Monday, February 14, 2011

அதிர்ச்சியான தற்கொலை காரணங்கள்...


இந்த மாத செய்திகள் என்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டன.

சென்ற ஆண்டில் மட்டும் பின்னலாடைத்தொழிலில் 11,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடக்கும் திருப்பூர், நாட்டின் 65 சதவிகித சந்தையைத் தன்னிடம் வைத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமான புள்ளிவிபரம் ஒருபுறம் இருந்தாலும் - ஒரு ஆண்டில் நடக்கும் தற்கொலைகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. சென்ற ஆண்டில் மட்டும் 491 பேர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தான் மிகவும் சோகத்தில் இருப்பதாகவும் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு வேதனையில் இருப்பதாகவும் மாணவி ஒருத்தி பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறாள். 

‘முடிவெடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடு’ என்று பேஸ்புக் மூலம் சிலர் வலியுறுத்தியதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.

திண்டுக்கல்லில் மார்க் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பெசண்ட்நகரைச் சேர்ந்த ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா.இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.இது தொடர்பாக அக் கல்லூரியைச் சேர்ந்த நாலு பேராசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பில் ஆசிரியை திட்டியதால் மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் மாணவி பயின்ற பள்ளி முற்றுகையிடப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு

கும்பகோணம் அருகே, பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான, பள்ளி 
தலைமையாசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

யோசிக்கும் வேளையில், தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சாட்டத் தோன்றவில்லை எனக்கு. ஒட்டு மொத்த சமுதாயமே சீரழிந்துகொண்டு இருக்கிறபோது யாரைக் குற்றம் சாட்டுவது?
டி.வி. சீரியல்கள் செய்கிற பிரெயின்வாஷ்தான் இதற்கு முக்கியக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிற அல்லது தலையில் கெரஸினை ஊற்றி நெருப்பு வைத்துத் தற்கொலை செய்துகொள்கிற சீன் இல்லாத சீரியல் ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அந்த ஆசிரியை சற்றுக் கடுமையாகவே திட்டிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு சின்னப் பெண்ணுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுமா? வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை என்று கோபித்துக்கொண்டதற்கே ஒரு சின்னப் பெண் தற்கொலை அளவுக்குப் போயிற்றென்றால், இது வளர்ந்த பின்னால் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டிருக்கும்? போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை? அதைத் தைரியமாக எதிர்கொள்ள அந்தக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்காதது யார் தவறு? பெற்றோரின் தவறா? பள்ளிக்கூடங்களின் தவறா? இந்தச் சமுதாயத்தின் தவறா? ஊடகங்களின் தவறா?
நமக்கு நல்ல படிப்பு, செல்வம் எல்லாம் கிடைத்தவுடன் சகிப்புதன்மை, பொறுமை எல்லாம் பழங்கால பொருளாகிவிட்டது . சின்ன விஷயங்களுக்கும் கூப்பாடுபோடுகிறதை விட்டு அறிவோடு சிந்திக்கதெரியாதவர்களாக இன்றைய பெற்றோர்கள் மாறிவிட்டனர் .
பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்ப்பதைத் தான் பள்ளிகள் செய்ய முயலுகின்றன.. "என் குழந்தைக்கு படிப்பு சொல்லித்தரதை விட அவர்கள் மனவலிமையை அதிகப்படுத்தும் பள்ளி வேணும் " அப்படின்னு சொல்ல எத்தனைப் பெற்றோர் தயாரா இருக்காங்க‌?

தேர்வில் தோற்றால் தற்கொலை; காதலில் தோற்றால் தற்கொலை; வேலை கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; அடுத்தவன் அவமானமாகப் பேசிவிட்டான் என்றால் தற்கொலை... தற்கொலை, தற்கொலை, தற்கொலை..! எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடு?

இனி வருகாலங்களை பார்த்தால் இப்படி கூட செய்திகள் வருமோ ?

1.உணவில் உப்பு இல்லை என்று கணவன் தற்கொலை.


2.கணவன் எடுத்து வந்த சேலையின் கலர் பிடிக்கவில்லை என்று மனைவி தற்கொலை .

3.காதலன் காதலர் தின வாழ்த்து சொல்வில்லை என்று காதலி தற்கொலை.

4.காதல் முறித்த பின்னர் முத்தங்களை திருப்பி கொடுக்காததால் காதலன் தற்கொலை.

5.பள்ளி ஆசிரியர் காபி அடிக்க விடாததால் மாணவன் தற்கொலை .

6.தேர்வுவில் பேனா எழுதாததால் மாணவி தற்கொலை.

7.பஸ்சில் அமர இடம் இல்லாததால் கீழே குதித்து பயணி தற்கொலை .

8.தலைவர் திரைப்படம் பிடிக்கவில்லை என்று ரசிகர் தற்கொலை.

9.முதல்வருக்கு முட்டு வலி என்று என்று தொண்டன் தற்கொலை .

10.டைம் பாஸ் ஆகவில்லை என்று பெண் தற்கொலை. 

11.முகநூலில் தன பதிவிற்கு பின்னுட்டம் வராததால் வாலிபர் தற்கொலை.

12.வலைபதிவில் பதிவுக்கு ஒட்டு கிடைக்காததால் வலை பதிவர் தற்கொலை.(புரியும் என்று நினைக்கிறேன் )



இந்த பதிவையும் கொஞ்சம் பாருங்கள் : - 
ஒரு நபருக்கு தற்கொலை உணர்வு தோன்றும் போது இந்த வலைக்கு செல்லாம் http://www.befrienders.org/int/tamil/index.asp?PageURL=suicidal.php

1 comment:

  1. இத் தற்கொலைச் செய்திகள் படித்தேன். திவ்வியாவின் விடயம் வித்தியாசமான சூழல். வாழ்க்கைப் போராட்டம் பற்றிய உணரமுடியாத வாழ்வோ, வயதோ இல்லை அவருக்கு; அங்கு ஆரிரிகைகள் பெரிய தனறை இழைத்து விட்டார்கள். ஆனால் ஏனையோர் பற்றி நிச்சயம் சமுதாயம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக தொலைகாட்சிச் சமுதாயம் - திரும்பிப் பார்க்க வேண்டிய வகையிலும்; கட்டாயம் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய நிலையிலுமே உள்ளது.

    அத்துடன் நீங்கள் இட்டபட்டியல் வெகுவிரைவில் நடந்தே தீரும். அந்த அளவுக்கு தொட்டாசினுங்கியாகவே எதிர்காலச் சமுதாயம் உருவாக்கப் படுகிறது.
    வேதனையே!

    ReplyDelete