திமுக vs அதிமுக என்கிற போட்டிதான் எப்போதுமே தமிழகத்தில். அந்த போட்டியின் நடுவில்தான் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது.
அயோத்தியின் கரசேவைக்கு ஆள் அனுப்பிய, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதாவையே வாக்கு எனும் அஸ்திரத்தால் சமூகநீதி நோக்கி நகர்த்திய மாநிலம் இது. 2006-2011ல் திமுக மா.செக்கள் செய்த தவறுகளுக்கு ஸ்டாலினை பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வைத்த மாநிலம் இது.
இரு கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவதுதான் இருகட்சி அரசியல்வாதிகளின் கொட்டத்தை கட்டுக்குள் வைக்கும் என்பதில் தெரிந்தோ தெரியாமலோ தமிழக மக்கள் கவனமாக இருந்தார்கள்.
2009ல் குழப்பம் ஆரம்பித்தது. ஈழ அரசியலையும், தமிழக அரசியலையும் அயோக்கியர்கள் குழப்பத் துவங்கினார்கள். புலம்பெயர் தமிழர்களும், NRI தமிழர்களும் #தமிழகத்தில் புதிதாக #முளைத்த #பிண #வியாபாரிகளுக்கு அள்ளி வழங்கத் துவங்கினார்கள்.
'என்ன பேசவேண்டும்' என்கிற அரசியல் மாறி, 'என்ன பேசினால் காசு கிடைக்கும்,' என்கிற புது அரசியல் தோன்றியது. '#திராவிடத்தால் #வீழ்ந்தோம்,' எனும் #கூச்சல் உயிர்பெற்றது.
காத்திருந்த #RSS #பொறுக்கிகள் சரியாக உள்ளே புகுந்து, "ஆமாம். திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்," என #நாம் #தமிழர் போன்ற தமிழ்நாஜிக்களின் #ரூபத்தில் #கத்தத் #துவங்கினார்கள். பெரியார் நாயக்கர் ஆனார். பெரியார் கன்னடர் ஆனார். குழப்பம் துவங்கியது. அழிவு துவங்கியது.
பாண்டே வந்தார். பாண்டேக்கள் வந்தார்கள். 2011-2016 வரையிலான ஜெவின் ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தி தொடர்ந்து மடை மாற்றப்பட்டது.
#விவாதங்கள் எல்லாம் எதிர்கட்சியாகக் கூட இல்லாத #திமுகவைப் #பற்றியே #இருக்கும் #வகையில் #பார்த்துக்கொள்ளப்பட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல கடைசி சீனில் 'மநகூ' உருவானது. ஒருபக்கம் கலைஞரையும், ஜெயலலிதாவையும், ஸ்டாலினையும்விட #விஜயகாந்த் #மேலானவர் என ஞானிகள் கூட #வெட்கமே #இல்லாமல் #கருத்து தெரிவித்து குழப்பினார்கள்.
இன்னொருபக்கம், "திராவிடத்தால் விழுந்தோம்... இருகட்சிகளும் ஒன்றுதான்...," என்றும் நாம் தமிழர் நாஜிக்களும், பங்குனி17 அனார்கிஸ்டுகளும் கோஷமெழுப்பினார்கள்.
சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் சைக்கோத்தனம், வெயில்நேர பொதுக்கூட்ட மரணம் என எல்லா அவலங்களையும் தாண்டி, உடல் நலிந்த ஜெயலலிதா அவரே எதிர்பாராத வகையில் மீண்டும் ஜெயித்தார். (ஆனால் #ஜெயலலிதா #ஐந்தாண்டுகள் #ஆள #மாட்டார் #என்பதையும், அவருக்குப்பின் குழப்பம் வரும் என்பதையும், அவர் RK நகர் வெள்ளத்தை மேற்பார்வை செய்ய சிரமப்பட்டதையும், பிரச்சாரத்திற்கு வர அவஸ்தைப்பட்டதையும் வைத்து #டெல்லி #தமிழ்விரோதிகள் #எதிர்பார்த்திருந்தார்கள். ஜெ மீண்டும் ஜெயிக்கவேண்டும் என்றே விரும்பினார்கள்.
நியாயமாக தமிழகத்தின் ஆட்சி ஆர்டரின்படி 2016ல் திமுக ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணம் மர்மமானதாக இல்லாமல், மரியாதைக்குரியதாக இருந்திருக்கும்.
தமிழகத்தையும், தமிழரையும் காட்டிக்கொடுக்கும் திருட்டு அடிமைகள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.
பாஜக எனும் தமிழர் குரோதம் பிடித்த வெறிநாய் கொள்ளைப்புறமாக உள்ளே வந்து, நடுவீட்டில் உட்கார்ந்திருக்காது.
அனிதா டாக்டர் ஆகியிருப்பாள். கிருஷ்ணசாமி தன் மகன் டாக்டர் ஆவதைப் பார்த்திருப்பார்.
தூத்துக்குடியில் 13பேர் குருவிகள் போல சுருண்டு விழுந்திருக்க மாட்டார்கள். சுத்தமான மூச்சுக்காற்றுக்காகப் போராடிய 17 வயது பெண் தன் வாயில் புல்லட்டையும், தன் மரணச்செய்தியில் பயங்கரவாதி என்கிற பட்டத்தையும் சுமந்திருக்க மாட்டாள்.
தமிழர்களே... நாம் சரியாக இருந்தோம். நம் அரசியல் தெளிவாக இருந்தது. #உட்கட்டமைப்பில் இருந்து, #தொழிற்வளர்ச்சிவரை நம் மாநிலம் ஏனைய #இந்திய #மாநிலங்களைவிடவும் #முன்னேறி #இருந்தது.
நம் வரியில்தான் வட இந்திய சோம்பேறிகள் இன்னமும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாம் முட்டாள்கள் என டிவியிலும், முகநூலிலும், வாட்சப்பிலும் பரப்பிப் பரப்பி நம்மையே நம்பவைத்தார்கள்.
நம் அரசியல் தவறு என நம்மையே பேச வைத்தார்கள். உயிரோடிருக்கும்போதே நம் நெற்றியில் நெத்திக்காசு ஒட்டி, நம்மை பிணம் என நம்மையே நம்ப வைத்தார்கள்.
குஜராத்தையும், முள்ளிவாய்க்காலையும் உருவாக்கியவர்கள் நமக்கு சொர்க்கத்தைக் காட்டுவதாக வாக்களித்து ஏமாற்றினார்கள்.
உட்டோப்பியாவுக்கு ஆசைப்பட்டோம். டிஸ்டோப்பியாவில் தவிக்க விட்டிருக்கிறார்கள். இன்று அன்றாடம் ஒரு பேரழிவை, பெருந்துயரை, பேரிழப்பை சந்திக்கிறோம். சாவுச்செய்தி நமக்கு வானிலை அறிக்கை ஆயிற்று.
அவர்கள் இன்னமும் விடவில்லை. #நாம் #இன்னமும் #ஏமாறுவோம் #என #நம்புகிறார்கள்.
இதோ இப்போது ஆன்மீக அரசியல் செய்ய #ரஜினி வந்திருக்கிறார். ஊழலை ஒழிக்க #கமல் வந்திருக்கிறார். அதே 'சொர்கம்' பொம்மைக்கு வேறு வண்ணம் தீட்டி #விற்க #வந்திருக்கிறார்கள்.
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் #திராவிடத்தால் #வீழவில்லை. #திராவிடத்தால் #வீழ்ந்தோம் என #சொன்னவர்களால்தான் #வீழ்ந்தோம்.
அவர்களுக்குத் தேவை வெற்றி இல்லை. குழப்பம்தான். இன்னும் ஒருமுறை, ஒரே ஒருமுறை நாம் குழம்பினால்கூட நம்மையும், நம் தமிழ்நாட்டையும் யாராலும் காப்பாற்ற முடியாது.
விழித்துக்கொள்வோம். இனி வீழோம்.
-அசோக்.R (டான் அசோக்).