எந்தச் சூழ்நிலையில் அன்றைய முதல்வர் கலைஞர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்?
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒரே நேரத்தில் கொன்று குவிக்கும்
ரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்த அதிபர் ராஜபக்சே ஆணை பிறப்பித்துவிட்டார் என்கிற தகவல் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் விடிந்தால் என்ன நடக்குமோ என்ற வேதனையும் பீதியும் நிலவிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் கலைஞர் அவர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார் . தமிழர்களுக்கு நடக்க இருந்த ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது என்பதை மனசாட்சி உள்ளவர்கள் நன்றிக் கண்ணீர் மல்க மனிதநேயத்தோடு போற்றுவார்கள்.
உம்மையிலேயே அங்கு ஏற்பட்ட விளைவு.
பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசின் பிரதிநிதிகள் பலமுறை ராஜபக்சேயைச் சந்தித்தும், வெளிநாடுகள் பலவும் பல வகைகளில் அழுத்தங்களைக் கொடுத் தும், அய்.நா. செயலாளர் வேண்டுகோள் விடுத்தும் அசைந்து கொடுக்காத இலங்கை அதிபர் ராஜபக்சேவை, தமிழ்நாட்டின் முதல்வர், மூத்த தலைவர் மேற்கொண்ட ஒரு சில மணிகள் அளவிலான உண்ணாவிரதம் அசைத்திருக் கிறது; இறங்கி வரச் செய்திருக்கிறது - உயர்மட்டக் குழுவை அவசர அவசர மாகக் கூட்டி புதிய அறிவிப்பை வெளியிடச் செய்திருக்கிறது .
அரசின்செய்திக் குறிப்பு
இலங்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்ற குடி மக்களைப் பெருமளவிற்குக் கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும் என்று கூறியது .
போர் முனையிலிருந்து வெளிவந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டு மன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகி யோரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கை மேற்கொள்வோம் என்றது .
உள்நாட்டில் குடி பெயர்ந்த மக்களும், பொது மக்களும்தான் இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களைப் பாதுகாக்கவும, அவர்களது நலன்களுக்கு உறுதியளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியது .
ஈழத்தமிழர்களைக் காக்க ஜெயலலிதாதான் தலைவரா?
ஈழத்தமிழர் பிரச்சினையில் தொடர்ச்சியாக - இயல்பாக ஈடுபாடு காட்டி வருபவர்கள் யார்? என்பது தான் மிக முக்கியம். சந்தர்ப்பவாதிகளின்
சதுராட்டங்களில் ஏமாந்துவிடக் கூடாது.
போர் நிறுத்தம் செய்யச் சொல்வது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கே என்றும், இலங்கையில் தற்போது நடப்பது உள்நாட்டுப் போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது என்றும், உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலை யிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008) என்றும் பச்சையாக கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமின்றி, ராஜபக்சேயின் சகோதரியாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாதான் -இன்று சிலருக்கு ஈழத் தமிழர்களைக் காக்க வந்த மாமணியாகக் காட்சியளிக்கிறார். ஜெயலலிதா இப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டபோது இந்த வீராதி வீரர்கள் எங்கே போனார்கள்? ஒரு கண்டனம் உண்டா?
3 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என சொண்னார் ஈழத்தாய் ஜெயலலிதா ..
இங்குதான் தமிழ் உணர்வாளர்களிடத்தில் ஒரு கேள்வி
உள்நாட்டு பிரச்சனையில் கூட முதலமைச்சருக்கு தலையிட உரிமை இல்லை என்ற போது...வெளிநாட்டு விவகாரத்தை கலைஞர் சரியாக செய்யவில்லை , இன துரோகி என குற்றம் சாட்டிய தமிழ் உணர்வாளர்களே , இதற்கென்ன உங்கள் பதில் ?
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கண்துடைப்புக்காக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றுக்கிறார்
இரண்டு தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான், “முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு அனுமதி தராமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் அம்மா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் போராட்டங்கள் நடத்த அனுமதி தருகிறார். இவர் தான் உண்மையான ஈழத்தமிழர்கள் மீது அக்கறைக் கொண்ட ஈழத் தாய்” என்று பேசினார்.இன்று ‘ஈனத் தாய்’க்கு நன்றி தெரிவித்தும் மூவர் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தியும் வேலூர் சிறைவாசலிலிருந்து பரப்புரை நடைபயணம் தொடங்கிய சீமானை ஜெ அரசின் போலீசார் கைது செய்தனர். கைது பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “சட்டம் ஓழுங்கு சீர்கெடும் எனக்கூறி கைது செய்துள்ளார்கள். சட்டத்துக்கு கட்டுப்பட்டு கைதாகிறோம் அரசாங்கம் நடைப்பயணம் செல்ல கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி தந்தால் கட்டுப்பாடுகளை மதித்து நடைப்பயணம் செல்வோம். இல்லையெனில் நடைப்பயணம் ரத்து செய்யப்படும். குறிப்பிட்ட தேதியில் கூட்டங்கள் மட்டும் நடைபெறும்” என்றார்.
கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா?
உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை
விரோதியாகவும் கருதுவார்களா?
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?
தோழர்களே.., தியாகம் புனிதமானது. தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இந்த வேளையில் நாம் பிறிதொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. தோழர்களே, தோழர் முத்துக்குமாரின் ஈகம் எதற்குப் பயன்பட்டது ? யாருக்குப் பயன்பட்டது ? யாரால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது ? எனவே தோழர்களே, இங்கேயும் தந்தை பெரியாரின் நிலைப்பாட்டினை நாம் கவனத்தில் கொள்ள மறக்கின்றோம்; பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே....
நன்றி -முகநூல் வட்டம்
கலைஞர் குறித்து முத்துக்குமாரின் இறுதி அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாசகங்கள்:
ReplyDelete"இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே..."
உண்மையை திரி்த்து கூறியிருப்பது மனவருத்தம் உண்ணாவிரதத்தரல் போர் நிற்கவும் இல்லை ஈழம் என்ற வார்த்தை கனவாய் போனது என்பதுவே உண்மை இல்லை என யாராது கூறமுடியுமா? எதிர்காலத்து தமிழா்களுக்கு தப்பான வராலற்றை கூறாதீர்
ReplyDeleteஆட்சி போதை கருணாநிதியின் கண்களை மறைத்தது என்பது உண்மை அதனால் ஈழம் அழிந்தது உண்ணாவிரதத்தால் போர் நின்றது என்றால் ஈழம் எங்கே???????????????????????????
அருமையான பதிவு. இதையும் படியுங்கள் இலங்கை தமிழர் பிரச்சினை – மூன்று முக்கிய குற்றவாளிகள்
ReplyDelete