சமுக உறவில் தேடுங்கள்

Loading

Thursday, September 6, 2018

தமிழர்கள் இந்துக்களா?

*1. தமிழர்கள் இந்துக்களா?*

தமிழர்கள் இந்துக்கள் அல்ல. தமிழர்கள் திராவிட இனத்தை சார்ந்தோர். அவர்கள் இயற்கையை வழிபடுவோர். திராவிடம் குடும்ப மொழிகளில் இருந்து முதலில் தோன்றியது தமிழ் மொழியாகும். சில ஆய்வாளர்கள் திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒரே பொருளை குறிக்கும் வெவ்வேறு காலகட்டத்தை சார்ந்த உச்சரிப்பு மாறுபாடுகளும் அதன் நீட்சியும் என்று கருதுகின்றனர். மத்திய ஐரோப்பாவில் இருந்து ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பு வரை திராவிட கலாச்சாரமும் திராவிட மொழி குடும்பமும் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. ஆரிய வருகைக்கு முன்னர் பண்டைய இருந்த இந்தியாவின் கலாச்சாரமான ஹராப்பா நாகரீகம் திராவிட கலாச்சாரமே.

(ஆதாரம்: http://rsos.royalsocietypublishing.org/content/5/3/171504)

*2. பண்டைய இந்தியாவில் இருந்த கலாச்சாரம் வேத கலாச்சாரமா?*

இல்லை. பண்டைய இந்தியாவில் இருந்த கலாச்சாரங்கள் திராவிட கலாச்சாரங்கள் தான் என்று மரபியல் ஆய்வுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து விட்டன. ஹரியான மாநிலத்தில் சமீபத்தில் கிடைத்த எலும்புகூடுகளின் மரபியல் ஆய்வுகள் ஹரப்பா நாகரீகமானது திராவிட நாகரீகம் என்றும் அந்த எலும்புகூடுகளின் ஜீன்கள் ஆரியர்களுடன் ஒத்து போகவில்லை என்றும் நிரூபித்துள்ளது. கூடுதலாக ஹரப்பா நாகரீகத்தை சார்ந்தோர் திராவிட இனத்தை சார்ந்தோர் எனவும் நிறுபனம் ஆகியுள்ளது.

(ஆதாரம்: https://indiatoday.app.link/DoUBDOMFQP?__branch_flow_type=chrome_deepview&__branch_flow_id=566088789491534908)

*3. வேதங்களின் ஊடுறுவல் எப்போது?*

பண்டைய இந்தியாவில் இருந்த சிந்து சமவெளி/ஹரப்பா நாகரீகங்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டிற்குள் ஊடுறுவிய ஆரியர்களினால் வேட்டையாடப்பட்டது. சமத்துவத்தை கடைபிடித்த பண்டைய திராவிட நாகரீங்கள் ஒழிக்கபட்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் வர்ணாசிரம முறை ஆரியர்களினால் அமல்படுத்தப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் ரிக் வேதம் உள்ளிட்ட வேதங்கள் எழுதப்பட்டது. கூடுதலாக சொர்க்கம், நரகம், ஆன்மா, கர்மா, மறுபிறப்பு உள்ளிட்ட கட்டுகதைகள் ஆரியர்களினால் பரப்பபட்டது. கூடுதலாக யாகம் வளர்த்தல், பிராமண உயர்வு நிலை, பயனற்ற சமஸ்கிருத மந்திரங்களும் அமலுக்கு வந்தன. பிராமணர் தவிர யாரும் கல்வி கற்க கூடாது எனும் விதிகளும், வேதங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்றும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் மீதான ஆரிய படையெடுப்பு மைட்டொகாண்டரியல் குரோமோசோம்களை ஆராய்ந்ததன்  மூலம் தற்போது தெளிவாக  நிறுபிக்கப்பட்டுள்ளது.

(ஆதாரம்: https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece)

*4. புத்தர் யார் ?*

மேற்கண்டவாறான ஆரிய மூடநம்பிக்கைகள், யாகம் வளர்த்தல், கர்மா, ஆன்மா, மறுபிறப்பு, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்து பிராச்சாரம் செய்த பகுத்தறிவாளர் புத்தர். புத்தி, புத்தகம் ஆகிய சொற்கள் புத்ததின் நீட்சி ஆகும். அவரின் கோட்பாடுகள் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை மையமாக கொண்டு்வை. அது பிறப்பின் அடிப்படையிலான பார்ப்பன உயர்வு தாழ்வுகளை மறுத்தவாறு அமைந்தது. இதனால் பெருவாரியான மக்கள் புத்தம் தழுவினார்கள்.

