தொகுப்புகள்

Search This Blog

Sunday, June 3, 2018

கலைஞரை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக படியுங்கள்

இப்பதிவை எழுத உடன்பிறப்பு #பா.அருண்குமார்,பொள்ளாச்சிArun Kumar அவர்களுக்கு 90 நிமிடங்கள் ஆனது.. ஆனால் நீங்கள் இரண்டு நிமிடங்களில் படித்துவிடலாம்.. கலைஞரைப் பிடிக்கும் என்பவர்கள் விருப்பமிருப்பின் படியுங்கள்.. பிடிக்காது என்பவர்கள் கட்டாயம் படியுங்கள்...

இன்று கலைஞரின் 95ஆவது பிறந்தநாள் என்ன சொல்லி வாழ்த்த? எப்படி வாழ்த்த? எப்படி வாழ்த்தினாலும் அது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.. கலைஞர் ஓர அரசியல்வாதி மட்டுமே என்றால் அவர் மேற்கொண்ட சாதனைகளை மட்டும் கூறி வாழ்த்தலாம்.. கலைஞர் ஒரு கதாசிரியர் மட்டுமே என்றால் அவரின் திரைப்படங்களை புகழ்ந்து வாழ்த்தலாம்.. கலைஞர் ஒரு நூலாசிரியர் மட்டுமே என்றால் அவரின் வரிகளை மேற்கோளிட்டு வாழ்த்தலாம்.. ஆனால் இவை மட்டும் தான் கலைஞர்? கலைஞர் ஓர் அரசியல்வாதி, முற்போக்குவாதி, கதாசிரியர், முதல்வர், கட்சித்தலைவர், நூலாசிரியர், முத்தமிழ் அறிஞர், பாடலாசிரியர், கவிஞர், நல்ல ரசிகர், இவற்றையெல்லாம் விட அவரே அடையாளப்படுத்திக் கொள்வதைப் போல ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் கலைஞர்..

வசனகர்த்தாவாக கலைஞர் :

வசனகர்த்தாவாக புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர்.. அந்தக் காலத்திலேயே மிகத் துணிச்சலாக வசனம் வைத்தவர் அவர்.. கடவுளையும் பூசாரியையும் மக்கள் மிகவும் வணங்கி வந்த காலகட்டத்தில் "அடேய் பூசாரி" என்றும் "அம்பாள் என்றைக்கடா பேசினாள்" என்றும் அன்றே பகுத்தறிவை ஊட்டியவர் அவர்

கதாசிரியராக கலைஞர் :

கலைஞரின் கதைகள் என்றுமே புரட்சியின் விதைகளாகவே இருந்துள்ளன.. புராண படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமத்த காலத்தில் சமூகப் படங்களை கொடுத்தவர் கலைஞர்...

பாடலாசிரியராகக் கலைஞர்:

பாடல் எழுதுவதிலும் வல்லவர் கலைஞர்.. "காகித ஓடம்" பாடல் அவர் மெட்டுக்கு எழுதிய பாடல்.. எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதுகையில் வாலி முதல் வரியை இப்படி எழுதினார் "நான் அளவோடு ரசிப்பவன்" இரண்டாவது வரி வரவில்லை.. அதிக நேரம் யோசித்த வேளையில் பாடல் எழுதும் தளத்திற்கு வந்த கலைஞர் இரண்டாவது வரியைச் சொன்னார் "எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று.. ஆக வாலிக்கே வரி கொடுத்தவர் கலைஞர்.. இவை எல்லாவற்றையும் விட 87 வயதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு "செம்மொழி" பாடல் எழுதினார் பாருங்கள் அது தான் சாதனை..

முத்தமிழ் அறிஞர் கலைஞர் :

இயல்,இசை, நாடகம் என மூன்றிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் கலைஞர்.. இதென்ன பெரிய அதிசயம் என்போர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.. வைரமுத்து, வாலிக்கு இசை தெரியும் நாடகம் வராது, ரஜினிக்கு நடிப்பு வரும்(😂😂😂) இசை வராது.. ஆனால் கலைஞர் இம்மூன்றிலும் வல்லவர்

நகைச்சுவை மன்னன் கலைஞர்:

ஒரு முறை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது , தண்ணீர் கூட அவருக்கு கொடுக்கக் கூடாது என்ற நிலை.. அந்நிலையில் கலைஞர் தண்ணீர் கேட்க ஒரு செவிலியர் ஸ்பூனில் சிறிதளவே தண்ணீர் கொடுக்க "ஏம்மா உன் பேரு காவிரியா கொஞ்சூண்டு குடுக்கற" என்று இயலாமையிலும் ரவுசு விடுபவர் கலைஞர்..

தன்னை கைது செய்ததைக் குறித்து இப்படி சொன்னார் "என்னை கைது செய்யும் போது என் கையை முறுக்கு முறுக்கென முறுக்கினார் ஒரு காவலர்.. அவர் பேர் பின்னர் தான் தெரிந்தது.. அவர் பேர் முருகேசன்"..

