தொகுப்புகள்

Search This Blog

Saturday, April 14, 2012

மானை வேட்டையாடிவிட்டு வந்துவிடுகிறேன்:- நல்லதங்காள்



சில கதைகளை கேட்டதும் நெஞ்சம் நெகிழும், சில கதைகள் கேட்டுதும் நெஞ்சம் கனக்கும். நல்லதங்காள் கதை கேட்டாள் இரண்டுமே நடக்கும்.

நல்லதங்காள் கதை –

ராமலிங்க ராஜா, இந்திராணி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தாள் நல்லதங்கள். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் நல்லதம்பி. பெற்றோர்கள் இறந்துவிட நல்லதங்காளை வளர்த்தது நல்லதம்பிதான். காலச்சக்கரம் உருண்டு ஓடின. நல்லதங்காளை மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு மணம் முடித்து கொடுத்தார்கள். மிக பிரம்மாண்டமான திருமணம். எல்லாம் முடிந்தபின்பு அண்ணனை பிரிய மனமின்றி கணவன் காசிராஜனுடன் மதுரைக்கு புறப்படுபோனாள் நல்லதங்காள்.

அங்கு நல்லதங்கள் காசிராஜன் தம்பதிக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. செல்வசெழிப்புடன் வளர்ந்துவந்த அவர்களைப் பார்க்க நல்லதம்பி ஒரு முறை கூட மானாமதுரைக்கு வர வில்லை. காரணம் அவனுடைய கொடுமைக்கார மனைவி மூளி அலங்காரி தான். ஆனால் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். அப்போது திடீரென மானாமதுரையில் வானம் பொய்த்துப்போனது. தொடர்ந்து 12 வருடங்களாக மழை இல்லை.

மக்கள் பஞ்சத்தால் எல்லாம் விற்றார்கள். நல்லதங்காளும் தாலியை தவிர எல்லாம் விற்றுவிட்டாள். அப்போதும் வயிறு நிறையவில்லை. சில இடங்களில் பசி கொடுமையால் மக்கள் சாக தொடங்கினார்கள். நல்லதங்காள் தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அண்ணன் அரண்மனைக்கு செல்வதென தீர்மானம் செய்தாள். ஆனால் இதற்கு காசிராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தும் குழந்தைகளுக்காக மனம் இறங்கினான்.

நல்லதங்காளும் ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தான் பிறந்த ஊரான அர்சுனாபுரத்திற்கு வந்தாள். ஊரின் எல்லையில் பிள்ளைகளுக்கு களைப்பு வந்துவிட ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவளை வேட்டையாட வந்த நல்லதம்பி பார்த்தான். தான் வளர்த்த தங்கை வருமையின் கோரபிடியில் சிக்கி சின்னா பின்னமாக இருப்பதை பார்த்து “ உடனே அரண்மனைக்கு போ, அங்கு எல்லாம் இருக்கிறது.நான் மானை வேட்டையாடிவிட்டு வந்துவிடுகிறேன்” என சொல்லி ஓடிப்போனான்.

மூளிக்கு இவர்கள் வருவது தெரிந்து எல்லா உணவுகளையும் ஒளித்து வைத்தாள். பசியால் வாடிய பிள்ளைகள் மூளியின் அறையில் இருந்த மாங்காயையும், தேங்காயையும் ஆளுக்கு ஒன்றாய் எடுத்தன. அதையெல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு அழுகல் நிறைந்ததை கொடுத்தாள் மூளி. சாதம் சமைக்க வீணான பொருட்களையும் ஓட்டைப்பானையையும் தந்தாள். நல்லதங்காள் அதை வைத்தே கஞ்சி காச்சினாள். ஆனால் அதையும் தட்டிவிட்டாள் மூளி. கீழே வழிந்த கஞ்சியை அள்ளிக்குடித்தார்கள் ஏழு பிள்ளைகளும்.

அந்தக் காட்சியை பார்த்ததும் சகித்துக்கொள்ள முடிய வில்லை தாயால். எல்லா குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பாலுங்கிணற்றிற்கு அருகே போனாள். ஒவ்வொறு குழந்தையாக கிணற்றில் வீசிக்கொன்றாள். பின்பு தானும் விழுந்து இறந்தாள். வேட்டை முடித்து வந்தவனுக்கு அக்கம் பக்கத்தினர் நடந்ததை சொல்ல நல்லதங்காளை தேடி ஓடினான். அவள் ஒடித்துப்போட்ட ஆவாரம் செடி பாதை சொன்னது, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளுடன் அவள் இறந்து போனதை பார்த்தான். காசிராஜன் ஈட்டியால் தன்னை குத்திக்கொண்டு மாண்டு போனான். நல்லதம்பி மூளியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

வறுமைக்கு இரு குடும்பத்தையே பலி கொடுத்ததை இன்னமும் கிராமத்து மக்கள் கதைகளாக சொல்லி வருகிறார்கள். வறுமையின் சின்னமாக நல்லதங்காள் இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

நன்றி:- பிறைசூடன் 

Friday, April 13, 2012

கிறுக்கு பய புள்ளைக்கு புத்தாண்டா ?



இந்தமாதிரி விவரங்கெட்ட முதலமைச்சர் இருந்தால் மக்களும் மாக்களாகத்தானே இருப்பார்கள். அந்தக் காலத்தில் மனிதன் அரை நிர்வாணமாக அவ்வளவு ஏன் ஆடையில்லா ஆதிவாசியாகவே இருந்தான். அது காலங்காலமாக இருந்தது என்பதற்காக இன்றைக்கும் மனிதன் அதனையே பின்பற்றுகிறானா என்ன..? இவர்களுக்கெல்லாம் சுய அறிவு என்பதே இருக்காதா?. அறுபது ஆண்டுகள் எனச் சொல்லப்படும் அட்சய முதல் பிரபவ வரையிலான எதுவுமே தமிழ் இல்லை. அப்படி இருக்க அவைகள் எப்படி தமிழ் ஆண்டுகளாகும்? இதற்கு பதில் கூற இதுவரை எவரும் பிறந்துவரவில்லை போலும்? இதை கருணாநிதி செய்தார் என்பதற்காகவே பலர் எதிர்க்கின்றனரே தவிர இதன் உள்ளர்த்தம் என்ன என்பதை எவரும் சிந்திப்பதில்லை.


