சமுக உறவில் தேடுங்கள்

Loading

Sunday, January 2, 2011

தமிழரை அழிக்க ரகசிய திட்டம்

ஆரியர் திராவிடர் யுத்தம் இன்னும் முற்றுப்பெறவில்லை

சமூகநீதியின் தொடக்கம்:
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தபோது ஆங்கிலேயர்கள் குறைவான தொகையினர்,ஆளப்படும் இந்தியர்கள் தொகையில் அதிகம்.மிகப்பலராக இருந்த இந்தியர்களுக்கு அரசுப் பணிகளில் இடமே இல்லை என்கிற நிலை,அவர்களுக்கு வெறுப்பையும் அதிருப்தியும் தந்தது.
சொந்த நாட்டவர்க்கு ஏதோ சில பணிகளைத் தர ஆங்கிலேயர் முன்வந்தனர்.இப்படித் தரப்பட்ட பணிகள் எல்லாவற்றையும் பிராமணர்களே பெற்றனர். 1853இல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 49 பேர்-ஒரே சாதியை சேர்ந்தவர்கள் நெல்லூர் மாவட்ட வருவாய்த் துறையை ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.இவர்கள் அனைவரும் பிராமணர்களே.1894 முதல் 1904 வரை நிர்வாகப் பணிகளிலும் சரி,தொழில் சார்ந்த பணிகளிலும் சரி,பிராமணர்களே அதிக இடங்களில் இருந்தனர்.இதனால் பிராமனரக்ல் அல்லாதிரிடயே எதிர்ப்புகள் மெல்ல எழுந்து அது ஆங்கிலேயர்களுடைய செவிகளிலும் விழத் தொடங்கியது.

ஆங்கிலேயர்களுக்கு இந்திய சமூக அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லை.இங்கே வர்ண பேதமும் சாதீயமும் உள்ளதை அவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலவில்லை.எல்லோரையும் அவர்கள்'இந்தியர்கள்' என மட்டுமே கருதினர்.பின்னர்,அவர்கள் பிராமணர்கள் உயர்சாதியினர் என்றும்,அவர்கள் மிகச் சிறுபான்மையினர் என்றும்,சிறுபான்மையினராக இருப்பவர்கள் அரசுப் பணிகளில் அதிகமாக இடம்பெற்று ஆதிக்கம் செய்திவருகிரார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள்.

ஆகவே'இந்திய மயம்' என்றால் 'பிராமண மயம்'எனப் பொருளுரைத்து அதனை வெளிப்படுத்தியது-திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி!அதுமட்டுமன்று ஆங்கிலேய அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள்.அக்கோரிக்கை இதுதான்:"இந்தியர்கள் என்பவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல.இந்தியர்களுள் பிராமணர்கள் என்பவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரே.ஆகவே இந்தியர்களில் மிகப்பெரும்பான்மயினராக இருக்கும் பிராமணர் அல்லாதார்க்கு உரிய இடங்களை ஒதுக்கித் தாருங்கள்" என்பதுதான்.

சமூகநீதி என்பது ஒரு வகுப்பாரைத் தாழ்த்தியோ,அச்சுறுத்தியோ பெறும் சலுகையல்ல.ஒவ்வொரு வகுப்பும் அரசியல்,கல்வி,வேலை வாய்ப்புகளில்,இடம் பெறவேண்டியஉரிமை;அதாவது பிறப்புரிமை ஆகும்.ஆகவேதான் சமூகநீதி ஒரு காலகட்டத்தில் 'வகுப்புரிமை'எனக் கூறப்பட்டது.


மக்களுக்கு சமூக நீதி பெற்று தந்த வரலாறு 
 1. சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டது .
 2. 1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.
 3. 1974ஆம் ஆண்டு மக்களின் தரம் உயர்த்தப்பட வேண்டி, தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆரம்பிகப்பட்டது .
 4. 1960ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு 1970 இல் 1,78,880 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி 61,985 ஆதிதிராவிட மக்களுக்கு பங்கிட்டு கொடுகப்பட்டது .
 5. 1989-90 இல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் சிறப்பு முகாம் அமைத்து நம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 1,52,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 


வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறியது 

மத்திய அரசில் நம் பங்கு 
1991 ஆம் ஆண்டு 

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
ப. சிதம்பரம்இந்திய தேசிய காங்கிரசுசிவகங்கைவர்த்தகம் மற்றும் தொழில்
வாழப்பாடி ராமமூர்த்திஇந்திய தேசிய காங்கிரசுகிருஷ்ணகிரிதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு


