தொகுப்புகள்

Search This Blog

Wednesday, November 30, 2016

பொருளாதாரம் தெரிந்து கொள்ளுங்கள்

Cash velocity

நீங்கள் ஒரு ஊரில் இருக்கீங்கன்னு வைங்க. அங்க நீங்க கட்டட இஞ்சினியர் வேலை பார்க்கறீங்க, ஊரில் இன்னும் ஒரே ஒரு ஆள் இருக்கார் அவரு ஹோட்டல் நடத்துறார். நீங்க கட்டிடம் கட்ட அவருடைய நூறு ரூபாய் தருகிறார் நீங்க தங்க சாப்பிட நூறு ரூபாய் தரீங்கன்னா , அங்கு இருநூறு ரூபாய்க்கு பரிமாற்றம் நடந்து இருக்கு ஆனா ஒரு நூறு ரூபாய் நோட்டு தான் புழக்கத்தில் இருக்கு.

ஆக பண மாற்று 2 மடங்கு

இப்போ ஊருக்குள்ள இன்னொரு காய்கறி அங்காடி கடைக்காரர் மற்றும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் வருகிறார் என்று வையுங்கள்.

காய்கறி கடைகார்ர் , ஆட்டோ ஓட்டுனர், நீங்க மூனு பேரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கீங்க. ரூம் வாடகை முறையே 100 ரூபாய். ஒரே நாளில் ஹோட்டல்கார்ர் சம்பாத்தியம் 300 ரூபாய்.

அப்புறம் அவர் ஆட்டோவில் போய் காய்கறி கடைகார்ரிடம் 150 ரூபாய்க்கு பொருள் வாங்குகிறார் ஆட்டோவிற்கு 50 ரூபாய் கொடுக்கிறார்.
இப்ப அவரிடம் இருப்பு 100 ரூபாய், காய்கறிகடையாளிடம் 150 ரூபாய், ஆட்டோகார்ரிடம் 50 ரூபாய்.

காய்கறிகார்ர் புதிதாக கட்டும் அங்காடி பணி உங்களிடம் தருகிறார். நாள் சம்பளம் 100 ரூபாய். நீங்கள் ஆட்டோவில் 50 ரூபாய் செலவு செய்து வேலை செய்கிறீர்கள் அப்போது காய்கறி ஆளிடம் மிச்சம் 50 ரூபாய் மிஞ்சும், உங்களிடம் 50 ரூபாய் மிஞ்சும், ஹோட்டல் ஆளிடம் 100 ரூபாய், ஆட்டோகார்ரிடம் 100ரூபாய்.

இப்போ மொத்தம் 300 ரூபாய்தான் இருந்தது ஆனால் பரிமாற்றம் நடந்த தொகை எவ்வளவு 300+ 150+50+100+50 ---->650 .

அதாவது நாள் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 2.16 முறை மாறி இருக்கிறது.

அடுத்த நாள் தங்க உங்களிடம் போதுமான காசு இல்லை நாள் முடிவில் தான் இருநூறு ரூபாய் கிடைக்கும். எனவே அன்று நீங்கள் கடன் வாங்க வேண்டும் அப்போது புதிதாக ஒரு சேட்டு கடன் தர ஊருக்கு வருகிறார். அட ஆட்டோ ஓட்டினால் 100 ரூபாய் கிடைக்கிறதா என்று இன்னொரு ஆட்டோகார்ர் வருகிறார்.

இப்போது ஐந்து பேர் தங்குகிறார்கள்.

ஹோட்டல் ஆளிடம் இருப்பது 150, காய்கறி ஆளிடம் 50, ஆட்டோ ஓட்டுனரிடம் 100 , உங்களிடம் 50, புதிதாக வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் 100 சேட்டு கையிருப்பு 500.

மொத்த பணம் 950

சேட்டு உங்களுக்கும், காய்கறி ஆளுக்கும் 100 ரூபாய் கடன் தருகிறார்.

