தொகுப்புகள்

Search This Blog

Saturday, July 8, 2017

கலைஞர் வாரிசு

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகள், அவரது முதுமையின் காரணமாக முடக்கப்பட்டிருக்கின்றன. தான் பேசாவிட்டாலும் தன்னைப் பற்றி பேசவைப்பவர் கருணாநிதி என்பது இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்யும் நொடியிலும், இதோ நீங்கள் வாசிக்கும் நொடியிலும் நிறுவப்பட்ட உண்மை.

அப்படிப்பட்ட கருணாநிதிக்கு எதிரியாக இருப்பதுகூட எளிது. ஆனால், அரசியல் வாரிசாக இருப்பது என்பது மிகவும் கடினமான செயல். அந்த கடினத்தைதான் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கடுமையான சவால்களைச் சந்தித்து கடந்து வருகிறார் மு.க.ஸ்டாலின். திமுக-வின் செயல் தலைவராக அவர் பொறுப்பேற்ற நிலையில்தான் ஜெயலலிதா மரணம், அதிமுக மிக குறைந்த அளவான மெஜாரிட்டியில் கம்பி மேல் நடக்கும் ஆட்சி என்று திமுக-வுக்கான சாதகங்கள் அதிகரித்து வருகின்றன.

‘இந்நேரம் கலைஞர் செயல்பாட்டோடு இருந்திருந்தால்…’ என்று பலரும் அப்போதிலிருந்து இப்போது வரை பேசிவருகிறோம். அவர்களின் வாயை கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா மூலம் சற்று வலிமையாகவே அடைத்திருக்கிறார் ஸ்டாலின்.

தேசியத் தலைவர்களைச் சென்னைக்கு அழைத்து ஒருங்கிணைத்து பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் செய்ய வேண்டிய ஓர் ஒருங்கிணைப்பை பிராந்திய கட்சியான திமுக-வின் சார்பில் செய்தார் மு.க.ஸ்டாலின். நிதிஷ்குமார், சுதாகர் ரெட்டி, ராஜா போன்றவர்களுக்கு ஸ்டாலினைப் பாராட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனாலும் அவர்கள் அந்த விழாவில் ஸ்டாலினை வெகுவாகவே பாராட்டினார்கள். தேசிய அளவிலான தனது கடமையில் இருந்து சற்று தள்ளியே இருந்த ஸ்டாலின், கருணாநிதியின் வைர விழா மூலம் தேசிய அளவிலான மாற்றத்துக்கான புள்ளியைத் தொடங்கி வைத்தார்.

கருணாநிதியின் இல்லத்து வாரிசு மட்டுமல்ல… இயக்கத்தின் வாரிசாகவும் ஆகிப்போன ஸ்டாலினுக்கு அந்த வாரிசு என்ற நிலையே சாதகமும் பாதகமும். தனது புதிய பாணி ஒன்றை வகுத்து செயல்படத் தொடங்கினால் கூட... ‘அவங்க அப்பா போல வரமாட்டாரு’ என்ற விமர்சனம் வரும்.

கருணாநிதியின் அடையாளங்களை மெல்ல மெல்ல ஸ்டாலின் பெற்று வருகிறாரா இல்லையா என்பதை நல்ல விவாதமாக நடத்தலாம். அதற்கு அப்பாற்பட்டு இன்று காலத்தால் ஸ்டாலினுக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கறுப்புக் கண்ணாடி.

கண் புரை பிரச்னைக்கான மருத்துவமனைச் சென்று சாதாரணமான அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு சட்டமன்றத்துக்கு வந்த ஸ்டாலினை திமுக-வினர் ஆசை ஆசையாக பார்த்தனர்.

காரணம்… தன் தந்தையைப் போல கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார் ஸ்டாலின். சில சட்டமன்ற உறுப்பினர்கள், ‘தளபதியை பார்த்தா தலைவரே சட்டமன்றத்துக்கு வந்ததுபோல இருக்குல்லே?’ என்று பேசிக் கொண்டனர்.

1953ஆம் ஆண்டு இப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா பொதுக்கூட்டம். அதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து அன்று மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டார். குறித்த நேரத்தில் பரமக்குடி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகில் சென்று கொண்டிருந்தபோது, கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால், கார் பழுதாகி, வேறொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டார் பரமக்குடியில். இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம். அதனால் உடனே திரும்பினார். திரும்பும்போது அசதியின் காரணமாக வாடகைக் காரை ஓட்டிய ஓட்டுநர் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார்.

திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது. கருணாநிதியின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. First aid எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்து கொண்டு திருச்சி வந்து சேர்ந்தார். மறுநாள் காலையில் முகமே வீங்கி, கருணாநிதியின் இடது கண்ணில் வலி தொடங்கியது.

வலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கருணாநிதியை, நண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு, இடது கண்ணுக்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்று கூறினார். அது எப்படி சாத்தியமாகும்? கருணாநிதியோ கண்ணைவிட தன் கடமைகளுக்கே முக்கியத்துவம் தந்தார்.

வாக்குக் கொடுத்தபடி, சென்னையில் ஓட்டல் ஒன்றில் ‘மணி மகுடம்’ நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று அதே இடது கண்ணில் கடுமையான வலி. கையில் இருந்த பேனாவையும், தாளையும் வீசி எறிந்து விட்டு, ‘அய்யோ’ என்று அலறினார். சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்துவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். பன்னிரண்டு முறை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது கருணாநிதியின் அந்த ஒற்றைக் கண்ணில்.

1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் கார் விபத்து ஒன்றில் சிக்கி, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று.

1971ஆம் ஆண்டிலும் அந்த வலி தொடர… இந்தியாவிலே உள்ள மிகச் சிறந்த கண் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்பேரில், அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் நகரில் உள்ள ‘ஜான்ஹாப்கின்ஸ்’ மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் மாமுனி என்பவர் கருணாநிதிக்குக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து, கறுப்புக் கண்ணாடியை தொடர்ந்து அணியச் செய்தார்.

இப்படி கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இதை அவரே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதமாகவும் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் இடது கண் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அவரது இடதுசாரிப் பார்வை கெட்டுப் போகவில்லை.

இதோ… மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியும் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு நான் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தோடு சட்டமன்றம் சென்று அதிமுக அரசின் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மீறல்கள் முதல் குட்கா ஊழல் வரை பேசி எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாற்றியிருக்கிறார் ஸ்டாலின்.

கருணாநிதிபோல யாரும் இனிமேல் வர முடியாது என்பது உண்மைதான். நாம் ஸ்டாலினிடம் கருணாநிதியை எதிர்பார்க்கக் கூடாது என்பதே நியாயம். ஆனாலும், ஸ்டாலினின் முகப் புத்தகத்தில் கறுப்புக் கண்ணாடி போட்ட புகைப்படத்தைப் பார்த்து, ‘தளபதி… தலைவரைப் போலவே மாறிவிட்டார்’ என்று பல உடன்பிறப்புகள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்குள் சமூக நீதிப் பார்வை இருந்தது. பெண்ணுரிமைக்கான புதிய பார்வை இருந்தது. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத உறுதிப் பார்வை இருந்தது. மத நல்லிணக்கத்துக்கான கருணைப் பார்வை இருந்தது.

ஸ்டாலினின் கறுப்புக் கண்ணாடிக்குள்ளும் அந்த பார்வைகள் நிச்சயம் இருக்கின்றன. இன்னும் அது வீச்சாக வெளிப்பட வேண்டிய தேவையும் இப்போது எழுந்திருக்கிறது.

மாநில உரிமைகள் மறுக்கப்படுவதும், மானத் தமிழ்மொழி ஒதுக்கப்படுவதும் அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு தீவிரமாகியிருக்கும் நிலையில், இந்தக் கறுப்புக் கண்ணாடியின் பொறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதே வரலாறு சொல்லும் செய்தி.

கறுப்புக் கண்ணாடி என்பது ஒரு குறியீடுதான். ஆனால் அது சரித்திரத்தின் குறியீடு!

- ராகவேந்திரா ஆரா

Thursday, July 6, 2017

புத்தகம் பற்றி

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
தனது பிறந்தநாள் பரிசாக பொன்னாடைகளுக்கு பதிலாக புத்தகங்களை வழங்குமாறு அன்பு வேண்டுகோளை வைத்து முடங்கி கிடந்த லட்ச கணக்கான புத்தகங்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் - திமுக செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்....

வாசிப்பவனே வாழ்கிறான்

Tuesday, June 27, 2017

எது நம்பிக்கை

*நம்பிக்கை*

எல்லாம் ஒழுங்காக நடக்க,
நீ நம்பிக்கையோடு இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.

எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும் போதும், நீ
தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

நீ நினைப்பதெல்லாம் உனக்கு
நடக்க நீ பலமாக உணர்ந்தால்
அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உற்றாரும் பிறரும்
உனக்கு உதவி செய்ய,
நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உன்னைக்
கொண்டாட, நீ சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

உன்னுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய, அதிலிருந்து
பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க, நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன்னிடத்தில் எல்லாம் இருக்க,
நீ எதிர்காலத்தைப் பற்றிக்
கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பக்ஷத்தில், நீ எதிர்காலத்தை
நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உனக்கு நம்பிக்கை இருக்கிறதா ???
*நம்பிக்கை இருந்தால் நல்லது*

நன்றி பழனியப்பன்

Wednesday, June 7, 2017

நீ படிச்ச முட்டாளா?

ஒரு வரி... ஒரு நெறி! - ஜீ.வி

- “பாடத்தை ரொம்பப் படிக்காதே... படிச்ச முட்டாள் பத்துப் பேரை தினமும் பார்க்கிறேன்! :- இயக்குநர் கரு.பழனியப்பன்

பள்ளிக்காலத்தில் ஒவ்வொரு தேர்வின் போதும் அப்பா எனக்குச் சொல்கிற அறிவுரை இது. நான் மிகவும் சராசரி மாணவன். தேர்வுக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகப் படிக்க முயல்வேன். அப்போதெல்லாம் அப்பா இந்த வரியைச் சொல்வார். ‘‘முதல் மதிப்பெண் எல்லாம் வேண்டாம்... ஐம்பது மதிப்பெண் வாங்கு, போதும்’’ என்பார். இந்த வாக்கியம் அப்பாவுடையது அல்ல. அவருடைய அப்பாவிடமிருந்து அவர் கடன் வாங்கியது. ‘‘படிச்சவன் என்ன செய்வான்? விசிறிக்குக் கீழே உக்காந்து வெள்ளைத் தாளைக் கறுப்பாக்குவான்... வேறென்ன தெரியும் அவனுக்கு?” என்று தாத்தா சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன். இந்த உலகத்தில் பிழைப்பதற்கான, சிந்தித்துச் செயல்படுவதற்கான அறிவைப் பள்ளிக்கூடப் படிப்பு தராது என்ற நம்பிக்கை, தாத்தா காலத்தில் இருந்து எங்கள் குடும்பத்திலிருக்கிறது.

அதேநேரத்தில் தினமும் ஒருமுறையாவது என்னை அழைத்து, ‘‘இன்று என்ன படித்தாய்?’’ என்று கேட்பார் அப்பா. அவரைப் பொறுத்தவரைப் படிப்பு என்பது, பாடப்புத்தகத்தைப் படிப்பதல்ல. ‘‘பிற புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதில்தான் வாழ்க்கையின் திறப்பு இருக்கிறது. எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கிறபோதுதான் சிந்தனை மேன்மையடையும். சிந்தனை மேன்மையடைகிற போதுதான் படைப்புத்திறன் உருவாகும்’’ என்பார். இதை நான் பிற்காலத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

அப்பா குறைந்த காலமே பள்ளிக்கூடம் போனார். ஆனால், வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். அவ்வளவு வாசிப்பார். வீடு, எப்போதும் உரையாடல் களமாக இருக்கும். நாங்களும் அவற்றில் பங்கேற்றுப் பேசுவோம். என் வீடு மட்டுமல்ல... 80-களின் முற்பகுதியில் எல்லா வீடுகளுமே உரையாடல் மையங்களாகத்தான் இருந்தன. சினிமா பற்றி, அரசியல் பற்றி மக்கள் பேசுவார்கள். அதனால் அவை இரண்டுமே நன்றாக இருந்தன.

இன்று வீடுகளில் உரையாடலே இல்லை. அப்படியே பேசினாலும் பிள்ளைகளைத் தனிமைப்படுத்தி விடுகிறோம். ‘‘ஏன் வாயைப் பாத்துக்கிட்டிருக்கே... போய்ப் பாடப்புத்தகத்தைப் படி’’ என்கிறோம். வீடுகளில் அனைவரும் ஒன்று சேர்வது, டி.வி பார்க்க மட்டும்தான். டி.வி-யை நிறுத்தினால் ஆளுக்கொரு மொபைல்போனை வைத்துக்கொண்டு தனிமையில் ஆழ்ந்து விடுகிறோம். 

பள்ளிக்கூடத்தில் என்கூடப் படித்த நண்பன், நன்றாகப் படிப்பான். ப்ளஸ் டூவில் 1200க்கு 1120 மார்க் வாங்கினான். பிற்காலத்தில் நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அவன் அமெரிக்கா போய்விட்டான். அண்மையில் என்னைச் சந்திக்க வந்தான். ஏவி.எம் வளாகத்தில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நான் இருந்தேன். அடையாளங் களைச் சொல்லி வரச்சொன்னேன். ஏவி.எம் வாசலிலிருந்து உள்ளே வருவதற்குள், வழி கேட்டு எனக்கு ஐந்து முறை போன் செய்துவிட்டான். அவனது படிப்பு, அவனைச் சக மனிதர்களோடு பேசவிடாமல் தடுத்திருக்கிறது. அருகில் நிற்கிற ஒரு வாட்ச்மேனிடமோ, வழியில் தென்படுகிற ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடமோ கேட்டிருந்தால், அழகாக வழிகாட்டி இருப்பார்கள். மனிதர்கள் மீது அச்சத்தையும் தயக்கத்தையும்தான் அவனது படிப்பு அவனுக்கு வழங்கியிருக்கிறது.

சுயமாகச் சிந்திக்கிற, முடிவெடுக்கிற தலைமுறை இப்போதில்லை. அப்பா சொன்னார் என்பதற்காகப் படிக்கப்போகிறார்கள். அம்மா சொன்னதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பொண்டாட்டி சொன்னதற்காக வீடு வாங்குகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் வாங்கியதைப் பார்த்து, கார் வாங்குகிறார்கள். தனக்கு என்ன தேவை என்று சிந்திக்கும் ஆற்றலைக்கூடக் கல்வி வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.

தாத்தா அப்பாவுக்குச் சொல்லி, அப்பா எனக்குச் சொன்னதை நான், இப்போது என் பிள்ளைகளுக்குச் சொல்கிறேன். பள்ளி தவிர வேறு எங்கே சென்றாலும் அவர்கள் கையில் ஏதாவது ஒரு கதைப்புத்தகம் இருக்கிறது. என் மகன் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்தில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடந்தது. பிள்ளைகளிடம் ‘‘என்ன ஆக ஆசைப்படுகிறீர்கள்’’ என்று கேட்டார் ஆசிரியை.  ‘‘இன்ஜினீயர் ஆகணும்’’, ‘‘டாக்டர் ஆகணும்’’ என்று பிள்ளைகள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். என் மகன், ‘‘முடிவெட்டும் கடை வைக்கப்போகிறேன்’’ என்றான். எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நானும், என் மனைவியும் சிரித்துக் கொண்டிருந்தோம்.

‘‘பிள்ளைக்கு உயர்வான விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள்... இல்லையென்றால் இதுவே விதையாக விழுந்துவிடும்’’ என்று எல்லோரும் பதறினார்கள். ‘‘இதுவும் உயர்வான விஷயம்தான். இதுவரை அவன் பார்த்த ஆட்களிலேயே, ‘தலையைத் திருப்பு’, ‘குனி’, ‘ஆடாதே’ என்று அவனை அதட்டுபவராக, அடக்குபவராக இருந்த உயர்வான மனிதர், முடி திருத்துபவர்தான். அதனால், எல்லோரையும் அதட்ட வேண்டுமெனில் நாமும் அந்த இடத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறானோ... என்னவோ? முதலில் குழந்தை சுயமாகச் சிந்தித்து, தானாக எதையாவது பேசட்டும்...’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பள்ளிப்படிப்பு முக்கியம்தான். ஆனால், அது அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதிலாக முடக்குகிறது. தயவுசெய்து குழந்தை களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். அதற்கு முன்னதாக நீங்கள் வாசிக்கப் பழகுங்கள்! குழந்தைகள் எல்லா செயல்களையும் உங்களைப் பார்த்தே செய்யப் பழகுகிறார்கள். அவர்கள் படித்த முட்டாள்கள் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி :- சாஜத் அலி

Thursday, June 1, 2017

மாட்டு கறி டிஜிடல் இந்தியா...

