இந்தமாதிரி விவரங்கெட்ட முதலமைச்சர் இருந்தால் மக்களும் மாக்களாகத்தானே இருப்பார்கள். அந்தக் காலத்தில் மனிதன் அரை நிர்வாணமாக அவ்வளவு ஏன் ஆடையில்லா ஆதிவாசியாகவே இருந்தான். அது காலங்காலமாக இருந்தது என்பதற்காக இன்றைக்கும் மனிதன் அதனையே பின்பற்றுகிறானா என்ன..? இவர்களுக்கெல்லாம் சுய அறிவு என்பதே இருக்காதா?. அறுபது ஆண்டுகள் எனச் சொல்லப்படும் அட்சய முதல் பிரபவ வரையிலான எதுவுமே தமிழ் இல்லை. அப்படி இருக்க அவைகள் எப்படி தமிழ் ஆண்டுகளாகும்? இதற்கு பதில் கூற இதுவரை எவரும் பிறந்துவரவில்லை போலும்? இதை கருணாநிதி செய்தார் என்பதற்காகவே பலர் எதிர்க்கின்றனரே தவிர இதன் உள்ளர்த்தம் என்ன என்பதை எவரும் சிந்திப்பதில்லை.
ஆக பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது. · 60 ஆண்டு சுழற்சி வராது · தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம் · தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. · தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்கு நினைவாக அமையும் · தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச்சிறப்படையும் ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆதலால் தைப்பொங்கல் நாளான தைத்திங்கள் முதல் நாள் - திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டு நாளாகும் முதல்வர் ஜெயலலிதா சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டென்றோ இந்துக்களின் ஆண்டுப் பிறப்பு என்றோ கொண்டாடலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.
புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுப்பகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் (wobble) ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்த பின்னேகலை (Precession of Equinoxes) நட்சத்திரத்தை வைத்து ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இந்தப் பின்னேகலைக் கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் 24 நாள்களால் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப் பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான காலங்களில் கொண்டாடப் படுகின்றன. ஒரு கதைக்கு ஜெயலலிதா இன்னும் 15,000 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் ஞாயிறு மேட இராசி அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாள் அய்ப்பசி 14/15 ஆக இருக்கும். பருவம் வேனில் காலத்துக்குப் பதில் கார் காலமாக இருக்கும். பழைய பஞ்சாங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சித்திரை முதல்நாள்த்தான் வேனில் காலத்தின் தொடக்கம், அதுதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று வாதாட முடியுமா?
சித்திரையில் வருடம் பிறப்பது என்பது ஏனோ மனதிற்கு மகிழ்வழிப்பதாக இல்லை.. காலம் காலமாக சித்திரையில் வருடப்பிறப்பு கொண்டாடப் படுகிறது.. அதை மாற்ற கூடாது என்றுதான் கூக்குரல் வருகிறதே தவிர.. ஏன் சித்திரையில் வருடம் பிறக்க வேண்டும் என்ற விளக்கம் "ஆஹா..