ஹோட்டலுக்கு 100 ரூபாய் தருகிறார். மிச்சம் 200 ரூபாய் தன்னிடம் வைத்துக்கொள்கிறார்

அப்போது மொத்த பணம் 950 ஆனால் புழக்கத்தில் உள்ள பணம் 750 . 200 இருப்பாக இருக்கிறது.

ஹோட்டல்கார்ரிடம் 500 ரூபாய் எல்லோரும் சேர்ந்து தருகிறீர்கள் அப்போது அவரிடம் இருப்பது 150 +500 ---> 650 ரூபாய்.

இன்னும் ஒரு அறை அதிகப்படுத்த சொல்லி உங்களுக்கு 200 கொடுக்கிறார். காய்கறிகடையில் 250 ரூபாய்க்கு பொருள் வாங்குகிறார். ஆட்டோவிற்கு இருவருடன் பேரம் பேசி 40 ரூபாய்க்கு போகிறார். அப்போது அவரிடம் மிச்சம் இருப்பது 160 ரூபாய்.

உங்களிடம் 200 ரூபாய்.காய்கறி கடைகார்ரிடம் இருப்பது 300 ரூபாய். அங்காடியை பெரிதாக்க உங்களுக்கு 150 கொடுக்கிறார் உங்கள் ஆட்டோ வாடகை 50 ரூபாய். ஆக உங்கள் இருப்பு 300 ரூபாய், காய்கறிகடைகாரிடம் 150 ரூபாய்.

சேட்டு ஆட்டோ எடுத்துக்கொண்டு பணம் வசூலிக்க வருகிறார் நீங்கள் 150 ரூபாயும், காய்கறி ஆள் 150 ரூபாயும் கொடுக்கிறீர்கள் ஆட்டோவிற்கு (இரண்டாவது ஆட்டோ) (வட்டியுடன்) 50  ருபாய் கொடுக்கிறார்

ஆக இன்றைய முடிவில் சேட்டிடம் 450 ரூபாய், உங்களிடம் 200 ரூபாய், ஹோட்டல் ஆளிடம் 160 ரூபாய், காய்கறி ஆளிடம் 0 , ஆட்டோ ஓட்டுனர் 1 90 ரூபாய் , ஆட்டோ ஓட்டுனர்2 50 ரூபாய்.

மொத்த பரிமாற்றம் 500+ 200+250+40+150+50+150+150+50 -----> 1540 ரூபாய். புழக்கத்தில் இருந்த பணம் 750 ரூபாய் . ஆக ஒரு நூறு ரூபாய் 2.05.

பணமாற்று ஏன் குறைந்தது ? இடையில் சிலரிடம் முழுதாக செலவாகாமல் சேமிப்பாக / லாபமாக பணம் தங்கிவிடுகிறது. அதனால் பணம் தனது முழு பரிமாற்றத்தைவிட குறைவாக ஆனது.

மூன்றாவது நாள் சேட்டுக்கு கொண்டாட்டம், இரண்டு ஆட்டோ ஆட்களும், காய்கறி ஆளும் சேர்த்து முன்னூறு ரூபாய் கடன் தருகிறார். புழக்கத்தில் பணம் அதிகரிக்கிறது. புது ஆட்கள் ஊருக்குள் வருகிறார்கள். பண பரிமாற்றம் அதிகரிக்கிறது. லாபங்கள்/ சேமிப்புக்கள் பணத்தை முடக்கி போடுகின்றன, புதிய கடனாளிகளும், மூடும் தொழில்களும், புதிய வேறு ஆட்களும், மேலும் பணமும் வருகிறது.

செலவு குறைப்பு, லாபம் அதிகரிப்பு, போட்டி நிறுவனத்தை வாங்குவது, இன்று பேர் சேர்ந்து விலையை அதிகரிப்பது, கடனுக்கான வட்டி அதிகரிப்பது, கடன் கட்ட முடியாமல் நொடித்து போவது ,வாரா கடன், என பொருளாதாரம் மாறுகிறது. இதற்கு இடையில் ஊருக்கு வெளியில் தங்கள் வீட்டில் தங்கி செலவு குறைப்பது, ஊருக்கு வெளியில் இருந்து பொருட்கள் வாங்குவது, இங்கு விற்பனை குறைய வேறு ஊருக்கு காய்கறி விற்பது, வாங்க விற்க வரும் ஆட்கள் ஊரில் ஹோட்டலில் தங்குவது என பொருளாதாரம் மாறிப்போகிறது....

