ஆராரோ ஆரிரரோ
கண்ணுரங்கு கண்மணியே...
ஈறஞ்சு மாசத்துல
வெள்ளாம வெளங்கவில்ல...
கந்துக்கு வாங்கி வந்த
காசுசெல்லாம் மண்ணுக்குள்ள...
காசு குடுத்த கெட்டிகாரன்
வட்டி கேட்டு வந்து நிக்க...
மெட்டி கூட காலில்லில்ல
வட்டி பணம் எங்க கட்ட....
பச்சையா அவன் பேச
படக்குன்னு ரோசம் வந்து...
பாலிடான குடிச்ச உங்கப்பன்
பாடை ஏறி போயிட்டானே...
இப்ப நட்டாத்துல நிக்கிறோமே
இங்க நாதியின்னு யாரிருக்கா ?
வெளஞ்ச மன்னுலதான் ஈரமில்ல ... நீ
அனஞ்ச மாருலதான் பாலுமில்ல...
அப்பன் செத்த கணக்கக் கூட
கவர்மெண்டு சேர்க்கவில்ல....
சர்காரு காசும்மில்ல
சோறு போட யாருமில்ல...
அப்பன் குடிச்ச பாலிடானு
பாதி இங்க மீதிருக்க..
உங்கப்பன் காட்டுன வழியிலேயே
நானும் நீயும் போயிருவோம்...
மறுஜென்மன்னு ஒன்னிருந்தா
மாடி வீட்ல பொறந்துக்கய்யா...
இந்த விவசாயி வீட்டோட
விலாசத்தயே மறந்திரய்யா....
ஆராரோ ஆரிரரோ...
கண்ணுறங்கு கண்மணியே....
இப்படிக்கு
கண்ணீருடன்
ஆ.பாபுசாந்தி,
அவிநாசி.
அருமை
ReplyDelete