கலைஞர் ஓர் ஆகச் சிறந்த தத்துவவாதி :

கலைஞரின் சில தத்துவங்கள் உலகில் எவராலுமே சொல்ல முடியாதவை ..

"மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றத் தொடங்குகிறது"

என்ற அவரின் தத்துவத்தை உளவியலின் தந்தை எனப்படும் சிக்மண்ட் ஃபிராய்டால் கூட சொல்ல இயலாது என்பதே உண்மை..
அதே போல் "உண்மையை மறைப்பது என்பது விதையை மண்ணினுள் புதைப்பதைப் போன்றது" என்று எளிமையாக அதே நேரம் மிகச் சிறப்பாக சொல்லும் ஒரே தலைவர் கலைஞர் தான்..

பத்திரிகையாளர் கலைஞர்:

80 வருடங்களாக பத்திரிகைத் துறையில் இருக்கும் ஒரே மனிதர் கலைஞர்.. முரசொலி தன் மூத்த பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பத்திரிகைத் துறையை நேசிப்பவர்..

அப்டேட் கிங் கலைஞர்:

காலமாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்பவர் கலைஞர்.. முகநூலில் சேர்ந்தவுடன் "முகநூலை கண்டறிந்த மார்க்குக்க நன்றி" என்று ஸ்டேட்டஸ் போட்டு ரகளை செய்தார்..
சச்சின் சுயசரிதை புத்தகத்தை படித்து அதைப் பற்றி ஸ்டேட்டஸ் போட்டு சச்சினுக்கே டேக் செய்து மிரள வைத்தார்..
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில்  264 ரன்கள் சாதனை புரிந்தபோது அவருக்கு வாழ்த்து செய்தி போட்டு அவருக்கு டேக் செய்து டிரெண்ட் செய்தார்.. இப்படி தன் வாழ்நாள் முழுவதிலும் தன்னை அப்டேட் கிங்காகவே தன்னை வைத்துக் கொண்டவர் கலைஞர்...

கட்சித்தலைவராகக் கலைஞர்:

கலைஞரைப் போல் கட்சியை நடத்தியவன் உலகில் எவனுமே இல்லை.. சினிமாவில் வில்லனை அடிப்பதையும், நல்லது செய்வதையும் உண்மை என்று நம்பி ஒரு நடிகனைத் தொடர்ந்து முதலமைச்சராக்கும் முட்டாள் மக்கள்.. முதலமைச்சராகியும் எந்த நன்மையும் செய்யாத ஒரு நடிகர் என பல இக்கட்டத்தான நிலையிலும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் கலைஞர்.. எதிர்கட்சியிலிருந்து ஆட்களை இழப்பதற்கே பல வேலைகளை செய்தார் எம்.ஜி.ஆர்.. அதையெல்லாம் முறியடித்து இன்றுவரை கட்சியை நடத்தி வருகிறார் கலைஞர்.. உலக வரலாற்றிலேயே 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்த/ இருக்கின்ற ஒரே தலைவர் நம் கலைஞர் மட்டுமே...

ஊழல்வாதியா கலைஞர்? :

பொதுவௌியில் சிலரும், சமூக வலைதளத்தில் பலரும் வைக்கக்கூடிய ஒரு விமர்சனம் கலைஞர் ஓர் ஊழல்வாதி என்பது.. இது உண்மையா? கலைஞர் திருட்டு ரயிலில் சென்னை சென்றவர் தான் அதற்காக டிக்கெட் எடுக்கும் அளவிற்குக் கூட அவரிடம் வசதியில்லை என்பது பொய்.. வீட்டை விட்டு ஓடி வருபவர்கள் திருட்டு இரயில் பிடிப்பது எல்லா காலங்களிலும் நிகழ்வது.. திருவாரூரில் கலைஞரின் குடும்பம் மிக வசதியான குடும்பங்களில் ஒன்று.. சிறுவயதிலேயே மாணவர் பத்திரிகை என்று ஒன்றை ஆரம்பித்து அதை நடத்தும் அளவிற்கு வசதி உள்ளவரே கலைஞர்.. சென்னைக்கு வந்து திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியதன் மூலமும் சம்பாதித்தார்.. அவர் குடியிருக்கும் கோபாலபுரம் வீடு அவர் முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.. 75 ஆண்டுகால பொதுவாழ்வில் எந்தவித முறைகேடு/ ஊழல் வழக்கிற்காகவும் தண்டிக்கப்படாத ஒரே இந்தியத் தலைவர் கலைஞர்..

சாதனையாளர் கலைஞர்:

1. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்டை பெற்றுத் தந்தவர் கலைஞர்
2. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு
3. கை ரிக்ஷா முறையை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவை அறிமுகம் செய்தது
4. பெண்களுக்கு திருமண நிதியுதவி
5. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
6. மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு பயணக் கட்டண சலுகை
7. இலவச பஸ் பாஸ்
8. சத்துணவில் முட்டை
9. விவசாயக்கடன் ரத்து
10. அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி
11. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அறிமுகம்
12. பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு
13. இலவச எரிவாயு
14. 108 ஆம்புலன்ஸ்
15. உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
என எக்கச்சக்க திட்டங்களை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

முதலமைச்சராக கலைஞர் :

1969ல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை கலைஞர்.. அண்ணா மறைவால் தான் கலைஞர் முதல்வரானார் .. ஆனால் 1971ல் 234ல் 184ல் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வரானார் கலைஞர்.. ஒரு ஆளுங்கட்சி அவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றது அதற்கு முன்பும் இல்லை அதற்கு பின்பும் இல்லை.. இன்று வரை அதுவே சாதனை.. ஆக மக்கள் அங்கீகரித்த முதல்வர் அவர்.. தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் (ஏறக்குறைய 19 ஆண்டுகள்)...

நல்ல போராளி கலைஞர்:

கலைஞர் ஒரு நல்ல போராளி.. இந்தி எதிர்ப்பு ஆகட்டும், கல்லக்குடி இரயில் மறியல் ஆகட்டும், நெருக்கடி நிலை ஆகட்டும் அவரின் சீரிய  போராட்டத்திற்கு வெற்றியே கிடைத்துள்ளது...

நடுநிலை என்ற பெயரில் திரியும் சிலருக்கு:

1. கலைஞரை எதிர்க்கும் நீங்கள், நான் மேலே சாதனைகள் என்ற தலைப்பில் குறிப்பிட்டதைப் போல மற்ற முதல்வர் செய்ததைப் பட்டியலிட முடியுமா?

2. காவிரி விஷயத்தில் குறை கூறுபவர்களே நீங்கள் சொல்லுங்கள்... காவிரி நீர் யார் ஆட்சியில் அதிகநாள் வந்தது என்று?

3. ஈழத்தமிழர்களை கைவிட்டார் என்று குற்றம் சாட்டுபவர்களே, இரண்டு முறை ஈழத் தமிழர்களுக்காக பதவியையும் ஆட்சியையும் தூக்கியெறிந்தவர்கள் யாரென்று? (பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானமும், போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது இயல்பான ஒன்று தான் என்று ஈழ மக்கள் சாவதைப் பற்றி கூறியவரும் உங்களுக்கு ஈழத்தாயாக இருக்கும் பட்சத்தில் கலைஞர் தமிழன துரோகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..)

4. கலைஞர் ஆட்சியில் ஒருமுறையாவது பேருந்துக் கட்டணம் உயர்ந்து மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதா?

5. எந்த அரசு ஊழியர்களையாவது கலைஞர் தன் ஆட்சியில் டிஸ்மிஸ் செய்துள்ளாரா? (சாலைப் பணியாளர்கள் கலைஞர் ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரே கையெழுத்தில் 10000 பேரை வீட்டிற்கு அனுப்பியது யார்?)

கலைஞரின் எதிர்ப்பாளர்கள் யார்?

கலைஞர் பல்துறை வித்தகர்.. அவரை ஒரு தறையில் வெறுத்தாலும் மற்றொரு துறையில் தன்னை விரும்ப வைப்பவர்.. அப்படியிருந்தும் அவரை வெறுக்கிறார்கள் என்றால் அவர்கள் கீழ்க்கண்டவர்களுள் யாரேனும் ஒருவராய் இருப்பர்.
1. வரலாறு தெரியாதவர்கள்
2. எந்தவொரு விஷயத்தையும் அரைகுறையாய் புரிந்து கொள்பவர்கள்
3. தான் தான் பெரிய புடுங்கி என்று நினைத்துக் கொள்பவர்கள்
4. பிற்போக்குவாதிகள்
5. சுய சிந்தனை அற்றவர்கள்
6. முட்டாள்கள்
7. பகுத்தறிவு அற்றவர்கள்
8. கெட்டவர்கள்
9. உளவியல் கோளாறு உள்ளவர்கள்

முதுமையில் கலைஞர்:

தன் வாழ்நாளில் பல சாதனைகளை செய்து இன்று உடல்நிலை ஒத்துழைக்காததால் ஓயவில் உள்ளார் கலைஞர்.. இனி அவர் செய்ய வேண்டிய வேலை என்று எதுவும் இல்லை.. தன் கல்லறையில் "ஓய்வின்றி உழைத்தவன் இங்கே ஓய்வெடுக்கிறான்" என்று எழுத வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கு அதில் கூட வேலை வைக்காதவர் கலைஞர்.. இனி எத்தனை காலம் இருக்க  முடியுமோ தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும் அவர் பெயரை எழுதாமல் தமிழக வரலாறு, தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு, ஏன் எந்த அரசியல் கட்சித் தலைவர்களின் வரலாறும் கூட எழுத முடியாது.. காரணம் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே கலைஞர்...
#கலைஞர்95
#HBDKalaingar95

No comments:

Post a Comment