தொகுப்புகள்

Search This Blog

Saturday, May 12, 2012

நல்லவர்களை அடையாளம் காட்டுவோம் ?


நல்லவர்களுக்கு நாட்டில் குறைவில்லை, அரசியலில்... முடிந்தவரை பதிவர்களும் நேர்மையானவர்களை அடையாளம் காட்டுவோம்.

அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண் பாட்டு அமைப்பானது  (UNESCO), அய்க்கிய நாடுகள் சபையின் (UNO)முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.

மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டி யெழுப்புவதான நோக்கத்தை அடை வதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.
இது பன்னாட்டு அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்து கொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல் படுகிறது.

கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படு கிறது.

எழுத்து அறிவித்தல் பன்னாட்டு அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும்.

இப்படிப்பட்ட ஒரு உயரிய நல்லெண்ண அமைப்பின் தெற்காசிய பசிபிக் பிரிவின் ஆலோசகராக நமது மரியாதைக்குரிய தோழர். அசேன் முகமது ஜின்னா அவர்கள் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்த ஒரு திராவிடத் தமிழர் இப்படிப் பட்ட உயரிய நிலைக்கு சென்றிருப்பதற்கு அடிப்படைக் காரணம், அவரது திறமையும் உழைப்பும் ஆகும். மேலும் அந்த திறமையும் உழைப்பும் அங்கீகரிக்கப்பட காரண மாக இருகின்ற திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் என்றால் அது மிகையாகாது.
யுனெஸ்கோ அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "நன்கு படித்த, சமூக அக்கறை கொண்ட, பெண்கள் முன்னேற்றதுக்காக பாடுபடும் இளம் அரசியல் தலைவரான ஜின்னாவின் நியமனம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும்," என்று குறிப்பிட்டுள்ளது.

நன்றி :- ரகு 

1 comment:

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete