சமுக உறவில் தேடுங்கள்

Loading

Thursday, February 7, 2019

*யார் இந்துக்களுக்கு எதிரி?*

*யார் இந்துக்களுக்கு எதிரி?*

இதுவரை வழங்கப்பட்டிருக்கும் 48 பாரத் ரத்னா விருதுகளில் 23 விருதுகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் பிராமணர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை விருதுகள். பிற சாதி இந்துக்களுக்கு யார் எதிரி?

தமிழகத்திலிருந்து கிரிக்கெட் விளையாடச் சென்றவர்களில் பிராமணர்கள் அல்லாதவர்கள் எத்தனை பேர்?

ஹெச்.ராஜா பாஜகவின் தேசியச் செயலாளர் ஆனால் தி.நகரில் இருக்கும் பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு எத்தனை முறை சென்றிருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா? நாடார் பெண்ணான தமிழிசை தலைவராக இருக்கும் வரை அந்த அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன் என்று அவர் பிடிவாதம் பிடிப்பது உண்மையா இல்லையா? விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டால் புரியும் யார் இந்துக்களுக்கு எதிரி என்று.

தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது கூட அமர்ந்திருந்த சங்கராச்சாரியார் தமிழர்களுக்கு எதிரி இல்லையா?

கி.பி. 1650 வரை தமிழ் பண்டாரங்கள் பூசை செய்த பழநி ஆண்டவருக்கு ராமப்ப அய்யர் என்ற திருமலை நாய்க்கரின் படைத்தளபதி ‘பிராமணரில்லாதவரிடம் பிரசாதம் வாங்க மாட்டேன்’ என்று சொல்லி பார்ப்பனர்களைக் கோவிலுக்குள் கொண்டு வந்து பண்டாரங்களை வெளியில் அனுப்பினார். தமிழர்களுக்கு யார் எதிரி?

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மட்டும் சுமார் 5000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. குடமுழுக்குக்கு என திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட தொகை 550 கோடி ரூபாய்கள். அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 140 கோடி ரூபாய். யார் இந்துக்களுக்கு எதிரி?

மணமகளிடம் திருமணத்தின் போது ‘நீ முதலில்சந்திரனுக்கு உரியவள்; பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான்; அவனுக்குப் பிறகு அக்னி உன்னை அடைந்தான்; இனி நான்காவதாக இவன் உனக்குக் கணவன் என்று மந்திரம் சொல்லி அதைத் திருமணத்தில் ஓதி இந்துப் பெண்களை விபச்சாரிகளாக மாற்றி வைப்பது யார்? யார் இந்துக்களுக்கு எதிரி? (இந்த விளக்கத்தைக் கொடுத்தவர் சங்கராச்சாரியார்)

காலங்காலமாக தமிழர்களின் மரபு சார்ந்த கோவில்களில் ஆடு கிடா வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்து தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க முயன்றது யார்?

இந்துக்களுக்கு எதிரி யார் என்று புரிகிறதா? காலங்காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த கூட்டம் இன்றைக்கு தமிழக அரசையும் அடிமைப்படுத்தியிருக்கிறது.

தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு நெடுகவும் தமிழர்களுக்கும், சாதி இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்டர்வர்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து, ஏமாந்தவர்களை அடிமைகளாக்கி, , தமிழர்களின் உரிமைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த அதே சிறு பிராமணக் குழுதான் ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று குரல் எழுப்பி, ஏமாற்றி ஓட்டு வாங்கும் வித்தையைச் செய்து கொண்டிருக்கிறது. இதனைச் சுட்டிக் காட்டுகிறவர்களையெல்லாம் ‘இந்துக்களின் எதிரி’ என்று முத்திரை குத்துகிற பார்ப்பனர்களும், அவர்களது பாஜகவும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் கட்சிகளும்தான் தமிழர்களுக்கும் தமிழகத்தைச் சார்ந்த இந்துக்களுக்கும் எதிரி.

தமிழர்களே விழிப்பாக இருங்கள்.
#கோவைகவிதா

No comments:

Post a Comment