திமுகவின் வரலாறு
1916
டாக்டர் டி.எம்.நாயரும், வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர். பிட்டி.தியாகராயரும் இணைந்து 20.1.1916 அன்று ஒரு கட்சியை நிறுவினர். அன்று அவர்கள் துவங்கிய அரசியல் கட்சிதான் “தென்னிந்திய நல உரிமை சங்கம்”. அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்திற்கு “ஜஸ்டிஸ்” என்ற ஆங்கில நாளேடு துவங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியர் டாக்டர் நாயர். பிறகு இப்பத்திரிக்கையின் பெயரால் “ஜஸ்டிஸ் கட்சி” என்று அழைக்கப்பட்டது. தமிழில் “நீதிக்கட்சி” என்று அழைக்கப்பட்டது. “தென்னைந்திய நல உரிமை சங்கம்” என்றும், பின்னர் “நீதிக்கட்சி” என்றும் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டவைதான் திராவிட இயக்கத்தின் ஆணிவேராகும்!
1920
1920-ஆம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கட்சி தலைவரான சர். பிட்டி.தியாகராயர், தான் முதலமைச்சராகாமல் 17.12.1920 அன்று அ.சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக்கினார். ஆனால் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் மரணம் அடைந்து விடவே 11.7.1921 அன்று பனகல் அரசர் முதல்வரானார்.
1936
1920-லிருந்து 16 ஆண்டுகள் தமிழகத்தில் மக்களிடம் செல்வாக்குடன் இருந்த நீதிக் கட்சிக்கு 1936-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.
1937
இந்தி திணிப்பை எதிர்த்து முதல் போர்.
1938
தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம். 1938 டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 14-வது மாகாண மாநாட்டில் “என் தோளுக்குச் சூட்டிய மாலையைப் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு தமக்களித்த மாலையைச் சூட்டினார் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். பின்னர், நீதிக் கட்சியின் தலைவராக தந்தை பெரியார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட, மாநாட்டில் இருந்தவர்கள் அனைவரும் “உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்களின் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நிற்கிறோம்” என்று முழக்கம் எழுப்பினர்.
1944
நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு சேலத்தில் நடைபெற்றது. நீதிக்கட்சி “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றப்பட்டது. இதற்காக சேலம் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு “அண்ணாதுரை தீர்மானம்” என்றே பெயர்.
1949
சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் “திராவிட முன்னேற்றக் கழகத்தை” 17.9.1949 அன்று துவக்கினார் பேரறிஞர் அண்ணா. அன்று நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன் உள்பட 26 பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது “கூட்டு முயற்சி இல்லாமல் கொள்கை பரவாது. இலட்சியமும் உருப்பெறாது. அந்தக் கூட்டு முயற்சிக்கான வசதியும், வாய்ப்பும், வலிவும் நம்மிடம் இருக்கின்றன” என்றார் அண்ணா.
அன்று மாலை ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. முதல் கூட்டமே போராட்ட அறிவிப்பாக அமைந்தது. அதில் பேசிய அறிஞர் அண்ணா, “முதல் வேளையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்காரின் போக்கை எதிர்த்துப் போராடுவோம்” என்றவர், “பெரியார் அவர்களே நீங்கள் அளித்த பயிற்சியும், பக்குவமும் பெற்ற நாங்கள் உங்கள் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லுகிறோம்” என்றார் உணர்ச்சிப் பிழம்பாக!
1956
திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மே மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 1957 பொதுத் தேர்தலில் போட்டியிடலாமா என்று மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, “போட்டியிட வேண்டும்” என்போர் சிவப்பு பெட்டியிலும், “வேண்டாம்” என்போர் கறுப்பு பெட்டியிலும் தங்கள் வாக்குகளைப் போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்ற 20.5.1956 அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. அதில் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக 56942 வாக்குகளும், போட்டியிட வேண்டாம் என்று 4203 வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட்டது திராவிட முன்னேற்றக் கழகம்தான்!
1957
தி.மு.க. போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தல். 10.2.1957-ல் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் தி.மு.க. போட்டியிடுவது பற்றிப் பேசிய அறிஞர் அண்ணா, “தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல தி.மு.கழகத்தில் இருப்பவர்கள். நாட்டிற்கு புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி.மு.கழகம் தேர்தலில் போட்டியிடுகிறது” என்றார்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற பேச்சாற்றல் மிக்க தலைவர்களால் திராவிட முன்னேற்றக் கழகம் 15 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சுமார் 17 லட்சம் வாக்குகளைப் பெற்றது கழகம். குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா முதன் முறையாக எதிர்கட்சித் தலைவரானார்.
1959
சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று மாநகராட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்காக கலைஞர் கருணாநிதிக்கு பேரறிஞர் அண்ணா கணையாழி அணிவித்தார். 45 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் முதல் மேயரானார் அ.போ.அரசு.
1963
இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்.
1965
மூன்றாவது கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்.
1967
இந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்றது தி.மு.க. முதலில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அனைவரும் திருச்சி சென்று பெரியாரிடம் ஆசி பெற்றார்கள். பிறகு 6.3.1967 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் அறிஞர் அண்ணா.
பின்னர், சென்னை கோட்டையில் “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்ற பெயர்பலகையை திறந்து வைத்தார். அரசின் கோபுரச் சின்னத்தில் “மதராஸ் கவர்ன்மென்ட்” “சத்தியமேவ ஜயதே” என்று இருந்த வார்த்தைகளை “தமிழக அரசு” “வாய்மையே வெல்லும்” என்று மாற்றினார்.