புத்தமதம் அரச மதமாக மௌரிய பேரரசு காலத்தில் இருந்தது. இந்தியா முழுவதும் புத்தம் பரவி இருந்தது. தமிழகத்தில் இருந்த புத்த மததுறவியான போதி தர்மர் சீனாவுக்கு சென்று ஷயோலின் எனும் புத்தமத பிரிவை உருவாக்கி அதனை சீனா முழுவதும் பரவ செய்ததை நாம் அனைவரும் ஆறாம் அறிவு திரைப்பட்டத்தில் கண்டிருப்போம்.

( ஆதாரம்: http://www.onmarkproductions.com/html/daruma.shtml).

அதே போல தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை மற்றும் வீரசோழியம் ஆகிய இரண்டும் புத்த மத கோட்பாட்டுகளை பரப்ப இயற்றப்படது என்பதையும் நாம் அறிய வேண்டும். கூடுதலாக உலகம் முழுவதும் புத்த மதம் பரவி இருந்தது. இயேசு கிறிஸ்துவும் ஒரு புத்த துறவியாக இருந்தவர் என்று BBC யின் டாக்குமென்ரி நிறுவுகின்றது.

(ஆதாரம் : https://youtu.be/QAaW6BYhfNM)

*5. புத்தமதம் எப்படி வீழ்ந்தது?*

இவ்வாறு நாடு்முழுவதும் பரவி இருந்த புத்தமதம் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் புஷ்யமித்ர சுங்கன் எனும் பார்ப்பன படைதளபதியினால் அழித்தொழிக்கபட்டது. மௌரிய அரசரை கொன்று விட்டு புத்த மதத்தை ஒழித்து விட்டு அவன் மீண்டும் 
இந்து வர்ணாசிரம தர்மத்தை கொண்டு வந்தான். புத்த துறவிகள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். புத்தர் சிலைகள் உடைத்து எரியப்பட்டது  அல்லது நாமமிட்டு விஷ்ணு சிலைகள் என்று மாற்றப்பட்டது. புத்தர் ஒரு விஷ்ணு அவதாரம் என்ற கட்டுகதையும் பரப்பப்பட்டது. இந்த வர்ணாசிரம முறையை, பிராமண உயர்வு நிலையை ஏற்று கொள்ளாத புத்திஸ்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டு தீண்டதகாதவர்களாக மாற்றப்பட்டனர். அவர்களே தற்போதைய பட்டியல் பிரிவினராக உள்ளனர். (Scheduled caste) 

(ஆதாரம்: https://en.m.wikipedia.org/wiki/Pushyamitra_Shunga)

*6. ஆரியர்களும் - முகமதியர்களும்*

முகமதியர்கள் இந்தியாவை ஏறக்குறைய 800 வருடம் ஆட்சி செய்தனர். இந்த 800 வருடங்களில் ஒரு இடத்தில் கூட பிராமணர்கள் இசுலாமிய அரசுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை. மாறாக இசுலாமிய அரசர்களுடன் நெருக்கமாக பழகி அதன் மூலம் பல சலுகைகள் பெற்றனர். ஒரு பார்ப்பனர் கூட இந்த இசுலாமிய அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி்செய்து போராடி மடிந்ததாக வரலாறு இல்லை.

*7. RSS/BJP யின் தோற்றம் மற்றும் கோட்பாடுகள்*

800 வருட முகமதியர் ஆட்சியில் ஒரு இடத்தில் கூட அவர்களை எதிர்க்காத பார்ப்பனர்கள் 1900  களில் திடீரென இசுலாமியர்கள் இந்து கலாச்சாரத்தை அழித்து விட்டதாக பேச தொடங்கினர். கூடுதலாக அதுவரை பிராமணர்கள் தங்களை தனி இனமாக (ஆரிய) பேசிவந்தவர்கள் திடீரென நாம் எல்லாம் இந்துக்கள் என்று பேச தொடங்கினர். இதர இந்துக்கள் தங்களை தொட கூடாது என்று கூறிவந்தவர்கள் திடீரென நாம் ஒன்றிணைந்து இசுலாமியர்களை எதிர்க்க வேண்டும் என்று அறிவித்தனர். தேசிய வாத முழக்கம் உருவாக்கப்பட்டது.

ஏனெனில் பிரிடிஷ் அரசு அப்போது இந்தியவில் தேர்தல் முறைகளை கொண்டு வந்து இருந்தது. இந்த தேர்தல் ஜனநாயகத்தில் பெரும்பாலான ஓட்டுகளை பெற்று தங்களின் மேலாண்மையை உறுதி செய்ய அனைவரின் பங்களிப்பையும் பெற இந்த புதிய நயவஞ்சக இந்துத்ததுவ அரசியல் முன்வைக்கப்பட்டது.

இவை அனைத்தும் RSS ன் முன்னோடியான டாக்டர். மூசே என்பவரின் குழு ஜெர்மனுக்கு சென்று ஹிட்லரின் குழுவிடமிருந்து கற்றுவந்தவை ஆகும்.