ஆக பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது. · 60 ஆண்டு சுழற்சி வராது · தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம் · தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. · தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்கு நினைவாக அமையும் · தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச்சிறப்படையும் ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆதலால் தைப்பொங்கல் நாளான தைத்திங்கள் முதல் நாள் - திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டு நாளாகும் முதல்வர் ஜெயலலிதா சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டென்றோ இந்துக்களின் ஆண்டுப் பிறப்பு என்றோ கொண்டாடலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.

புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுப்பகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் (wobble) ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்த பின்னேகலை (Precession of Equinoxes) நட்சத்திரத்தை வைத்து ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இந்தப் பின்னேகலைக் கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் 24 நாள்களால் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப் பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான காலங்களில் கொண்டாடப் படுகின்றன. ஒரு கதைக்கு ஜெயலலிதா இன்னும் 15,000 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் ஞாயிறு மேட இராசி அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாள் அய்ப்பசி 14/15 ஆக இருக்கும். பருவம் வேனில் காலத்துக்குப் பதில் கார் காலமாக இருக்கும். பழைய பஞ்சாங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சித்திரை முதல்நாள்த்தான் வேனில் காலத்தின் தொடக்கம், அதுதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று வாதாட முடியுமா?

சித்திரையில் வருடம் பிறப்பது என்பது ஏனோ மனதிற்கு மகிழ்வழிப்பதாக இல்லை.. காலம் காலமாக சித்திரையில் வருடப்பிறப்பு கொண்டாடப் படுகிறது.. அதை மாற்ற கூடாது என்றுதான் கூக்குரல் வருகிறதே தவிர.. ஏன் சித்திரையில் வருடம் பிறக்க வேண்டும் என்ற விளக்கம் "ஆஹா..அருமை" என்று சொல்லுமளவுக்கு எந்த வரலாற்று பதிவுமில்லை.. சித்திரை என்பது வேனிலின் வருகை... தமிழகத்து வேனில் சுகமா? அடுத்தது.. சித்திரையில் குழந்தை பிறக்க கூடாதாம்.. பிறந்தால் அந்த குழந்தைக்கும் பெற்றோருக்கும் உறவு சுமுகமாக இருக்காதாம் அல்லது பெற்றோரில் ஒருவர் உடல் நலம் ஏதாவது வகையில் குறை படுமாம்.. குழந்தை பிறந்தால் கேடு.. வருடம் பிறந்தால் சிறப்பா..? ஆனால் சித்திரையில் குழந்தை பிறக்க கூடாது என்ற முன்னோர்களின் ஐதீகம், தொடரப்போகும் மூன்று மாத வேனில் வெப்பத்தை புதிதாய் பிறக்கும் பிஞ்சு உடம்பு தாங்காது இறக்க நேரிடலாம் அல்லது உடல் நலம் குறை பட்டு பலவீனமான எதிர்காலத்தை அடைய நேரிடலாம் என்பதை கணித்துத்தான்.. இதை மருத்துவ ரீதியாக சொன்னால் நம்மவர்கள் நம்ப மாட்டார்களே.. அதனால்தான் ஐதீகமாக்கினார்கள்.... தம்பதிகளை ஆடி மாதம் "கூட" விடாமல் தடுத்தனர்.. ஏனெனில் ஆடியில் இருந்து பத்தாவது மாதம் சித்திரை.. சரி சித்திரையை விட்டால் வேறெந்த மாதம் வருட பிறப்பிற்கு சிறப்பு? பல இலக்கியங்கள் தை மாதம் சிறப்பு நிகழ்வுகளை சொல்லுகின்றன.. மேலும் நம் முக்கிய உணவான நெல் விளைந்து அறுவடை நடந்து புது நெல் வீட்டுக்கு வந்து சேரும் மாதம் தை மாதம்.. உழவர் திருநாள்.. அனேகமாக அனைத்து இல்லங்களிலும் வீடு கண்ட நெற்களை விற்று பணம் சேர்த்து மன மகிழ்வோடு இருக்கும் மாதம்.. தை மாதம் வருடப்பிறப்பாக இருக்க இன்னும் என்ன தகுதி வேண்டுமென்று புரிய வில்லை.. ஏன் சித்திரையில் வருடம் பிறக்க வேண்டும்? ஆண்டாண்டு காலம் கொண்டாடுகிறோம் என்ற வழக்கமான வாதத்தைத் தவிர, வேறேதும் வியத்தகு வரலாற்று அல்லது விஞ்ஞான ஆதாரத்தை யாரவது எனக்கு தெரிவித்தால் என்னுடைய இந்த குழப்பம் தீருமென எதிர் பார்க்கிறேன்....


Wednesday, April 11, 2012

வாழ்க்கை என்றால் என்ன ?

வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள மூன்று இளவரசர்கள் ஞானி ஒருவரைத் தேடிச்சென்றார்கள். அவர்களை நன்கு வரவேற்று அமரச் செய்த ஞானி மூன்று கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து வைத்தார்.
ஒன்று தங்கக்கோப்பை, இரண்டாவது வெள்ளிக்கோப்பை, மூன்றாவது களிமண் கோப்பை.

என்ன செய்வது என்று அறியாது திகைத்த இளவரசர்கள் ஞானியிடமே கேட்டார்கள். இப்படி மூன்று விதமாக வைத்தால் நாங்கள் என்ன செய்வோம் எல்லோரும் தங்கக் கோப்பையைத் தானே எடுக்க நினைப்போம். ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டனர்.


ஞானி சொன்னார்,

மூன்று கோப்பைகளும் தோற்றத்தில் வெவ்வேறாகத் தெரியலாம். ஆனால் மூன்று கோப்பைகளிலும் உள்ளிருப்பது ஒரே தேநீர்தான்.

அந்த தேநீர் போன்றதே வாழ்க்கை. புறத்தோற்றங்களுக்கு மயங்குவோர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது தவிக்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.

எனது வகுப்பில் வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு, எனது மாணவர்களில் மூவரை எழச்செய்து அவர்களிடம் கேட்டேன்,

எனது வீட்டுக்கு வரும் உங்களுக்கு தங்கம், வெள்ளி, களிமண் என வெவ்வேறு கோப்பைகளில் தேநீர் தந்தால் நீங்கள் எந்தக் கோப்பையை எடுப்பீர்கள் கேட்டேன் இரண்டு மாணவர்களும் நான் முதலில் எடுத்தால் தங்கக் கோப்பையைத் தான் எடுப்பேன் என்றனர். மூன்றாவது மாணவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்,

ஐயா நான் எந்தக் கோப்பையில் தேநீர் அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பேன் என்று எதிர்பாராத பதிலைச் சொன்னார். வியந்து போனேன்.