அறிஞர் அண்ணா அவர்கள் அமைச்சரவையில் மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார். ஒன்று மதராஸ் என்ற மாநிலப் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றியது. இரண்டாவது சுயமரியாதை திருமணச் சட்டம் நிறைவேற்றியது. மூன்றாவது இந்தி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றியது.
1969
தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா மறைந்தார். 3.2.1969 அன்று தமிழர்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்த பேரறிஜர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. அந்த அளவிற்கு மக்கள் கடல் அலை போல் திரண்டனர். “இரவலாக உன் இதயத்தைத் தந்திடு அண்ணா” என்று கண்ணீர் மல்க கவிதை இயற்றினார் கலைஞர் கருணாநிதி.
9.2.1969
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலைஞர் தலைவராக தேர்ந்தெடுக்க அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன் மொழிந்தார். அமைச்சர் சத்தியவாணிமுத்து வழிமொழிந்தார். சட்டமன்றக் கட்சித் தலைவராக கலைஞர் தேர்வு செய்யப்பட்டார். 10.2.1969 அன்று கலைஞர் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
27.7.1969
அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வை தலைமை தாங்கவும், சிறந்ததொரு தலைவராக செயல்படவும் தலைவர் கலைஞரை தி.மு.க. தலைவராக கட்சியினர் ஒருமனதாக தேர்வு செய்தனர். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் பணியில் அயராது பாடுபட்டு தி.மு.கழகத்தை கட்டிக்காத்து வருகிறார் தலைவர் கலைஞர்.
1970
அண்ணாவின் முதலாமாண்டு நினைவு நாள். திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்கள் வெளியிடப்பட்டது. அந்த ஐம்பெரும் முழக்கங்கள்:
அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
1971
தி.மு.க. 184 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 15.3.1971 அன்று இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் கலைஞர் கருணாநிதி. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
1972
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.
1975
சூன் மாதம் 26-ம் தேதி சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் அழியா இடம்பெற்ற கருப்பு நாள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. மிசா சட்டம் அமலுக்கு வந்தது. நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அதை கண்டித்து தி.மு.க. தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிலேயே நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இதுதான்.
1976
ஜனநாயகத்தை காக்க தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜனவரி 31ம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. மிசாவின் கீழ் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1.2.1976
தளபதி மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கொடுஞ்சிறை வாசம் சென்றார்.
1982
தி.மு.க. இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் பணியில் அயராது பாடுபட்டு வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், ”உழைப்பு” என்பதற்கு அடையாளம் என்றால் மிகையாகாது.
1989
தி.மு.க. வெற்றி பெற்று 27.1.1989 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சரானார் கலைஞர்.
1991
இலங்கை தமிழர் நலனுக்கு பாடுபட்டதற்காக ஜனவரி 30-ம் தேதி இரண்டாவது முறையாக தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதுவும் அரசியல் சட்டப் பிரிவு 356 வது பிரிவில் உள்ள “otherwise” என்ற சொல்லை பயன்படுத்தி நாட்டில் கலைக்கப்பட்ட முதல் அரசு தி.மு.கழக அரசுதான்!
1996
தி.மு.கழகம் வெற்றி பெற்று கலைஞர் நான்காவது முறையாக முதலமைச்சரானார். நாற்பதுக்கு நாற்பது இடங்களிலும், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 இடங்களிலும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை படைத்தது.
மாநிலத்தில் கழக ஆட்சியும், மத்தியில் பிரதமர் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் அமைச்சரவையில் முதன் முதலாக தி.மு.கழகம் பங்கேற்றது.
இதே வருடத்தில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, சென்னை மாநகர மேயரானார் மு.க.ஸ்டாலின்.
1999
நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மத்திய அரசில் அங்கம் வகித்தது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்றது.
2003
தி.மு.க. பொதுக்குழுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004
தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்றது. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்தது.
2006
தி.மு.கழகத்தின் ஆறாவது அமைச்சரவை 13.5.2006 அன்று பதவியேற்றது. தலைவர் கலைஞர் ஐந்தாவது முறையாக முதலமைச்சரானார்.
2008
தி.மு.க. பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம், கட்சிக்கு அவர் ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் பயனாக அவர் பொருளாளராக உயர்ந்தார்.
2009
திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் பங்கேற்றது.
29.5.2009
மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
2011
தி.மு.க. தலைவர் கலைஞர் குளித்தலையில் தொடங்கிய சட்டமன்ற தேர்தல் பிரவேசத்திலிருந்து 12-வது முறையாக தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதுவும் தான் பிறந்த மண்ணான திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றது இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்கது.
2014
பதினோராவது முறையாக கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
2015
பேராசிரியர் அன்பழகன் தொடர்ந்து 9-வது முறையாக தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தி.மு.க பொருளாளராக தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டார்.
#அனைவருக்கும் இந்த திமுக வரலாறு தெரியவேண்டும் என்பதே என் எண்ணம்.
இந்த இயக்கம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல ....!
என்றும் தளபதி வழியில்...
கழக பணியில் உங்கள்,
ஆ.இரா.அருண்.
மாவட்ட பிரதிநிதி, சென்னை கிழக்கு மாவட்டம்.திமுகவின் வரலாறு

2016
தளபதி அவர்களின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்...
அனைவருக்கும் இந்த வரலாறு தெரியவேண்டும் ...
இந்த இயக்கம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல ...
No comments:
Post a Comment