ஒரேடியான பயங்கரமான தேசப்பற்று முழக்கம் (Extreme nationalism) யாராவது ஒரு சிறுபாண்மை கூட்டத்தை முழுமையாக எதிரிகளாக காட்டுவது (ஜெர்மனியில் யூதர்கள், இங்கே இசுலாமியர்கள்) ஆகியவை அதன் கூறுகளாகும். மாற்று கருத்து கூறுவோரை தேசவிரோதிகள் என்று அழைப்பதும் ஹிட்லரின் நாசிச பாசிச  தத்துவமேயாகும்.

(ஆதாரம் : https://www.livescience.com/57622-fascism.html)

*8. BJP இந்துக்களுக்கானதா?*

இல்லை. பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ கூடாரமும் பார்ப்பன மற்றும் பனியாக்களின் நலனுக்காக இயங்கும் அமைப்புகளாகும். இவர்களின் சிந்தாந்தம் ஹரப்பா நாகரீகத்தை அழித்த ஆரிய சித்தாந்தமாகும். பார்ப்பன நலனை காப்பாற்றி இதர பிற  இந்துக்களை ஏமாற்றுவது இவர்களின் தந்திரமாகும். 2014 ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபிறகு அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ஒழித்து கட்டும் வேலை நடந்து வருகிறது. ஐ.ஐ.டி/ஐ.ஐ.எம் மற்றும் மத்திய பல்கலைகழங்கள் மற்றும் உயர் அதிகாரமுள்ள பதவிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளனர். இதர இந்துகளுக்கு எந்த இட பங்கீடும் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட (OBC/BC/MBC) நீதிபதி மட்டுமே உள்ளார். Sc/st யாரும் இல்லை. மத்திய செயலாளர்கள் பதவிகள் முழுமையும் பார்ப்பனர்கள் வசம் உள்ளது. தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டை ஒழித்து கட்டவும் வழக்கு நடைபெறுகிறது. நீட் தேர்வு கொணரப்பட்டு் தமிழக மாணவர்களின் நிலை பரிதாபத்துக்கு உள்ளாக்கப்பட்டுளது. UGC யின் விதிமுறைகள் திருத்தபட்டு BC/MBC/SC/ST கள் பேராசிரியர்களாக ஆவது தடுக்கபட்டுள்ளது.

(ஆதாரம் : https://www.indiatoday.in/india/story/ugc-vacancies-reservation-university-1313865-2018-08-14)

*9. தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?*

தமிழர்கள் இந்துக்கள் அல்ல. நாம் இயற்கை வழிபாடு கொண்ட சமத்துவத்தை போதித்த பண்டைய திராவிட நாகரிகத்தை சார்ந்தோர். வேதம் என்பதும் சமஸ்கிருதம் என்பதும் ராமாயணம் போன்ற கட்டுகதைகளும் இங்கே நம்மிடம் இடைசொருகலாக புகுத்தப்பட்டதாகும். இந்துத்துவ கூடாரமான RSS/BJP என்பது அனைத்து இந்துக்களின் நலனுக்காக இயங்கும் அமைப்பும் அல்ல. அவை பார்ப்பன நலனை அடிப்படையாக கொண்டவை. இந்தியாவின் அனைத்து வளங்களையும் அனுபவித்துவிட்டு அமெரிக்க குடியுரிமை பெற்று ஓடும் தேசவிரோதிகளின் நலனை அடிப்படையாக கொண்டதாகும்.  கூடுதலாக அது உலக பாசிஸ்டான டிரம்புடன் கைகோர்க்கும் தந்திர அரசியலாகும்.

(ஆதாரம்: https://www.thehindu.com/news/international/indian-american-group-marches-in-support-of-trumps-immigration-policy/article22650866.ece).

அம்பானி, அதானி, விஜய் மல்லையா ஆகிய கார்ப்பரேட்டுகளுக்கு  நாட்டை எழுதி கொடுத்துவிட்டு
பார்ப்பனரல்லாத இதர இந்துக்களுக்கு பசுமாட்டு மாட்டு் சிறுநீர் மட்டுமே கிடைக்க செய்வதே காவி அரசியலாகும். 

இந்நிலையில் தமிழர்களாகிய நாம் வலிந்து  உருவாக்கப்பட்டும்  இந்து - முசுலீம் கலவரம், பசுமாட்டின் பெயரில் மக்களை அடித்தகொல்லும் அரசியல் வன்முறை, கருத்துரிமை மறுப்பு, ஊடகவியலாளர்களை சுட்டு கொல்வது,  மாநில சுயாட்சி மறுப்பு  ஆகியவையே பாசிச பி.ஜே.பியின் அரசியல் என்று புரிந்து கொண்டு பாசிச பி.ஜே.பியை விரட்டி அடிப்போம்.

- *ச. தமிழ்செல்வன்*

No comments:

Post a Comment