வாழ்க்கையின் உண்மையும் கூட அதுதான். வாழ்க்கைத் தேவைக்கு மட்டுமா செல்வம் சேர்க்கிறோம். நிறைவான செல்வத்தைத் தானே அனைவரும் விரும்புகிறோம்.


இழந்த நாட்கள்.

ஜகாங்கீர் – இளமையில் ஏறு போல் நடக்கும் இளையவர்கள் வயதானபின்னர் ஏன் கூனிக் குறுகி பூமியைப் பார்த்தவாறு நடக்கிறார்கள்?

நூர்ஜகான் – தாங்கள் இழந்த நாட்கள் பூமியில் எங்காவது புதைந்து கிடக்கிறதா என்று தேடவே அவ்வாறு நடக்கிறார்கள்.!

நீரே விழுந்தால் நான் என்ன செய்வேன்?

கம்பரும் சோழ மன்னரும் ஆற்று நீரில் கால் வைத்து நடந்தபோது கம்பர் ஆற்று நீரை அள்ளிக் குடித்தார். அப்போது,

சோழன் – கம்பரே.. என் காலில் விழுந்த நீரைத்தானே நீங்கள் அள்ளிக்குடிக்கிறீர்கள்?

கம்பர் – நீரே என்காலில் விழுந்தால் நான் என்ன செய்வேன் மன்னா?

(கம்பர் நீரே என்று சொன்ன சொல் இருபொருளுடையது. நீரே என்று நிலத்தில் செல்லும் நீரையும் நீரே என்று எதிரே இருக்கும் சோழனையும் குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும். கம்பர் சொன்ன எதிர் பாராத பதிலையும் தமிழின் நயத்தையும் எண்ணி மகிழ்ந்தான் சோழன்.)
===========================================
அறிஞர் ஆல்டன் குள்ளமானவர். அவரைப் பார்த்து அவருடைய வழக்கறிஞராக இருந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

“ உங்களை எனது கோட்பாக்கெட்டில் தூக்கி வைத்துக்கொள்ள முடியும்“ என்று.
அதற்கு ஆல்டன் அவரைப் பார்த்து,

” ஓ அப்படியென்றால் உங்கள் தலையைவிட கோட் பாக்கெட்டில் தான் மூளை அதிகமாக இருக்கும்” என்றார்.
====================================




விருந்தினர் மாளிகை என்ன விலை?
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய பெருமை வள்ளல் அழகப்பச்செட்டியாருக்கு உரியதாகும். அவர் ஒரு முறை மும்பை சென்றபோது, ரிட்சு என்னும் (ஓட்டலுக்கு) விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருக்கிறார்.

அதன் உரிமையாளர், அழகப்பச்செட்டியாரின் எளிய தோற்றத்தைப் பார்த்து இங்கு அறை காலியாக இல்லை என்றாராம். இவர் தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் இங்கு அறைகள் உள்ளன என்பதை உணர்ந்த அழகப்பச் செட்டியார். அந்த விருந்தினர் மாளிகை உரிமையாளரைப் பார்த்து,

இந்த மாளிகையில் எத்தனை அறைகள் உள்ளன? என்றாராம்.

உரிமையாளரோ,

நீர் என்ன இந்த ஓட்டலை விலைக்கு வாங்கப் போகிறீரோ? என்றாராம்.

அதற்கு ஆம் என்ன விலை என்று அழகப்பர் கேட்க. உரிமையாளர் சில லட்சங்கள் என்று சொல்ல, அடுத்த நிமிடமே தம் காசோலையைக் கிழித்துக் கொடுத்து அந்த விருந்தினர் மாளிகையை விலைக்கு வாங்கிவிட்டார் அழகப்பர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

நன்றி:- மல்லிகை

Monday, April 9, 2012

ஆண்டவன்-ஆள்பவன் - WHAT வேறுபாடு






..''.''ஆண்டவனா இருப்பதில் லாபம் தான். ஏனென்றால் எந்தக் குறையை மக்கள் சொன்னாலும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம், படுத்திருக்கலாம், தூங்கிக் கொண்டிருக்கலாம், திருவரங்கத்திலே போய் ஆண்டவனிடத்தில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் முறையிடுகிறார்களே, '' அங்கே ரங்கநாதர் எழுந்து என்ன செய்தார்?' என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? ஆண்டவனுக்குள்ள சவுகரியம் ஆள்பவனுக்குக் கிடையாது. அதனால் தான் ஆண்டவனாக இருக்க விரும்பவில்லை. ஆள்பவனாகவே இருந்து மக்களுக்கு அன்றாடம் பணியாற்றுவதற்கு, அவர்களுக்குச் சேவை செய்வதற்கு விரும்புகின்றேன். ஆண்டவன் என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற கூட்டம் இருக்கின்றது. அந்தக் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, வீழ்த்தி அதில் யாரும் ஏமாறாமல் இருக்கின்ற பகுத்தறிவுப் பிரச்சாரத்தை நாம் தொடர்ந்து செய்யவேண்டுமென்று இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''''


........முத்தமிழ் காவலர் டாக்டர். கலைஞர்.மு.கருணாநிதி

(வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் 27.11.2010 சனி மாலை மக்கள் வெள்ளமெனத் திரண்ட பொதுக் கூட்டத்தில் ''முதலமைச்சர்'' ''கலைஞர்'' அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை! யிலிருந்து ஒரு சிறு பகுதி..)


கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான். கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள். பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ? தெரியாது எந்த குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில் தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு ஒரு குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால் நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள் கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம் .இது அனைவருக்கும் தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள், என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி கொள்ளமுடிவதில்லை. கடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ! மனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ கடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான். மனிதர்கள் மிகவும் புத்திசாலிகளல்லவா. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை! நம்பிக்கை தான் கடவுள்! தன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை) தன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை… ஏமாறாதீர்கள்: நம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்! ஒ புரிந்து விட்டது. நீங்கள் கடவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்க வாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல காரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள். மனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, அன்பே சிவம் என புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை. காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் அன்பை உணரும் வெளிபடுத்தும் ஞான கண்களை மறைக்கிறது
நன்றி -யுவா 

Sunday, April 8, 2012

அப்பாவி மாணவர்களின் குற்றமா?

இது புதிய பராசக்தி வசனம் நான் மிகவும் ரசித்தது. ஈமெயிலில் வந்தது.எழுதியவருக்கு பாராட்டுக்கள்.

நான் ஏசி அறையில் படித்தாலும், ஓசிக்கு சாப்ட்வேர் வாங்கியிருக்கிறேன். விண்டோஸ் படிப்பதற்காக வீட்டை விற்றிருக்கிறேன். 
எனக்கு Linked list புரியவில்லை, 
ஆனால் என் பணத்தோடு மட்டும் லிங்க் செய்த listஐ சொல்கிறேன். இரவெல்லாம் படித்தாலும் யுனிக்ஸ புரியவில்லை, 
ஆனால் டக்கென்று புரிந்துகொண்டேன் டாஸையும்,
கம்ப்யூட்டர் பீல்டும் இப்பொழுது டக்(DUCK) எனப் புரிந்து கொண்டேன்.

கேளுங்கள் என் ஸ்டோரியை எம் எஸ் WORDல் டைப் செய்வதற்கு முன்....தயவுசெய்து கெளுங்கள். தமிழ் நாட்டில் இந்த திருநெல்வேலியில் படித்தவன் நான். படிக்க ஒரு ஊரு..........
ப்ராஜக்ட் செய்ய ஒரு ஊரு.......
கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்டின் தலையெழுத்துக்கு....
நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆம், நெல்லையில் படித்த நான்....
ஐ டி பீல்டு அமுங்கிப் போயிருக்கும் சென்னைக்கு ப்ராஜக்ட் செய்யப் போனேன். சென்னை என்னை ரீ சைக்கில் பின் போல ஆக்கியது.
டாஸ் படிக்க கூட வழியில்லாத எனக்கு ASP யில் ப்ராஜக்ட் செய்யச் சொன்னான் ஒருவன்!

இருக்கும் சைட்டையே ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை,
இந்த லட்சனத்தில் வெப்சைட் ப்ராஜக்ட் டாம்!
என் பெயரோ ராம், ஆம் ராம்(RAM), GB ஆதிகம் உள்ள பெயர்,
ஆனால் VB ப்ராஜக்ட் செய்யப் போய்ச் சென்னையில் ஓபி அடித்து திரிந்தேன். 

நான் நினைத்திருந்தால்.........
என் பாவாவிடம் சொல்லி ஜாவா ப்ராஜக்ட் வாங்கியிருக்கலாம் டம்மி ப்ராஜக்ட்டைக்கூட ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விட்டிருக்க முடியும்.ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஐ டி பீல்டு!
லைனக்ஸ் என்று டாசைக் கற்றுத்தந்தான் ஒரு கம்ப்யூட்டர் கடைக்காரன், ஓடினேன்...........

VB பழைய பதிப்பை பக்குவமாய் கற்று தந்தான் ஒரு FACULTY, ஓடினேன்..........
டம்மி ப்ராஜக்ட் தருவதற்காக சாப்ட்வேர் கம்பனிககாரன் விரட்டினான், ஓடினேன்...........

ஆடித் தள்ளுபடியில் CD வாங்கி தந்தான் ஒருவன் ஓடினேன்............
ப்ராஜக்ட் வாங்கலையொ ப்ராஜக்ட்னு கூவி கொன்டிருக்கும் கூட்டதை தாண்டி ஓடினேன்............

வெப்சைட்டில் விரித்து வைதித்ருக்கும் வலையைத் தாண்டி ஓடினேன்............, ஓடினேன்............ஓடினேன்............

மதர் போர்டை தாண்டி மணிக் காணக்காய் ஓடினேன்............
ஜாவா, வீபீ, ஒரக்கில் என்று ஏலம் விடுகின்ற கம்ப்யூட்டர் சென்ட்ர்களை கடந்து ஓடினேன்.........

எத்தனை சென்டரடா அதில் தான் எவ்வளவு தெண்டமடா, ஓடினேன்......,ஓடினேன்..........

இப்பொழுதுள்ள IT பீல்டை போலவே தடுமாறித் தடுமாறி ஓடினேன்..........
அங்கே, வைரஸ் இருந்ததால் திரும்பி விட்டேன்,
பாவம் என் வாழ்கை ஆனது ஒரு கூவம்,எனக்கு ஐடியா கொடுதிருக்க வேண்டும், ரியல் ப்ராஜக்ட் தந்திருக்க வேண்டும் இன்று சட்டதை நீட்டுவோர், இன்று IT பீல்டில் இருப்போர்.செய்தார்களா ...?

ப்ராஜக்ட் செய்ய விட்டார்களா இந்த ராமை(RAM)?எனக்கு டம்மி ப்ராஜக்ட் தந்தது யார் குற்றம் ?
செலவு செய்து சென்னை சென்ற என் குற்றமா? 
இல்லை டம்மிக்கும் ரியலுக்கும் வித்தியாசம் தெரியாத சாப்ட்வேர் கொள்ளையர்களின் குற்றமா?

வளர வேண்டிய வெப்சைட்டில் ஆபாசங்கள் காட்டுவது யார் குற்றம்..?
பில் கேட்ஸின் குற்றமா? 
இல்லை பில் போடத்தெரியாதவர்கள் எல்லம் ப்ராஜ்க்ட் செய்கிறார்களே அவர்களின் குற்றமா?

ஒரு மொழியையும் ஒழுஙகாய்ப் படிக்காமல் பயோடேட்டாவில் நிரப்புவதற்காக C,C++,ஜாவா, வீபீ,ஒராக்கில், ASP, என்று அடுக்கிகொன்டே செல்வது யார் குற்றம்? 
அப்பாவி மானவர்களின் குற்றமா?

இல்லை எங்கள் அப்பாவின் பனத்தை அந்நியாயமாய்ப்பிடுங்கிக் கொண்டு  FACTORIAL,FIBONACCI,QUADRATIC EQUATION, PRIME NO,POLYNDROME இது தான் ப்ரோகிராம் என்று சொன்ன கம்ப்யூட்டர் சென்டர்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் களையப்படும் வரை என்னை போன்ற ராம்கள்(RAM) டம்மி ப்ராஜக்ட்டைதான் ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விடுவார்கள்

Saturday, April 7, 2012

“ஏய், பூசாரி! பராசக்திக்கே தடையா ?



பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா.கிருஷ்ணன் மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ் ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், சிறீரஞ்ஜனி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.

“பராசக்தி”க்கு தடை விதிக்க, பலமுனைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. படத்தைப் பார்த்த தலைமை தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்! “பராசக்தி” படத்துக்கு கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு தரப்பினரின் எதிர்ப்பும் வலுத்தது.

