Saturday, February 22, 2014

கொலைக்கு பழி காங் / கொள்கைக்கு பழி அதிமுக


நடுநிலை நாயகங்கள் ஜெயலலிதாவின் பழிவாங்கும் பாசிசவெறியை கண்டிக்க மறுப்பதேன்? கள்ளமவுனம் காப்பதேன்?

ராஜீவ் கொலைக்கு பழிவாங்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியை, அந்த கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிரொலி உள்ளிட்ட மனிதர்களாக தம்மை கருதும் அனைவரும் அவரவர் மட்டத்தில், அவரவருக்கு உரியவழிகளில், வகைகளில், வார்த்தைகளில் கடந்த இரண்டுநாட்களாக கண்டித்துக் கொண்டிருக்கிறோம். இந்த கண்டனங்களில் கட்சி அரசியலைத் தாண்டிய பல கண்டனக்குரல்களையும் எதிரொலி பார்க்கிறது. நல்லது.

இதோ இன்று (21-02-2014) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் முந்தைய திமுக ஆட்சியில் இருந்தபோது திமுக தலைவர் மு கருணாநிதி கட்டியது என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக ஆயிரம் கோடிக்கும் மேலாக பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழித்து, சர்வதேச தரத்துக்கு, நன்கு திட்டமிடப்பட்டு, எதிர்காலத் தேவைகளையும் கணக்கில் வைத்து கட்டப்பட்ட, அற்புதமானதொரு சட்டமன்றத்துடன் கூடிய புத்தம்புது தலைமைச் செயலக வளாகத்தை, பொதுமக்களின் வரிப்பணத்தை 200 கோடிக்கும் மேல் வீணாக செலவழித்து பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாக மாற்றிக்கட்டி, அதை இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா திறந்துவைத்திருக்கிறார். அதுவும் அங்கே நேரில் போகமலே, அந்த கட்டிடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் பழைய தலைமைச்செயலகத்தில் இருந்தபடி, காணொளி காட்சி மூலம்!

அதாவது தனது அரசியல் எதிரி கருணாநிதி கட்டியது என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக, அந்த தலைமைச்செயலக கட்டிடத்தை, பொதுமக்கள் பணத்தில் இருந்து 200 கோடியை வீணாக செலவழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கியது மட்டுமல்ல, அதில் தன் காலடி கூட படக்கூடாது என்கிற அதிகபட்சத்திமிருடன், காணொளிமூலம் திறந்து வைத்திருக்கும் ஜெயலலிதாவின் செயலில் வெளிப்படுவது என்ன? ஜெயலலிதாவின் (கருணாநிதியை) பழிவாங்கும் வெறி, தானென்ற ஆணவம், நான் நினைத்தால் என்னவும் செய்வேன் என்கிற எகத்தாளம் மற்றும் அவரே சட்டமன்றத்தில் பகிரங்கமாக சொன்ன, “ஆமாம் நான் ஒரு பாப்பாத்தி தான்” என்னை எவனால் என்னடா செய்ய முடியும்? என்கிற அதிகபட்ச அகங்காரம் தானே?

ராஜீவ் கொலையால் நேரடியாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியும், தனது தந்தையை இழந்த ஒரு மகனின் பழிவாங்கும் உணர்ச்சியுமே ஒட்டுமொத்த மனித நேயத்துக்கும், ஒரு நாட்டின், ஒரு இனத்தின், ஒரு சில தனி நபர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றால் அதை ஓங்கி உரத்தக்குரல் எடுத்து கண்டிக்கும் தமிழ்நாட்டு நடுநிலை நாயகங்கள், திமுக கட்டிய புதிய தலைமைச்செயலகத்தால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாதவரான ஜெயலலிதா, தனது தனிமனித வக்கிரத்துக்கு வடிகால் தேடும் முயற்சியாக, அந்த தலைமைச்செயலகத்தை 200 கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை செலவழித்து சிதைத்த சின்னத்தனத்தை, அதையும் கூட அந்த கட்டிடத்துக்கு பக்கத்தில் இருக்கும் வேறொரு கட்டிடத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் திறந்துவைத்த மேனாமினுக்கித்தனத்தை திட்டக்கூட வேண்டாம், குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட முன்வரவில்லையே ஏன்?

என்னங்கடா உங்க நடுநிலை? என்னங்கடா உங்க நியாயம்? தமிழ்நாட்டின் நடுநிலை நாயகங்களை பார்க்கும்தோறும் “சீ சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு” என்கிற பாரதியின் வார்த்தைகள் தான் எதிரொலிக்கு நினைவுக்கு வருகிறது.

போங்கடா நீங்களும், உங்க நடுநிலைமையும். நாசமா போக!

பின்குறிப்பு: ஜெயலலிதாவின் இன்றைய சின்னத்தனத்தை எதிர்க்கும் முகமாக, எதிரொலியின் முகப்புப்படம் இன்று முதல் மாற்றப்படுகிறது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் புதிய சட்டமன்ற வளாக புகைப்படமே இனிமேல் எதிரொலியின் முகப்புப்படமாக தொடர்ந்து இடம்பிடிக்கும். அடுத்து அமையவிருக்கும் திமுக ஆட்சியில் இந்த கட்டிடம் எதற்காக திட்டமிட்டு கட்டப்பட்டதோ, அதற்காக பயன்படும்வகையில் மீண்டும் தமிழக அரசின் தலைமைச் செயலகமாகவும் சட்டமன்றமாகவும் மாறும் வரை எதிரொயின் முகப்பு படமாக இந்த புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாக புகைப்படங்கள் மட்டுமே அலங்கரிக்கும். வள்ளுவர் கோட்டம் கட்டிய கருணாநிதிக்கு அழைப்பு இல்லாமலே அந்த கட்டிடத்தை திறந்து வைத்த காங்கிரஸ்கட்சியின் எமெர்ஜென்ஸி கேவலத்தை பொறுமையுடன் தாங்கிய கருணாநிதியும், அவரது திமுகவும் ஏறக்குறைய 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தபோது அவரது பதவிப்பிரமாணம் அதே வள்ளுவர் கோட்டத்தில் நடந்ததைப் போல, அடுத்து தமிழ்நாட்டில் அமையவிருக்கும் திமுக ஆட்சியின் பதவிப்பிரமாணம் இந்த தமிழக அரசின் புதிய தலைமைச்செயலக/சட்டமன்ற வளாகத்தில் நடக்கவேண்டும் என்று எதிரொலி பணிவுடன் கோரிக்கை வைக்கிறது. ஏற்பதும் மறுப்பதும் திமுக மற்றும் கருணாநிதியின் உரிமை.



நன்றி- எதிர்ரொலி 

4 comments:

  1. இதற்கு ,மக்களின் பதில் வரும் தேர்தலில் கிடைக்கும் !
    த ம 1

    ReplyDelete
  2. போடா டுபுக்கு

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே
    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete