தொகுப்புகள்

Search This Blog

Tuesday, February 1, 2011

மீண்டும் புரண்டு படுக்கும் புண்ணாக்கு



சில பேர் காலை கண் விழித்தவுடன் “இன்று என்ன பிரச்சனையோ? இன்று வாழ்வு எப்படி இருக்குமோ? கடவளே!…” என்று எண்ணுகிறார்கள். இன்னும் சில பேர் அந்தப் பக்கம் இந்தப்பக்கம் புரண்டு படுத்துக்கொண்டு கடந்த கால சம்பவங்களையோ, எதிர்கால கற்பனைகளையோ அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படியாக வாழ்க்கையை தளர்வுடன் தொடங்கக் கூடாது.

காலையில் கண் விழித்தவுடன் “இன்ற இனிய நாள்! வாழ்வில் எழுச்சியூட்டும் புதிய நாள்!” என்று எண்ண வேண்டும். பாரதியார் சொல்கிறார்.

சென்றது இனி மீளாது’ என்கிறார்.

மேலும் “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்ற உணர்வுகள் வேண்டும் என்கிறார்.

கடந்தவை கடந்தவைதான். கடவுளே வந்தாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது. அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம்.

ஒரு அறிஞர்,

“தவறுகள் செய்வது குற்றமல்ல. அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுத் திருந்தாதது தான் குற்றம்” என்கிறார்.

இன்று நான் இருக்கும் நிலைக்கு நான் முன்பு எண்ணிய எண்ணங்கள், எடுத்த முடிவுகள், செய்த செயல்கள் தான் காரணம். “ஆகவே, இனி வரும் காலம் மாற வேண்டுமென்றால் அதற்குரிய எண்ணங்களை எண்ணுவேன். அதற்குத் தக்கபடி முடிவுகளை எடுப்பேன். அதன்படி செயலாற்றுவேன். என் வாழவில் உயர்வுக்கும் தாழ்வுக்கும், நானே காரணம்” என்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வேன். வாழ்க்கையில் ஜெயித்த எல்லோருமே தங்களின் வாழ்க்கை பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொண்டவர்கள்.

இந்த உலகில் பிறந்த குழந்தை கீழ்க்கண்டவாறு எண்ணுவதில்லை.

“என்னைச்சுற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு பேசத் தெரியவில்லையே எல்லோரும் நடக்கிறார்கள், அவர்களாகவே சாப்பிட்டுக் கொள்கிறார்கள்; மற்றும் ஏதோதோ செயல்களைச் செய்து கொண்டேயிருக்கிறார்கள். என்னால் ஒன்றுமே முடியவில்லை.என எந்த  குழந்தையும் புலம்பியதில்லை.

குழந்தை இருக்கிற நிலையிலிருந்து வாழ்வை துவங்குகிறது. யார் தாய், யார் தந்தை, நான் இருக்கிற சூழ்நிலை என்ன? நான் இருக்கிற இடம், ஊர் எது? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிராமல் ஒவ்வொரு கணமும் தொடர்ச்சியாக முயற்சிகளை செய்துகொண்டே இருக்கிறது; கற்றுக்கொண்டே இருக்கிறது; எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து கொண்டே இருக்கிறது. “Ego” இல்லாமல் கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் புதுமனம், புது உற்சாகம் கொண்டு செயலாற்றிக கொண்டே இருக்கிறது.

ஆகவே நண்பர்களே! காலை கண் விழித்தவுடன் “இந்த உலகத்துக்கு இப்போதுதான் வந்தோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம். இந்த சூழ்நிலையிலிருந்து வாழ்வை புதிதாய்த் துவங்குவோம்” என்ற அளப்பெறும் உற்சாகம், சக்தி தன்னம்பிக்கை – எண்ணங்களை எண்ணுவோம். படுக்கையிலிருந்து எழும்போதும் வீறு கொண்டு வெளியே வந்து பேரானந்தத்துடன் செயல்களை துவங்குவோம். ஒவ்வொரு சிறு செயலையும் தவமாய் முழுமையாய் சிறப்புடன் செய்வோம். தொடர்ந்து செயல்புரிந்து கொண்டே இருப்போம்.


