தொகுப்புகள்
- தொகுப்பு (199)
- வரலாறு (179)
- அரசியல் (163)
- கட்டுரை (76)
- வாதம் (40)
- அனுபவம் (32)
- கல்வி (27)
- கடவுள் ? (26)
- பயணம் (26)
- சினிமா (21)
- ஈழம் (17)
- வாழ்த்துக்கள் (17)
- கலைஞர் (16)
- ஜெயா (12)
- கவிதை (11)
- பகுத்தறிவு (8)
- நாங்கள் (7)
- புகார் மனு (7)
- ஜெயலலிதா (6)
- கல்லூரி (4)
- அறிவியல் (3)
- ஆன்மீகம் (3)
- காதல் (3)
- சமூகம் (3)
- தமிழ் (3)
- தொகுப்பு கட்டுரை வரலாறு (2)
- பெரியார் (2)
- பொருளாதாரம் (2)
- மருத்துவம் (2)
- Body language (1)
- ஆய்வு (1)
- உணவு (1)
- கடவுள் (1)
- கட்டுரை அரசியல் சமூகம் தொகுப்பு (1)
- கட்டுரை தொகுப்பு அரசியல் வரலாறு (1)
- கட்டுரை தொகுப்பு வரலாறு (1)
- கருத்து (1)
- காமம் (1)
- சமுகம் (1)
- திராவிடம் (1)
- தொகுப்பு கட்டுரை அரசியல் வரலாறு (1)
- தொகுப்பு வரலாறு அரசியல் (1)
- தொடர் (1)
- நாத்திகம் (1)
- மொழி (1)
- வரலாறு தொகுப்பு அரசியல் கட்டுரை (1)
Search This Blog
Sunday, November 3, 2019
இராமாயணம் புத்தம் எது முன்னே...
Friday, November 1, 2019
திராவிடம் என்றால் என்ன?
Sunday, October 27, 2019
தீபாவளியிடம் சில கேள்விகள் ?
Tuesday, October 22, 2019
வயசுக்கு வந்த ப்ராய்லர் கோழி
Thursday, June 6, 2019
இந்தி திணிப்பு - நம் வாழ்வாதார பிரச்சனை
இந்திப் படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?
பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?
இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?
பெற்றோர் எல்லாரும் இந்தி வேண்டுமென்று சொல்லும்போது அதைத் தடுக்க நீங்கள் யார் ?
தமிழ் மொழி, தமிழ் மொழினு சொல்லி, சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?
இந்திக்கு ஆதரவாக பேசுபவர்கள் முன்வைக்கும் வாதங்களே இவை. நியாயமாக தெரியும் வாதங்கள். உணர்வுப்பூர்வமான வாதங்கள்.
நாம் உணர்வுப்பூர்வமாக இதனை அணுகாமல், தமிழ் மொழி என் உயிர் என்ற நிலையில் இருந்து அணுகாமல், பொருளாதாரம் (வரவு - செலவு), யதார்த்தம் என்றளவில் இந்தி மொழி பயன்பாட்டை ஆராய்வோம்.
நாடு என்பது உண்மையில் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே குறிக்கும். நாடுகள் தோன்றுவதற்கு முன் சிறு, சிறு மக்கள் குழுக்கள் தங்கள் இடத்தில் தங்களுக்கான பொருளாதாரத்தை நிறுவிக் கொண்டனர். அவர்கள் செழிப்படைந்தவுடன், பக்கத்தில் உள்ள குழு படையெடுத்து வந்து செழிப்பான பொருளாதாரத்தைப் பிடித்துக்கொள்வார்கள். இது ஒரு இயல்பான சுழற்சி. மனிதக் கூட்டம் மட்டுமின்றி மிருகங்களின் எல்லையுமே இப்படித்தான் வரையறுக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிவோம். வலுத்த மிருகமே பொருளாதாரத்தை ஆளும்.