1996 ஆம் ஆண்டு 

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
முரசொலி மாறன்திமுகமத்திய சென்னைவர்த்தகம் மற்றும் தொழில்
ஜி. வெங்கட்ராமன்திமுகதிண்டிவனம்கடல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
ப. சிதம்பரம்தமிழ் மாநில காங்கிரசுசிவகங்கைநிதி
எம். அருணாச்சலம்தமிழ் மாநில காங்கிரசுதென்காசிதொழிலாளர் நலம்


இணை அமைச்சர்கள்

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
டி. ஆர். பாலுதிமுகதென் சென்னைபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
என். வி. என். சோமுதிமுகவட சென்னைபாதுகாப்பு
தனுஷ்கோடி ஆதித்தன்தமிழ் மாநில காங்கிரசுதிருச்செந்தூர்இளைஞர் மற்றும் விளையாட்டு

1998 ஆம் ஆண்டு 


அமைச்சர்கட்சிதொகுதிதுறை
ரங்கராஜன் குமாரமங்கலம்பாஜகதிருச்சிமின்சாரம் மற்றும் நாடாளுமன்றம்
தம்பித்துரைஅதிமுககரூர்சட்டம், நீதி மற்றும் நிறுவனங்கள்
சேடப்பட்டி முத்தையாதமிழ் மாநில காங்கிரசுபெரியகுளம்தரைவழிப் போக்குவரத்து
வாழப்பாடி ராமமூர்த்திதமிழ்க ராஜீவ் காங்கிரசுசேலம்பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு


இணை அமைச்சர்கள்

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
தலித் எழில்மலை
பாமக
சிதம்பரம்
சுகாதாரம் மற்றும் குடும்பநலம்
கடம்பூர் ஜனார்த்தனம்
அதிமுக
திருநெல்வேலி
ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்த்தல்
ஆர். கே. குமார்
அதிமுக
மாநிலங்களவை உறுப்பினர்
நிதி


1999 ஆம் ஆண்டு 
அமைச்சர்கட்சிதொகுதிதுறை
ரங்கராஜன் குமாரமங்கலம்பாஜகதிருச்சிமின்சாரம் மற்றும் நாடாளுமன்றம்
முரசொலி மாறன்திமுகமத்திய சென்னைவர்த்தகம் மற்றும் தொழில்
டி. ஆர். பாலுதிமுகதென் சென்னைசுற்றுப்புறசூழல் மற்றும் வனங்கள்


இணை அமைச்சர்கள்

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
மு. கண்ணப்பன்மதிமுகதிருச்செங்கோடுபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு*
என். டி. சண்முகம்பாமகவேலூர்சுகாதாரம் மற்றும் குடும்பநலம்*
செஞ்சி ராமச்சந்திரன்மதிமுகதிண்டிவனம்நிதி
ஆ. ராசாதிமுகபெரம்பலூர்கிராமப்புற வளர்ச்சி
இ. பொன்னுசாமிபாமகசிதம்பரம்பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு


2004 ஆம் ஆண்டு 

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
ப. சிதம்பரம்காங்கிரசுசிவகங்கைநிதி
டி. ஆர். பாலுதிமுகதென் சென்னைகப்பல், தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
தயாநிதி மாறன்திமுகமத்திய சென்னைதகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்
ஆ. ராசாதிமுகபெரம்பலூர்சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனங்கள்
மணிசங்கர் அய்யர்காங்கிரசுமயிலாடுதுறைபஞ்சாயத்து ராஜ் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி
அன்புமணி ராமதாஸ்பாமகமாநிலங்களவை உறுப்பினர்சுகாதாரம்


இணை அமைச்சர்கள்

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
எஸ். எஸ். பழனிமாணிக்கம்திமுகதஞ்சாவூர்நிதி
எஸ். ரகுபதிதிமுகபுதுக்கோட்டைசுற்றுப்புறச் சூழல் மற்றும் வனங்கள்
கே. வெங்கடபதிதிமுககடலூர்நீதி மற்றும் சட்டம்
சுப்புலட்சுமி ஜகதீசன்திமுகதிருச்செங்கோடுசமூக நீதி


ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்காங்கிரசுகோபிசெட்டிப்பாளையம்தொழில் மற்றும் வர்த்தகம்
ஆர். வேலுபாமகஅரக்கோணம்ரயில்

