாதவி, ”ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” எனச்சிலம்பு பகர்கிறது.புறநானூற்றில், “ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஓப்ப வைத்து” கவிஞர் போற்றுகிறார்.நாச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” என்றும் பெண் ஓவியர் “சித்திரசேனா”எனவும் பெயர் பெற்றிருந்தினர்.ஓவியக்கலை ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது.ஓவியக்கலைஞர் ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.வரைகருவிகள்பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர்.வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.வரைவிடங்கள்அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன. ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.சித்தன்னவாசல் ஓவியம்மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்த் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசர்கள் ஓவியகலையை வளர்த்து வந்துள்ளார்கள். பல்லவர் கால ஓவியங்கள், பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் ஓவியங்கள் சிதைந்த தோற்றத்தோடு காணப்படுகின்றன. 
















புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்க்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்னைக் கவர்வன,

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர்களின் கலைகளுள்ஒன்றாகும். வில்லின் துணைகொண்டுப்பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டுஎனப் பெயர் பெற்றது.





தாளம் 






குடம் 






உடுக்கை 






வில்லுப்பாட்டு கச்சேரி 

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கியவில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுதுபோக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைசொல்வதற்கும் பயன்பட்டது.
தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர்
சிறுவர் (பையன்கள்)
(எல்லா வயதினரும், ஆண்
கால் திறன்
அணி விளையாட்டு
குழு விளையாட்டு
நீர் விளையாட்டு
கண்டுபிடி
உல்லாசம்
சிறுமியர்
கைத்திறன்
உல்லாசம்
கலை விளையாட்டு
இருபால் இளைஞர்
உல்லாசம்
உத்தித் திறன்
ஊழ்த்திறன் (திருவுளம்)
பட்டவர் தெரிவு
காளையர்
கன்னியர்
முதியோர்
பாப்பா விளையாட்டு
எல்லாரும் விளையாடும் விளையாட்டு..
கலை விளையாட்டு
தெய்வ ஆடல்கள்
சொல் விளையாட்டு
என்ன மூச்சு முட்டுகிறதா..?
நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?


நன்றி :- விழித்தெழு இளைஞர் இயக்கம்




No comments:

Post a Comment