படத்தில் நாத்திக கருத்துக்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பத்திரிகை வாயிலாக உடனுக்குடன் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார், கருணாநிதி. “பராசக்தி”க்கு தடை விதிக்க வேண்டும் என்பதை ஒரு இயக்கமாக சிலர் நடத்திக் கொண்டிருந்தனர்.

தடை விதிக்கக்கோரி, தலைமை தணிக்கை அதிகாரிக்கு தந்திகள் குவிந்தன. அப்போது தணிக்கை குழுவின் தலைமை அதிகாரியாக `ஸ்டாலின்’ சீனிவாசன் இருந்தார். இவர், “மணிக்கொடி” என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி, புதுமைப்பித்தன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், புகழ்பெறக் காரணமாக இருந்தவர். அவர் ஸ்டாலினைப் போன்ற மீசை வைத்திருந்ததால் `ஸ்டாலின்’ சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.

அவர் “பராசக்தி” படத்தைப் பார்த்தார். சாதாரணமாகப் பார்க்கவில்லை. கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அந்த மாதிரி பார்த்தார். கடைசியாக அவர் வழங்கிய தீர்ப்பு: “பராசக்தியில் ஆக்ரோஷமான காட்சி எதுவும் இல்லை. எனவே, படத்துக்கு தடை விதிக்கவோ, காட்சிகளை வெட்டவோ வேண்டிய அவசியம் இல்லை”.

இப்படி அறிவித்த தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்! “பராசக்தி” பற்றி பத்திரிகைகளில் நடந்த விவாதமும், அதற்கு தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பும், “பராசக்தி”க்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. எனவே, தியேட்டர்களில் முன்னிலும் அதிகக் கூட்டம் சேர்ந்தது. தினமும் “ஹவுஸ்புல்” தான்.

படத்தின் “கிளைமாக்ஸ்”, பராசக்தி கோவிலிலேயே சிவாஜியின் தங்கையாக நடிக்கும் ஸ்ரீரஞ்சனியை பூசாரி கற்பழிக்க முயலும் காட்சியாகும். நடந்ததை அறிந்த சிவாஜி, பூசாரியை பழிவாங்க பராசக்தி சிலைக்கு பின்னால் பதுங்கியிருப்பார். “நீ தீர்க்காயுசா இருப்பே” என்று ஒரு பக்தனிடம் பூசாரி கூறும்போது, “ஏய், பூசாரி! முதலில் உன் ஜாதகத்தை கணித்துக்கொள்” என்ற குரல் கேட்கும்! சிவாஜியின் குரல்தான் அது!

பூசாரி:_ யார் அம்பாளா பேசுவது?

சிவாஜியின் குரல்:_ அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?

பூசாரி:_ தாயே! பராசக்தி!

சிவாஜி (வெளியே வந்து):_ இந்த பராசக்தி உனக்குத் தாய். என் தங்கை கல்யாணி உனக்கு தாசி! அப்படித்தானே! மானங்கெட்டவனே!

பூசாரி:_ அப்பனே! இது என்ன விபரீதம்?

சிவாஜி:_ விபரீதம் வராது என்று எண்ணித்தானே என் தங்கையோடு விளையாடி இருக்கிறாய்?

பூசாரி (பராசக்தி சிலையைப் பார்த்து):_ தாயே, பராசக்தி!

சிவாஜி:_ அது பேசாது. பேசமுடியும் என்றால், நீ என் தங்கையின் கற்பை சூறையாடத்துணிந்தபோது, “அடே பூசாரி! அறிவு கெட்ட அற்பனே! நில்” என்று தடுத்திருக்கும்.

உன்னிடம் சிக்கிய போது, இந்தப் பராசக்தியை என் தங்கை ஆயிரம் முறை அழைத்தாளாமே! ஓடி வந்து அபயம் அளித்தாளா?

பூசாரி (கூட்டத்தினரைப் பார்த்து):_ பக்த கோடிகளே! பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே!

சிவாஜி:_ தேவி பக்தனே! மனித உதவியை ஏன் நாடுகிறாய்? உன் தேவியின் கையில் சூலம் இருக்க, சுழலும் வாள் இருக்க ஏன் பயந்து சாகிறாய்? (இந்த சமயத்தில், சிவாஜியை வெட்டுவதற்கு அரிவாளை பூசாரி ஓங்க, சிவாஜி அதைப்பிடுங்கி பூசாரியை வெட்டுவார்.)

சிவாஜி மீதான வழக்கு விசாரணை படத்தில் ஏறத்தாழ கால்மணி நேரம் இடம்பெறும். குற்றச்சாட்டுகளை மறுக்காமல் சிவாஜி சொல்வார்: “கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக!

பூசாரியைத் தாக்கினேன்_ அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி, பகல் வேஷமாக ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக!” இவ்வாறு சிவாஜி கூறும்போது, ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் தியேட்டரை குலுங்கச் செய்யும். “பராசக்தி”யின் வசனம் புத்தகமாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகியது. வசனம் முழுவதும் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டது.
“காலத்தை கணிக்க, கி.மு., கி.பி. என்று கூறுவது போல, தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுத வேண்டுமானால் பராசக்திக்கு முன், பராசக்திக்குப்பின் என்று பிரிக்கலாம்” என்று சில விமர்சகர்கள் எழுதினர். “பராசக்தி” படத்தில் நடிக்க, சிவாஜி கணேசனுக்கு மாதம் ரூ.250 சம்பளம் கொடுக்கப்பட்டது.

இதை சிவாஜியே குறிப்பிட்டிருப்பதுடன், “பராசக்தியில் இலவசமாக நடிப்பதற்குக் கூட தயாராக இருந்தேன்” என்றும் கூறியுள்ளார். “பராசக்தி” படத்துக்குப்பின் சிவாஜியின் ஊதியம் பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க அவர் வீட்டு முன் பட அதிபர்கள் குவிந்தனர்.

நன்றி:- திரை கதம்பம் 

Friday, April 6, 2012

தமிழன் ---- தமிழருக்காக செந்தமிழன்



தமிழனின் வரலாற்றை தேடும் எங்கள் செந்தமிழன் முகநூல் கட்டுரையிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த தொகுப்பு உங்களுக்காக ......

