தொகுப்புகள்

Search This Blog

Tuesday, July 18, 2017

கண்ணதாசனும் கருணாநிதியும்

கண்ணதாசன் யார்?

சினிமா கவிஞர். அப்புறம்?

அர்த்தமுள்ள இந்துமதம் போல இந்து மத புகழ்ப்பாடும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அப்புறம்?

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடியதோடு நிற்காமல் மது, மாது என்று வாழ்ந்து காட்டியவர். அப்புறம்?

அவ்ளோதான் தெரியும் –

வனவாசம், மனவாசம் படிக்கும் வரை. இந்த புத்தகங்களை படித்தபிறகு தான் அவர் அரசியலில் எவ்வளவு ஈடுபட்டு இருக்கிறார் என்றும், அதில் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறார் என்றும் தெரிந்தது. —- ’மருதநாட்டு இளவரசி’ படம் தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் கருணாநிதியை பற்றி அறிந்தார் கண்ணதாசன். ’அபிமன்யு’ படத்தில் வரும் கருணாநிதியின் வசனங்கள், அவரை ஆறு நாட்கள் தொடர்ந்து அந்த படத்தை பார்க்கும் அளவுக்கு கவர்ந்தது. அப்பொழுது ஏற்பட்டது கருணாநிதியின் மீதான காதல் என்கிறார் கண்ணதாசன். கருணாநிதியை வகைத்தொகையில்லாமல் புகழ, அவரும் கண்ணதாசனை நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார். பிறகு, ’காதல் தேசம்’ வினீத், அப்பாஸ் போல இருந்திருக்கிறார்கள். எப்படி? ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்து தூங்கிற அளவுக்கு. அந்நேரம் கருணாநிதி அரசியலிலும் இருந்ததால், பல விஷயங்களை கண்ணதாசனுடன் பகிர்ந்திருக்கிறார். திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சமயம், கருணாநிதி பெரியார் செய்த ’கொடுமை’களை பற்றி கூறி இருக்கிறார். விலகியதில் பெரிதும் மகிழ்ந்திருக்கிறார். திமுக முதல் அறிமுக கூட்டத்திற்கு கருணாநிதியால் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் கண்ணதாசன். அச்சமயம் சினிமாவில் கருணாநிதி பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். கண்ணதாசன் பல வேலைகளை மாறி மாறி பார்த்து, முடிவில் ’கன்னியின் காதலி’ என்ற படத்திற்கு முதல் பாடலை எழுதினார். பிறகு கருணாநிதியுடன் பல கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். சில அரசியல்வாதிகளுடன் பழகிய பிறகு அவருக்கு தோன்றியது, “கொண்ட கொள்கையில் எந்த அரசியல்வாதிக்கும் உறுதி இல்லை. எல்லா பிரச்சினைகளிலும் உயிரை கொடுப்பேன் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு, எத்தனை உயிர் இருக்கிறது?” இடையில் சில பக்கங்களில் நண்பர் என்று குறிப்பிட்டு எழுதுகிறார். “என் நண்பர் தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமாக எழுதுவார். ஆனால், ஒரு பைசா பிச்சை போட மாட்டார். தொழிலாளர்களுக்காக, ரத்தம், நரம்பு என்று கட்டுரை எழுதுவார். ஆனால், அவரிடம் இருக்கும் தொழிலாளர்களுக்கு அதை கண்டு கொள்ள மாட்டார்”. விபச்சாரியிடம் கூட காரியம் முடிந்த பின்பு, காசை வாங்கி வந்தவராம் அவர் நண்பர். கண்ணதாசனும் அவர் நண்பரும் வாடகை கார் எடுத்து கொண்டு பெண்களுக்காக அலைந்திருக்கிறார்கள். முற்போக்கு என்கிற பேரில் வீட்டில் பொதுவில் வைக்க கூட முடியாதவாறு கதைகளை எழுதியவர் அவர் நண்பர். அதிலிருந்து அவர் எழுத்தை புறக்கணித்தார் கண்ணதாசன். யார் அந்த நண்பரோ? —- “நான் தூத்துக்குடிக்கு பேச போகிறேன்?” “உனக்கு என்ன பேச தெரியும்? எதுக்கு வீண் வேலை? வரவில்லையென்று சொல்லிவிடு” இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதே, தான் வாழ வழியென்பது எனது நண்பனின் சித்தாந்தம் என்கிறார் கண்ணதாசன். கல்லக்குடி போராட்டதிற்கு சென்று, சிக்கி, வழக்குக்காக அலைந்து, சிறையில் அடைப்பட்டு கிடந்ததில் அரசியல் வெறுக்க, சிறையில் இருந்து விடுதலையான பிறகு பத்திரிக்கை ஆரம்பித்தார் கண்ணதாசன். கருணாநிதிக்கோ, கல்லக்குடி போராட்டம் நல்ல மைலேஜ்ஜை கொடுக்க, கட்சியில் உயரத்திற்கு சென்றார். அடுத்த வந்த தேர்தலில் திருக்கோஷ்டியூரில் நின்றார் கண்ணதாசன். ஏனோதானோவென்று பிரச்சாரம் செய்து தோற்றுவிட்டார். அதற்கு பிறகு வந்த மாநகராட்சி தேர்தலில், கொஞ்சம் கடுமையாகவே உழைத்திருக்கிறார்.