அருமை" என்று சொல்லுமளவுக்கு எந்த வரலாற்று பதிவுமில்லை.. சித்திரை என்பது வேனிலின் வருகை... தமிழகத்து வேனில் சுகமா? அடுத்தது.. சித்திரையில் குழந்தை பிறக்க கூடாதாம்.. பிறந்தால் அந்த குழந்தைக்கும் பெற்றோருக்கும் உறவு சுமுகமாக இருக்காதாம் அல்லது பெற்றோரில் ஒருவர் உடல் நலம் ஏதாவது வகையில் குறை படுமாம்.. குழந்தை பிறந்தால் கேடு.. வருடம் பிறந்தால் சிறப்பா..? ஆனால் சித்திரையில் குழந்தை பிறக்க கூடாது என்ற முன்னோர்களின் ஐதீகம், தொடரப்போகும் மூன்று மாத வேனில் வெப்பத்தை புதிதாய் பிறக்கும் பிஞ்சு உடம்பு தாங்காது இறக்க நேரிடலாம் அல்லது உடல் நலம் குறை பட்டு பலவீனமான எதிர்காலத்தை அடைய நேரிடலாம் என்பதை கணித்துத்தான்.. இதை மருத்துவ ரீதியாக சொன்னால் நம்மவர்கள் நம்ப மாட்டார்களே.. அதனால்தான் ஐதீகமாக்கினார்கள்.... தம்பதிகளை ஆடி மாதம் "கூட" விடாமல் தடுத்தனர்.. ஏனெனில் ஆடியில் இருந்து பத்தாவது மாதம் சித்திரை.. சரி சித்திரையை விட்டால் வேறெந்த மாதம் வருட பிறப்பிற்கு சிறப்பு? பல இலக்கியங்கள் தை மாதம் சிறப்பு நிகழ்வுகளை சொல்லுகின்றன.. மேலும் நம் முக்கிய உணவான நெல் விளைந்து அறுவடை நடந்து புது நெல் வீட்டுக்கு வந்து சேரும் மாதம் தை மாதம்.. உழவர் திருநாள்.. அனேகமாக அனைத்து இல்லங்களிலும் வீடு கண்ட நெற்களை விற்று பணம் சேர்த்து மன மகிழ்வோடு இருக்கும் மாதம்.. தை மாதம் வருடப்பிறப்பாக இருக்க இன்னும் என்ன தகுதி வேண்டுமென்று புரிய வில்லை.. ஏன் சித்திரையில் வருடம் பிறக்க வேண்டும்? ஆண்டாண்டு காலம் கொண்டாடுகிறோம் என்ற வழக்கமான வாதத்தைத் தவிர, வேறேதும் வியத்தகு வரலாற்று அல்லது விஞ்ஞான ஆதாரத்தை யாரவது எனக்கு தெரிவித்தால் என்னுடைய இந்த குழப்பம் தீருமென எதிர் பார்க்கிறேன்....

dai dmk sombu un pecha konjam niruthu. neeyum karunanithi pola ethavathu puriyadha madhiri pesi makala kozhapatha
ReplyDeletethank you...
ReplyDeleteShe is a stupid woman from telugu desam and how did she understand the tamil new year???
ReplyDeletevery good collection and what all u said is exactly true to knowledge of tamlilans. she s telling only smlal history. avarukku ulla sittrarivirku siru sombu pol than yosikka mudium.Nandri nanbare.
ReplyDeleteWe get leaders based on people,not people based on leaders. pls correct it.
ReplyDeleteஆஹா அந்த அறுபது வருட "ஐதீகத்தில் "நம்மவர்கள் வானியல் ரீதியாக ஏதாவது சொன்னால் கிறுக்குபயபிள்ளைகள் நம்பாது என்று ஏதாவது விஷயம் வைத்து இருப்பார்களோ?
ReplyDeleteநூறாண்டுகளுக்கு முன்பு
ReplyDeleteகோவணம் கட்டித் திரிந்தோமே
குடும்பத்திற்கு
பத்துப்பன்னிரண்டு
பிள்ளைகள் பெற்றோமே
பார்ப்பானைப் பார்த்தாலே
சாமி.... என்று முதுகு
வளைந்தோமே
இவையெல்லாம் இன்று
மாறவில்லையா?
ஆங்கிலப் புத்தாண்டுகூட
ஏப்ரலில் இருந்து
ஜனவரிக்கு மாறியதுதானே
யாரும் ஏற்கவில்லையா?
இந்த வரலாற்றை
பின்பற்றித்தானே
ஏப்ரல் முட்டாள்கள் (April Fool)
என்று இன்றும்
பள்ளிப் பிள்ளைகள்
நையாண்டி செய்து
விளையாடுவது
வழக்கமாக இருந்து வருகிறது.
ஏண்டா ஞான சூனியங்களா!
ReplyDeleteஜோதிடம் என்பது ஒரு அறிவியல் என்பதை அறியாத மானிடப்பதர்களே! இப்ப எனக்கு டைம் இல்ல. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உங்களுக்கு பதில்(அடி) உரை அளிக்கிறேன்.
உண்மை தான் .. எப்ரலில் /சித்திரையில் இருந்த புத்தாண்டு ஜனவரிக்கு மாற்றபட்டது.. ஆனால் அது எப்ரல் 15ல் வரும் எப்ரல் 1ல் அல்ல..
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஇது நான் போட்ட கமெண்ட் இல்லை. ஜா.ரா என்ற போலி பார்ப்பனன் போட்ட கமெண்ட் . நீக்கிருங்க. அதையும் இதையும்.