 சாமிக்கண்ணு வின்சன்ட் என்னும் சாகசக்காரரின் கதை!
சாமிக்கண்ணு வின்சன்ட் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா எனத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெயருக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் சாகசங்களை, சாதனைகளை, இழப்புகளை, தாங்க இயலா துயரங்களை, ஒரு மாபெரும் வரலாற்றை நீங்கள் அனைவரும் உணர்ந்து அம்மனிதரின் வாழ்க்கையை உலகிற்கு அறிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதத் துவங்குகிறேன்.
திருச்சி பொன்மலை ரயில் நிலையம். 1905 ஆம் ஆண்டு. கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட சாமிக்கண்ணு எனும் 22 வயது இளைஞர் டிராப்ட்ஸ்மேனாகப் பணியாற்றுகிறார். வெள்ளைக்காரர்களும், பணக்காரர்களுமே மிகுதியாக வந்து போகும் இடம் ரயில் நிலையம். சாமிக்கண்ணு மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடன் எத்தனை பேர் பணிபுரிந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சாமிக்கண்ணுவை மட்டும் நமக்குத் தெரிகிறது, 107 ஆண்டுகளுக்குப் பிறகும்!
சாமிக்கண்ணு எடுத்த ஒரு முடிவு, தென்னிந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்டது. இன்று ஜெயலலிதா முதல்வராக இருப்பதற்கும் திரையுலகம் கோடிகளில் புழங்குவதற்கும் பாதை போட்டுக் கொடுத்தவர் சாமிக்கண்ணு.
சினிமா எனும் ‘கலை’ பிரான்சைச் சேர்ந்த லூமியே சகோதரர்களால் உலகிற்கு அறிவிக்கப்பட்ட ஆண்டு 1895. இங்கே ‘கலை’ எனும் சொல் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்காலத்தில், சலனப்படங்களை (motion pictures) புகைப்படங்களின் (photographs) மேம்பட்ட வடிவமாகத்தான் பெரும்பாலனோர் பார்த்தார்கள். அது ஒரு பெரும் தொழிலாக மாறும் என்றோ அதுதான் உலகையே ஆட்டி வைக்கப்போகிறது என்றோ பெரும்பாலானோர் கற்பனையும் செய்யவில்லை. மிகச் சிலர் சினிமாவை ‘கலையாகவும் தொழிலாகவும்’ அறிந்து கொண்டனர். அந்த மிகச் சிலரில் சாமிக்கண்ணு வின்ன்சன்ட் ஒருவர்.
அக்காலத்தில் எடுக்கப்பட்ட படங்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவை அனைத்தும் துண்டுப்படங்கள். அதாவது மிகச் சில நிமிடங்களே ஓடக் கூடியவை. 3 நிமிடத்திற்கு ஓடும் படம், 7 நிமிடம் ஓடும் படம் என வகைகள். அப் படங்கள் அனைத்துமே ஒலி அற்றவை அல்லது மௌனப்படங்கள் (silent movies). ஊமைப்படங்கள் என்று பொதுவழக்கில் அழைக்கப்பட்டவை.
படங்களின் நீளமும் குறைவு, ஒலியும் இல்லை. அவை பெரும்பாலும் ஆவணப்படங்களின் மூல வடிவங்களாகவே இருந்தன. Leaving the factory என்றொரு பிரபலாமன படம். அதில் என்ன ஓடும்? ஒரு தொழிற்சாலையிலிருந்து பணி முடித்த தொழிலாளர்கள் வெளியேறும் காட்சி இருக்கும். அப்போதைய படப்பதிவுத் தொழில்நுட்பத்தின்படி, வினாடிக்கு பொதுவாக 14 சட்டகங்கள் (frames) ஓடும். அதாவது, பாத்திரங்கள் குடுகுடுவென நடப்பார்கள், வெடுக்கெனப் பேசுவார்கள், சீமாட்டி நாயைப் பிடித்து மின்னல் வேகத்தில் நடப்பாள். இயல்பான வேகத்தைவிட ஏறத்தாழ 90% அதிகமாக இருக்கும். இப்போது நாம் காணும் இயல்பான வேகம் 24 சட்டகங்களில் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வளவு குறைபாடுகளுடன் சினிமா இருந்த காலம் அது.

