சமுக உறவில் தேடுங்கள்

Loading

Saturday, June 9, 2012

காமம், காதல், இன்பம் என்பததெல்லாம் என்ன?

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

SEX
நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் காமம் கலக்காத காதல் இன்னும் உயிருடன் இருக்கிறதா?

அதாவது நான் காமத்தை தவறு என்று சொல்லவில்லை. உடலழகில் வசியப்பட்டு காதல் என்ற உன்னதமான சொல்லை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

முதலில் காமம் என்பது என்ன?

காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.

பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்ததென அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ் அகராதிகளில், லிங்கம், யோனி, அல்குள், கொங்கை வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால், அகராதி சிறுகதைப் போல சிக்கனமாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு என்றும் சொல்கிறார்கள் ...


அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடவதற்காக காமத்தை துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக்கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது

ஏறக்குறைய எல்லா மதங்களிலும் காமம் அடக்கியாளப்படக்கூடிய ஒரு சக்தியாகவே, மறுக்கப்படும் இன்பமாகவே இருப்பது எதனால்?

இவை எல்லாவற்றோடும், காமசூத்திரத்தை உலகிற்களித்தவர்களும், அறத்துப் பாலோடு, பொருட் பாலோடு, இன்பத்துப் பாலை சமமாக வைத்தவர்களும், திணை வகைகளில் அகத்திணை என பகுத்துப் பார்த்தவர்களும், விக்ரமாதித்தியன் கதைகளையும், மதனகாமராஜ கதைகளையும் கேட்டு வளர்ந்தவர்களும் நாம்தான். ஏன் இந்த இரட்டை நிலை. எதனால் இப்படி கலவியிலும், காமத்திலும் தெளிவற்று இருக்கிறோம்?

ஒரு காலத்தில் நான் கில்லி விளையாடினேன், கோலி விளையாடினேன், பின்னர் பந்தாட்டம், பின்னொரு நாள் கணினியில் விளையாட்டு இப்போது அவைகளை விளையாடுவதில்லை. அதே போல விளையாட நேருமானால் விளையாடுவதில் தயக்கம் ஏதுமில்லை. காமம் இது போல ஒரு விளையாட்டா? வாழ்க்கையில் ஒரு பருவமா? அப்படியாயின் ஏன் அதைத் தாண்டிய பருவத்தில் ஏன் விடாமல் பற்றிக் கொண்டு அலைகின்றனர் மக்கள். ஏன் இந்த அலை கழிப்பு? வாழ்நாளின் எவ்வளவு நேரத்தை ’வெற்றம் பல தேடி பிறந்த இடத்தையும், கறக்கும் இடத்தையும் நாடி’ வீணடிக்கின்றனர் என பட்டினத்துப் பிள்ளை மட்டுமல்ல நாமும் கவலைப் படவே செய்யலாம். சமூக நெருக்கடியா? அல்லது மனதளவில் மனிதன் பதினெட்டு வயதிற்குப் பின் முதிர்வதே இல்லையா? அப்படியானால் என்ன ஒரு வாழ்க்கை இது?
LOVE
அல்லது பசி, தாகத்தைப் போல இது ஒரு இயல்பான ஒரு உடல் தேவையா? அப்படியானால் ஏன் என்னுடைய பதின்மப் பருவத்திற்கு முன்னர் இது என்னை அலைக்கழிக்கவில்லை.
அல்லது சிக்மெண்ட் ப்ராய்டின் உளவியல் சொல்வது போல பிறப்பிலிருந்தே ஒவ்வொரு நாளும் பல தடவை காமத்தின் உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறதா? அவற்றைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு இல்லாமல் இருந்ததா?

காமத்தின் பின்னாலிருக்கும் சமூகக் காரணிகள் என்ன? அழுத்தப் படுவதால் பீறிடுகிறதா? சமூக மதிப்பீடுகள் நம்காமச் செயல்பாடுகளை பாதிப்பது எவ்விதங்களில்? நம்முடைய அலுவலக, சமூகச் செயல்பாடுகளின் நேர்மை,எத்தனை சதவீதம் உடல் உறவுக்கான சாத்தியப்பாடுகளுக்காக ஏங்கும் இச்சையினால் பலியிடப்படுகிறது?

தந்திர யோக முறைகளில் குறிப்பிடுவது போல காமம் ஓஜஸ்சக்தியாக மடை மாற்றப் பட வேண்டுமா? சாத்தியமா? காமத்தின் ஊடாக ஆண் பெண் உறவின் நிலைப்பாடுகள் என்ன? அதன்மூலமாக நிகழும் உடல் அரசியல் என்ன? அதிகார சமன்பாடென்ன? காமத்தைப் புரிந்து கொள்வதும், அதை ஆள்வதன் மூலமாக ஆதிக்கம் செலுத்தப்படாத உறவு சாத்தியப்படுமா?

