தொகுப்புகள்

Search This Blog

Saturday, August 12, 2023

பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி... 

"பெரியார் தான் 
தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"
ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு இருந்தேன்.

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
'ஆமாம் பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'

வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர்

நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..

- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி
இடஒதுக்கீடு வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா,
எனக்கு காங்கிரஸே வேணாம்"னு சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.

- காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,
மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.

- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.
1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.

- இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே
'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு! இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?

- தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...

15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் பெரியார். அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.

- கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர்,
இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,
பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.

இன்னைக்கு நாம பேசுறோமே.. பொண்ணுங்களோட financial independence, பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.
- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.

- ஒரு முறை காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட
எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல. அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.
- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார்...

ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும்.. அதனால, சாகுற வரைக்கும் எந்த அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்..

அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும், பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!

- 1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ கூட, "அதிகாரம் பிரிட்டிஷ் காரன் கையிலருந்து,
பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்... அடிமட்ட ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"ன்னு சொன்னார் பெரியார்!

- எல்லா தலைவர்களும் தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க.
ஆனா, பெரியார் ஒருத்தர் தான், 'யார் எது சொன்னாலும், அதை நம்பாதீங்க... கேள்வி கேளுங்க... ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க... அப்புறமா, நீங்க முடிவெடுங்க.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க"ன்னு சொன்னார்.
ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancellor சுந்தரவடிவேலு அவர்கள் “இன்னைக்கு கிராமத்துல கூட படிச்சவங்க எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கு, நிறைய கல்விக்கூடங்கள் இருக்குதுன்னா, அதுக்கு நீங்க கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்"ன்னு காமராஜரை புகழ்ந்தப்போ,
"இதுக்கெல்லாம் பெரியார்தான் காரணம். அவர்தானே அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டார்"ன்னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்.

தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையா ஆக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம
வெளியே போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார். காங்கிரஸ்ல இருந்துக்கிட்டு பெரியார் சொன்ன சமூகநீதி கொள்கையை நான் செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான்.
அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார் 'கல்வி கண் திறந்த' காமராஜர்.

- பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட "சுயமரியாதை திருமண சட்டம்" உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார்.

இந்தியாவிலேயே OBC ரிசர்வேஷனை முதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா தலித் சமூகத்தை சேர்ந்த ஒருத்தர் நீதிபதி ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும்.

அனைத்து சாதி மக்களும் கோவில் கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"ன்னு போராட போறேன்னு
பெரியார் சொன்னார்.... அப்போ, "அதுக்கு அவசியமே இல்ல.. எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி.

- பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி
பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதுதான் உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!
காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல் ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார்.
பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம்... "இந்தி திணிப்பை எதிர்த்து ஜெயிச்சாச்சு.. தெருவுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து போராடி ஜெயிச்சாச்சு.. கோவிலுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து ஜெயிச்சாச்சு..
ஆனா, நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே. இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.
நாடு முழுக்க கால்தடம் பதிச்ச பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல மட்டும் நோட்டாவுக்கு கீழே இருக்குன்னா அதுக்கு காரணம் பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்!

வரலாறு தெரிஞ்சவர்கள் 
வாட்சப் வதந்தியை பார்த்து வாயை பொளக்காதவர்களுக்கு தெரியும்.

ஆமா..... பெரியார் தான் எல்லாம் பண்ணார்🖤❤️

நன்றி :- பாக்டீரியா

Sunday, August 6, 2023

சீமான் எப்போது கட்சியை கலைக்க போகிறார்?

தி.மு.க ஆட்சியில் இஸ்லாமியருக்கு செய்த ஒரு  நன்மையை சொன்னால் நான் கட்சியை கலைத்து விட்டு போகிறேன் என்று சொன்ன சீமான் எப்போது கட்சியை கலைக்க போகிறார்?

*******************************************
பால்வாடி சீமான் கவனத்திற்கு!!!

1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 15.9.2007 ல், அறிவிப்பு. 

இதன் காரணமாக அரசு பணியில் 
1774 அலுவலர்கள்/பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். 

தொழில் நுட்பகல்வியில் 
16518 மாணவ/மாணவியர்களும் மற்றும் மருத்துவக் கல்வியில் 
306 மாணவ/மாணவியர்களும் ஆக மொத்தம்18598 அரசு பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய 
உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கபட்டது. 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், 
உள்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர், 
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், 
ஆசிரியர் தேர்வாணைய குழுத்தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், 
சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைத்து முதல்வர் கலைஞர் 29.01.2011 அன்று உத்தரவிட்டார்.

3. கல்வி உதவி

தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின 
மாணவ மாணவியருக்கு ரூ 1867.07லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

இவற்றில் ரூ 729.86 லட்சம் செலவில் 
2820 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். 

இது மொத்த செலவினத்தில் 39 விழுக்காடு ஆகும்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை

11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் 67683 சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு
 2007-2008ஆம் ஆண்டு முதல் 
2010-11 ஆம் ஆண்டு வரை 
ரூ.2315.90 லட்சம் செலவில் 
34637 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். 

இது மொத்த செலவினத்தில் 46 விழுக்காடு ஆகும்.

பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை

. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு சேர்க்கைக்கட்டணமாக ஆண்டுக்கு 
ரூ 500/-ம், கற்பிப்புக்கட்டணமாக 
ரூ 3500/-ம் விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ரூ600/-ம் வழங்கப்படுகிறது.

11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

2007-08 ல் ரூ 94/- லட்சமும், தொடர்ச்சியான ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ 247/-லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டம் தொழில் மட்டும் தொழில் நுட்பம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு ரூ435.48/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்

திண்டுக்கல் , வேலூர், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

5. திறன் வளர்ப்பு பயிற்சி

சிறுபான்மையின மக்கள் தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை, காலணிகள் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்பதற்கு நடப்பு ஆண்டில் ரூ 2.50/- கோடி செலவிடப்பட்டுள்ளது.

6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்

சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான் மையிர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 1999-ல் துவங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அ. தனி நபர் கடன் திட்டம்

சிறுபான்மையினர் தொழில் தொடங்கிட ரூ 1 லட்சம் வரை கடன். கடந்த 4 ஆண்டுகளில் 7331 பயனாளிகளுக்கு ரூ 3107.13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4836 முஸ்லிம்கள்- கடன் தொகை ரூ 2143.97

ஆ. சிறுகடன் திட்டம்

சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்பு பயில வருடம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 40.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு ரூ 14.53 லட்சம். இ. 60 விழுக்காடுகளுக்குக் குறையாமல் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்

ஈ. ஆட்டோ ஓட்டுநர் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்

உ. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரு கலப்பின பசுக்கள் வாங்குவதற்கு ரூ.50,000 வரையிலும், இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்

ஆதரவற்ற, கணவனால் கை விடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 23.4.2007 முதல் துவக்கப்பட்டுள்ளது.

இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதராத்திற்கு இணையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ஷ�பூ அரசு மானியம் வழங்கி வருகிறது.

8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்

உலமாக்கள் மற்றும் பணியாளர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 60 வயது வரை ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், முஅத்தின் மற்றும் இதர பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடையலாம்.

முதியோர் ஓய்வூதியம், இறுதிச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முடக்க ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு இந்த நலவாரியத்திலிருந்து உதவி பெறலாம்.

கடுமையான வலியில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, 38 நாள் ஓய்வுக்குப் பிறகு 2009 மார்ச் 14-ல் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் கலைஞர் கையெழுத்திட்ட முதல் கோப்பே உலமாக்கள் பணியாளர் நலவாரியம் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

9. தமிழ்நாடு வக்ஃப் வாரியம்

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், நிர்வாக செலவினங்களுக்கும், தணிக்கை கட்டணமாகவும் நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.

பள்ளிவாசல்கள், தர்காக்கள், மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் மராமத்து பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 82 லட்சம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனால் 207 வக்ஃப் நிறுவனங்கள் பயனடைந்தன.

10. கபரஸ்தான் பாதுகாப்பு:

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலங்கள் வக்ஃப் செய்யப்பட்ட கபரஸ்தான்கள் ஆண்டு தோறும் 20 தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சுற்றுச்சுவர் மற்றும் முள்கம்பி வேலி அமைப்பதற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது.

11. உலமா ஓய்வூதியத்திட்டம்

ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2200 லிருந்து 2400 ஆக அரசு உயர்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ரூ 250/- ஆக இருந்த ஓய்வூதியம் இன்று ரூ 750/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஓய்வூதியத்திற்கு அரசு ரூ 2.16 கோடி வழங்கியுள்ளது. உலமாக்களுக்கு இலவச மிதிவண்ட 3 கோடியில் வழங்கப்படுகிறது.

12. மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு

மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச்செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு

சென்னை பட்டினப்பாக்கம் சேக்மதார் அவுலியா தர்கா முதற்கொண்டு திருவள்ளூர், தஞ்சை, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

14. மறுவாழ்வு திட்டம்

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஊசி�ட்க்�வூதுறூஙு�ஸ்ன், சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் மறுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.10,000 இதற்கு நிதி உதவி வழங்கப்படும்.

இதை தவிர

15. சிறுபான்மையினர் நல ஆணையம்

தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து.

16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்

17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்

18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்

19. உர்தூ அகாடமி

20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.

21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.

22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்

23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை, 1969-ல் கொண்டுவந்த நடைமுறையை 2001-ல் அ.தி.மு.க அரசு ரத்து செய்த போது 15.11.2006-ல் மீண்டும் விடுமுறை என அறிவிப்பு.

24. கட்டாய மதமாற்க்ஷித் தடைச்சட்டம் ரத்து

25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் 
தேவையான பாதுகாப்பு 

26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், 
648 பணியாளர்கள் 
ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம் வழங்கும் என அறிவித்து
26.2.2011 அன்று அரசு ஆணை. 

இதற்காக ஆண்டு தோறும் ரூ.331 கோடி அரசு ஒதுக்குகிறது என்ற அறிவிப்பு.

1991-92 க்குப்பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு மட்டுமின்றி
 1999 – க்குப்பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் அரசு நிதி அளிப்பது பற்றி அடுத்த கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும் என தேன் சொட்டும் அறிவிப்பு. 

அடடா! யாருடைய ஆட்சியில் இப்படிப்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்க முடியும்!!

கலைஞர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்!
பால்வாடி சீமானே 
நீ கொட்டிக்கிடக்கும் 
குப்பை கிடங்கு அடங்கு!!

பதிவு நன்றி: Napa