இதைக் காட்டுவதும் எளிதல்ல. அதற்கென ப்ரொஜடர் வேண்டும். ப்ரொஜடரை இயக்குவதற்கென ஏராளமான தொழில்நுட்பங்கள் வேண்டும். திரை கட்ட வேண்டும், இருட்டில்தான் படம் ஓட்ட முடியும், அதற்கென கொட்டகைகள் அமைக்க வேண்டும், மக்களுக்குப் புகைப்படங்களே முறையாக அறிமுகம் ஆகாத காலம் அது. அவர்களுக்கு சலனப்படங்களைப் பற்றி எடுத்துக் கூறி, கொட்டகைக்கு வரவழைக்க வேண்டும். அப்படி வரும் மக்களை மன நிறைவுடன் படம் பார்க்க வைக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களும் சில நிமிடங்களில் ஓடி நின்று போகும், சத்தமே வராது, கதாபாத்திரங்கள் அனைவரும் வழக்கத்தை விட வேகமாக ஓடுவார்கள், சிரிப்பார்கள். படத்தில் வரும் முகங்களும் பெரும்பாலும் வெள்ளைக்கார முகங்கள்.
பொன்மலை ரயில் நிலையத்தில் வேலைபார்த்த சாமிக்கண்ணு எப்படித்தான் இவ்வளவு சிக்கல்களையும் கடந்து சிந்தித்தாரோ புரியவில்லை.
அவரது நிலையத்திற்கு ஒரு ரயில் வந்து நின்றது. டூபான் (Du Pont) என்ற பிரெஞ்சுக்காரர் வந்திறங்கினார். அக்காலத்தில் உலக சந்தையில் பிரபலமாக இருந்த பதே (pathe) எனும் ப்ரொஜக்டர் நிறுவனத்தின் அதிகாரி அவர். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று துண்டுப்படங்களைத் திரையிட்டுக் காட்டி, பணம் ஈட்டுவது அவர் பணி. இவ்வாறானவர்களை பயணச் சினிமாக்காரர்கள் என்பார்கள். இவர்கள் டூர் அடித்துக் கொண்டே இருப்பதால் டூரிங் தியேட்டர் என்ற பெயர் பின்னாளில் உருவானது. இலங்கையில் பயணத்தை முடித்துவிட்டு வந்த டூபான், களைத்திருந்தார். உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். சாமிக்கண்ணு வின்சன்ட் டூபானுக்கு சில உதவிகள் செய்தார். இருவரும் நட்பு பாராட்டினர். டூபான், தான் வீடு திரும்ப விரும்புவதாகவும் தான் சுமந்து திரியும் உபகரணங்களை யாரிடமாவது விற்றுவிட்டால் நல்லது என்றும் சாமிக்கண்ணுவிடம் கூறினார்.
அந்த உரையாடலில் விதைக்கப்பட்டது, தென்னிந்திய சினிமாத் தொழிற்சாலையின் வித்து.
2 ஆயிரம் ரூபாய் விலை சொன்னார் டூபான். சாமிக்கண்ணு உறவினர்களிடம் திரட்டி அத் தொகையை டூபானிடம் கொடுத்து, ப்ரொஜக்டர், சில துண்டுப்படங்கள், பிற சாதனன்ங்கள் அனைத்தையும் வாங்கினார்.
அக்காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் எவ்வளவு பெரும் தொகை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எல்லாவிதங்களிலும் சாத்தியம் குறைவான ஒரு தொழிலில், இவ்வளவு பெரிய முதலீடு. ரயில்வே வேலையையும் உதறிவிட்டார். கடனோ பெரும் தொகை. தொழிலோ புத்தம் புதிது.
திருச்சிப் பகுதியில் சாமிக்கண்ணு குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் பாவேந்தன் கூறும் சம்பவங்களில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அப்பகுதி முதியவர்களிடம் பேசியபோதும் ’நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தபோது, ஒரு ஆள் ஊருக்கு வந்தாரு. பெரிய திரையக் கட்டி அதுல வெளிச்சம் போட்டாரு. அந்தத் திரையில வந்ததைப் பார்த்து பேய்ங்கன்னு நினைச்சு நாங்க அலறி ஓடிட்டோம்’ என்றார்களாம்.
இதே போன்ற அனுபவங்கள் அக்காலத்தில் ஏராளம். Arrival of the train என்றொரு துண்டுப்படம். ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நிற்கும் காட்சி மட்டும் அதில் உண்டு.
திரையில் இக்காட்சி வந்ததும், ரயில் தங்கள் மீது மோதப் போகிறது என அஞ்சி, அலறி அடித்துக் கொண்டு மக்கள் கூடாரங்களைப் பிய்த்தெறிந்துவிட்டு ஓடினார்கள்
.
எனது ‘பேசாமொழி’ ஆவணப்படத்தில் இக்காட்சியைப் படமாக்கியுள்ளேன்.
புகைப்படம் எடுத்துக்கொண்டாலே ஆயுள் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை இப்போது சிலரிடம் உள்ளதை நாம் அறிவோம். அக்காலத்தில், திரையில் படத்தைப் பார்த்தாலே ஆயுள் குறையும், பார்வை மங்கும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. ஆகவே, சினிமா காட்டுபவர்களைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.
மக்கள் இவ்வாறுதான் சினிமாவைப் பார்த்தார்கள்.
இவர்களை நம்பித்தான், இந்தச் சூழலில்தான் சாமிக்கண்ணு அவ்வளவு பெரிய முடிவை எடுத்தார். சூழலைக் கண்டு அஞ்சுபவர்கள் சாமானியர்கள், சூழலை மாற்ற முடிவெடுப்பவர்கள், சாகசக்காரர்கள். சாமிக்கண்ணு சாகசக்காரர்!
ஒரு மாட்டு வண்டி, சில உதவியாளர்கள், வண்டியில் ப்ரொஜக்டர் மற்றும் சாதனங்கள் –இதுதான் பயணத் திரையரங்கம். சென்னை எஸ்ப்ளனேட் பகுதியில், முதன் முறையாக கொட்டகைத் திரையரங்கை அமைத்தார் வின்சன்ட். கொட்டகைக்குள் படம் காட்டலாம் எனச் சிந்தித்ததே சாதனைதான்.
ஏனெனில், சினிமா என்பது ஏற்கெனவே சொன்னபடி ‘கலை’யாக மட்டும் பார்க்கப்பட்ட காலம் அது. வார்விக்மேஜர் என்னும் பிரிட்டன்காரர், சென்னையில் 1897ஆம் ஆண்டு முதல் முதலாகத் திரைப்படக் கலையை அறிமுகம் செய்தார். அவர் படம் ஓட்டிய இடம் எலக்ட்ரிக் தியேட்டர் எனும் திரையரங்கம். 
அது செறிவாகக் கட்டப்பட்ட திரையரங்கம். மின்சாரத்தால் இயங்கும் அரங்கம். அதில் படம் பார்த்தவர்கள் எல்லோருமே துரைமார்கள்தான். வெள்ளையரும் பிற பணக்காரர்களுக்குமானதாகத்தான் சினிமா இருந்தது. அவர்களுக்குத்தான் அது புரியும் என்று நம்பப்பட்டது. அவர்கள் வந்து பார்க்குமளவுக்கான வசதியான இடத்தில்தான் திரையிட முடியும் என்றும் நம்பப்பட்டது. 
மின்சாரமே அக்காலத்தில் ஒரு ஆடம்பரம் அல்லவா! அப்படியானால் சினிமா…எவ்வளவு பெரியது!
