தொகுப்புகள்

Search This Blog

Saturday, January 29, 2011

வாணி நி அரவாணி - மதிப்பிற்குரிய திருநங்கை


பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது.

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.


ஆண்/பெண் என்ற சொல் மதம்/இனம் அல்லாமல் பாலியலை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அலிகளோ சராசரி ஆண்/பெண் போலன்றி மதம், இனம், மொழி கடந்து ஒடுக்கப்பட்டோர் என்ற வகையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் குறிப்பட்டதொரு மதம் சார்ந்து அழைக்கப்படுதல் ஜனநாயக அடிப்படையிலும், மொழியியலடிப்படையிலும் பொருந்தாது.

அரவாணிகள் என அழைக்கப் பட்டோரை திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்து அதன் மூலம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும் திருநங்கைகள் சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் மூலமாக திருநங்கைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் வகையில் 6 திருநங்கைகளுக்கு தலா இருபது ஆயிரம் மதிப்பீட்டில் கறவை மாடுகளும், 4 திருநங்கைகளுக்கு கலைத்தொழில் கருவிகள் வாங்கு வதற்கு தலா இருபது ஆயிரமும், 7 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் 127 திருநங்கைகள் கண்டறியப் பட்டனர்.

சமூக நலத்துறையின் மூலமாக 58 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. வருவாய்த்துறை மூலமாக 72 திருநங்கைகளுக்கு வடவீரநாயக் கன்பட்டியில் தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை பட்ட வழங்கப்பட் டுள்ளது.

68 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், பாரதி என்ற திருநங்கைக்கு முன்னோடி வங்கி யின் மூலம் கல்விக்கடனாக 21 ஆயிரம் ரூபாய், மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் மூல மாக 5 சுய உதவிக்குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 17 திருநங்கைகளுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது

நேசம் புதுசு என்ற படத்தை கார்த்திக்குடன் இணைந்து இயக்கிய வேல்முருகன் பிறகு சில படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆசை தலைதூக்க ஆ‌க்சன், கட் சொல்ல முடிவெடுத்து இவர் இயக்கும் படத்தை ஜெய் கார்த்திக் மூவிஸ் தயா‌ரித்து படத்துக்கு வைத்த பெயர் திருநங்கை.

படத்தில் ஹீரோயினாக ஒரு திருநங்கையே நடிப்பதாக இருந்தது . இதற்காக கலாஷேத்ராவில் நடனம் பயிலும் ல‌க்சயா என்ற திருநங்கையை தேர்வு செய்யப்பட்டார் . திருநங்கையை கதாநாயகியாக்கி இதுவரை இந்தியாவில் படங்கள் வந்ததாக‌த் தெ‌ரியவில்லை. முதல் முறையாக அதை சாதிக்கப் போகிறது தமிழ் சினிமா என்ற ஆவலில் இருந்தோம் . ஆனால் ஒருவருடத்திற்கு மேலாகியும் படத்தைப்பற்றி எந்த செய்தியும் தெரியவில்லை . 

திருநங்கைகள் தங்கள் சொந்த முயற்சியினால் முன்னேற முயல்வதற்க்கு சமுதாயம் உதவ தவறுகிறது . மொத்தத்தில் திருநங்கைகளின் பிரச்சனைகளும், வாழ்க்கையின் கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

No comments:

Post a Comment