எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
யாரு வந்தாலும் ஒன்னும் செய்யப்போறதில்லை! அரசியல்னா சாக்கடை!
மாறி மாறி கொள்ளையடிப்பாங்க!
நான் எப்போவும் நோட்டாவுக்குத்தான்!
யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம உழைச்சாத்தான் சோறு !
எல்லாம் அவன் அவன் குடும்பத்தை தான் பாப்பானுங்க!
அரசியலன்னா ரௌடிசம் தான்!
இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லுபவர்கள் பெரும்பாலும் புதிதாய் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக இருப்பார்கள்!
1947 சுதந்திரம் அடைந்த பொழுது 35 கோடி தான் இந்தியாவில்மக்கள் தொகை-தற்பொழுது 130 கோடி.அதே போல் தமிழகத்தில் 2 கோடி பேர் இருந்திருக்கலாம் தற்பொழுது 8 கோடி பேர்!
இந்தியாவை தோரயமாக 50 வருடங்கள் காங்கிரஸ் ஆண்டிருக்கும் நேரு தொடங்கி இன்றைய மோடி வரை ,அதே போல் இந்தியாவிலேயே முதல் பிராந்தியக்கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியமைத்தது திமுக தான், அப்படி பட்ட தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, போன்ற கட்சிகள் ஆண்டிருக்கிறது!
மேற்படி வசனம் பேசும் Elite போராளிகள் 60 வருடம் முன்பு இந்தியா எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி என்ன ?இந்திய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி என்ன ?என்று பேசமாட்டார்கள்!
இந்திய நாட்டுக்கு என்று முதல் ராணுவதையே துவங்கி கட்டமைத்து இன்று ராணுவ பலத்தில் உலகின் 7 ஆவது நாடாக இருப்பதில் தொடங்கி கல்வி-சுகாதாரம்- வேலைவாய்ப்பு- உற்பத்தி பொருளாதாரம்...etc எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் தான்!
அதே போல் தமிழகத்தில் மாநிலத்துக்கு பெயர் தொடங்கி மொழி -இடஒதுக்கீடு- சமூகநீதி மதசார்பின்மை- கல்வி-உள்கட்டமைப்பு -மருத்துவம் அரசுப்பணி-தொழிற்துறை- நீர் மேலாண்மை இவை அனைத்திற்கும் திராவிட இயக்கமும் /ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திமுக -அண்ணா/கலைஞர் அன்றி வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது !
உட்புறத்தில் பார்த்தால் அதிமுக தான் தமிழகத்தை அதிக நாள் ஆட்சி செய்தக்கட்சி ஒன்றுமே செய்யாமலா இருந்தார்கள்? என்று கேட்கலாம் எம்ஜியாரின் 13 ஆண்டுகாலமும் ஜெயாவின் 15 ஆண்டுகாலமும்,பன்னீரின் 2 ஆண்டுகாலமும், பழனியின் 4ஆண்டு காலமும் ஒரு ஒப்பீடு பாருங்கள்!
நீங்களே எஜமானர்கள்!
தரவுகளை பாருங்கள், திமுகவை எதிர்க்க/ கலைஞரை எதிர்க்க ஒரு கட்சி தொடங்கினார் எம்ஜியார்- அவரின் ஆட்சி,அவரின் பிந்தையவர்களின் ஆட்சிக்கு கடிவாளமாய் களத்திலும் ஆட்சிமன்றத்திலும் கலைஞர் இருந்தார் - அவர்களுக்கு இருந்தது ஒரே வழி கலைஞரின் அரசு செய்ததை பட்டி டிங்கரிங் பார்த்து வேறு போர்வையில் உலவவிடுவது, அல்லது முந்தய திட்டத்தைகிடப்பில் போடுவது 28 ஆண்டுகால அதிமுக அரசின் ஒரு பத்து தொலை நோக்குத்திட்டம் யாரவது சொல்வார்களா? ( டாஸ்மாக் ,Esma/Tesma/Pota , இட்லி கடை தோசைக்கடை எல்லாம் சொல்லக்கூடாது கோவமும் படக்கூடாது )
இது போதாம் பொதுவான பார்வையில் சொல்லவில்லை ,சுகந்திர இந்தியாவின் தமிழகத்தை தீர்மானித்தது திராவிட இயக்கங்களும் திமுகவும் தான் !-வேண்டுமானால் சொல்லுங்கள் "இன்னும் செய்திருக்கலாம்" என்று ஒன்னும் செய்யவில்லை என்று சொல்லாதீர்!
உதாரணமாக 4 ஆண்டு பழனிசாமி ஆட்சியின் சாதனை யாரவது சொல்ல முடியுமா?
எளிதில் சொல்லலாம் ....