2009 ஆம் ஆண்டு 

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
ப. சிதம்பரம்காங்கிரசுசிவகங்கைஉள்துறை
மு. க. அழகிரிதிமுகமதுரைஉரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள்
தயாநிதி மாறன்திமுகமத்திய சென்னைநெசவு
ஆ. ராசாதிமுகநீலகிரிதகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்
ஜி. கே. வாசன்காங்கிரசுமாநிலங்களவை உறுப்பினர்கப்பல் போக்குவரத்துஇணை அமைச்சர்கள்

அமைச்சர்கட்சிதொகுதிதுறை
எஸ். எஸ். பழனிமாணிக்கம்திமுகதஞ்சாவூர்நிதி
துரைசாமி நெப்போலியன்திமுகபெரம்பலூர்சமூகநீதி
ஜெகத்ரட்சகன்திமுகஅரக்கோணம்தகவல் மற்றும் தொலைதொடர்பு


இப்படி பலர் மத்திய அரசில் இடம்பெற்றனர் 

வகுப்புவாரி உரிமை இல்லை என்றால் பல பேர் டாக்டராக,தாசில்தார்,மாவட்ட ஆட்சியர் ஆகியிருக்க முடியாது. பல பேர் வழக்கறிஞர்களாக ஆகியிருக்க முடியாது.

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தான் கோவிலில் தமிழுக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் 'தமிழிலும் அர்சனை செய்யப்படும்' என்ற அளவுக்காவது வந்தது .இன்று பல பேர் உயர்ந்த அளவுக்குப் போயிருக்க முடியாது. சமத்துவம்பெற வேண்டும் என்பதற் காகத்தான் இந்த இயக்கங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் தை முதலாம் திகதியையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். இயற்கை தெய்வ வழிபாட்டு முறையை கொண்ட தமிழர்கள் தாம் வணங்கி வந்த தெய்வங்களில் ஒன்றான சூரிய பகவானுக்கு புதுவருடம் பிறக்கும் போது பொங்கல் இட்டு வழிபட்டு வந்த வரலாறு சிந்துவெளி குமரிநாடு ஈழம் என பரந்து வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாக பின்பற்றி வந்துள்ளனர் என்று வரலாறு கூறுகிறது. 

வரலாற்றப்பதிவுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் தை முதலாம் திகதியை தமது புத்தாண்டாக கொண்டாடி வந்த போதிலும் சீனர்கள் வெள்ளையர்கள் தொடராண்டைக் கொண்டுள்ளது போல் தமிழர்களுக்கும் வரலாற்றுப் பதிவுகளுக்கு தொடர் ஆண்டு அவசியம் என்றுணர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் 1921 ஆம் ஆண்டில் பச்சையப்பன் பல்கலைக் கழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் மறைமலையடிகளார் தலைமையில் கூடி திருவள்ளுவரின் பிறப்பை உறுதிசெய்து கிறிஸ்துவிற்கு முன் 21ஆண்டுகளில் திருவள்ளுவர் பிறந்து இருப்பதால் நடைமுறையாண்டுடன் கூட்டி பெறும் ஆண்டு தமிழாண்டு என்று வரையறை செய்தனர். 

இதை 1976 முதல் தமிழக அரச நாட்காட்டிகளிலும் இடம்பெறச்செய்தனர். தை முதலாம் திகதியே தமிழ் புத்தாண்டாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் விடுத்து வந்த தொடர்ச்சியான கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு 2.2.2009 இல் தமிழ் தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டமாக்கியது. கோவில்களிலும் வழிபாடு நிகழ்த்த முடியும் என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. 
அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.

இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு.

நீங்கள் ஒத்துக்கொண்டாலும் சரி. ஒப்புக்கொள்ளா விட்டாலும் சரி. இன்றைய தேதியில் திரள்மக்களால் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டுமே. ஏன் மக்கள் தொடர்ந்து திராவிட இயக்கங்களையே தெரிவு செய்கிறார்கள் என்று ஆராயுங்கள்.

இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்று தமிழர் ஆரியரிடமிருந்து அவருடைய போர்ப்பயிற்சியை கற்றபிறகு நல்ல தேர்ச்சி பெற்றதால் ஆரியரால் தமிழரைத் தென்னாட்டிலும் கிழக்குப் பகுதிகளிலும் வெல்ல முடியவில்லை. ஆதலால் ஆரியர் தாக்கம் இப்பகுதியில் குறைய துவங்கியது.
மேலும் இன்று அரசியல், சமூக இயல், பொருளியல், அறிவியல் ஆகிய நான்கு துறைகளிலும் நம் நாட்டு மக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு திராவிடமே காரணமென்றும் . திராவிடத்தை ஒழித்து கட்ட திட்டம் தீட்டி அதற்காக பின்னிய வலைதான்

'BRAHMIN SAMAJ'


5 comments:

 1. நான் சுட்டிக்காட்டிய தவறை (என்.வி. என் சோமு வை காங்கிரசு என்று குறிப்பிட்டிருந்ததை)இப்பொழுது சரி செய்திருக்கிறீர்கள் ஆனால் அந்த பின்னூட்டத்தை இருட்டடிப்பு செய்துள்ளீர்கள்.இது தான் தி.மு.க வின் ஜனநாயக அணுகுமுறை போலும் ஆனால் என்னிடம் ஸ்க்ரீன்ஷாட் இருக்கிறது.

  ReplyDelete
 2. @செந்திலான்- நீங்கள் கேட்ட கேள்வியை அப்படி ,தவறு நடப்பது இயற்கைதான் அதற்காக எனக்கு வாக்களித்த மக்களை கேவலமாக சித்தரிக்க கூடாது .

  ReplyDelete
 3. கொஞ்சம் வேகமான கருத்துக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.சீமானைத் திட்டியதால் கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் பின்னூட்டம் இட்டேன். மேலும் தவறு நன்றாகத் தெரிந்ததாலும் அவ்வாறு சொல்ல வேண்டியதாகி விட்டது. இப்பொழுது தி.மு.க நவீன பணக்காரர்களின் கட்சியாக ஆகிவிட்டது மற்றும் பிரபுத்துவம் (Gentricism) ஒரு நோயாக பரவி விட்டது.
  எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது தி.மு.க வில் இவ்வளவு படித்த ஒருவர் ஒன்றியத்தலைவராக இருக்கிறாரா? நீங்கள் மற்ற "தலைவர்கள்" மாதிரி கணவர் கட்சியில் இருப்பதால்,அவினாசி ஒன்றியம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் இந்த பதவிக்கு வந்திருக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன் ஆனால் நான் பல ஆண்டுகளாக தி.மு.க வின் கோவை மாவட்ட அரசியலை பக்கத்தில் இருந்தே கவனித்து வந்துள்ளேன் (நான் வளர்ந்தது படித்தது வேலை செய்தது என்று நீண்ட காலம் .அதில் உங்கள் பெயரை நான் பார்த்ததே இல்லை ஒருவேளை நான் சரியாக கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
  உண்மையில் உங்களது கணவர்தான் இந்த பதிவை எழுதுகிறார் என்று நினைத்தேன்.(அவர் கல்லூரி விரிவுரையாளர் நீங்கள் தலைவர் என்று பின்னர் பிகாஸா படங்களின் மூலம் உண்மை அறிந்தேன்.எப்படி இவ்வளவு வேலைகளுக்கும் உங்களுக்கு நேரம் இருக்கிறது?
  எனது ஊரும் திருப்பூர் மாவட்டத்தில் தான் இருக்கிறது.
  ஆனால் இனி திராவிட அரசியல் அதன் இருத்தலை தக்க வைக்க கடுமையான போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிலைக்குத்தள்ளப் படும்.இளைய சமுதாயம் தமிழ் தேசியத்தின் பின் செல்லும் தமிழ் தேசியம் பேருரு கொள்கிறது.அந்த நிலைக்கு இட்டு செல்வது திராவிட அரசியல் தான்.

  ReplyDelete
 4. //அவர் கல்லூரி விரிவுரையாளர் நீங்கள் தலைவர்//
  செந்தில் நான் வேறு என் மனைவி வேறு இல்லை, இருவரில் யாருக்கு நேரம் கிடைக்கிறதோ அவர்கள் பதிவும் ,பின்னுடமும் இடுவோம் . ஆனால் கல்லூரி விரிவுரையாளர், ஒன்றிய குழு தலைவர் ஆகிய இரண்டும் என் மனைவிதான்.

  http://ta.wikipedia.org/wiki/சாந்திபாபு

  ReplyDelete
 5. //அவர் கல்லூரி விரிவுரையாளர் நீங்கள் தலைவர் என்று //

  என்று நினைத்தேன் என்று எழுதியிருக்க வேண்டும், தவறுதலாக வந்து விட்டது ஆம் எல்லாமே பிகாஸா ஆல்பத்தில் தெளிவாக இருக்கிறது

  ReplyDelete