நீங்கள் இப்போது முகநூலைக் கவனித்தால் ஓர் உண்மை புரியும்.
இத்தனை வருடங்களாய் சட்டமன்ற நிகழ்வுகளையோ பாராளுமன்ற நிகழ்வுகளையோ தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்குப் பத்து பதிவுகள் போடுகின்றனர். அவர்களில் 90% பெண்கள்.
அப்படி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆவலோடு பலரையும் தேடித் தேடிப் படித்தேன்.
செல்லத்துக்கு டிரஸ்ஸை மாத்தி விடுங்கடா
கருப்பு கோட்டைக் கழட்டிட்டு இன்னிக்கு புளூல வாங்கடி தங்கம்.
என் ஆளுக்கு நல்ல தூக்கமில்ல போல. டல்லா இருக்காரு.
சி.எம் ஷோஃபாவுல நிறைய இடம் காலியா இருக்கே. நானும் அங்க வந்துரட்டுமா புஜ்ஜிமா.
டை அடிச்சிட்டு வெள்ளை வேட்டி சட்டைல வாங்கண்ணா. அப்பத்தான் மாஸ் அள்ளும்.
நீ என்னத்தை வேணாலும் உளறுண்ணா. நா உன்னயவே பாத்துட்டிருக்கேன்.
நீ எதுவுமே செய்ய வேணாம் கியூட்டான்டி. இப்பிடி தினம் வந்து போஸ் கொடுமா.
இவைதான் அந்த மாதரசிகள் அடைந்திருக்கிற திடீர் அரசியல் விழிப்புணர்வின் எச்ச சொச்சங்கள்.. சீரியஸாய் அரசியல் பேசுகிறவர்களும் ' எங்களுக்கு ஓட்டுப் போட்ட கட்சியோட ஆதரவுலதான் நீங்க முதலமைச்சரா உக்காந்திருக்கீங்க ' என்று உதய் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம் என்று அறிவுரை வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் சட்டமன்றத்தைக் கூட audio luanch நடக்கிற இடமாகவே பார்க்கிறார்கள்.இன்னும் சிலர் இவரை பேரறிஞர் அண்ணாவோடெல்லாம் ஒப்பிட்டு எரிச்சல்படுத்துகிறார்கள்.
அண்ணா காமராஜரைப் பார்க்கப் போனது media promotionகாக அல்ல. ஆனால் இவர் நடத்திக் கொண்டிருப்பது அக்மார்க் political shooting. தளபதி பட்டத்தை ஸ்டாலினிடம் இருந்து பிடுங்கியது போல் இப்போது புகழேந்தி ஐயா என்கிற brand name க்கும் குறி வைத்திருக்கிறார். இனி நாகரிக அரசியலுக்கும் நான் மட்டும்தான் authority என்கிற திமிரான முன்னெடுப்பன்றி வேறில்லை. இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் லாட்டரி ஆன்டியின் துவார பாலகர்களை மட்டும் தனியே சந்தித்தால் எல்லோருக்கும் சந்தேகம் வந்து விடும் என்பதற்காக மீடியாக்களின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிற கண்கட்டு வித்தை.
Vijay TV நடத்தும் செல்லக் குரலுக்கான தேடலுக்கு fire விடுவது போல் தமிழக மக்கள் இந்தச் செல்ல முதலமைச்சருக்கான தேடலின் முடிவில் எந்த சீனைப் பார்த்தாலும் புளகாங்கிதம் அடைந்தபடி Tv க்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். தேடிப் போன அரசியல் தலைமைகளின் வீடுகளிலும் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர மற்ற இடங்களில் பிரபல நடிகர் வீட்டுக்கு வந்ததால் உருவான திடீர் பரவசத்தையும் கொஞ்சலான உடல்மொழியையும் மறைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அரசியல் தலைவர்களின் குடும்பங்களே இப்படி நடந்து கொண்டால் சாதாரண ஆன்டிகளை என்ன சொல்ல முடியும்?
இன்னும் கொஞ்ச நாட்களில் சட்டமன்றத்தில் விஜய்யை எதிர்த்து யாராவது பேசினால் இந்த அரை மேக்கப் ஆன்டிகள்
" நீ பேசாம திரும்பி நடிக்க வந்துருண்ணா. இவனுகள்லாம் காட்டு மிராண்டிகள்." என்று அழுத விழிகளோடு வீடியோ போடுவார்கள்.ஆண் ஆச்சர்யக் குறிகள் ' சட்டமன்றத்திற்குள் புகுந்து எதிர்கட்சியினரை சுட்டுக் தள்ளும்படி ' போலீஸை வலியுறுத்தி மிரட்டல் ரீல்ஸை வெளியிடுவார்கள்.
தரவுகள் மக்கள் பிரச்சினைகள் அறிவுப் பூர்வமான விவாதங்கள் தவறுகளைச் சுட்டுதல் தமிழகத்தின் வளர்ச்சி சமூக நீதி நலத்திட்டங்கள் மதச்சார்பின்மை எதுவுமே இவர்களுக்கு முக்கியமில்லை. இவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது தனிநபர் சாகசத்துக்கான கொண்டாட்டம். அதற்கு எதிராக கருத்துச் சொல்லும் அத்தனை பேரும் toxic boomers.
அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் உயர் அரசு அதிகாரிகள் காவல்துறை என்று மொத்தச் சமூகமும் முழு அரசியல்வாதியாக மாறி விட்ட காரியக்கார நபரை இன்னும் உச்ச நடிகராகவே கருதிப் புளகாங்கிதம் அடைகின்றனர். இதன் விளைவுகளை நாம் எதிர்காலத்தில் கண்டிப்பாக அனுபவிக்கப் போகிறோம். Full mejarity யில் ஜெயித்திருந்தால் விஜய் சட்டமன்றத்தில் காட்டியிருக்கிற முகமே வேறு. வேல் பெல் கோஷ்டிகள் தவெகவில் முழுமையாக ஐக்கியமாகிற நாளில் பக்கா மாஸ் தன் original முகத்தை உலகிற்கு வெளிக்காட்டுவார். இப்போது fire விட்டுக் கொண்டிருக்கிற innocent முற்போக்குகளுக்கு அப்போதுதான் பித்தம் தெளியும். காரியக்கார முற்போக்குகள் அப்போதும் தம் கட்டிப் பேச மார்க்ஸ் பெரியார் ஏங்கல்ஸ் அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களில் இருந்து ஏதாவது ஒரு வரியை இப்போதே கண்டுபிடித்து பாதாள அறையில் ஒளித்து வைத்திருப்பார்கள்.
No comments:
Post a Comment