சாமிக்கண்ணு, எஸ்ப்ளனேட்டில் டெண்ட் அடித்துப் படம் ஓட்டினார். அந்தக் கொட்டகைக்கு யார் வருவார்கள் என நமக்குத் தெரியும். சினிமாவை மேட்டிலிருந்து பள்ளத்துக்குக் கொண்டு சென்றார். எளிய மக்களும் சினிமாவை நேசிப்பார்கள் என அவ்வளவு மோசமான காலத்திலும் அவர் நம்பினார். 1908 ஆம் ஆண்டு வரை, பெரும்பாடுகள். கடன் மேல் கடன். நீண்ட காலம் வெளியூர்களில் தங்கி இருந்தபோது, மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. வின்சன்ட் ஊர் திரும்பிய சில நாட்களில் மனைவி இறந்தே போனார்.
சாமிக்கண்ணு, சில ஆண்டுகளில் வருவாய் ஈட்டத் தொடங்கினார். மக்கள் சினிமாவைப் புரிந்து கொண்டனர். இந்த நிலையைச் சாதிக்க சாமிக்கண்ணு, செய்த வித்தைகளுக்கு அளவே இல்லை. அவருக்கு மந்திர வித்தைகள் தொடக்கத்திலேயே தெரியுமா அல்லது சினிமாவுக்காகக் கற்றுக் கொண்டாரா எனத் தெரியவில்லை. ஆனால், கொட்டகைகளில் அவர் மக்களைக் கவர்வதற்காக, மந்திரவித்தைக் காட்சிகள் செய்து காட்டினார்.
ஒரு படம் முடிந்து அடுத்த படத்தை ப்ரொஜக்டரில் இணைக்கும்போது, சிறிது நேரம் ஆகும். ப்ரொஜக்டரில் சூடு தணிய வேண்டும். அந்த இடைவெளியில் யாரும் கூச்சலிடக் கூடாது. எழுந்து சென்றுவிடக் கூடாது. சாமிக்கண்ணு எனும் அந்த இளைஞரால் அந்த இடைவெளியை உற்சாகமாக நிரப்ப முடிந்தது. சிறந்த மேஜிசியனாக அவர் இருந்தார். அதனாலேயே முன்னோடி சினிமாக்காரராகவும் இருந்தார். சினிமாவே ஒரு மந்திர வித்தைதானே!
கிறித்தவ மத விதிகள் சாமிக்கண்ணுவைக் கண்டித்தன. கோவையின் பிஷப், சாமிக்கண்ணுவை, ‘கிறித்துவுக்கு எதிரான சாத்தானின் வேலைகளைப் பார்ப்பதாகக்’ கூறி தேவாலயத்தை விட்டு விலக்கினார். பெரும்பாடுபட்டு பிஷப்பிடம் மந்திர வித்தைகள் எல்லாமே தந்திரங்கள்தான் என விளக்கி, மீண்டும் தேவாலயத்தில் இணைந்தார் வின்சன்ட்.
இவ்வாறான துன்பங்களுக்கிடையில், சினிமாவை ஒரு தொழிலாக மாற்றிக் காட்டினார் சாமிக்கண்ணு.
நண்பர்களே, நாம் குளிரூட்டப்பட்ட அரங்குகளுக்குள் அமர்ந்து சினிமா பார்ப்பதற்கான மூலகாரணங்களில் சாமிக்கண்ணு முதன்மையானவர். 
சில ஆண்டுகளில், தென்னிந்தியா முழுவதும் ஏறத்தாழ 200 பயணச் சினிமா அரங்குகள் சாமிக்கண்ணு வின்சன்டால் நிறுவப்பட்டன. பதே ப்ரொஜக்டர் நிறுவனத்தின் முதல் தென்னிந்திய விற்பனையாளர் (dealer) சாமிக்கண்ணு வின்சன்ட்தான்.
எந்த ப்ரொஜக்டரை 2 ஆயிரம் ரூபாய்க்குக் கடன் வாங்கி கொள்முதல் செய்தாரோ, அதே ப்ரொஜக்டர்களை தென்னிந்தியா முழுவதும் விற்பனை செய்யும் உயரத்தை மேலே கண்ட இன்னல்களுக்கு மத்தியில் அடைந்தார் அவர்.
தமிழகத்தின் முதல் திரையரங்கம் கெயிட்டி சென்னையில் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டாம் அரங்கத்தைக் கோவையில் வின்சன்ட்தான் 1914 ஆம் ஆண்டு கட்டினார். பெயர் வெரைட்டி ஹால். இப்போதும் அந்த அரங்கம் இயங்குகிறது. பெயர் மட்டும் டிலைட் தியேட்டர் என மாற்றப்பட்டுவிட்டது, உரிமையாளர்கள் மாறியதால்.
ஆனாலும் அந்த அரங்கம் இருக்கும் வீதியின் பெயர் இப்போதும் கோவையில் வெரைட்டி ஹால் வீதிதான்.
அந்த திரையரங்கத்துக்குக் கடந்த 2005 ஆம் ஆண்டு என் ‘பேசாமொழி’ படப்பிடிப்புக்காகச் சென்றேன். அரங்கத்துக்கு எதிரே சிகையலங்காரக்கடை வைத்திருக்கும் முதியவர்களிடம் பேசி, சாமிக்கண்ணு பற்றிக் கேட்டேன். அவர்கள் சாமிக்கண்ணுவை நேரில் கண்டவர்கள். டிலைட் அரங்கத்தின் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்கள்.
வின்சன்ட் வாழ்ந்த காலத்தில் அவரது மாளிகை வெரைட்டி ஹாலுக்குப் பக்கத்தில் இருந்தது. அது உண்மையில் அரண்மனைதான். அதன் மிச்சங்கள் இப்போதும் தெரிகின்றன. வின்சன்ட் குடும்பத்தினர் தங்கள் மாளிகையிலிருந்து படம் பார்க்க அரங்கத்துக்கு வருவதற்கென பிரத்தியேகமான வாயில், அழகிய மர வேலைப்பாடுகளுடன் இருந்திருக்கிறது. அவர் பேரப்பிள்ளைகளுக்காகக் கட்டிய மீன் தொட்டி, அவர் ரசித்து ரசித்து வரைய செய்த ஓவியங்கள் என நிறைய காணக் கிடைத்தன.
வின்சன்ட் 1942 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
1938 ஆம் ஆண்டு முதலே, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாராம். அவரது மாளிகையின் நீண்ட காரிடாரில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஏதோ ஒரு மன உளைச்சல் அவரை ஆட்டிப் படைத்ததாக அவரது பேரன் வின்பிரட் வின்சன்ட் கூறுகிறார். 
சாமிக்கண்ணு வின்சன்டைப் பற்றி நான் முதன் முதலில் படித்தது, ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகள் வழியாகத்தான். அவரே சாமிக்கண்ணு வின்சன்ட் உட்பட பல முன்னோடிகளுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார்.
பின்னர் பேராசிரியர் பாவேந்தனைச் சந்தித்தேன். அவரும் பல்வேறு தகவல்களை வழங்கினார். யூ டிவியின் தென்னிந்தியத் தலைவர் தனஞ்சயன் தமது நூலில் வின்சன்ட் குறித்து எழுதியுள்ளார்.

வேறு சில ஆய்வாளார்களும் திரைப்பட ஆர்வலர்களும் வரலாற்றின் உண்மைகளைப் பதிவு செய்கின்றனர்.
இவ்வாறான சில பணிகள் மட்டும் நடக்கின்றன.

யாரால் இந்த சினிமா ஒரு தொழிலாக மாற்றப்பட்டதோ, யாரால் சினிமா சாமானியர்களைச் சென்றடைந்ததோ, யாரால் சினிமாவில் கோடிகள் கொழிக்கும் என நிறுவப்பட்டதோ, யாருடைய வாழ்வின் அர்ப்பணிப்பு கடந்த 100 ஆண்டுகாலமாகப் பலருக்கு வாழ்க்கையை, பதவிகளை தானம் செய்ததோ, அவரைப் பற்றி யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறது எனக் கேட்டுப் பாருங்கள்

நன்றி -தமிழா