தொகுப்புகள்

Search This Blog

Sunday, October 9, 2016

இரத்தமும் தக்காளி சட்னியும்

*சிந்திப்போமாக..*

2009இல் அப்போதைய முதல்வர் கலைஞர் மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, இங்குள்ள அரசியல் தலைவர்கள் பேசிய மனிதாபிமானமற்ற சொற்கள்...

*ஜெயலலிதா* : காவிரி பிரச்சினையை சந்திக்க திராணியற்று இன்று ஓடிப்போய் படுத்துக் கொண்டிருக்கிறார் தீயசக்தி. மனைவியார் துணைவியார்களோடு இவர் ஒய்வெடுக்கும் வேலையில் தமிழகத்தில் உரிமைகள் பறிபோய்கொண்டிருக்கிறது. தீயசக்திதான் 2ஜியில் அடித்த கொள்ளையை ஒதுக்க ஒதுங்கியுள்ளார் எனில் இந்த அமைச்சர்கள் ஏன் அங்கயே நிற்கிறார்கள் என எண்ணவேண்டாமா? மத்திய அமைச்சர்கள் வந்து பார்த்துவிட்டு பின்பக்கமாய் ஓடுகிறார்களே... என்ன கொடுக்க வந்தார்கள்... இல்லை வாங்க வந்தார்கள் என தமிழக மக்கள் கேட்கிறார்கள்.... இந்த தீயசக்தியை மூட்டையாக கட்டி தூக்கி சென்று அரசின் பணத்தில் உல்லாசமாய் மருத்துவம் பார்க்க மக்கள் வாடுவேண்டுமா? இதைத்தான் அன்றே சொன்னார் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் இந்த தீயசக்தியின் குடும்ப ஆட்சியை ஒழித்திடவேண்டுமென்று.

*வைகோ* : கருணாநிதியின் சதி விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. காவிரியில் நீர் வராதா என காய்ந்த வயிறுகளோடு காத்திருக்கிறான் விவசாயி.. இவர் பணக்காரர்கள் சிகிச்சையெடுக்கும் பணம் பெருத்தோர் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்... இவர் மட்டுமா ஒட்டுமொத்த நிர்வாகமே படுத்திருக்கிறது. நாடெங்கும் கொலை கொள்ளைகள், காவிரிபிரச்சினை மீத்தேன் குழாய் வெடிப்பு என மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்.. இவரோ உல்லாசமாய் படுத்துக் கொண்டிருக்கிறார்..
நாளொரு செய்தி பொழுதொரு வண்ணமாய் வந்துகொண்டிருக்கிறது... தமிழ்நாடு தலையற்று நிற்கிறது இந்த குடும்ப ஆட்சியில்... இதையெல்லாம் எதிர்காலத்தில் சொல்வேன் என்றுதான் என்னை துரோகி பட்டம் கூறி வெளியேற்றினார்கள்.. ஆனால் துவண்டுவிடவில்லை...

*சீமான்* : இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன்... நாட்ல அவனவன் அடுத்த வேலைகஞ்சிக்கே வழியில்லாம இருக்கான். அரசு மருத்துவமனைகளில் நிற்க வழியில்லாது விழுந்து கிடக்கிறான் தமிழன்... இவர் கோடீஸ்வரர்கள் பார்க்கும் மருத்துவமனையில் படுத்துகிட்டு... நல்லாயிருக்காரு நல்லாயிருக்காரு செய்தி வருது. நல்லாயிருந்தா போய் வேலை பாருங்க... எதுக்கு இந்த நாடகம். என் அண்ணன் பிரபாகரன் தன் உடல் நிலை நலிவுற்று இருந்த போதும்... என்னை வரவேற்க எழுந்த நின்றாரே அது தமிழ் ரத்தம். என் இனம் இன்று சொரணையற்று நிற்கிறதே... இதை மீட்க வேண்டாமா ? இத யாராச்சும் கேட்பீங்களா... நா கேட்பேன். என் தம்பி கேட்பான்.

காவிரி பிரச்சினை 2ஜி தீர்ப்பு ஓடி ஒளிந்துகொண்டார் கருணாநிதி. - *தினமலர்*

இன்னைக்காச்சும் நல்ல செய்தி ஏதும் வருமா ? - *தினமணி* மதி கார்ட்டூன்.

தீயசக்தியின் நாடகம் அரங்கேற்றமா ? ஜெயா கேள்வி - *தினதந்தி*

ஆனாலும், இப்போது ஜெயா மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் பூர்ணநலம் பெற கலைஞரும், ஸ்டாலின் அவர்களும் வாழ்த்து செய்தி சொன்னார்கள்.. இதுதான் திமுகவுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்..
மேன் மக்கள் மேன் மக்களே..

நன்றி : Mani Dhanus Kodi

1 comment:

  1. கருணாநிதி இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பந்தமாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒடிப்போய் மருத்துமனையில் படுத்துக்கொண்டார்.
    அது எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
    மக்கள் , தொண்டர்கள் உட்பட.
    அதனாலதான் இன்று ஜெயா அனுமதிக்கப்பட்டபோது எழுந்த பரபரப்போ அனுதாப அலையோ மக்கள் மத்தியில் மட்டுமல்ல திமுக தொண்டர்கள் மத்தியிலும் கூட ஏற்படவில்லை.
    திமுக ஆதரவு மீடியாக்கள் தவிர்ந்த ஏனைய மீடியாக்கள் கூட அந்த செய்தியை கண்டு கொள்ளவில்லை.
    உண்ணாவிரத நாடகம் போல இதுவும் ஒரு நாடகமே என மக்களும் , தொண்டர்களும் கூட நினைத்திருந்தனர்.

    ReplyDelete