இப்போதைக்கு இது போதும். ஆக கேஷ் வெலாசிட்டி என்பது ஆண்டிற்கு பணம் எத்தனை முறை கைமாறுகிறது என்பதே

இந்திய ஜிடிபி 130 லட்சம் கோடி இந்திய கேஷ் வெலாசிட்டி 1.3 ஆக இருக்க வேண்டிய பணம் 100 லட்சம் கோடி ஆனால் இருப்பதோ 18 லட்சம் கோடி. எப்படி ??????

அதற்கு broad money, narrow money என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அது என்ன broad money ,narrow money?????
சொல்கிறேன்....

பகுதி 2 :

நீங்கள் 100 ரூபாய் எடுத்துக்கொண்டு வெளியே போகிறீர்கள். உங்கள் மனைவி ஆரஞ்சு வாங்கிவர சொல்கிறார், உங்கள் மகன் சாக்கிலேட் வாங்கி வர சொல்கிறார் என்று வையுங்கள்

முதல் சினாரியோ : நீங்கள் பன்னாட்டு நிறுவன குளிரூட்டு பழ நிலையத்திற்கு போகிறீர்கள். அங்கு ஒரு கிலோ ஆரஞ்சு 100 ரூபாய் என்று சொல்கிறார்கள்.  வாங்கிவிட்டீர்கள் ஆனால் மிட்டாய் வாங்க காசு இல்லை .

இந்த நிறுவனம் பழம் கொள்முதல் செய்த விலை 40 ரூபாய் என்று வையுங்கள், அவர்கள் பிக்சட் செலவு 20 ரூபாய் என்று வைத்தால் அவர்கள் லாபம் 40 ரூபாய்.

இரண்டு : நீங்கள் இந்திய குளிரூட்டு காய்கறி பழ அங்காடிக்கு போகிறீர்கள். பழ விலை 80 ரூபாய். நீ்ங்கள் ஒரு கிலோ வாங்கிவிட்டு மகனுக்கு 2 பத்துரூபாய் மிட்டாய் வாங்கி வருகிறீர்கள்.

இந்த கடை கொள்முதல் விலை 50 ரூபாய், கட்டாய நிர்வாக செலவு 25 ரூபாய் என்றால் லாபம் 25 ரூபாய்.

மூன்று : நீங்கள் தெரு பழக்கடைக்கு போகிறீர்கள் , பழவிலை 60 ரூபாய், இப்போது நீங்கள் 60 ரூபாயக்கு பழம் வாங்கி 20 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி, மிச்சம் உள்ள 20 ரூபாய்க்கு புத்தகம் வாங்கி போவீர்கள். இல்லை என்றால் அந்த 20 ரூபாய் பல செலவுகளை சேமித்து பிடித்த பொருள் வாங்குவீர்கள்

பழ விலை 30 ரூபாய்., நிர்வாக கட்டாய செலவு 20 ரூபாய் கடைகாருக்கு 10 ரூபாய் லாபம்

நீங்கள் குறைவான நிர்வாக கட்டிணம் உள்ள, செலவு உள்ள இடத்தில் பொருள் வாங்கும் போது உங்களின் மொத்த வாங்கும் திறன் அதிகரிக்கிறது. விலை அதிகமாக கொடுத்து வாங்கும் போது வாங்கும் திறன் குறைகிறது.

அதே போல் உங்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் போது ஒரு நூறு ரூபாய் பல ரூபாயாக பலரிடம் கைமாறுகிறது. அதுவே நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்க உங்கள் வாங்கும் திறன் குறைய பணம் சில இடங்களில் மட்டும் இருப்பை சுருக்கிக்கொள்கிறது.

