தொகுப்புகள்

Search This Blog

Thursday, November 11, 2010

குழந்தை கடத்தலின் அறிவியல் விளைவு



கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்குமார். இவரது மகள் முஸ்கின், மகன் ரித்திக் ஆகிய இருவரையும் கடந்த மாதம் 29-ந்தேதி டிரைவர் மோகன்ராஜ், பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்வது போல ஏமாற்றி கடத்திச்சென்று கொடூரமாக கொலை செய்தான். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரையும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இருவரையும் விசாரணைக்காக தனி தனி வேன்களில் போலீசார் ஆண்மை பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது, அவர்களை அடித்து தள்ளும் கோபத்தோடு மக்கள் திரண்டிருந்தனர். திரண்டிருந்த பொதுமக்களில் பலர் "இவர்களை ஓடவிட்டு சுட்டுத்தள்ளனும்" "வெறிநாய்களை விட்டு கடிக்க விடனும்" "இவர்களுக்கு அரபு நாடுகளில் உள்ளதைப்போல தண்டனை தரவேண்டும்" என்று கோபமாக குரல் எழுப்பினர்.... இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.. வெள்ளலூர் குப்பைமேடு என்ற இடத்தில் வேன் சென்றபோது மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டு விட்டு தப்ப முயன்றான். இதில் போலீஸ் அதிகாரிகள் முத்துமாலை, ஜோதி படுகாயம் அடைந்தனர். பின்னர் தப்பி ஓட முயன்ற மோகன்ராஜை, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவன் சம்பவ இடத்திலேயே இறந்தான்.


இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி பெற்றோர்கள் கண்ணீர் மகிழ்ச்சி:


கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.

கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் 
தெரிவித்தனர். 

சென்னை அண்ணா நகரை சேர்ந்த சிறுவன் கீர்த்திவாசனை கடத்திய    பட்டதாரிகள்  விஜய், பிரபு ஆகியோர் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு ஏற்கனவே சென்னையில் கைதாகியுள்ளனர். இப்போது கடத்தல் தொழிலிலும் குதித்து என்ஜினீயரிங் பட்டதாரிகள் கைதாகியுள்ளது போலீசார் மத்தியில்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே
நேற்று காலை கோவை    குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம். கேள்விப்பட்டு விஜய், பிரபு ஆகியோர் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு கதறி அழுதனர் . 

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அதன் பலன் நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும்.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”
அறிவியல் உலகில் நியூட்டன் முன்றாம் விதி (newton's  third law) 'கேயோசு கோட்பாடு' (Chaos Theory) எனச் சொல்லப்படும் கருத்தியலை விளக்கும்   நிகழ்வுதான் இன்றைய சம்பவம் என்றே கருதுகிறேன் .
 எனவே ஒரு நல்ல செயலை நல்ல காரணத்திற்காக  செய்யும் பொழுது அதன் பின் விளைவுகள் என்னவாக இருந்தாலும், செய்த நல்ல பலனுக்கு பிற்பகலே நன்மை வந்து சேரும் என்பது என் அன்றாட வாழ்க்கை அனுபவம்!
"எண்ணம் போல் வாழ்வு"

"தீதும் நன்றும் பிறர்தர வாரா"



No comments:

Post a Comment