பொருளாதாரமே நாடு என்பதால், நாடு பிடிப்பதிலும் வரவு - செலவுக் கணக்குகள் உண்டு. போர் தொடுக்க 1000 ரூபாய் செலவாகும் என்றால், போரில் வெற்றி பெற்றால் அந்த நாட்டில் இருந்து 2000 ரூபாய் கிடைக்கும் என்றால் மட்டுமே போர் தொடுக்கப்படும். லாபம் இருந்தால் மட்டுமே போர் நடக்கும். அதைப் போல அந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கும், எதிரிகளை எதிர்த்து போரிடலாமா? சரணடையலாமா? என்பதும் இந்த வரவு - செலவை வைத்தே கணக்கிடப்படும். இராஜராஜன் சோழன் வடக்கே செல்லாமல், கிழக்காசியவிற்கு சென்றதற்கும் இந்த கணக்குகளே காரணமாக இருந்திருக்ககூடும். மொத்தத்தில், பொருளாதார கணக்குகள், பொருளாதாரத்தைப் பிடிப்பதற்காக நாடு பிடிப்பதாகும்.
ஆக, மனிதனோ, மிருகமோ, பொருளாதாரமே நாடு.
நாட்டுப் பற்று, தேசிய உணர்வு, மொழி, பண்பாடு, வரலாறு இவையெல்லாம் அந்த பொருளாதாரத்தைக் காத்து நிற்பவைகள் மட்டுமே. ஒரு நாட்டின் தலையாய கடமை, ஒரு அரசின் தலையாய கடமை தம் நாட்டின் பொருளாதாரத்தை அன்னிய சக்திகளிடம் இருந்து காப்பதே ஆகும்.
இந்நிலையில், இந்தி என்பது மக்கள் பயன்பாட்டிற்கும், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது என்று எண்ணுகிறிர்களா? சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டுப் போராடியவர்களை வாயிலேயே சுட்டுக் கொன்ற அரசுகளுக்கு, மக்கள் நலன் மேல் அவ்வளவு அக்கறையா என்ன?
நிச்சயம் கிடையாது. இந்தியா என்பது ஒரு நாடு கிடையாது, நாடுகளின் ஒன்றியம். அதாவது, இந்தியா என்பது ஒரு பொருளாதாரம் கிடையாது, பொருளாதாரங்களின் கூட்டமைப்பு. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கரான்சி இருந்தால் (டாலர் என்று வைத்துக்கொள்வோம்), 1 தமிழ் நாடு டாலர் 30 இந்தியா ரூபாய்க்கு ஈடாக இருக்கக்கூடும். ஏனெனில், தற்பொழுது பிகாரில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும், தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும் வெவ்வேறு. இரண்டும் வெவ்வேறு பொருளாதாரங்கள். இந்தியை அனுமதித்தால், தமிழர் வேலையெல்லாம் மற்றவர்களுக்கு செல்வது இந்த வேறுப்பாட்டால்தான். உதாரணம் - கார் ஒட்டுவதற்கு குறைந்த சம்பளத்திற்கு மற்ற மாநிலத்தில் இருந்து ஆள்கள் கிடைப்பார்கள். தமிழர்களும் அந்த குறைந்த சம்பளத்திற்கே வேலை செய்ய வேண்டும் அல்லது வேறு துறைக்குச் செல்ல வேண்டும். இப்படி எல்லாத் துறையிலும் நடக்கும் பொழுது நம் பொருளாதாரமே கிழ் இறங்கும், நம் வசதி வாய்ப்புகள் குறையும். பிகாரின் குறைந்த பொருளாதாரம் தம் லாபத்திற்காக, தமிழர் பொருளாதாரத்தைக் காவு கேட்கும்.
இப்பொழுது ஆரம்ப பத்திகளை மீண்டும் படிக்கவும். பொருளாதாரங்களைப் பிடிப்பதே, நாடு பிடிப்பதாகும்.
இந்தி படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?
தமிழ் நாட்டின் பொருளாதாரம் கெட்டுப் போய்விடும். கைவிட்டுப் போய்விடும்.
பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?
இந்தியை அனுமதிப்பதால் தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திற்கு நேரடி ஆபத்து என்கின்ற பொழுது தமிழ் நாடு அரசு தம் பள்ளிகளிலேயே இந்தியை அனுமதிக்க இயலாது. தேவையும், விருப்பமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.
இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?
நீங்கள் ஒருவர் இந்தி படித்து வெளிமாநிலங்களுக்கு செல்லலாம் என்று நினைத்தால், அங்கிருந்து அதே இந்தி முலம் 10 பேர் உள்ளே வருவார்கள் (நாம் 8 கோடி, அவர்கள் 100 கோடிக்கு மெல்). உதாரணத்திற்கு, தற்பொழுது தனியார் துறையில் மேலாளர் பதவி தவிர்த்து பெரும்பாலும் வேலையில் இருப்பவர்கள் தமிழர்கள், முக்கியமாக தென் மாவட்டங்களைச் சார்ந்தோர். இதற்கு முக்கிய காரணம் சென்னையில் இந்தி இல்லை என்பதால் வட நாட்டினர் சென்னைக்கு வர கடைசி முக்கியத்துவமே தருவர், ஆகையால், அதிகளவு போட்டி கிடையாது. 10 பேருக்குள் மட்டுமே போட்டி. 10 பேருமே தமிழர்கள். இந்தி படித்தால் 100 பேருக்குள் போட்டி. 90 பேர் தமிழர் அல்லாதவர்.போட்டிக்கு நாம் தயங்கவில்லை. யதார்த்தத்தைப் பேசுவோம்.
இந்த உதாரணம் வியாபாரத்திற்கும் பொருந்தும்.
மொத்தத்தில் இந்தி படித்தால் வெளி மாநிலத்திற்கு சென்று வியாபாரம், வேலை செய்வது நடக்குமா என்பது தெரியாது, ஆனால், தமிழ்நாட்டில் வேலை, வியாபாரம் தமிழர்களுக்கு இல்லாமல் போகும்.
பெற்றோர் எல்லாரும் இந்தி வேணும்னு சொல்லும் பொழுது அதைத் தடுக்க நீங்க யார்?
8 கோடி மக்களும் விரும்பினாலும், தமிழ் நாட்டுப் பொருளாதாரத்தை காப்பதற்காக தமிழ் நாடு அரசு இந்தியை அனுமதிக்கக் கூடாது. அரசின் தலையாயக் கடமை இது. தமிழ் நாட்டு அரசு மட்டுமின்றி, உலகில் எந்தவொரு அரசும் இதையே செய்யும்.
தமிழ் மொழி, தமிழ் மொழியென்று சொல்லிச் சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?
தமிழ் மொழி என்பது வெறும் மொழி மட்டுமின்றி பல்லாயிரம் வருடங்களின் பொருளாதார ஆளுமைகளை உள்ளடங்கியது. தமிழர்கள் பல பொருளாதாரங்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். வலிமையாக இருந்துள்ளனர். தற்பொழுது, தமிழ் மொழி, தமிழ் மொழி என்றுரைப்பது மீண்டும் நம் வலிமையைப் பெற்றுச் சக்தி மிக்க பொருளாதாரமாக மாறுவதற்குத்தான். அதன் வழி நம் சரியாகவே பயணிக்கிறோம் என்பது கண்கூடு.
மொத்தத்தில், போரிட்டு நம் பொருளாதாரத்தைப் பிடிக்காமல், இந்தி திணிப்பு முலம் நம் பொருளாதாரத்தை, நம் வாழ்வாதாரத்தை, நம் வளத்தை கைப்பற்றப் பார்க்கிறார்கள். அதாவது, செலவே இல்லாமல் வரவை எளிதாக இந்திய ஒன்றியம் பெயரில் அடையப் பார்க்கிறார்கள்.
சில கேள்விகள் இயல்பு,
இந்தியப் பொருளாதாரத்துடன் தமிழர் பொருளாதாரம் இணைந்தால், தமிழருக்கு தீங்கு என்று எப்படி நிச்சயமாக சொல்றிங்க?