பழத்தின் விலை போக, கட்டாய நிர்வாக செலவு போக லாபம் வேறுவேறாக இருந்தால் வாழ்க்கைதரம் வேறுவேறாக இருக்கும். தெருவோர கடைகார்ர் வாழ்க்கை தரம், நடுத்தர பழக்கடை அண்ணன் வாழ்க்கை தரம், பெரிய சூப்பர் செயின் உள்ள ஒருவரின் வாழ்க்கை தரம் வேறு வேறாக இருக்கும். செலவை போல் சேமிப்பும் இருக்கும். சிறு கடைகார்ர் ஐந்து ராய் சேமித்தால் அடுத்த பெரிய கடை நடத்துபவர் 15 ரூபாய் சேமிக்கிறார், பெரும் கார்பரேட் முதலாளி  25 ரூபாய் சேமிக்கிறார்

இந்த சேமிப்பு வங்கியில் முடங்கிவிடுகிறது. அதாவது நீங்கள் கொடுத்த 100 ரூபாய் பெரும் கார்பரேட்டிம் போக 25ரூபாய் முடங்கி 75 ரூபாய் வெளியேபோகிறது, நடுத்தர கடையிடம்போக 15 ரூபாய் முடங்கி 85 ரூபாய் போகிறது, தெருவோர கடைகார்ரகள் பலரிடம் போக 5 ரூபாய் சேமிப்பு போக 95 ரூபாய்புழக்கத்தில் போகிறது.

இந்த 75,85,95 ரூபாய் கொண்டு அவர்கள் பொருள் வாங்க அது 60,70,80 பின் 45,55,65 பின் 30,40,50 அதன் பின் 15,25,35 பின் 0,15,25 பின் 0,0,10 என மாறுகிறது.

ஆக வசதி குறைந்தவரிடம் போகும் பணம் பல முறை சமூகத்தில் சுற்றுகிறது. பல பொருட்களை மொத்த விலை அடிப்படையில் அந்த பணம் வாங்குகிறது. அதுவே வசதி மிகுந்தவரிடம் செல்லும் பணம் குறைவாக புழங்குகிறது மிச்சது வங்கியில் டெபாசிட்டாக இருக்கிறது.

இது தான் பேஸ். RBI இணையத்தில் போய் பார்த்தால் தற்போது மக்களிடம் புழக்கத்தில் 16 லட்சம் கோடி இருப்பதாக சொல்கிறார்கள், ஜிடிபி 150 லட்சம் கோடி, நாம் ஏற்கனவே படித்த கேஷ் வெலாசிட்டி 1.3 அப்ப மிச்ச கோடிகள் எங்கே ?

கையில் புழங்கும் காசு தவிர மிச்சதெல்லாம் எங்க இருக்கும் ? வங்கியில் இருக்கும், தபால் சேமிப்புகணக்கில் இருக்கும் (வங்கிகள் விரிவடைய தபால் அலுவலகம் பக்கம் யாரும் போறதில்லை) இன்றைய நிலையில் 16 லட்சம் புழக்கத்தில் பணமாக இருக்கு, 10 லட்சம் கோடி டிமான்ட் டெபாசிட்டாக இருக்கு . அது என்ன டிமான்ட் டெபாசிட் ? நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள கூடிய ஏடிஎம், செக் மூலம் எடுத்துக்கொள்ள கூடிய வங்கி பேலன்ஸ் பணம், நாள் முடிவு டெபாசிட் இது எல்லாம் டெமான்ட் டெபாசிட். அடுத்து கிட்டத்தட்ட 90 லட்சம் கோடி வைப்பு தொகையாக - பிக்சட் டெபாசிட்டாக இருக்கு. ஆக மொத்தம் 115 லட்சம் கோடி.

