தொகுப்புகள்

Search This Blog

Thursday, October 13, 2016

கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயா??

ஆம்
”கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே!”
இது நான் சொல்லைங்க...
அமெரிக்க உளவியல் சங்க ஆய்வு முடிவு!

வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது.

ஆய்வும் முடிவும் கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள்

கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும்  தாங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள் மிகுந்த கவலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், உணர்ச்சிவயப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களாகவும், இயல்புக்கு மாறாக கற்பனை உலகில் உலவுபவர்களாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். 5 ஆண்டு கால ஆய்வின் முடிவாக சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். மத நம்பிக்கையில் உள்ள இரண்டுவிதமான நடவடிக்கைகள் முற்றிலும் உண்மை நிலைக்கு தொடர்பற்று முரணாகவே இருந்து வருகின்றன.

பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரியூஸ்

உளவியல் பேராசிரியர் டாக்டர் லில்லியன் ஆண்ட் ரியூஸ் கூறுகையில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகளால் உயிரிழக்கிறார்கள். அந்தக் கருத்தை மறுத்து, கடவுள் அவர்களைக் காப்பார் என்று கடைசிவரை நம்புகிறார்கள். ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதில் முடிவை எடுக்க தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள்.

குருதிக்கொடை ஏற்காத மனக்கோளாறு

ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் எந்த சூழலிலும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் அடுத்தவர் ரத்தத்தைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதேமேல் என்பார்கள். அவ்வப்போது பலரும் ஆவிகளைக் கண்டதாகக் கூறிக் கொள்வார்கள். உண்மைக்கு மாறானவைகளாக உள்ள இவ்வாறான நிலையை மனக் கோளாறுகளின் அடையாளமாகவே பார்க்க முடியும்.

கடவுளின் கோபம் எனும் மூடநம்பிக்கை

கடவுளின் கோபத்தால் குழப்பம், அழிவு, இறப்பு, நூற்றாண்டுகளாக போர்கள் ஏற்படுவதாக மத நம்பிக்கையாளர்கள் கருதுகிறார்கள். உயிரைக் காக்க கட்டாய சிகிச்சை

மத நம்பிக்கைகளால், மத காரணங்களால், மத சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல்,  அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தேவையான முடிவை எட்ட முடியாதவர்களுக்கு,  மத நம்பிக்கையின் பேரால் சிகிச்சை பெற மறுப்பவர்களின்  உயிரைக் காப்பதற்காக எந்த நிலையிலும், மருத்துவர்கள் கட்டாய சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம் என்று மருத்துவர்களுக்கு முழு உரிமையை அளித்திட சட்டம் இயற்றவுள்ளனர்.

விரைவில் இந்த ஆய்வு குறித்த முழு விவரங்கள் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின்மூலம் வெளியிடப்படும் என்றும் அச்சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் thenewsnerd எனும் இணையத்தில் மருத்துவச் செய்தித் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும், தகவல்களும் எவ்வளவு சரியானவை,- துல்லியமானவை என்பதை  விரைவில் உலகம் அறியப் போகிறது. இதற்கான சரியான பரிசோதனைக் கூடம் (Laboratory) ஒன்று உண்டு என்றால், அது இந்த இந்தியா தான்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வரும் ஆந்திர மாநிலம், கோதாவரி மகா புஷ்கர நீராடலில் 81 லட்சம் பேர் கூடினர் - அந்த வாரம் மட்டுமே நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 30-க்கும் மேல் என்ற கொடுமையான கோர நிகழ்வுக்குப் பின்னரும் கூட்டம் அங்கே சென்றுள்ளது என்பது கடவுள் நம்பிக்கை முற்றிலும் ஒரு மன நோய் - என்பதைக் காட்டுகிறது.

நன்றி : - சரவணன்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete