Thursday, May 24, 2012

மருத்துவம் , பொறியியல் கல்லூரிகளில் சீட் வேண்டுமா ......?


மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சீட் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியவை .....
1. உங்கள் மதிப்பெண் பட்டியலை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் ,

2.அதை நீங்கள் விரும்பும் கல்லூரிக்கு எடுத்து செல்லுங்கள் ,

3.கல்லூரியின் முன்னே போனதும் உரியவரிடம் அதை கொடுங்கள் ,

4.அவரே உங்களுக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று சொல்வார் ....

5.கிடைக்கவில்லை என்றால் வேறு கல்லூரிக்கு செல்லவும் ( " கிடைக்காகததுக்கு ஆசை படுறதை விட கிடைச்சத வெச்சு வாழு அப்பதான்  வாழ்க்க நல்லா இருக்குன்னு" எத்தன தமிழ் படத்துல பாத்து இருப்பிங்க )

இன்று தமிழ் நாட்டில் கல்வி ஒரு மிகப் பெரிய வியாபாரம்.
கல்லூரிகள் வசூலிக்கும் பணத்தை விட இடைத்தரகர்கள் வசூலிப்பது இமாலய அளவாக இருக்கிறது .. இன்றும் நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மருத்துவராகவும் பொறியியல் வல்லுனராகவும் மட்டுமே வரவேண்டும் என்று நினைக்கின்றனர் ஆனால் தற்போது நம் நாட்டில் பிச்சைகாரங்கள் எண்ணிக்கையைவிட பொறியியல் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது ,,,கலை , ஊடகம் ,,விவசாயம் போன்ற கல்வி பயின்றவர்களின் தேவை அதிகமாகிக்கொண்டே போகிறது ,,,பல லகரங்களை கொட்டி வாழ்க்கையை வீண் அடிக்காமல் நல்ல கல்வியை படித்து பயன் அடைய +2 வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ,,, ( தோல்வி பெற்ற என் மாணவ செல்வங்களே இன்னும் எத்தனையோ வழி இருக்கு உலகத்தோட ஒண்ணாம் நம்பர் பணக்காரர் நம்ம கம்ப்யூட்டர் கம்பெனி அண்ணன் பில்கேட்ஸ் பெயில் ஆனவரு இங்க மாங்கு மாங்குன்னு படுச்ச நம்ம இஞ்சினியர் தம்பி அவருகிட்ட வேலை செய்யரவரு  புருஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் )

நன்றி ...

No comments:

Post a Comment