ஆக 150 லட்சம் கோடி ஜிடிபி அதாவது பொருள் மற்றும் சேவை விற்பனையை 115  லட்சம் கோடி பணம் பெற்று தந்து உள்ளது. கிட்டத்தட்ட 1.3 மடங்கு பணம் தன் பங்கைவிட அதிகமாக பரிமாறப்பட்டுள்ளது.

இதில்  மக்கள் மற்றும் நிறுவனங்கின் கையிலிருக்கும் பணம் வெறும் 25/லட்சம் கோடிதான் (கையிருப்பு + வங்கி டிமான்ட் இருப்பு ) இந்த 25 லட்சம் கோடியை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் . இது லிக்விட் பணம் அதாவது எளிதில் எடுத்து மாற்றி பொருள் வாங்க உதவும் பணம். இதை தான் M1 என்று சொல்கிறார்கள். அதாவது narrow money அதாவது உடனடியாக எடுக்கக்கூடிய பரிமாற்றம் செய்யக்கூடிய பணம்.

இதனுடன் நீண்டகால வங்கி இருப்பை சேர்த்தால் வரும் 115 லட்சம் கோடி மொத்தமாக வங்கியிலும் கையிலும் மக்கள்+ நிறுவனங்கள் வைத்து உள்ளார்கள். இந்த வங்கி மற்றும் கையிருப்பு பணத்திற்கு பெயர்  M3. அதாவது மொத்தம் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்களின் கைஇருப்பு மற்றும் வங்கி இருப்பு பணம் (நீண்டகால இருப்பும் சேர்த்து) இதற்கு பெயர் broad money.

வேறு எங்கெல்லாம் பணம் இருக்கும் ? ஆர்பிஐ தன்னிடம் குறைந்தபட்சம் இவ்வளவு பணம் தன்னிடம் வைக்க வேண்டும் என்று வங்கிகளிடம் சொல்கிறது இந்த பணம் தனி, இன்னபிற வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் ஆர்பிஐயிடம் வைத்திருக்கும் பணம் என வேறு பண இருப்புக்கள் உண்டு.

Reserve money என்றால் என்ன  மக்கள் + நிறுவனங்களிடம் கையிலிருக்கும் பணம் + உடனடியாக எடுக்ககூடிய வங்கியில் உள்ள பேலன்ஸ் அல்லது உடனடியாக எடுக்ககூடிய பணம் ( நீண்ட கால டெபாசிட் சேர்க்க கூடாது )+ RBI இருப்பு என மொத்தமாக உடனடி புழக்கத்தில் உள்ள + ஆர்பிஐயிடம் உள்ள பண இருப்பு தான் ரிசர்வ் மணி. குறைந்த காலத்தில் இந்த பண இருப்புகளை உடனடியாக எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். அதாவது வங்கிகளிடம் பண இருப்பு கூடினால் (இப்போது போல்) ,RBI வங்கி RBIயிடம் அதிகமான பணத்தை வைக்க வேண்டும் என்று சொல்லும் அப்படி சொல்லி புழக்கத்தில் உள்ள பணத்தை குறைக்கும் அல்லது சரி செய்யும் அதுவே புழக்கம் குறைந்தால் RBI, தன்னிடம் வங்கிகள் கட்டாயமாக வைக்க வேண்டிய பண அளவை விகித்ததை குறைத்துக்கொள்ளும். இதனால் RBI யிடம் இருந்த பணம் வங்கியில் வரும் அதாவது புழக்கத்தில் வரும். இந்த RBIயிடம் வங்கிகள் கட்டாயமாக வைக்கும் பணம் பெயர் தான் cash reserve ratio.

இவை எல்லாவற்றிற்கும் என்ன சம்மந்தம் ? கையிருப்பு பணம் குறைந்தால் என்னவாகும் ? டிமான்ட் பணம் நீண்ட காலமாக போனால் என்னவாகும்? டிமான்ட் பணத்தை எடுப்பதில் சிக்கல் வந்தால் அரசு கெடுபிடி வந்தால் என்னவாகும்? விற்பனை சிறு நிறுவனங்களில் இருந்து பெரிய நிறுவனங்களிடம் செல்ல பொருளாதாரத்தில் என்ன தாக்கம் வரும் ????