காமத்தை சிறப்பாக கையாள உடல், உணர்வு,எண்ணம் குறித்த அடுக்குகளின் விழிப்புணர்வும், நம்மளவில் இம் மூன்றில் எதை விட எது வலிமையானதாகப் பெரும்பாலும் செயல்படுகின்றது? என்பதைப் பற்றிய ஞானமும் அவசியம். இன்பத்தில் ஆழ்வது, விலக்குவது அல்லது விடுபட்டு உணர்வது எது நமக்கான செயல்பாடு என்பதைப் பற்றிய விவேகத்தையும். வெளியிலிருந்து கற்க முடியாது. உனக்குள்ளேதான் நீ தேடவேண்டும் ...


நீ உடலை காதலிக்கிறாய் என்றால் ஒரு விலை மாது போதும்
நீ உயிரை காதலிக்கிறாய் என்றால் ஒரு நாய்குட்டி போதும்
உடலும் உள்ளமும் சேர்ந்ததுதான் காதல்-: கவிஞர் வைரமுத்து...

காதல் காமம் வாழ்க்கை அல்ல, காதலும், காமமும் இல்லா வாழ்வு வாழ்க்கையே அல்ல


நன்றி :- அமிர்தம் 

10 comments:

 1. //நீ உடலை காதலிக்கிறாய் என்றால் ஒரு விலை மாது போதும்
  நீ உயிரை காதலிக்கிறாய் என்றால் ஒரு நாய்குட்டி போதும்
  உடலும் உள்ளமும் சேர்ந்ததுதான் காதல்-: கவிஞர் வைரமுத்து...//

  கவிப்பேரரசுதான்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி தோழா

   Delete
 2. Replies
  1. மிகவும் நன்றி தோழா

   Delete
 3. காமத்தை சிறப்பாக கையாள உடல், உணர்வு,எண்ணம் குறித்த அடுக்குகளின் விழிப்புணர்வும், நம்மளவில் இம் மூன்றில் எதை விட எது வலிமையானதாகப் பெரும்பாலும் செயல்படுகின்றது? என்பதைப் பற்றிய ஞானமும் அவசியம். இன்பத்தில் ஆழ்வது, விலக்குவது அல்லது விடுபட்டு உணர்வது எது நமக்கான செயல்பாடு என்பதைப் பற்றிய விவேகத்தையும். வெளியிலிருந்து கற்க முடியாது. உனக்குள்ளேதான் நீ தேடவேண்டும் //

  காமம் குறித்து எழுப்பிச் செல்லும் கேள்விகளும்
  தீர்க்கமான எண்ணப் பதிவும் அருமை
  மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி தோழா ...தங்களை போன்றோர் வாழ்த்துக்கள் ஒரு நல்ல உத்வேகத்தை அளிக்கிறது ...

   Delete
 4. இறுதியில் வைரமுத்துவின் பஞ்ச் அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி தோழா

   Delete
 5. இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடவதற்காக காமத்தை துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக்கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது

  ஏறக்குறைய எல்லா மதங்களிலும் காமம் அடக்கியாளப்படக்கூடிய ஒரு சக்தியாகவே, மறுக்கப்படும் இன்பமாகவே இருப்பது எதனால்?

  காமசூத்திரத்தை உலகிற்களித்தவர்களும், அறத்துப் பாலோடு, பொருட் பாலோடு, இன்பத்துப் பாலை சமமாக வைத்தவர்களும், திணை வகைகளில் அகத்திணை என பகுத்துப் பார்த்தவர்களும், விக்ரமாதித்தியன் கதைகளையும், மதனகாமராஜ கதைகளையும் கேட்டு வளர்ந்தவர்களும் நாம்தான். ஏன் இந்த இரட்டை நிலை. எதனால் இப்படி கலவியிலும், காமத்திலும் தெளிவற்று இருக்கிறோம்?//

  This is Super Question.

  ReplyDelete
 6. பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்ததென அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ் அகராதிகளில், லிங்கம், யோனி, அல்குள், கொங்கை வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால், அகராதி சிறுகதைப் போல சிக்கனமாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு என்றும் சொல்கிறார்கள் ...


  அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

  இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடவதற்காக காமத்தை துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக்கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது

  ஏறக்குறைய எல்லா மதங்களிலும் காமம் அடக்கியாளப்படக்கூடிய ஒரு சக்தியாகவே, மறுக்கப்படும் இன்பமாகவே இருப்பது எதனால்?

  இவை எல்லாவற்றோடும், காமசூத்திரத்தை உலகிற்களித்தவர்களும், அறத்துப் பாலோடு, பொருட் பாலோடு, இன்பத்துப் பாலை சமமாக வைத்தவர்களும், திணை வகைகளில் அகத்திணை என பகுத்துப் பார்த்தவர்களும், விக்ரமாதித்தியன் கதைகளையும், மதனகாமராஜ கதைகளையும் கேட்டு வளர்ந்தவர்களும் நாம்தான். ஏன் இந்த இரட்டை நிலை. எதனால் இப்படி கலவியிலும், காமத்திலும் தெளிவற்று இருக்கிறோம்?///

  This is Good and Super Question.

  ReplyDelete