கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் MGR அப்படின்னு சிலர் பீற்ற கேள்வி பட்டிருப்பீர் என்னை பொருத்த வரையில் அது வடிவேலு காசு கொடுத்து வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்று கூவ சொல்லுவாரே அது போலதான்.
ஏன் கலைஞர் கொடுக்க வில்லையா ?
கொடுத்தார் !
MGR ரிக்சாகாரனாக நடித்து அவர்களில் ஒருவனாக தான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக காட்டிகொண்டார் அதனால் என்ன பலன்? ஆனால் அவரைத்தான் நம்பினான் தன் வண்டியில் அவர் படத்தை ஒட்டி பூஜை செய்தான்.
Vs
கலைஞர் - மனிதனை மனிதனே இழுத்து சுமப்பதா நீ ஒன்றும் யாருக்கும் அடிமை இல்லையடா கை ரிக்சாவை ஓரம் கட்டு பிடி சைக்கிள் ரிக்சா கௌரவமா தொழில் பன்னு நாலு டிரிப் அதிகமா ஓட்டி கூடுதலாக சம்பாதி என்று புது ரிக்சாவே கொடுத்தார், இதில் யார் மக்கள் தலைவன் ?
MGR - கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி விவசாயி இந்த பாட்டை கொடுத்தது மட்டும்தான் விவசாயிகளுக்கு MGR செய்தது யுனிட்டுக்கு 5 பைசா குறைத்து கேட்டு போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தினார் MGR, எத்தனையோ விவசாயி எதுக்குன்னு தெரியாம அவர் படத்தை வச்சிருக்கான், எல்லாம் சினிமா மோகம் அதை பயன் படுத்தி திட்டமிட்டு ஏமாற்றிய MGR
Vs
கலைஞர் - போராடாமலேயே முற்றிலும் இலவசமாக மின்சாரம், 7000 கோடி கடன் தள்ளுபடி உள்பட என்னற்ற திட்டங்கள் கொடுத்தார் வாழ வழி செய்தார் கலைஞர், தான் ஆள வழி செய்தார் MGR
MGR - முதியவர்களுக்கு என்ன செய்தார் ? முதியவர்களை தேடி தேடி கட்டி பிடித்து போட்டோ எடுத்து தன்னை விளம்பர படுத்தினார் அவர்களும் ரொம்ப நல்லவருன்னு இன்னும் நம்புறாங்க ஏதாவது ஒரு கிழவிக்கு சாப்பாடும் செலவுக்கு பணமும் கொடுத்து உடனே பத்திரிக்கை காரனுக்கு தகவலும் கொடுப்பார் இதுவா கொடுத்து சிவந்த கரம்
Vs
கலைஞர் - கொடுத்து சிவந்த கரம் இதுவன்றோ முதியவர்கள் ஒடுக்க பட கூடாது தன்னை நம்பி தன்னம்பிக்கையாக வாழனும் யாரிடமும் கையேந்தி நிற்க்க கூடாது என்று முதியோர் ஓய்வூதிய திட்டம் கொடுத்து அனைத்து முதியவர்களுக்கும் மூத்த மகனானார் கலைஞர் அது மட்டுமா வயதான பெற்றோரை கொடுமை படுத்தினால் சிறை என்று சட்டம் கொண்டு வந்தார் இன்னும் பல
MGR - சாலை விபத்தில் சிக்கும் ஏழை எளியோரை காப்பாற்றி மருந்து வாங்க காசு கொடுப்பது போல நடித்தார்
Vs
கலைஞர் - நோயுற்ற, விபத்தில் சிக்கிற லட்சகணக்கானோர் பணமின்றி உயிரிழப்பதை என்னிய கலைஞர், கலைஞர் காப்பீட்டு திட்டமென்ற மாபெரும் திட்டத்தை கொண்டு வந்து பல்லாயிரம் உயிரை காப்பாற்றி பலருக்கு கடவுளாக தெரிந்தால் MGR இது போல எத்தனை உயிரை காப்பாற்றினார் ?
எல்லாமே நடிப்பு நாடகம் அப்புறம் எப்படி கொடுத்து சிவந்த கரமாகும்?
கலைஞரே சிறந்தவர், வெளிப்படையானவர்,
MGR "கோ" படத்தில் வரும் அஜ்மல் மாதிரி எல்லாமே திட்டம்தான் செட்டப்தான்.
நன்றி :- ராஜ லிங்கம்..
No comments:
Post a Comment