பார்ப்போம்....

பகுதி 3

Broad money, Narrow money, Reserve money, Cash velocity, CRR, GDP இது எல்லாவற்றையும் பற்றி முதல் இரண்டு பகுதியில் பார்த்தோம்

மொத்தம் 115 லட்சம் கோடி பணம் உள்ளது.இதில் 15 லட்சம் கோடி மக்கள் கையில் பணமாகவும் 10 லட்சம் கோடி வங்கி கையிருப்பாகவும் இருப்பதை பார்த்தோம். மிச்சம் 85 லட்சம் கோடி வங்கியில் நீண்டகால இருப்பாக , மற்றது RBIயில் வங்கிகளின் கட்டாய இருப்பதாக பார்த்தோம். ஆண்டு இந்திய ஜிடிபி (ஆண்டு பொருள் மற்றும் சேவை விற்பனை )150 லட்சம் கோடியை இந்த 115 லட்சம் கோடி பணம் மூலம் நாம் அடைகிறோம் அதாவது பணம் 1.3 முறை மாறுவதை படித்தோம்.

ஆனால் உண்மையில் கிட்டத்தட்ட 80 லட்சம் கோடி வங்கியில் நீண்டகால இருப்பாக இருக்கிறது. இது உடனடியாக வருடத்தில் மாறுவதில்லை. 25 லட்சம் கோடி மிச்ச பணமே மாறுகிறது. ஆக மக்களிடம் இருக்கும் 25 லட்சம் கோடி பணம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7.5 முறை மாறுகிறது. ஆக உங்களிடம் உள்ள ஒரு பண தாள் ஒரு ஆண்டில் 7.5 முறை மாறுகிறது. 7.5 மடங்கு பொருள்/ சேவை தேவையை உருவாக்குகிறது.

இதில் உள்ள ஏனைய காரனிகளை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

இந்த டிமானிடேஷனால் என்ன ஆனாது?

புழக்கத்தில் இருந்த பணத்தில் 15 லட்சம் கோடி செல்லாது போய்விட்டது.இது மெதுவாக தான் மீண்டும் வரும். அடுத்ததாக வங்கியில் உள்ள பணத்தை எடுக்க பல கெடுபிடி உள்ள நிலையில் அதுவும் முடங்கிபோகிறது.

நிலைமை சீராகும் வரை எளிதில் மாறும் இந்த பணம் மாறாமல் போகிறது. வங்கி பரிவர்தனை மூலம் பணம் மாறுமே என்றால் உண்மை !!?? ஆனால் இன்று 100 ரூபாய் கையில் இருந்தால் உடனே செலவாகும் பணம் இல்லை என்றால் ? திரும்ப எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவில் ஆன்லைன் பண பரிமாற்றம் மற்றும் டெபிட் கார்ட் பண தரவுகள் மிக குறைவு. ஆண்டுக்கு 7.5 முறை மாறும் பணம் இந்த 2-4 நான்கு மாத பிரச்சனையில் 5 முறையே மாறும். பணம் மாறுவது குறையும் போது பொருள் வாங்குவது குறையும், பொருள்/ சேவை வாங்குவது குறையும் போது உற்பத்தி , தின கூலி ஆட்கள் தேவை, போக்குவரத்து மற்றும் பொருள் மாற்று பரிமாற்றம், புதிய பொருள் வாங்கும் செலவு என பிற உற்பத்திகளும் குறையும். ஆக வரும் ஆறு மாதத்தில் ஜிடிபி  குறைந்து போகும்.

இது பெரிய பணக்கார்ர்களை பாதிக்குமா ? இல்லை! ஏன் பணக்கார்ர்கள் சேமிப்பு அதிகம், பொருள் மாற்றுவது குறைவு என்று பகுதி 2 ல் பார்த்தோம். நடுத்தர, ஏழை மக்கள் தனி நபராக குறைவாக வாங்குனாலும் கூட்டாக பொருட்களை அதிகமாக மாற்றுகிறார்கள்.