இரு பொருளாதாரங்கள் இயல்பாக இணையலாம். கட்டாயப்படுத்தினால், இரண்டில் ஒரு பொருளாதாரத்திற்கு நட்டம். அப்படி நட்டம் என்பதால்தான், கட்டாயம் உள்வருகிறது. உலகளவில், இரு பொருளாதாரங்கள் பரிவர்த்தனைக்கு Trade treaties போடுவார்கள். அதாவது, தொழில் ஒப்பந்தங்கள். இரு நாட்டு அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆலோசித்துப் போடப்படும். இரு தரப்புக்கும் நட்டமின்றி பார்த்துக் கொள்ளப்படும். ஆனால், இந்தியாவில் தன்தோன்றித்தனமாக ஜி.எஸ்.டி, சாகர்மாலா, ஹட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்றவைகள் கட்டாயமாக தமிழர் பொருளாதரத்தில் திணிக்கப்படுகிறது. இதில் எப்படி தமிழருக்கு நன்மை நடந்திட முடியும்?
ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்கள் இந்தியை அனுமதித்த பின் ஏன் தமிழ்நாடு மட்டும் முரண்டுப்பிடிக்கிறது?
அவர்கள் பொருளாதாரத்திற்கு இந்தி மொழி நன்மை செய்கிறது. ஆகையால் அனுமதித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, கேரளா பொருளாதாரத்தில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு. இந்நிலையில், தங்கள் மக்களுக்காக அடுத்தவர் பொருளாதாரத்தை அண்டி வாழ வேண்டி உள்ளதால், அவர்கள் இந்தி படிக்க வேண்டியுள்ளது. கர்நாடகம், ஆந்திராவிலும் இதே நிலைதான். ஏன் மொழிக்காக உயிரே தரும், மொழியால் தம் பாதியில்ஒரு நாடே உருவான மேற்கு வங்காளத்திலும் இந்திக்கு கடுமையான எதிர்ப்பு இல்லை. ஏனெனில், அவர்கள் பொருளாதாரத்திற்கும் அது நன்மை செய்வதாக உள்ளது.
மொத்தத்தில், இந்தித் திணிப்பு என்பது மொழிப் பிரச்சனை இல்லை, பொருளாதாரப் பிரச்சனை. நம் வாழ்வாதாரப் பிரச்சனை.
எதிர்ப்போம்...
எழுத்து,
பா.ச. பாலசிங்
சரிபார்ப்பு
ப. உதயகுமார்
Monday, April 29, 2019
நீங்க படிச்சா மட்டும் போதும்...
'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'
"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு
'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"
'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'
"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"
'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"
'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'
"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"
'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'
"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"
'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'
"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"
'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'
"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம், சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"
'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய எப்படி அந்த மூனு நாளுக்கு பள்ளிக்கூடம் அனுப்புறது? அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'
"தைரியமா அனுப்புங்க. அந்த நாட்களுக்கு தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். அதுக்காகல்லாம் புள்ளைய லீவ் போட சொல்லாதீங்க"
'பத்தாவதுவரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'
"எங்கிக்கிட்ட அனுப்புங்க. Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க இலவசமா லேப்டாப்பும் தரோம்"
'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம்வரை போய் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்?
"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு கல்லூரி படிப்பும் இலவசம். தயங்காம படிக்க அனுப்பி வைங்க.நாங்க பார்த்துக்குறோம்"
'எம் புள்ள நல்லா படிச்சி டாக்டர்படிப்புக்கோ, என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா எங்க போயி படிக்கனும்?'
"நம்ம பிள்ளைகள் எங்கேயும் போக வேணாம். அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் நம்ம அரசு கட்டித்தரும். அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தா போதும்"
'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம். சட்டுபுட்டுனு அடுத்த தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடுவோம்'
"பெண் பிள்ளைகளை முழுமையா படிக்க விடுங்க. 12ம் வகுப்புவரை படித்தால் திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் தாலிக்கு 8 கிராம் தங்க காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"
'நீங்க நல்லாயிருக்கனும் சாமி. என் வம்சத்துலயே என் புள்ளதான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'
திடீரென ஒரு வில்லன் வரான் " இனி நீங்கல்லாம் எனக்கு கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும்.
