சமுக உறவில் தேடுங்கள்

Loading

Tuesday, October 11, 2016

ஜெ க்கு என்ன ? நாக் அவுடா ??

எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கு... ஒரு முதல்வரின் உடல் நிலை திடீரென்று சரிவதும்.. ஆனால் என்ன பிரச்சினை என்ன மருத்துவம் செய்கிறார்கள்.. அதாவது... இது மஞ்சள் காமாலை அல்லது காய்ச்சல் அந்தோபோபியா, இந்தோபோபியா என்று ஏதாச்சும் வெளியே சொல்லி இருக்கணும்.. இந்தியாவின் மிக பெரிய அப்போல்லோ நிர்வாகம் மக்களுக்கு டிவி யில் பேட்டி கொடுக்கணும் ஆனால் அதை 20 நாட்களாக செய்யலை?? முதல் நாள் காய்ச்சல் என்றார்கள்.. ரொம்ப அசால்டாக அவருடைய எந்த ரிப்போர்ட்டும் சீரியஸ் இல்லை என்று தான் சொன்னார்கள்.. மருத்துவமனையில் ஆலோசனை கூட்டம், கட்சி பணி, வேட்பாளர்கள் வெளியீடு, அணை திறப்பு என்று தானே செய்தி வந்தது???? அப்புறம் என்ன ஆச்சு?? இதையெல்லாம் ஜெயலலிதா செய்தார், நடத்தினார், ஆணையிட்டார் என்று செய்தி சேன்னல்களும் அவர்கள் பக்கத்தில் இருந்து பார்த்தது போலவும் அவரே சொன்னது போலவும் தானே செய்தி போட்டாங்க...?? அப்படின்னா அவர்களின் அன்றைய செய்தி பொய்யா?? அப்போல்லோ சொன்ன முதல் அறிக்கை பொய்யா?? அல்லது தற்போது சொல்வது டிராமாவா?? எப்படி எடுத்து கொண்டாலும் அப்போல்லோ சொல்வதில் எதோ ஒரு பொய் இருக்கு.. அவனை சிபி ஐ விசாரித்து உண்மையை கொண்டு வரணும். எதுவும் சொல்லாமல் உயிரை எடுத்தாலும் எடுக்கலாம்.. வேறு யாரோ இதுக்கு மூளையாக இருக்கலாம்.. நிச்சயம் சசிகலா கிடையாது... இதை கேட்க வேண்டிய 130 எம்.எல்.ஏ க்களும் மங்குணிகளாக இருப்பது அதிமுகவின் சாப கேடு..
தற்போது அவரால் பார்க்க முடியலை பேச முடியலை சுவாச கருவி என்றால் எந்த வகை என்று கூட சொல்லலை .. அப்படி என்றால்.. அவரின் அறிவிப்புக்கள் யார் செய்தது?? அவரின் கையெழுத்து எப்படி போட்டார்கள்.. எப்படி கிடைத்தது... யார் பொறுப்பாளர்கள்.. எப்படி யார் நியமித்தது???
ஜெயலலிதா போகுமிடமெல்லாம் கூடவே செல்வதற்கு தானே செய்தி ஒளிபரப்பு துறை.. அந்த மந்திரி என்ன செய்கின்றனர்? தமிழக செய்தி துறை செய்தி மூலமும் ஜெயா டிவியின் செய்தி மூலமும் ஜெயலலிதாவை கடைசி வரை நன்றாக இருந்தார். அதற்கப்புறம் என்ன நடந்தது??? எதற்கு மருத்துவமனை?? ஏன் ஊடகங்களுக்கு செய்தி போகலை?? மருத்துவமனை உடனடியாக மக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கலை?? அது சரி.. உண்மையில் ஜெயலலிதா மிகவும் சீரியஸ் என்றால் அதற்கு யார் பொறுப்பு? வீட்டு வேலைக்காரி சசிகலா குடும்பம் தானே பொறுப்பு?? அல்லது அவர்கள் கூட்டிட்டு போகும் பொது வெறும் காய்ச்சல் தான் என்று அவர்கள் சொன்னால்(அப்போல்லோ காரனும் அன்று அப்படி தான் சொன்னான் அறிக்கையில்) அதற்கு அப்போல்லோ காரன்தானே பொறுப்பு? அல்லது ஒரு சாதாரண உடம்பு சரியில்லாதை காட்டி தீர்ப்பு மற்றும் அணைத்து பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கும் தந்திரம் தானா?? அப்படி என்றால் அதற்கு என்ன தண்டனை?? அல்லது சாதாரணமாக ஜெயலலிதா விளையாட போக உண்மையிலேயே அவரை கட்டம் கட்டி நிர்வாகம் நடக்க முயற்சி நடக்கிறதா??? எது எப்படியோ ஜெயலலிதா பழைய படி வந்தால்.. இது வழக்கம் போல ஜெயலலிதா நடத்திய நாடகம் தான் என்பது ஊருக்கே தெரியும்.. ஏனென்றால் ஜெயா வளர்ப்பு மகன் முதல் ஜானகி மோரில் விஷம் வைத்தது சென்னை ரெட்டி கையை பிடித்து இழுத்து சோனியா பத்தினி இல்லை என்பது முதல் சசிகலாவை விரட்டியது அப்புறம் பலமுறை சேர்த்து ராவணன் அர்ரெஸ்ட் சுதாகரன் கஞ்சா கேசு. என்று பல டிராமாக்கள் மட்டுமே நடந்துள்ளது. அதனால் ஜெயலலிதா பழைய படி வந்தால்.. மக்களும் அசால்டாக இது ஜெயலலிதாவின் டிராமா என்று எடுத்து கொள்வார்கள்.. ஆனால் உண்மையிலேயே சீரிஸியாசாக எதுவும் நடந்தால்... கண்டிப்பாக அதிமுக அடிமைகள் கேட்கிறானோ இல்லையோ... நான் கேட்பேன், சிபிஐ விசாரணை மட்டும் அல்ல.. எல்லோரையும் பிடிக்கணும் அரசு அதிகாரிகள், மந்திரிக்கள், சசிகலா குடும்பம், அப்போல்லோ நிர்வாக, ஷீலா பாலகிருஷ்ணன், செய்தி சேன்னல்கள எல்லோரையும் பிடிக்கணும்..

நன்றி:- Maran Mahavi

No comments:

Post a Comment