தேர்தலில், திமுக பெரும்பான்மை பெற்றது. ’சரி, நம்மை பாராட்டுவார் அண்ணா’ என்று நினைத்து கொண்டிருக்கும்போது, அண்ணா கருணாநிதியை மட்டும் பாராட்டி மேடையில் கணையாழி அணிவித்தார்.

கடுப்பான கண்ணதாசன் அண்ணாவிடம் போய், “என்ன அண்ணா! இப்படி சதி செய்துவிட்டீர்களே?” “அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்.” என்றார் அண்ணா.

 —– பிறகு திமுக வெறுத்து போக, கட்சியிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார்.

இன்னொரு பக்கம், சினிமாவிலும் வேகமெடுத்தார். கருணாநிதியோ, தமிழக அரசியலில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தார். கருணாநிதியை வெறுத்து கோபப்பட்டு தாக்கினார் கண்ணதாசன். கருணாநிதி, அதையெல்லாம் அப்போது அவருக்கு இருந்த மற்ற பிரச்சினையினால் கண்டுகொண்டிருக்கமாட்டார். ஒரு கட்டத்தில் காமராஜரிடமும் முட்டினார் கண்ணதாசன். திமுக, பகுத்தறிவு என்ற பேரில் ராமன், கிருஷ்ணன் என்று கடவுள்களை செருப்பால் அடித்து கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்தியபோது, அவருக்கு வந்த ஆத்திரத்தில் இந்து ஆதரவு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். முதல் போணி, துக்ளக்கில் “நான் ஒரு இந்து”. அண்ணா நோய்வாய்பட்டு இறந்தப்பிறகு, கருணாநிதி காலையிலும் மாலையிலும் எம்ஜிஆரை சென்று பார்த்து அவருடைய ஆதரவை பெற்று, கட்சியின் தலைவர் ஆனார். நாவலர், அண்ணா சமாதியில் அழுது கொண்டிருந்தார். கண்ணதாசன் “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதியிருந்தார். ’இந்திரா காங்கிரஸி’ல் சேர்ந்திருந்தார். அவருடைய கெட்ட நேரம், பிறகு கருணாநிதி இந்திராவுடன் கூட்டணி வைத்தார். “கருணாநிதிக்கு மேல் ஆளே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு கண்ணதாசன் நிலை ஆனது. அவரும் முடிவில் கருணாநிதி ஜோதியில் கலந்தார்.

நன்றி:- டோனி

Sunday, July 9, 2017

கலைஞர் Vs MGR

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் MGR அப்படின்னு சிலர் பீற்ற கேள்வி பட்டிருப்பீர் என்னை பொருத்த வரையில் அது வடிவேலு காசு கொடுத்து வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்று கூவ சொல்லுவாரே அது போலதான்.

ஏன் கலைஞர் கொடுக்க வில்லையா ?

கொடுத்தார்  !