நீ என்ன தேர்வு எழுதனும்னு நான்தான் சொல்லுவேன். அதே மாதிரி இந்த கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம் ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன். ஒரே நாடு, ஒரே கொள்கை. இனி இப்படித்தான். இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேச துரோகி. அடுத்து என்ன பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நான்தான் சொல்லப்போறேன்"
இதுதான் அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி எனும் சமூகநீதி , காவி பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு.
இலவசத்தால் தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் அரைகுறை அரசியல் விமர்சகர்களுக்கு இது சமர்ப்பணம்.
#திராவிடம்_மறவேல்
-Nambikai
Saturday, February 16, 2019
காஷ்மீரில் நடந்த காதுகுத்து
லைட்டா எல்லோருக்கும் காது குத்துவது போல இருக்கு...!
இந்தியாவின் மற்ற பகுதிகளில் இப்படி ஒரு குண்டு வெடித்து இருந்தால் எதிர்பாராரது என்று சொல்லலாம், ஆனால் காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில இப்படி ஒரு குண்டு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப் பட்டது என்பது எங்கையோ இடிக்கிறது.
எப்படியும் ரேடியோ தகவல்களை ஒற்றுக் கேட்டல், வீதிக்கு வீதி சோதனை சாவடிகள், எவனையும் எந்த கேள்வி இல்லாமல் சோதனையிடும் அதிகாரம், தினம் தோறும் ரோந்து நடவடிக்கை எல்லாம் இருந்தும் ஒரு காரில் 350 கிலோ வெடி மருந்துடன் வந்து ஒரு ரானுவ வாகனத்தை மோதி வெடிக்க வைக்க் முடியும் என்றால் அது ஒன்னும் பொட்டலம் கட்டி பக்கெட்டில் எடுத்து வரும் சமாச்சரம் இல்லை. இப்போது C4 போன்ற ப்ளாஸ்டிக் வெடிமருந்துகளை துல்லியமாக கண்டு பிடிக்கும் டிடெக்ட்டர்கள் இருக்கின்றன.
சரி ஒரு அரசால் தங்களுக்கு எதிரான பயங்கரவாத இயக்கத்தை வைத்து குண்டு வைக்க முடியுமா? சின்ன உதாரணம், இந்திராவின் ஆட்சிக் காலத்தில் 80 களில் இந்திய புலனாய்வுத் துறை காஷ்மீர் பகுதிகளில் செய்த ஆப்ரேஷ்னுக்கு பெயர் ரெட் ரோஸ். ஒன்னும் இல்லை, அந்த பகுதியில் உள்ள காஷ்மீர் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத சப்ளை செய்வது. பாக்கிஸ்தானில் உள் நாட்டு கலவரம் செய்வதற்க்கும், காஷ்மீர் பகுதியில் அமைதி இன்மையை நிரந்தரமாக வைப்பதற்க்கும். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் ஈழ இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கப் பட்டது. இதை அந்த நாட்களில் இந்திய புலனாய்வு துறையில் இருந்தவர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம்.
அவ்வளவு ஏன் இலங்கையில், அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன ஆட்சி முடிந்து அடுத்து ஆட்சிக்கு வந்த ஆர் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமான அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, காமினி திஸ்ஸானாயக்க, பாதுக்காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன ஆகியோரை விடுதலை புலிகளை கொண்டு கொன்றொழித்தார். பின்னாட்களில் அவரும் அதே புலிகளால் கொல்லப் பட்டார். இப்படி உலகம் முழுக்க இந்த நடமுறை இருக்கிறது.
யாரும் பதவி என்று வந்து விட்டால் யோக்கியனில்லை. அதிலும் பிஜேபிக்கு வாழ்வா சாவா நிலை. ஆட்சி கைய விட்டு போனால் அதன் விபரீதம் புரிந்து இருப்பார்கள்.
பல ஆயிரம் கொலைகள் செய்து முதல்வர் பதவியை தக்க வைக்க தெரிந்த ஒருவரால் மரணத்தில் பிரதமர் பதவியை தக்கவைக்க மறுக்க மாட்டார் என்று எப்படி நம்ப முடியும் ?