தமிழகத்தைப் பொருத்தவரை அரசியலில் ஒருவர் வளர, உயர ,புகழ்பெற வலுவாய் இருக்கும் ஒரு தலைவரை எதிர்த்தே அரசியலில் வளர்ந்திருக்கிறார்கள் , உயர்ந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 80 வருட பொது வாழ்க்கையில், பேசினாலும் தலைப்புச் செய்தியாய், பேசாவிட்டாலும் தலைப்புச் செய்தியாய் ,ஏன் செயல்படவே முடியாமல் இயற்கை விளையாடியதால் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அகில இந்தியமும் தாண்டி உலக அளவில் பேசுபொருளாக ஆகியிருக்கிறார் .அவர்தான் டாக்டர் கலைஞர்.
இதில் தலைவர் கலைஞர் அவர்களுக்கே ஏற்ற இறக்கங்கள் ,போராட்டமே வாழக்கை என்பதாக இயற்கையே இயற்கையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.
தனது 13 வயதில் இந்தி எதிர்ப்புக்காகக் கொடிபிடித்தவர் 93 வயதுவரைத் தாங்கிப் பிடித்த கழகக் கொடியை தன் கூடவே இருந்து அரசியல் கற்ற, கழகத்திற்காக அடிபட்ட,மிதிபட்ட தளபதி ஸ்டாலின் அவர்களிடம் கொடியை ஒப்படைத்தது வரை...
போகட்டும் இது நாமறிந்ததுதான்.
கிட்டத்தட்ட அகில இந்திய அளவில் தலைவர் கலைஞர் அவர்களைப் படித்து, பிடித்து,பார்த்து அரசியல் செய்தவர்களும் ,
தலைவர் கலைஞர் அவர்களை வாழ்நாளெல்லாம் எதிரியாகவே நினைத்து, தங்களின் அரசியல் பயணத்தைத் தமிழகத்தில் துவங்குவதற்கு பெரும் தடையாக இருக்கும் ஒரு மாமலையான கலைஞரைக் காணாமலடிக்க எல்லாவிதமான வேலைகளையும் செய்த, செய்துவருகிற கட்சியினர்கூட காவேரியில் தனது பாவத்தைக் கழுவ வருவதும் போவதுமாகவே இருந்து வருகிறார்கள்.
இதுவும் நாம் அன்றாடம் பார்த்து வரும் செய்தியே.
அதேசமயம், தமிழகத்தின் முதலமைச்சர் தொட்டு, அனைத்து அமைச்சர்கள் வரை வந்து பார்த்து தங்களின் அரசியல் பண்பாட்டை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். பேட்டிகளிலும் தங்களது கன்னியத்தையே பிரதிபலித்திருக்கிறார்கள்.
ஆனால்
திரு.சீமான் என்கிற ஒரு நடிகரும் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்க வந்து தளபதி அவர்களிடம் விசாரித்துச் சென்றிருக்கிறார்.
மறைந்த ஹிட்லர் கூட திரு.சீமானைப்போலச் செய்திருப்பாரா என்றால் இல்லை.
ஏன் இந்த வன்மம்?
தலைவர் கலைஞர் அவர்களை காவேரியில் பார்த்துவிட்டு அதை ஒரு பொதுக்கூட்டம் ஒன்றில் மிக மிகக் கேவலமாக விமர்சனம் செய்வதென்பதை விலங்கினங்கள்கூடச் செய்யாது.
எப்படி திரு.சீமான்?
மேதகு பிரபாகரன் அவர்களிடம் பழகியவர்கள் அத்துனைபேரும் மனிதநேயர்களாக இருந்துவரும் சூழலில் நீங்கள் மட்டுமே ஹிட்லரை விட மோசமாக இருக்கிறீர்கள்.
ஆக,நீங்கள் மேதகு பிரபாகரன் அவர்களிடம் பழகவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
என் கவலை ஒன்றே ஒன்றுதான். உன்னையும் நம்பி,உனது சுயநலம் அறியாமல் உன்னைச் சுற்றி சில இளைஞர்கள் இருக்கிறார்களே அவர்களைப் பற்றியே எனது கவலை.
இளைஞர்களே!
காலம் பொன் போன்றது. காலம் மிகப்பெரிய ஒரு சமூகப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.
அதை எப்படி,எந்த வகையில் பயண்படுத்தப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்களது பயணம்.
சீமானிடம் இருப்பதன் மூலம் உங்களது விலைமதிப்பற்ற உழைப்பு வீணடிக்கப்படுகிறது.
உங்களின் உடம்பில், மூளையில் விசம் பாய்ச்சப்படுகிறது. கோவப்படாமல் சிந்திக்க முயலுங்கள். உங்களை அறியாமல் உங்களைக் கோவப்பட மட்டுமே பழக்கப்படப்பட்டிருக்கிறது.
சீமான் என்கிற தனிமனிதனின் சுயநலத்திற்காக ஒன்றுமறியா இளைஞர்கள் அல்லவா பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.
மேதகு பிரபாகரன் இல்லை என்பதற்காக இப்படியெல்லாம் பொய்கள் பேசி இளைஞர்களை நாசம் செய்யக்கூடாது.
நாம் தமிழர் என்கிற இயக்கத்தை வளர்க்க முடியவில்லை எனும்போது அதைக் கலைத்துவிட்டு இளைஞர்களை சமூகத்திடம் ஒப்படைத்தது விட்டு நீங்கள் தூக்கிலிட்டுக்கொள்வதே தமிழகத்திற்கு நல்லது. பாஜகவை விட நீங்கள் மோசமான ஆபத்தானவர் என்பதை தமிழுலகம் அறிந்துகொண்டது.
ஹிட்லரைப் பற்றி அறிந்துகொண்டதை விட யூதாசைப் பற்றி நீங்கள் கூடுதலாக அறிந்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால். மேற்கண்ட இரண்டில் ஏதாவதொரு முடிவை எடுக்கும் சூழலுக்கு வந்துவிட்டீர்கள். எடுத்து விடுங்கள்.
ஈழத்தில் மேதகு பிரபாகரன் அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதற்கு முன் துரோகிகளை அழித்துவிட்டே எதிரிகளிடம் சென்றார்.
நீங்கள் தமிழகத்திற்கு ஆபத்தானவர்...
நன்றி அண்ணன் சிங்கராயர் ஆரோக்கியசாமி
No comments:
Post a Comment