செயல் வெற்றியடைய

ஒரு செயல் செய்யத் துவங்கும் முன்பு அதை ஏன் செய்ய வேண்டும்? எதற்காக செய்ய வேண்டும்? அதனால் வருகின்ற பயன்கள் நமக்கும் பிறர்க்கும் என்னென்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதை செய்ய வேண்டியதின் அவசியத்தை உணர வேண்டும்.

அந்தச் செயலை நிறைவேற்ற என்னென்ன பொருட்கள் வேண்டும்? யார் யாருடைய உதவி வேண்டும்? அதை எங்கு செய்ய வேண்டும்? எப்பொழுது செய்வதால் வெற்றியாகும்? (காலம் அறிதல்) போன்ற தகவல்களைச் சேகரிக்க வேண்டும். செயலை எப்படி துவக்குவது? எப்படி முடிப்பது? எதை முன்பு செய்ய வேண்டும்? எதைப் பின்பு செய்ய வேண்டும்? போன்ற அனைத்துச் செயல்முறைகளையும் தெளிந்திடல் வேண்டும். தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் தக்கவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஓரிடத்தில் கண்களை மூடி அமர்ந்து மனக்காட்சியில் செயலை தொடங்கி வெற்றியாக முடிப்பது போன்ற வெற்றிக் காட்சியை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். அதனால் வருகிற பயன்களையும் மனக்காட்சியில் பார்க்க வேண்டும். பின் “இந்த செயலை முடித்தே தீருவேன்” என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டு கண்களைத் திறந்து கொள்ளவும்.

பின் “என்னால் முடியும், வெற்றி நிச்சயம்” என்று உங்களுக்குள்ளே சொல்லி உற்சாகத்துடன் செயலைத் துவக்கி செய்து முடிக்கவும்.

இவ்வாறு மனக்காட்சியில் வெற்றிக் காட்சியை பார்த்தப் பின்பு செயலை துவங்குவதால் வருகின்ற நன்மைகள்:-

1) தன்னம்பிக்கை ஏற்படும்.
2) ஆர்வம், ஈடுபாடு உண்டாகும்.
3) உடன்பாடு, எதிர்பார்ப்பு (Positive Expectation) உண்டாகும். எதிர்பார்ப்பு விதி (The law of Expectation) சொல்கிறது: எதை உளப்பூர்வமாக எதிர்பார்க்கிறோமோ அது நடக்கிறது. மனக் காட்சியில் வெற்றிக்காட்சியை பார்த்து

உள்மனத்தில் அதை பதிய வைப்பதால் ஒரு உடன்பாடு எதிர்பார்ப்பு உண்டாகி அது நடக்கிறது.

பொதுவாக “நிகழட்டும்” என்று காத்திராமல் “நிகழ வைப்பேன்” என்று உறுதியெடுத்து செயலைச் செய்பவர்கள் செயல்வீரர்கள்; வெற்றியாளர்கள்; சாதனையாளர்கள்;

பொதுவாக மனிதர்களுக்கு செயல் செய்வது என்பது துன்பமாக தெரிகிறது. சரியாக செய்து முடித்துவிட்டால் இன்பம் உண்டாகிறது. மனிதர்கள் இன்பத்தை நாடுகிறார்கள். துன்பத்தை தவிர்க்கிறார்கள்.

மனக்காட்சியில் செயலை செயது முடித்தவுடன் வருகிற பலன்களை காட்சிகளாக பார்க்கும் பொழுது இனபம் ஏற்படுகிறது. அந்த இனபத்தை அடிக்கடி எண்ணும்போது அது மனிதனை செயல்புரிய தூண்டும். உள்ளே ஒரு சக்தியை எழுப்பும்.

உள் சக்தியை எழுப்புவோம்; செயல்புரிவோம்; உள்சக்தியை எழுப்புவதும் எழுப்பாமல் விட்டுவிடுவதும் நாம் எடுக்கிற முடிவுகளை பொறுத்தது இயற்கை அல்லது கடவுள் சக்தியைக் கொடுத்து அதைப் பயன்படுத்துகிற உரிமையையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.

மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர்ச்சியாக எண்ணி அதை தொடர் முயற்சியால் வெளிக்கொணர்வோம். வெற்றி பெறுவோம்! வாழ்த்துக்கள்.

நன்றி -சூரியன் 

No comments:

Post a Comment