வசதி படைத்த வங்கி தேவை உள்ள தளங்களில் உள்ளவர்களின் விற்பனை எந்தளவிலும் பாதிக்கபடபோவதில்லை. ஏனெனில் அங்கே பொதுவாக வாங்குவோர் இணைய , டெபிட் கேரிடெட் வசதி வைத்தே வாங்குவர். ஆனால் சிறு தொழிலும், மூல பொருட்கள், போக்குவரத்து, உற்பத்திநிறுவனங்களும், ரோட்டோர கடைகார்ர்களும், சிறு வணிக நிறுவனங்களும் என அதிக பொருள் வாங்கும் இடம் பாதிக்கப்படும். ஆக ஜிடிபியின் பாதிப்பது இணையத்தில் எழுத முடியாத ஏழை, நடுத்தர மக்களுக்கே அதிகம் ! நாட்டிற்காக தியாகம் செய்ய சொல்லும் மக்களுக்கு பெரியபாதிப்பு இல்லை !

சரி இதன் செலவு எவ்வளவு , எவ்வளவு கருப்பு பணம் பிடிக்கப்படும், நீண்டகால அடிப்படையில் என்னவாகும், இதன் தீர்வு தான் என்ன......

பார்ப்போம்...

நன்றி:- Chockalingam murugaiyan

Wednesday, November 16, 2016

தற்கால பரசக்தி

இந்த சமூகம் விசித்திரம் நிறைந்த பல திட்டங்களை சந்தித்திருகின்றது.
புதுமையான பல அரசியலை கண்டிருகின்றது.
ஆனால் இந்த திட்டம் விசித்திரமும் அல்ல போராடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.முகநூலில் குழப்பம் விழைவித்தேன்.
மோடியையும், லேடியையும் தாக்கினேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை. முகநூலில் குழப்பம் விழைவித்தேன், முகநூல் கூடாதென்பதற்காக அல்ல.
முகநூல் காவிகளின் கூடாரமாகிவிட கூடாதென்பதற்காக.
ஆளும் காட்சியை தாக்கினேன்.
அவன் அம்மையாரி பக்தன் என்பதற்காக அல்ல.
ஆட்சியே காட்சி ஆகி விட்டதை கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை.
உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்க பட்டேன்.
நேரடியாக பாதிக்க பட்டேன்.
சுயநலம் என்பீர்கள்.
என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்த்திருகின்றது.
ஆகரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.
என்னை குற்றவாளி என்கிறார்களே.
இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
மனிதநேய மிக்க மனிதர்கள் இல்லை என் பாதையில். மதத்தால் மதம் பிடித்த மதவாதிகள்.
சாதியை தீண்டியதில்லை நான்.  தீயை தாண்டியிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை.
கமண்ட் எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இந்த ஊட்டியிலே பிறந்தவன் நான்.
பிறக்க ஒரு ஊர்.
பிழைக்க ஒரு ஊர் .
தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?
ஊட்டி என் உயிரை வளர்த்தது.
அவிநாசி என்னை உயந்தவன் ஆக்கியது.
வங்கி வாசலியே தவம் கிடக்கும் என் மக்களை காண வந்தேன்.  அதிரடி திட்டம் என்று சொல்லி உங்களையெல்லாம் வங்கி வாசலில் நிற்க வைத்தாரே மோசக்காரர் மோடி..
இவர் அறிவிப்பிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன்.
பணப்பெட்டியை பறி கொடுத்தேன்.
பசியால் திரிந்தேன்.
மெலிந்தேன்.
கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த என் மக்களை கண்டேன் கண்ணற்ற ஓவியமாக.
ஆம்.
வங்கி வாசலில் அடிமைகளாக.
நாட்டி பெயரோ தமிழ்நாடு.
மங்களமான பெயர்.
ஆனால் தண்ணீரும் இல்லை, பணமும் இல்லை...