MGR ரிக்சாகாரனாக நடித்து அவர்களில் ஒருவனாக தான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக காட்டிகொண்டார் அதனால் என்ன பலன்? ஆனால் அவரைத்தான் நம்பினான் தன் வண்டியில் அவர் படத்தை ஒட்டி பூஜை செய்தான்.

                            Vs

கலைஞர் - மனிதனை மனிதனே இழுத்து சுமப்பதா நீ ஒன்றும் யாருக்கும் அடிமை இல்லையடா கை ரிக்சாவை ஓரம் கட்டு பிடி சைக்கிள் ரிக்சா கௌரவமா தொழில் பன்னு நாலு டிரிப் அதிகமா ஓட்டி கூடுதலாக சம்பாதி என்று புது ரிக்சாவே கொடுத்தார், இதில் யார் மக்கள் தலைவன் ?

MGR - கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி விவசாயி இந்த பாட்டை கொடுத்தது மட்டும்தான் விவசாயிகளுக்கு MGR செய்தது யுனிட்டுக்கு 5 பைசா குறைத்து கேட்டு போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தினார் MGR, எத்தனையோ விவசாயி எதுக்குன்னு தெரியாம அவர் படத்தை வச்சிருக்கான், எல்லாம் சினிமா மோகம் அதை பயன் படுத்தி  திட்டமிட்டு ஏமாற்றிய MGR

                           Vs

கலைஞர் -  போராடாமலேயே முற்றிலும் இலவசமாக மின்சாரம்,  7000 கோடி கடன் தள்ளுபடி உள்பட என்னற்ற திட்டங்கள் கொடுத்தார் வாழ வழி செய்தார் கலைஞர், தான் ஆள வழி செய்தார் MGR

MGR - முதியவர்களுக்கு என்ன செய்தார் ? முதியவர்களை தேடி தேடி கட்டி பிடித்து போட்டோ எடுத்து தன்னை விளம்பர படுத்தினார் அவர்களும் ரொம்ப நல்லவருன்னு இன்னும் நம்புறாங்க ஏதாவது ஒரு கிழவிக்கு சாப்பாடும் செலவுக்கு பணமும் கொடுத்து உடனே பத்திரிக்கை காரனுக்கு தகவலும் கொடுப்பார் இதுவா கொடுத்து சிவந்த கரம்

                          Vs

கலைஞர் - கொடுத்து சிவந்த கரம் இதுவன்றோ முதியவர்கள் ஒடுக்க பட கூடாது தன்னை நம்பி தன்னம்பிக்கையாக வாழனும் யாரிடமும் கையேந்தி நிற்க்க கூடாது என்று முதியோர் ஓய்வூதிய திட்டம் கொடுத்து அனைத்து முதியவர்களுக்கும் மூத்த மகனானார் கலைஞர் அது மட்டுமா வயதான பெற்றோரை கொடுமை படுத்தினால் சிறை என்று சட்டம் கொண்டு வந்தார் இன்னும் பல

MGR - சாலை விபத்தில் சிக்கும் ஏழை எளியோரை காப்பாற்றி மருந்து வாங்க காசு கொடுப்பது போல நடித்தார்

                             Vs

கலைஞர் - நோயுற்ற, விபத்தில் சிக்கிற லட்சகணக்கானோர் பணமின்றி உயிரிழப்பதை என்னிய கலைஞர், கலைஞர் காப்பீட்டு திட்டமென்ற மாபெரும் திட்டத்தை கொண்டு வந்து பல்லாயிரம் உயிரை காப்பாற்றி பலருக்கு கடவுளாக தெரிந்தால் MGR இது போல எத்தனை உயிரை காப்பாற்றினார் ?

எல்லாமே நடிப்பு நாடகம் அப்புறம் எப்படி கொடுத்து சிவந்த கரமாகும்?

கலைஞரே சிறந்தவர், வெளிப்படையானவர்,

MGR "கோ" படத்தில் வரும் அஜ்மல் மாதிரி எல்லாமே திட்டம்தான் செட்டப்தான்.
                                  
நன்றி :- ராஜ லிங்கம்..