ச்ச்சும்மா ஐயோ மாட்டுக்கறிக்கு தடை போட்டுட்டாங்கனு ஒப்பாரி வைக்குறத நிறுத்திட்டு நமக்கு அதில் எப்படி ஆப்பு வச்சான்னு நல்லா கவனிங்க

ஒரு பக்கம் மாட்டிறைச்சி தடைனு மேலோட்டமா கெளப்பிவிட்டு நம்மை அதையே பேசுபொருளாக்கி விட்டு அந்த சட்ட திருத்தத்தில் ஃபீட்டா போன்ற எச்சைகள் போட்ட மிச்சத்த தின்னுட்டு

சேர்த்தப்பட்ட சட்ட விதிகளை கூர்ந்து கவனிங்க, தடை மாட்டு கறிக்கு அல்ல. ஏன்னா கொஞ்சநாள் முன்னால் சீனாவுக்கு போன 56" பல மில்லியன் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போட்டாச்சி. அனுப்பலனா செருப்பால அடிப்பான்

போக உலக ஆளவுல மாட்டிறைச்சி ஏற்றுமதில பெரும்பங்கு வகிக்கும் இந்திய பெரு நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு பிச்சை போடறவங்களே. ஆக பெருநிறுவனங்களுக்கு பாதிப்பு இல்ல, கடந்த மூனு வருசத்துல அவர்களின் வளர்ச்சி அபரிமிதமானது

மேலோட்டமா மாட்டுக்கறி தடைனு போட்டு உள்ள மாட்டுக்கு மூக்கனாங்கயிறு போடக்கூடாதுனு ஒரு சட்டதிருத்தம் மூலமாக ஒரு கோடி பேர் தெருவில் இறங்கி போராடிய ஜல்லிக்கட்டு அடுத்த வருசம் நடக்குமானு யோசிங்க.

மூக்கனாங்கயிறு போடாம விவசாயம் செய்ய, நாட்டு மாடு வளர்க்க, மஞ்சுவிரட்டு / ஜல்லிக்கட்டு நடத்த ஒரு வழியும் இல்ல. ஆக நாட்டுமாடுகள் நம் கைய விட்டு போயிடும்

ஆக குளிர்பான மார்க்கெட்டை இழந்த , ஜல்லிக்கட்டு போராட்டத்துல மூக்குடைபட்ட கார்ப்பரேட்டுகள் தன் நோக்கத்துல புறவாசல் வழியா ஜெயிக்கறான். இது புரியாம நாம ஐயோ மாட்டுக்கறினு ஒப்பாரி வைக்கிறோம்.

மனுசன் மேல ஹோலி பண்டிகை பேர சொல்லி கொட்டுற கிலோக்கணக்கான வண்ண பவுடர்கள் ஏற்படுத்துற பாதிப்பு பெருசா தெர்ல

ஆனா மாட்டு கொம்புல பூசும் வர்ணங்கள் அந்த நாய்களின் கண்ணை உறுத்தி தடை போட்டான்னா மாட்டு பொங்கலை கொண்டாடும் நம்மை அதை கொண்டாட விடாம தடுக்குற களவாணித்தனமே

எவ்வளவு வன்மம் நம்மீது இருந்தா கொம்புகளில் வர்ணம் பூசத் தடை (அதாவது கொம்பில்லாத ஜெர்சி பன்னி வேனும்ன்ற உள்நோக்கம்) அப்டினு சொல்வான்.

நாளைக்கே மாட்டுக்கறிக்கு தடை இல்லனு சொன்னா இன்னிக்கு திராவிடன்னு சொல்லி நம்மோடு போராடுற நாய்க வெற்றி வெற்றினு ஓடிப்போய்டும்.

ஆனா நமக்கு இறுக்கமாக அடிக்கப்பட்ட ஆப்பு மாறாது. குரல் எழுப்ப எந்த நாயும் வராது. எந்த சட்டம் வந்தாலும் சொம்படிச்சே பழகுன காபி பேஸ்ட், மீம்ஸ், போட்டோஷாப் அடிமை கும்பல் வழக்கம் போல சொம்படிக்கும்.

அப்றமா இன்னுமா மாட்டை வச்சி விவசாயம் செய்யுற ஆந்திராவில் பாரு குஜராத்தில் பாரு எந்திரம், கூட்டு பண்ணைனு போயிட்டான்னு ஒப்பாரி வச்சி கார்ப்பரேட் மூத்திரத்த குடிக்க போயிடும். ஈனப்பிறவிக

நாம் வழக்கம் போல சாதி பிரச்சினை, கூத்தாடிக்கு சொம்படிக்குறதுனு போயிடுவோம்.

யோசிக்க வேண்டிய தருணம். யோசித்து #அரசியல் பயில்வோம்.

- வடிவேல் சுப்ரமணியம்