செழித்து வாழ்ந்த நாடு சீரழிந்து விட்டது.
வேலையில்லா பிள்ளைகள்.
கண்ணிலே நீர்.
விவசாயி  அலைந்தான்..
அவர்களுக்காக நான் அலைந்தேன்.
மக்களுக்கு கருணை காட்டினார்கள் பலர்.
அவர்களிலே சிலர் கைமாறாக  அப்பொலோவில் இருந்து வாக்கு கேட்டனர்.
அதிரடி  திட்டத்தை அறிவித்துவிட்டு அழுக்கமாக நிற்கிறாரே இதோ இந்த கொடியவர் மோடி.
விளம்பரத்தால் மயக்க முயன்றார் என் தாய் நாட்டை.
நான் தடுத்திறாவிட்டால் என் தாய்நாடு அப்போதே விலை போயிருக்கும்.
சில ப்ரோக்கர்களும் காப்பாற்ற வந்தார்கள்.
ப்ரதி உபகாரமாக கரன்சியுடன் கண்டேனர்  கேட்டனர்.
அவர்களில் தலைமையானவன் இதோ இந்த நாதாரி.
கிங்கா, கிங் மேக்கரா என கேட்டிருக்கிறான்.
தமிழர்களின் பெயரால்.
தமிழ் மக்களின் பெயரால்.
தமிழர்கள் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள்.
அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இதோ இந்த மோடிதான்
தான் விவசாயம் செய்த பயிர் வாடுவதை விரும்பவில்லை.
பாடுபட்டு தான் சம்பாதித்த தன் பணத்தை வங்கியில் மாற்ற கூட முடியவில்லை.
அன்றாட செலவிற்க்கு வழியின்றி ப்ரோக்களை அனுகினான்
வங்கி வரிசை வெகுதூரம் இருந்தால் வியாபாரியை அனுகுவது விந்தையல்ல.
ஆயிரம் ரூபாய் காந்தி.
ஐநூறு ரூபாய் காந்தி.
செல்லாது என்றனர் ,
அவர்களே வறுமையில் துடித்துக்கொண்டிருந்த போது இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறார்.
அந்த கஷ்ட்டத்தை காண சகிக்காமல்.
கையில் மையிட எதிர்ப்பு தெரிவித்தார்கள் நம் மக்கள்.
இது எப்படி குற்றமாகும்.
தான் சம்பாதித்ததை தாரை வார்த்து விட்டு  தமிழனுக்கு வாழ்வதற்க்கு வழி இல்லை. நாட்டிலே நியாமாக  வாழ்பவர்களுக்கு பாதுகாப்பில்லை.
என் மக்கள் மட்டும் கொஞ்சம் யோசித்து இருந்தால்..
மோடிக்கு மகுடமே கிடைத்திருக்காது
வளர்ச்சி என்ற வலையில், கார்ப்ரேட் உதவியில் குறுக்கு வழியில் மக்களை மடையர்களாக்கியது இந்த அரசு ..
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
மதவாதம் என் மக்களை விரட்டியது.
பயந்து ஓடினர்...
(நீட்) நுழைவுத் தேர்வு என் மாணவர்களை துரத்தியது.
மீண்டு ஓடினர்...
வறுமை என் விவசாயிகளை பயமுறுத்தியது.
ஓடினர்
ஓடினர்
வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா.
வாழ விட்டார்களா என் மக்களை

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை.
அதுவும் என் வழக்குதான்.
என் மக்களின் வழக்கு.
மை வைத்து என் மக்களின் மானத்தை அழிக்க எண்ணிய  புத்தி புகட்ட மோடியின் வழக்கு.... இதில் என்ன தவறு.
உழைத்து முன்னேற முயன்றது ஒரு குற்றம்.
சமஸ்கிரத்தை எதிர்தது ஒரு குற்றம்.
நான் சிவில் சட்டத்தை எதிர்தது ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
மக்களை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலையவிட்டது யார் குற்றம்.
விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்க்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை கருப்பு பணமும், , லஞ்ச ஊழலும் குறைய போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.....

Babu shanthi