தொகுப்புகள்

Search This Blog

Monday, October 31, 2016

சாதியை ஒழிக்க என்ன பண்ணினாரு கலைஞர்

Courtesy: ஆனந்த் குமார்

சாதியை ஒழிக்க என்ன பண்ணினாரு கலைஞர் என நோண்டிட்டு இருக்கீங்க.. அவர் என்ன பண்ணினார்  அப்படின்னு பலரும்  கேட்கிறாங்க..!!

சாதி என தனியா பார்க்காம அடிப்படையான தனிமனித உரிமைக்காக முதலில் கை ரிக்ஷாவை ஒழித்து , அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்ஷாவை அரசே மாற்றிக்கொடுத்தது கலைஞர்..!! ( இந்தியா முழுக்க கை ரிக்ஷா அதற்கு பின்னாலும் இருபது வருடங்கள் இருந்தது , ஆனா தமிழ் நாட்டில் மட்டும் இல்லை )

என் பேர்ல மாவட்டம் வை, அவர் பேர்ல மாவட்டம் வைன்னு சண்டை வந்தப்போ. யார் பேரும் வேண்டாம் என ஒரே கை எழுத்தில் எல்லா மாவட்டத்தையும் ஊர் பெயரோடு இருக்கட்டும் என மாற்றினார்..!

சுந்தரலிங்கம் போக்குவரத்துக்கழகம், பூலித்தேவன் போக்குவரத்துக்கழகம் என பிரச்சினை சாதி பிரச்சினையா வெடிச்ச உடனே ஒரே ராத்திரியில் அனைத்து பேருந்தும் அரசு போக்குவரத்துக்கழகமா மாற்றினார்..!
( அவர்தான் அப்படி வைக்க காரணம்.. அது ஓட்டுக்காக அப்படின்னா, அந்த ஓட்டு வரலைன்னாலும் பரவால என தூக்கவும் முடிந்தது அவரால் )

அதே மாதிரிதான் இன்ன சாதிக்காக தான் முன்னேற்றம் என இல்லாம கிராமப்புற மாணவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு 15% என கொண்டு வந்தார்.. அதுல நீ என்ன சாதியா வேணா இருந்துட்டு போ.. ஆனா பின் தங்கிய கிராமத்தானா இருந்தா அரசு பள்ளியில் அரசு சார் பள்ளியில் இருந்தா உனக்கு படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு உண்டு என கொண்டு வந்தார்.. ( இது இந்தியாவில் எந்த அரசுமே செய்யாத விசயம் )
ஏன்னா படிப்பையும் வேலையும் கொடுத்தா அவன் சாதி பின்னாடி அலைய மாட்டான், பாதிக்கப்படவும் மாட்டான்  என யோசித்தது தான் )

இது எல்லாமே மற்ற கட்சியான அதிமுகவை விட குறைவான வருடங்களே இருந்தப்போ பண்ணிய சில உதாரணங்கள்..

தமிழ் நாட்டை யார் அதிகமாக ஆண்டார்கள் என்ற வரலாறு எடுத்து படிச்சுட்டு பார்த்துட்டு ,  அவங்க என்ன பண்ணினாங்கனு கேளுங்கய்யா.!! அந்த இட ஒதுக்கீடு 15% இருக்கும் வரை பிரச்சினை இல்லை.. ஜெயலலிதா வந்து போட்டிக்காக அதனை 25% ஆக்கிட்டு அதற்கு அப்புறம் மொத்தமாக கோர்ட் அதை ரத்து செய்தது வரலாறு..!!!

இன்னும் வேணும்னா நிறைய சொல்றேன்.. !!

No comments:

Post a Comment