Saturday, July 8, 2017

கலைஞர் வாரிசு

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகள், அவரது முதுமையின் காரணமாக முடக்கப்பட்டிருக்கின்றன. தான் பேசாவிட்டாலும் தன்னைப் பற்றி பேசவைப்பவர் கருணாநிதி என்பது இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்யும் நொடியிலும், இதோ நீங்கள் வாசிக்கும் நொடியிலும் நிறுவப்பட்ட உண்மை.

அப்படிப்பட்ட கருணாநிதிக்கு எதிரியாக இருப்பதுகூட எளிது. ஆனால், அரசியல் வாரிசாக இருப்பது என்பது மிகவும் கடினமான செயல். அந்த கடினத்தைதான் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கடுமையான சவால்களைச் சந்தித்து கடந்து வருகிறார் மு.க.ஸ்டாலின். திமுக-வின் செயல் தலைவராக அவர் பொறுப்பேற்ற நிலையில்தான் ஜெயலலிதா மரணம், அதிமுக மிக குறைந்த அளவான மெஜாரிட்டியில் கம்பி மேல் நடக்கும் ஆட்சி என்று திமுக-வுக்கான சாதகங்கள் அதிகரித்து வருகின்றன.

‘இந்நேரம் கலைஞர் செயல்பாட்டோடு இருந்திருந்தால்…’ என்று பலரும் அப்போதிலிருந்து இப்போது வரை பேசிவருகிறோம். அவர்களின் வாயை கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா மூலம் சற்று வலிமையாகவே அடைத்திருக்கிறார் ஸ்டாலின்.

தேசியத் தலைவர்களைச் சென்னைக்கு அழைத்து ஒருங்கிணைத்து பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் செய்ய வேண்டிய ஓர் ஒருங்கிணைப்பை பிராந்திய கட்சியான திமுக-வின் சார்பில் செய்தார் மு.க.ஸ்டாலின். நிதிஷ்குமார், சுதாகர் ரெட்டி, ராஜா போன்றவர்களுக்கு ஸ்டாலினைப் பாராட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனாலும் அவர்கள் அந்த விழாவில் ஸ்டாலினை வெகுவாகவே பாராட்டினார்கள். தேசிய அளவிலான தனது கடமையில் இருந்து சற்று தள்ளியே இருந்த ஸ்டாலின், கருணாநிதியின் வைர விழா மூலம் தேசிய அளவிலான மாற்றத்துக்கான புள்ளியைத் தொடங்கி வைத்தார்.

கருணாநிதியின் இல்லத்து வாரிசு மட்டுமல்ல… இயக்கத்தின் வாரிசாகவும் ஆகிப்போன ஸ்டாலினுக்கு அந்த வாரிசு என்ற நிலையே சாதகமும் பாதகமும். தனது புதிய பாணி ஒன்றை வகுத்து செயல்படத் தொடங்கினால் கூட... ‘அவங்க அப்பா போல வரமாட்டாரு’ என்ற விமர்சனம் வரும்.

கருணாநிதியின் அடையாளங்களை மெல்ல மெல்ல ஸ்டாலின் பெற்று வருகிறாரா இல்லையா என்பதை நல்ல விவாதமாக நடத்தலாம். அதற்கு அப்பாற்பட்டு இன்று காலத்தால் ஸ்டாலினுக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கறுப்புக் கண்ணாடி.

கண் புரை பிரச்னைக்கான மருத்துவமனைச் சென்று சாதாரணமான அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு சட்டமன்றத்துக்கு வந்த ஸ்டாலினை திமுக-வினர் ஆசை ஆசையாக பார்த்தனர்.

காரணம்… தன் தந்தையைப் போல கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார் ஸ்டாலின். சில சட்டமன்ற உறுப்பினர்கள், ‘தளபதியை பார்த்தா தலைவரே சட்டமன்றத்துக்கு வந்ததுபோல இருக்குல்லே?’ என்று பேசிக் கொண்டனர்.

1953ஆம் ஆண்டு இப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா பொதுக்கூட்டம். அதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து அன்று மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டார். குறித்த நேரத்தில் பரமக்குடி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகில் சென்று கொண்டிருந்தபோது, கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால், கார் பழுதாகி, வேறொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டார் பரமக்குடியில். இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம். அதனால் உடனே திரும்பினார். திரும்பும்போது அசதியின் காரணமாக வாடகைக் காரை ஓட்டிய ஓட்டுநர் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார்.

திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது. கருணாநிதியின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. First aid எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்து கொண்டு திருச்சி வந்து சேர்ந்தார். மறுநாள் காலையில் முகமே வீங்கி, கருணாநிதியின் இடது கண்ணில் வலி தொடங்கியது.

வலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கருணாநிதியை, நண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு, இடது கண்ணுக்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்று கூறினார். அது எப்படி சாத்தியமாகும்? கருணாநிதியோ கண்ணைவிட தன் கடமைகளுக்கே முக்கியத்துவம் தந்தார்.

வாக்குக் கொடுத்தபடி, சென்னையில் ஓட்டல் ஒன்றில் ‘மணி மகுடம்’ நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று அதே இடது கண்ணில் கடுமையான வலி. கையில் இருந்த பேனாவையும், தாளையும் வீசி எறிந்து விட்டு, ‘அய்யோ’ என்று அலறினார். சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்துவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். பன்னிரண்டு முறை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது கருணாநிதியின் அந்த ஒற்றைக் கண்ணில்.

1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் கார் விபத்து ஒன்றில் சிக்கி, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று.

1971ஆம் ஆண்டிலும் அந்த வலி தொடர… இந்தியாவிலே உள்ள மிகச் சிறந்த கண் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்பேரில், அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் நகரில் உள்ள ‘ஜான்ஹாப்கின்ஸ்’ மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் மாமுனி என்பவர் கருணாநிதிக்குக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து, கறுப்புக் கண்ணாடியை தொடர்ந்து அணியச் செய்தார்.

இப்படி கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இதை அவரே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதமாகவும் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் இடது கண் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அவரது இடதுசாரிப் பார்வை கெட்டுப் போகவில்லை.

இதோ… மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியும் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு நான் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தோடு சட்டமன்றம் சென்று அதிமுக அரசின் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மீறல்கள் முதல் குட்கா ஊழல் வரை பேசி எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாற்றியிருக்கிறார் ஸ்டாலின்.

கருணாநிதிபோல யாரும் இனிமேல் வர முடியாது என்பது உண்மைதான். நாம் ஸ்டாலினிடம் கருணாநிதியை எதிர்பார்க்கக் கூடாது என்பதே நியாயம். ஆனாலும், ஸ்டாலினின் முகப் புத்தகத்தில் கறுப்புக் கண்ணாடி போட்ட புகைப்படத்தைப் பார்த்து, ‘தளபதி… தலைவரைப் போலவே மாறிவிட்டார்’ என்று பல உடன்பிறப்புகள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்குள் சமூக நீதிப் பார்வை இருந்தது. பெண்ணுரிமைக்கான புதிய பார்வை இருந்தது. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத உறுதிப் பார்வை இருந்தது. மத நல்லிணக்கத்துக்கான கருணைப் பார்வை இருந்தது.

ஸ்டாலினின் கறுப்புக் கண்ணாடிக்குள்ளும் அந்த பார்வைகள் நிச்சயம் இருக்கின்றன. இன்னும் அது வீச்சாக வெளிப்பட வேண்டிய தேவையும் இப்போது எழுந்திருக்கிறது.

மாநில உரிமைகள் மறுக்கப்படுவதும், மானத் தமிழ்மொழி ஒதுக்கப்படுவதும் அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு தீவிரமாகியிருக்கும் நிலையில், இந்தக் கறுப்புக் கண்ணாடியின் பொறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதே வரலாறு சொல்லும் செய்தி.

கறுப்புக் கண்ணாடி என்பது ஒரு குறியீடுதான். ஆனால் அது சரித்திரத்தின் குறியீடு!

- ராகவேந்திரா ஆரா

Thursday, July 6, 2017

புத்தகம் பற்றி

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
தனது பிறந்தநாள் பரிசாக பொன்னாடைகளுக்கு பதிலாக புத்தகங்களை வழங்குமாறு அன்பு வேண்டுகோளை வைத்து முடங்கி கிடந்த லட்ச கணக்கான புத்தகங்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் - திமுக செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்....

வாசிப்பவனே வாழ்கிறான்