ஒரு அறிக்கை விடுவார் EPS &Co, அது தவறென்றால் ,அடுத்த 12 மணிநேரத்தில்
மு.க.ஸ்டாலின் "ஒரு அறிக்கை அல்லது ஊடக சந்திப்பு அல்லது போராட்ட அறிவிப்பு அல்லது நீதிமன்ற அணுகுமுறை அல்லது அணைத்து கட்சிக்கூட்டம் கண்டன தீர்மானம்!"
அது மாநில அரசாகட்டும்,மத்திய அரசாகட்டும் ஸ்டாலின் களத்தில் நிற்பார்- புதிய அரசாணை வெளிவரும் அல்லது அரசிடம் இருந்து மறுப்பறிக்கை வரும் ,இதுதான் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது !
அதிமுகவை ஆண்டவர்கள் எல்லோரையும்
இப்படித்தான் கலைஞர் Practice செய்து வைத்திருந்தார் !
இந்த நான்கு ஆண்டைய் கடத்தி விட epsசும் அதிமுகவும் எவ்வளவுத் துரோகம் செய்திருக்கிறது!
நீட்
தமிழக அரசுப்பணிகள்
5/8பொதுதேர்வு குளறுபடிகள்
CAAசட்டங்களுக்கு ஆதரவு....
என்று சொல்லிக்கொண்டே போகலாம்!
இவ்வளவு சீர்கேடுகளுக்கு இடையிலும் தமிழகம் தனித்துவமாக இந்திய அளவில் நிற்க காரணம் யார் என்பது தான் பெரும்பாலானோர் பேச மறுப்பது ,அதைப் பேச தான் கொத்தடிமை பட்டங்களை,200 உப்ஸ் பட்டங்களை வாங்கிக் கொண்டு,வாரிசு அரசியல் பட்டதை வாங்கிக் கொண்டும் தளத்திலும்/களத்திலும் நிற்கிறான் திமுக காரன்!
70 திமுக ஆண்டுகால அரசியல் பயணத்தில் ஊழல் ஊழல் ன்னு எவ்வளவோ பிரச்சாரம் பேசுபவர்களிடம் இருக்கும் ஆதாரத்தை கூட நீதிமன்றத்தில் கொடுக்க நேரம் இல்லாமல் அவர்களும் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் பாவம் !
"இத தப்பா செஞ்சிங்கன்னு சொல்லு அல்லது மாற்றி செஞ்சிருக்கலாம் ன்னு சொல்லு மடையர்கள் போல் திமுக ஒன்னும் செய்யல நாங்களேமாற்று எல்லாத்தையும் மாற்றானும் ன்னு உளறாதிங்க ,அதை விட கோமாளித்தனம் ஏதும் இல்லை !
இது" தமிழ்நாடு" பெரியார் அண்ணா கலைஞரின் நாடு !
சில நாட்கள் முன்பு நாட்டின் உள்துறை அமைச்சர் Amith Shah தமிழ்நாட்டுக்கு வந்து திமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்ததுன்னு மேடை போட்டு கேட்கிறார், இதை கேக்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க ?
இந்தக் கேள்வியை வேறு எந்தக் கட்சிகளிடமும் தமிழகத்தில் நீங்க கேக்கவே முடியாது!நல்லா யோசிங்க ஜி
எல்லாம் சொல்லிட்டு நீங்களும் அவுங்க சொல்வதை போல் ஜெயலலிதா ஒண்ணுமே செய்யல்ல ன்னு சொல்லுறீங்களே ?நியாயமா என்கிறீர்களா ?அதற்கு கலைஞர் சொல்லி இருக்கிறார் அம்மையாருக்கு அவர் கொடுத்த இரங்கல் அறிக்கை தான் ஜெயாவின் வாழ்க்கையின் வரலாறு வேறு ஒன்றும் இல்லை !
"மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று விரைவில் வீடுதிரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைக்கு மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். கட்சிகளைப் பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கட்சியின் நலனுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் என்பதில் எவருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்த வயதிலேயே அவர் மறைந்திவிட்டார் எனினும் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும் இலட்சக் கணக்கான தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
திமுக வுக்கு பெருசா தோழர்கள் கூட ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய முன்வர மாட்டார்கள்- ஆனால் வாழையடி வாழையாக ஒவ்வொரு வீட்டில் இருந்து வருவார்கள் !
அதை நீங்க வாரிசுன்னு சொல்வீங்க !
ஆனால் அது எங்களின் தலைமுறை !
என்று நாங்கள் உறக்கச்சொல்லுவோம்
தமிழகம் காப்போம் அடிமைகளிடம் இருந்தும் காவிகளிடம் இருந்தும்!
மு.ரா. விவேக்